இதை புரிந்துகொண்டால் உங்க
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்
மூலிகை ஞானம், உடற்கூறு ஞானம், பரிசோதனை அறிவு இது எதுவுமே தேவை இல்லை... இந்த மூன்று உணவுகளை முறையாக பயன்படுத்த தெரிந்தால் போதும்... உங்களின் குடும்ப ஆரோக்கியத்திற்கு மருத்துவர் நீங்கள் தான்..
உலகில் உள்ள அனைத்து மருந்துகளின் முன்னோடிகள் தான் இந்த மூன்று உணவுகளும்... அவை எண்ணெய், நெய் மற்றும் தேன்....
நமது உடலில் முடி முதல் நகம் வரை ஒவ்வொன்றையும் ஆக்கிரமித்திருப்பது மூன்று தோஷங்கள் எனப்படும் வாதம், பித்தம், கபம் என்பவையே...வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தன் நிலையிலிருந்து மாறுபடும் போது... அதாவது ஒவ்வொன்றும் தனக்குரிய இடத்திலிருந்து, தனக்குரிய அளவிலிருந்து மாறுபடும் போது அதற்கு தக்கவாறான உடல் உபாதைகள் தோன்றுகின்றன... இந்நிலையை கையாள, மாற்றமடைந்து வாதம், பித்தம், கப தோஷங்களை சீராக்க மூன்று உணவுகள் போதுமானது...
1.எண்ணெய்...*
பெரும்பாலான தைலங்கள் (எண்ணெய்) கொட்டைகளில் இருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படுகிறது...
எண்ணெய் வகைளில் உன்னத பலன் கொடுப்பது திலத்தைலம் (நல்லெண்ணெய் / எள் எண்ணெய்).
தைலம் தனக்கென பல நல்ல குண
1.வாதத்தை குறைப்பதற்கு தைலத்திற்கு நிகரான ஒன்று வேறில்லை.
2.உடல் பலத்தை... அதாவது தசை, நரம்புகள், முடி, சவ்வுகள், எலும்புகள், மூட்டுப்பகுதிகள் என அனைத்திற்கான பலத்தை கூட்ட வல்லது.
3.சரும பொலிவிற்கு moisture எனப்படும் இளமை, மென்மையை தைலத்தால் மட்டுமே சிறப்பாக தர முடியும்.
4.உடலில் அனுஷ்னமாக (அதிக உஷ்ணம், அதிக குளிர்ச்சி இரண்டும் இல்லாத நடுநிலை) செயல்படுகிறது.
5.நல்லெண்ணெயை உடல் பருமன், அடிக்கடி அஜீரணம் உள்ளவர்களும் உணவில் சேர்த்துக்கொள்வதினால் ஆரோக்கியமே தவிர உபாதைகளை உண்டாக்காது.
6.குடல்புழு, மலசிக்கல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் சிறந்தது.
எப்போது_பயன்படுத்தலாம்...*
உடல் மெலிவு, சோர்வு, குளிர், நடுக்கம், பதற்றம், மனஅழுத்தம், வலிகள், தலைசுற்றல், புலன்கள் தொய்வு, தூக்கமின்மை, சரும வறட்சி, மலசிக்கல், வயிற்று பொருமல் வாதம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான அறிகுறிகள்... இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் வெறும் வயிற்றில் குடிப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பது நற்பலனை தரும்.
2.நெய்...*
நெய் தயாரிக்கபடுவது பசுவின் பாலிலிருந்து. வெள்ளாடு, எருமை, செம்மறி ஆடுகளின் பாலிலிருந்தும் நெய் கிடைக்கப்பெற்றாலும் பசுவின் நெய் அமிர்தத்திற்கு நிகரான தனி தன்மையை பெற்றுள்ளது.
ஆயுர்வேதம் சினேக (moisture) வகைகளுள் பசுநெய்க்கு முதலிடத்தை தந்துள்ளது. பசுநெய் வாதம், பித்தம் என இரண்டு தோஷங்களை சமநிலைப்படுத்த பணிபுரிந்தாலும் பித்தத்தை குறைப்பதில் சிறப்பான முறையில் செயலறுகிறது.
பசுநெய்யின் நற்குணங்கள்...
1.உடல் ஆற்றலை கூட்டுகிறதுக்கு... உழைப்பின் அசதி உடலை தாக்காமல் பாதுகாக்கிறது.
2.புத்தி கூர்மை, ஞாபக திறனை அதிகரிக்க செய்கிறது.
3.ஆயுள்காலத்தை நீடிக்கிறது.
4.கண் பார்வை திறனை குன்றாமல் பாதுகாத்து வளர்கிறது.
5.பெண்மை, ஆண்மை தன்மையை வளர்த்து நல்ல ஆரோக்கியமான சந்ததியினரை பெற உதவுகிறது.
6.செரிமான சக்தியை, பசியை தூண்டுகிறது.
எப்போது பயன்படுத்தலாம்...*
சிறுநீர், மலம் கழிப்பதில் எரிச்சல் மற்றும் இரத்தப்போக்கு, கண் மற்றும் சருமத்தில் உஷ்ண உணர்வு, அதிக தாகம், பசி, வயிற்று புண், நெஞ்செரிச்சல், அதிக வியர்வை, இளநரை, மயக்கம் இவையனைத்தும் பித்தம் சம்மந்த கோளாறுகளின் அறிகுறிகள். இரண்டு ஸ்பூன் பசுநெய் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் எளிதில் குணமடையலாம்.
3.தேன்...*
இயற்கையான தேன் தரும் நன்மைகள் எண்ணில் அடங்காதவை.
உடலில் உள்ள தேவையற்ற அத்தனையையும் துண்டித்து வெளியேற்றும் திறன் தேனிற்கு மட்டுமே உள்ளது. தேவையற்ற நச்சு, வேண்டாத சதை, அதிகப்படியான கொழுப்பு என அனைத்தையும் அறுப்பது தேன்.
தேன் தரும் நன்மைகளுள் சில.
1.குமட்டல், வாந்தி, பேதி போன்றவற்றை உடனடியாக நிறுத்தும்.
2.இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.
3.சிறுநீர் கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்ய வல்லது.
4.தீராத தாகம், கிருமி தொற்றிற்கு சிறந்த தீர்வு தருகிறது.
5.சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகள் பயன்படுத்த ஏற்றது.
6.இரத்த சோகை முதலான இரத்த அணுக்கள் குறைப்பாட்டிற்கு முழுமையான தீர்வு தருகிறது.
7.நல்ல குரல் வளத்தை தருகிறது.
எப்போது பயன்படுத்தலாம்...*
பசியின்மை, சுவையின்மை, உடல் பாரம், உடல் பருமன், சோம்பல், குமட்டல், வாந்தி, பேதி, அதிக தூக்கம், சோர்வு, ஆறாத புண்கள், கிருமி தாக்கம் போன்றநிலைகளில் பயன்படுத்துவதால் கபம் சீராகி நிவாரணம் தரும். இரண்டு ஸ்பூன் தேன் தினமும் சாப்பிடுவதால் சிறந்த பலனை பெறலாம்.
சிறிய அறிகுறிகள் முதல் எவ்வளவு பெரிய நாள்பட்ட நோயாக இருப்பினும் மூன்று தோஷங்களை நன்குணர்ந்து நோய்க்கான தீர்வை நோக்கி பயணிக்கும் வகையில் எந்த பாதகமும், பக்கவிளைவும் இல்லாத தைலம், நெய் மற்றும் தேன் பயன்படுத்தினால் தோல்வியே கிடையாது...
சந்தேகங்களுக்கு அணுகவும்...
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே
0 comments:
கருத்துரையிடுக