சனி, மே 16, 2020

காய்ச்சலை சரிசெய்யும் உணவு....


காய்ச்சலை சரிசெய்யும் உணவு....


காய்ச்சலில் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத கஞ்சிகளின் வகைகள்..
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


நம் அனைவருக்கும் காய்ச்சல் வந்து சாரியாவதுண்டு... காய்ச்சலுக்கு பொதுவாக மருத்துவர் பரிந்துரைப்பது அல்லது நமக்கு கொடுக்கப்படும் உணவு எண்ணெய், காரம் இல்லாத எளிமையான உணவாக இருக்கும்...


இன்றும் எனக்கு நினைவில் உள்ளது சிறுபிராயத்தில் காய்ச்சலின் போது அம்மா பாக்கெட்டுகளில் வரும் ப்ரெட் அல்லது பண் (ரொட்டி ) வாங்கி பாலில் முக்கி ஊட்டுவார்... இது பொதுவாக அனைவரின் வீட்டிலும் நடந்திருக்கும்... சிலர் இடியாப்பம், இட்லி, ஆப்பம், பிஸ்கட் போன்ற உணவுகளையும் காய்ச்சலின் போது உணவாக எடுக்கும் பழக்கமாக வைத்திருப்பர்...

அப்போது யாரும் இதனை அறிந்திருக்கவில்லை... காய்ச்சலுக்கு சிறந்த உணவு நவரைஅரிசியினால் (சிவப்பரிசி) செய்யப்படும் கஞ்சி என்பது...

சிவபரிசியில் உள்ள சத்துக்கள்...
இரும்பு சத்து, மினரல், கால்சியம், நியாசின், தையமின், ரிபோஃளேவின் போன்ற புரதசத்து, நார்சத்து முதலானவை..

கஞ்சியை பல முறைகளாக தயார் செய்வதை பற்றி ஆயுர்வேதம் க்ரித்தண்ண வர்கம் என்னும் தலைப்பில் விவரித்துள்ளது...

மந்த, பேய, யவாகு, விலேபி, லாஜாமண்ட என்று அரிசி கொண்டு செய்யப்படும் கஞ்சி வகைகளை நோயாளியின் உடல் தகுதிக்கு, நோய்த்தன்மைக்கு ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளனர்...

இம்மாதிரியான உணவுகளினால் ஆமாத்தினால் உண்டாகும் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா என எந்த வகை காய்ச்சலானாலும் நொடி பொழுதில் நீங்குவது உறுதி.. நோய்கிருமியினால் (கொரோனா உட்பட ) உண்டாகும் காய்ச்சல்மட்டுமின்றி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு என அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது...

கஞ்சி தயாரிக்கும் முறைகளை காண்போம்...

மந்த* : ஒரு பங்கு சிவப்பரிசி பதினான்கு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அல்ஷிபா அரிசி நன்கு வெந்ததும் மீதமுள்ள தண்ணீரை தனியாக வடித்து பிரித்தவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகவேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, கிருமியினால் உண்டாகும் காய்ச்சல் போன்றவற்றிக்கு சிறந்த உணவு. உடல் இழந்த நீர் சத்தை பெறுவதுடன் பசியை தூண்டுவித்து, நரம்புகளுக்கு சக்தியளிக்கும்.


பேய* : ஒரு பங்கு சிவப்பரிசி, எட்டு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி மிருதுவாக வெந்தவுடன் நீரை பிரிக்காமல் உப்பு மற்றும் மிளகு பொடி சேர்த்து மிதமான சூட்டுடன் உண்ண வேண்டும்.


முந்தைய நீராகாரம் (மந்த) பருகிய இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் நோயாளியால் நல்ல பசியை உணர முடியும்... அப்போது இந்த (பேய) வகை கஞ்சியை உண்ண செய்வதால் உடலில் உள்ள சோர்வு, நாவறட்சி, தாகம் நீங்கி ஊக்கம் பெறுவர்.


யாவாகு* : ஒரு பங்கு சிவப்பரிசியுடன், ஆறு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி நன்றாக வெந்தவுடன் அவற்றில் உப்பு, துருவப்பட்ட இஞ்சி, மிளகு தூள் சேர்த்து கடைந்து உண்ண வேண்டும்.

இது மூன்றாவது நிலையில் கொடுக்கும் கஞ்சி... சோர்வு நீங்கிய நோயாளி இந்த கஞ்சியை உண்பதினால் மலம், ஜலம், காற்று, வியர்வை வெளியேறும். உடல் பாரம் நீங்கி இலகுவாக இருப்பதை உணரமுடியும்.


விலேபி* : ஒரு பங்கு சிவபரிசியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும். அரிசி மிருதுவானதும் உப்பு, துருவப்பட்ட இஞ்சி, பொடி செய்யப்பட்ட ஜீரகம், சோம்பு, மஞ்சள், கொத்தமல்லி, மிளகு சேர்த்து உண்ண வேண்டும்.

நோயாளிக்கு மலஜலங்கள் வெளியேறியதால் உணவின் சுவையை உணர முடியும். உணவின் நறுமணம் பசியை தூண்டி உற்சாகம் அடைவர். பசுநெய் சேர்த்தும் பரிமாறலாம்.

லாஜாமந்த* : நெற்பொரி, தண்ணீர் சேர்த்து சமைக்கபட்ட கஞ்சி வகை.. சிறந்த உடல் ஆற்றலை தரும்..

முறையாக இரண்டு அல்லது மூன்று மணி நேர இடைவெளியில் கொடுக்கப்படும் இந்த கஞ்சி வகைகளால் உடல் எந்த மருந்தின் உதவியின்றி பிணியிலிருந்து மீண்டுவிடும். செரிமான தொந்தரவு உள்ளவர்கள், நோம்பு நாட்களிலும் இந்த கஞ்சி வகைகளை பின்பற்றுவதால் வயிற்று தொந்தரவுகளின்றி உடல் சீராக இருக்கும்.

இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு இருக்கும் தாய்மார்களுக்கு கஞ்சி என்ற ஒன்றை தயார்செய்வது பற்றியும், காய்ச்சலின் போது அதை பயன்படுத்துவது பற்றியும் தெரியாமல் போய்விடும் அளவிற்கு பாரம்பரியம் அழித்துக்கொண்டு வருகிறது... இப்பொழுதே விழித்துக்கொண்டு மீட்டெடுப்போம்... பயனடைந்து, பிறர் பயன்பெற பகிர்வோம்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
பகிர்ந்து மகிழ்வோம்..
ஆயுர்வேதம் பரப்புவோம்...

Post Comment

0 comments:

கருத்துரையிடுக