சனி, நவம்பர் 12, 2011

பித்த மயக்கத்துக்கு -பிராம்மீ தைலம்


பித்த மயக்கத்துக்கு -பிராம்மீ தைலம்

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல                         3.200 லிட்டர்
2.            வல்லாரைச்சாறு ப்ராஹ்மீஸ்வரஸ    400 கிராம்
3.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீரஸ       400        
4.            நல்லெண்ணெய் திலா தைல          800        

இவைகளை ஒன்று கலந்து அத்துடன்

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  60 கிராம்
2.            இலவங்கப் பத்திரி லவங்க பத்ரி            60          
3.            ஜடாமாஞ்சில் ஜடமாம்ஸீ                  60          
4.            சந்தனம் சந்தன                          25          

இவைகளை அறைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.


                               
பயன்படுத்தும் முறை:    
  தலைக்கு தேய்த்துக் கொள்ளும் (சிரோப்யங்க) தைலமாக வெளிஉபயோகத்திற்கு மட்டும்.

                                 
தீரும் நோய்கள்:  

மயக்கம், ரத்தக்கொதிப்பு, சூடு, புத்திக்கோளாறுகள், தொடர்ந்து உபயோகிக்க சூடு தணிந்து ஞாபக சக்தி விருத்தியாகும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மிகவும் குளிர்ச்சி இல்லை -ஆனாலும் உடல் சூடு குறைக்கும்
  2. பித்த மயக்கத்துக்கு தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு உபயோகித்தால் நல்ல பலன் தெரியும்
  3. காரணம் தெரியா மயக்கத்து இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  4. தொடர்ந்து பயன்படுத்த அறிவு திறன் கூடும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக