காய்ச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காய்ச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 19, 2021

ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம் | இரத்தம் சுத்தம் செய்து நோய் எதிர்ப...


ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்

இரத்தம் சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு தரும் 

Immunity increasing Blood purifying Ayurvedic kashayam  

காய்ச்சல், சளி , வாதநீர் வலி வருவதை தடுக்கும் .. வந்த இந்த பிரச்சனைகளை குறைக்கும் .. 

ஐந்து கசப்புகளை கொண்ட இந்த அருமருந்தை தெரிய முழு வீடியோவை பார்க்கவும் . 



-----------------------------------------------------------------------------------------------------------------------
#nimbamruthadi #immunityayurveda #immunity #jointpaininfections #ayurvedickashyam #guduci #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 16, 2021

கோவிட் காய்ச்சல் வராமல் தடுக்கும் அம்ருதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?


கோவிட் காய்ச்சல்  வராமல் தடுக்கும் அம்ருதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

இந்திய அரசு ஆயுஷ் மருத்துவ துறை பரிந்துரைத்த கோவிட் ஆயுர்வேத மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உயிர் காக்கும் அமிர்தம் -செரிமானத்தை  காத்து பல நோய்களை குணமாக்கும் அம்ருதோதர கஷாயம் -அல் ஷிபா

அஜீரணம் எப்படி எல்லா நோய்க்கும் காரணமாக அமையும் ?

காரணம் தெரியாத காய்ச்சல் மற்றும் கோவிட்  போன்ற விஷ காய்ச்சலை சரி செய்திடும் ஒரு அம்ருத மருந்தை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

ஆமம்  என்கிற செரியா  விஷத்தை சரி செய்ய வேண்டுமா ?

 

வாத நீரை குறைக்கும் அற்புத மருந்தை தெரிந்து கொள்ள  வேண்டுமா ?

விஷ காய்ச்சல் , வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க ஆயுர்வேத மருந்து ஒன்று வேண்டுமா ?

 

ஆரோக்கியமான மற்றும் பொருத்தமாக இருப்பதற்கான திறவுகோல் உங்கள் செரிமான திறன்களில் உள்ளது. உடலில் ஆரோக்கியமான திசுக்களை உருவாக்குவதற்கும், செரிமான அமைப்பிலிருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்கும் உதவும் செரிமான நெருப்பை வலிமையாக்குவதையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஒரு பலவீனமான செரிமான அமைப்பு அதன் சொந்த தொல்லைகளுடன் வருகிறது. இது முறையற்ற அல்லது சாப்பிடாதது, வீங்கிய வயிறு, வாயு, அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் நாள் முழுவதும் கனமாக உணர்கிறீர்கள். ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பு உடலில் உள்ள நச்சுப் பொருட்களுக்கான சேமிப்பகமாக மாறும், இது இறுதியில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூல காரணியாகிறது.

 

செரிமான அமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்ற கேள்வி உங்களை அடிக்கடி தொந்தரவு செய்தால், ஆயுர்வேத வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு மாறுவது எவ்வாறு செரிமானத்தை மேம்படுத்தவும், அது தொடர்பான பிரச்சினைகளை மைல்களுக்கு அப்பால் வைத்திருக்கவும் உதவும் என்பதை அறிய காணனொளியை காணுங்கள்.

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush​

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook  Group Link https://www.facebook.com/groups/22238...​

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...​

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...​

Twitter link https://twitter.com/AyushDrsaleem​

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 

jathraagni #अग्नि #जठराग्नि #digestion #health #ayurveda #ama #amrutha #curesure4u #alshifaayushforall


Post Comment

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

காய்ச்சல் வகைகளும் சிகிச்சை முறைகளும் -ஆயுர்வேத இரகசியங்கள் - Dathugatha...


காய்ச்சல் வகைகளும் சிகிச்சை முறைகளும் -ஆயுர்வேத இரகசியங்கள் - Dathugatha Jwara & Its Treatment

 

நமது உடம்பில் ஏழு தாதுக்கள் என்னும் அடிப்படை கூறுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா ?

 

எல்லா வகை காய்ச்சளையும் விரட்டும் மிக பெரிய ரகசியம் தெரிய வேண்டுமா ?

 

தாதுக்களை  பாதிக்கும் அளவுக்கு உள்ள காய்ச்சலை போக்கும் ரகசியம் அறிந்து கொள்ள வேண்டுமா ?

காயச்சல் காரணம் எந்த வைரஸ் கிரிமி எது  இருந்தாலும் அதில் இருந்தும் மீள ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம் !!!

 

ஆயுர்வேதத்தின்படி, உடல் வெப்பநிலையின் ஜெனரேட்டர் நெற்றியில் அமைந்துள்ளது. ஆயுர்வேதத்தில், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் ஏற்படும் இடையூறு ஜ்வாரா என்று அழைக்கப்படுகிறது, இது காய்ச்சல் மருத்துவக் கருத்தோடு தொடர்புடையது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காய்ச்சல் இரைப்பைக் குழாயின் உள்ளே (அதாவது அமசாயா) வெப்பம் குறைந்து, அதிக புற வெப்பநிலையுடன் தொடர்புடையது. ஏறக்குறைய அனைத்து தொற்று நோய்களும் (வைரஸ் / பாக்டீரியா) உயர்த்தப்பட்ட உடல் வெப்பநிலையை முக்கிய அம்சமாகக் காட்டுகின்றன ஜ்வாராவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனமிகவும் தீவிரமான அடிப்படை நிலையின் அறிகுறியாக காய்ச்சல் அடையாளம் காணப்பட்டு அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்பட வேண்டும். ஆபத்தான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், வாந்தி, நனவு இழப்பு, பொருந்துகிறது அல்லது வலிப்புத்தாக்கங்கள், தடிப்புகள் போன்றவை அடங்கும்.

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush​

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook  Group Link https://www.facebook.com/groups/22238...​

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...​

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...​

Twitter link https://twitter.com/AyushDrsaleem​

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 

 

ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை#Ayush #Alshifaayush #curesure4u #curesure

#dathugathajwara #puoayurveda  #jwaraayurveda #panchakarma #panchkarmatreatment

#ayurveda #ayurvedawellness #fever #ayurvedatreatment #chikitsasutra #காய்ச்சல்ஆயுர்வேதசிகிச்சை


Post Comment

சனி, மே 16, 2020

காய்ச்சலை சரிசெய்யும் உணவு....


காய்ச்சலை சரிசெய்யும் உணவு....


காய்ச்சலில் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத கஞ்சிகளின் வகைகள்..
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


நம் அனைவருக்கும் காய்ச்சல் வந்து சாரியாவதுண்டு... காய்ச்சலுக்கு பொதுவாக மருத்துவர் பரிந்துரைப்பது அல்லது நமக்கு கொடுக்கப்படும் உணவு எண்ணெய், காரம் இல்லாத எளிமையான உணவாக இருக்கும்...


இன்றும் எனக்கு நினைவில் உள்ளது சிறுபிராயத்தில் காய்ச்சலின் போது அம்மா பாக்கெட்டுகளில் வரும் ப்ரெட் அல்லது பண் (ரொட்டி ) வாங்கி பாலில் முக்கி ஊட்டுவார்... இது பொதுவாக அனைவரின் வீட்டிலும் நடந்திருக்கும்... சிலர் இடியாப்பம், இட்லி, ஆப்பம், பிஸ்கட் போன்ற உணவுகளையும் காய்ச்சலின் போது உணவாக எடுக்கும் பழக்கமாக வைத்திருப்பர்...

அப்போது யாரும் இதனை அறிந்திருக்கவில்லை... காய்ச்சலுக்கு சிறந்த உணவு நவரைஅரிசியினால் (சிவப்பரிசி) செய்யப்படும் கஞ்சி என்பது...

சிவபரிசியில் உள்ள சத்துக்கள்...
இரும்பு சத்து, மினரல், கால்சியம், நியாசின், தையமின், ரிபோஃளேவின் போன்ற புரதசத்து, நார்சத்து முதலானவை..

கஞ்சியை பல முறைகளாக தயார் செய்வதை பற்றி ஆயுர்வேதம் க்ரித்தண்ண வர்கம் என்னும் தலைப்பில் விவரித்துள்ளது...

மந்த, பேய, யவாகு, விலேபி, லாஜாமண்ட என்று அரிசி கொண்டு செய்யப்படும் கஞ்சி வகைகளை நோயாளியின் உடல் தகுதிக்கு, நோய்த்தன்மைக்கு ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளனர்...

இம்மாதிரியான உணவுகளினால் ஆமாத்தினால் உண்டாகும் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா என எந்த வகை காய்ச்சலானாலும் நொடி பொழுதில் நீங்குவது உறுதி.. நோய்கிருமியினால் (கொரோனா உட்பட ) உண்டாகும் காய்ச்சல்மட்டுமின்றி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு என அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது...

கஞ்சி தயாரிக்கும் முறைகளை காண்போம்...

மந்த* : ஒரு பங்கு சிவப்பரிசி பதினான்கு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அல்ஷிபா அரிசி நன்கு வெந்ததும் மீதமுள்ள தண்ணீரை தனியாக வடித்து பிரித்தவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகவேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, கிருமியினால் உண்டாகும் காய்ச்சல் போன்றவற்றிக்கு சிறந்த உணவு. உடல் இழந்த நீர் சத்தை பெறுவதுடன் பசியை தூண்டுவித்து, நரம்புகளுக்கு சக்தியளிக்கும்.


பேய* : ஒரு பங்கு சிவப்பரிசி, எட்டு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி மிருதுவாக வெந்தவுடன் நீரை பிரிக்காமல் உப்பு மற்றும் மிளகு பொடி சேர்த்து மிதமான சூட்டுடன் உண்ண வேண்டும்.


முந்தைய நீராகாரம் (மந்த) பருகிய இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் நோயாளியால் நல்ல பசியை உணர முடியும்... அப்போது இந்த (பேய) வகை கஞ்சியை உண்ண செய்வதால் உடலில் உள்ள சோர்வு, நாவறட்சி, தாகம் நீங்கி ஊக்கம் பெறுவர்.


யாவாகு* : ஒரு பங்கு சிவப்பரிசியுடன், ஆறு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி நன்றாக வெந்தவுடன் அவற்றில் உப்பு, துருவப்பட்ட இஞ்சி, மிளகு தூள் சேர்த்து கடைந்து உண்ண வேண்டும்.

இது மூன்றாவது நிலையில் கொடுக்கும் கஞ்சி... சோர்வு நீங்கிய நோயாளி இந்த கஞ்சியை உண்பதினால் மலம், ஜலம், காற்று, வியர்வை வெளியேறும். உடல் பாரம் நீங்கி இலகுவாக இருப்பதை உணரமுடியும்.


விலேபி* : ஒரு பங்கு சிவபரிசியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி மிருதுவானதும் உப்பு, துருவப்பட்ட இஞ்சி, பொடி செய்யப்பட்ட ஜீரகம், சோம்பு, மஞ்சள், கொத்தமல்லி, மிளகு சேர்த்து உண்ண வேண்டும்.

நோயாளிக்கு மலஜலங்கள் வெளியேறியதால் உணவின் சுவையை உணர முடியும். உணவின் நறுமணம் பசியை தூண்டி உற்சாகம் அடைவர். பசுநெய் சேர்த்தும் பரிமாறலாம்.

லாஜாமந்த* : நெற்பொரி, தண்ணீர் சேர்த்து சமைக்கபட்ட கஞ்சி வகை.. சிறந்த உடல் ஆற்றலை தரும்..

முறையாக இரண்டு அல்லது மூன்று மணி நேர இடைவெளியில் கொடுக்கப்படும் இந்த கஞ்சி வகைகளால் உடல் எந்த மருந்தின் உதவியின்றி பிணியிலிருந்து மீண்டுவிடும். செரிமான தொந்தரவு உள்ளவர்கள், நோம்பு நாட்களிலும் இந்த கஞ்சி வகைகளை பின்பற்றுவதால் வயிற்று தொந்தரவுகளின்றி உடல் சீராக இருக்கும்.

இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு இருக்கும் தாய்மார்களுக்கு கஞ்சி என்ற ஒன்றை தயார்செய்வது பற்றியும், காய்ச்சலின் போது அதை பயன்படுத்துவது பற்றியும் தெரியாமல் போய்விடும் அளவிற்கு பாரம்பரியம் அழித்துக்கொண்டு வருகிறது... இப்பொழுதே விழித்துக்கொண்டு மீட்டெடுப்போம்... பயனடைந்து, பிறர் பயன்பெற பகிர்வோம்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
பகிர்ந்து மகிழ்வோம்..
ஆயுர்வேதம் பரப்புவோம்...

Post Comment

திங்கள், ஏப்ரல் 20, 2020

வியர்பிக்கும் சிகிச்சை - ஓர் இரகசியம்

வியர்வை உண்டாக்கும் சிகிச்சை -
காய்ச்சலை போக்கும் ஓர் ஆயுர்வேத இரகசியம் 



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள் 


ஆயுர்வேதம் கூறும் சிகிச்சைகள் அனைத்திற்கும் ஆரம்ப சிகிச்சைகளில் தலையாயது  இந்த வியர்வை உண்டாக்கும் ஸ்வேதான  சிகிச்சை தான்... அதாவது நீராவி சிகிச்சை preoperative procedure ( ஒரு நோய்க்கான சிகிச்சையை அளிப்பதற்கு முன்னதாக கட்டாயம் கொடுக்கவேண்டிய சிகிச்சை) ல் விவரிக்கப்பட்டுள்ளது...





ஆயுர்வேதம் ஸ்வேதன கர்மா (sudation therapy) என்ற பெயரில் நீராவி சிகிச்சையை மிக நுண்ணியமாக தெளிவுபடுத்தியுள்ளது...
வியர்வை உண்டாக்கும் சிகிட்சையான நீராவி பிடித்தல் பற்றி இதுவரை நாம் அறிந்திருப்பது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.. 



மொத்தம் இருபத்துமூன்று வகையான ஸ்வேதன சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்வது எப்படி, எந்தெந்த நோய்களுக்கு, யார் யார் எடுத்துக்கொள்ளலாம், எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் இன்னும் பல தகவல்களை கூறியிருப்பது அருமையிலும் அருமை..


தற்போதைய தலையாய பிரச்சனை கொரோனா தொற்று... அதற்கும் இந்த  சிறந்த, முக்கிய சிகிச்சை வியர்ப்பிக்க வைக்கும் சிகிச்சை ... இது கிருமிகளை கொல்லுமா .. அல்லது கொல்லாதா என்பதை விட .. இதே போல் உள்ள காய்ச்சலில் ஆயுர்வேதம் சொல்கிற அற்புத சிகிச்சை  பலருக்கும் தெரிந்த,  மறுக்கமுடியாத உண்மை....


பிறந்த குழந்தைக்கும் கொரோனா தாக்குதல் இருப்பதாய் வெளிவந்துள்ள தகவலை அனைவரும் அறிவீர்கள்...

மென்மையான பிறந்தகுழந்தைக்கு நீராவி பிடித்தல் சிகிச்சை சாத்தியமா...?
பிறந்த குழந்தைக்கு எவ்வாறு ஸ்வேதன சிகிட்சை கொடுக்கவேண்டும் என்பதை அறிவீர்களா?..


வியர்ப்பிக்கும் நீராவி போன்ற  சிகிச்சையில் மிக தெளிவான ஞானம் இருந்தால் மட்டுமே சிகிச்சையின் முழுமையான பலனை அடையமுடியும்.. இல்லாவிடில் விபரீதவிளைவுகளே கிட்டும்... 


அறுவைசிகிட்சையின் தந்தை சுஸ்ருதர் மற்றும் தலைசிறந்த ஆச்சாரியார் சரகர் மொத்தம் இருபத்துமூன்று வகையான வியர்வை உண்டாகும் சிகிச்சைகளை ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர்... 


அதில் ஊஷ்ம ஸ்வேத (நீராவி - steam therapy ) என்னும் தலைப்பின் கீழ் ஏழு வகையான சிகிச்சை முறைகளை கூறியுள்ளனர்.. எளிய,  முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது நாடிஸ்வேதனம் எனப்படுவது.. 


இன்றைய நவீனமுறை நீராவி உள்ளிழுத்தல் சிகிச்சையும் இதுவே.. இது மிகவும் எளிமையானது ..

கவனத்தில் கொள்ள வேண்டியவை.. 
1. உணவருந்தாமல் / வெறும்வயிற்றுடன் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள கூடாது. 
2. சிகிச்சையின் போது கண்களை குளிர்ந்த நீரில் நனைத்த பருத்தி துணியினை கட்டிக்கொள்ளவேண்டும். 
3. எக்காரணத்தைக்கொண்டும் நீராவியின் உஷ்ணம் கண்களில் படக்கூடாது. 
4. சிகிச்சை பெறுபவருக்கு ஏற்ற மூலிகை தைலம் / எண்ணெய் பூசிக்கொண்டு தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
5.காற்றோட்டம் இல்லாத அறையில் சிகிச்சை எடுப்பது சிறந்தது, மின்விசிறி அணைத்துவிட்டு மேற்கொள்ளலாம். 


*வியர்ப்பிக்கும் நீராவி சிகிச்சை முறை...* 

வாயகன்ற பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி கனமான போர்வையை நீராவி வெளியே செல்லாத விதம் நன்றாக போர்த்தி நீராவியை (மூலிகையிட்டு / மூலிகையிடாமலும் ) நாசி, வாய் வழியாக உள்ளிழுக்கவேண்டும்.. அவ்வாறே 15முதல் 30நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளவேண்டும்.  பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு face steamer பயன்படுத்துதல் பாதுகாப்பு. பச்சிளம் குழந்தைகளுக்கு ஹஸ்தஸ்வேதம் எனப்படும் இருகைகளையும் நன்றாக உரசுவதால் உண்டாகும் உஷ்ணத்தோடு கைகளை குழந்தையின் மேல் ஒற்றி எடுப்பது உகந்த முறையாகும். 

*பரிந்துரைக்கப்படும் நோய்கள்..*
1. சுவாச பிரச்சனை 
2. இருமல் 
3. மூக்கில் நீர்வடிதல் 
4. விக்கல்
5. தலை, உடல் பாரம் 
6. வலி 
7. தொண்டை கரகரப்பு 
8. முகவாதம் 
9. பக்கவாதம் 
10. மலசிக்கல் 
11. நீர்க்கடுப்பு
12. பசி, சுவையின்மை 
13. அனைத்து வாத நோய்கள்... 


*பயன்படுத்தப்படும் மூலிகைகள்..* 
இந்துப்பு, முருங்கை, ஆமணக்கு, மாவிலங்கு, சீந்தில்,  எருக்கு, மூக்கிரட்டை, பார்லி எனப்படும் வாற்கோதுமை, கொள்ளு, உளுந்து, எலந்தை, கோமியம், எள்ளு...இந்த மூலிகைகளின் எந்த பகுதியையும் (வேர், தண்டு, பட்டை, சருகு, இலை, கொட்டை, பொடி, விதை   போன்றவை )  பயன்படுத்தலாம் 

*நீராவி சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள்..* 
1. கிருமி தொற்று, சளி அகலும் 
2. செரிமானம் அதிகரிக்கும் 
3. கடினமான உடல்பகுதிகள் ம்ருதுவாகும் 
4. மூட்டு பகுதிகளில் உள்ள நோய்கள் (வலி, இறுகம்)  மாறும் 
5. பசியின்மை நீங்கும் 
6. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

*தவிர்க்கவேண்டியவர்கள்..* 
1. மது, புகை பழக்கமுடையவர்
2. கர்பிணி பெண்கள் 
3. மஞ்சள் காமாலை நோயாளிகள் 
4. வயிற்று போக்கு நோயாளிகள் 
5. சர்க்கரை நோயாளிகள் 
6. இரத்தப்போக்கு உடையவர்கள் 
7. விஷ கடி அல்லது விஷமருதியவர்கள் 
8. நாவறட்சி, தொண்டை வறட்சி உடையவர்கள் 
9. தொடர் உடல் மெலிவு உடையவர்கள்..கட்டாயம் நீராவி சிகிச்சையை  தவிர்ப்பது பாதுகாப்பு. 

*தவறான முறையை மேற்கொண்டால் உண்டாகும் விபரீத / எதிர்மறை விளைவுகள்..*
1. உடல் உஷ்ணம் அதிகம் ஆதல் 
2. உஷ்ணம் / பித்தம் சம்பந்தமான நோய்கள் 
3. தொண்டை, நாவறட்சி 
4. சரும எரிச்சல் 
5. மயக்கம் 
6. தலைசுற்றல்
7. சருமத்தில் கொப்புளங்கள்..போன்றவை உண்டாக்க கூடும்.. 

வியர்வை சிகிச்சை பற்றி சந்தேகங்களுக்கு அணுகவும்.. 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000

பகிரலாமே ..

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 17, 2020

குளோரோகுயின் ஆற்றல் உள்ள சூப்பர் பவர் ஆயுர்வேத மருந்துகள்

குளோரோகுயின் ஆற்றல் உள்ள சூப்பர் பவர் ஆயுர்வேத மருந்துகள்



டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்


கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் HCQ என்ற மருந்தை அமெரிக்காவுக்கு உதவி இருக்கிறது ..





மலேரியாவுக்கு பயன்படக்கூடிய இந்த மருந்தை சின்கோனா மரத்தின் பட்டையை தான் மூல பொருளாக உபயோகிக்கிறார்கள் என்பது நாம அறிந்த ஒன்றே ..





ஹோமியோபதியில் இந்த மருந்தை பயன்படுத்தி தான் அடிப்படை கொள்கையே நிரூபிக்கபட்டது என்பதும் -ஹோமியோபதியில் இந்த மருந்து உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரியும்..



ஆயுர்வேத மருந்துகளில் இந்த #சின்கோனா_பட்டை உள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் HCQ ஆற்றல் உள்ள மருந்துகள் உள்ளதா என்றால் ..ஆமாம் உள்ளது ..



அவை ..



1 . மகா_சுதர்சன_சூரணம் / மகா சுதர்சன மாத்திரை..



மூலிகை பாராசிட்டாமால் என்கிற சுதர்சன சூர்ண மாத்திரையை சில நாட்களுக்கு முன் தான் விரிவாக பதிவிட்டு இருந்தேன்.




அந்த சுதர்சன சூரணத்துடன் சிங்கோனா சரியான அளவுகளில் சேர்த்தால் அது மகா சுதர்சன மாத்திரை ஆகிறது.





2. ஜ்வர_முராரி என்கிற விஷ காய்ச்சலுக்கு உதவுகிற மருந்து . இந்த மருந்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆயுர்வேதமருத்துவம் என்கிற வலை தளம் செல்லவும் .. இந்த மருந்தில் திரிகடுகு மற்றும் நிலவேம்பு சேர்ந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு .


கோரோனா சிகிச்சை அளிக்க #ஹைட்ராக்ஸி_குளோரோகுயின் #HCQ போன்ற மருந்துகளை பயன்படுத்தும் போது .. இதற்க்கு தாய் மருந்தான மூல பொருளான சின்கோனா பட்டை உள்ள அதை போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது .... இந்தியா ஆயுஷ் துறை இப்போது மேலும் வீரியம் கொண்டு கொரோனாவை ஒழிக்க பாடுபடும் இந்த வேளையில் இந்த அற்புத மருந்துகளை தெரிந்து கொள்வது நல்லது



மேலும் விவரம் அறிய, ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு


#AL_SHIFA_AYUSH_HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை

கடையநல்லூர் 9042225333

திருநெல்வேலி 9042225999

ராஜபாளையம் 9043336888

தேனி 9047277 577

சென்னை 9043336000

Post Comment