வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 08, 2020

வயதான பெற்றோர்களுடன் கொடிய கொரனோவை எப்படி எதிர்கொள்வது ?

வயதான பெற்றோர்களுடன் கொடிய கொரனோவை  எப்படி எதிர்கொள்வது ?

Danger zone (COVID 19)



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


கொரோனா தொற்று என்ற பிரச்சனை ஆரம்பித்த சில காலத்திற்குள் அறிவியல் ஆராச்சியாளர்களும் மருத்துவர்களும் இறப்பு விகிதம் பற்றி  வெளியிட்ட கருத்து... வயதில் மூத்தோர்களும் அதாவது 60வயதை கடந்தவர்களும், பிற நோய்களால் பாதிக்கபட்டவர்களும் கொரோனா தாக்கத்தினால் இறக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருந்தனர்....



குழந்தைகளை மட்டும் தான் பெரிதும் பாதிக்கும் என்றிருந்தால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை விட வயோதிகர்களை பாதிக்கும் என்ற அறிவிப்பு மிக நிதானமாகவே அவர்களின் பிள்ளைகள் மனதை பாதித்திருக்கிறது... வெகு சிலரே முதியோர்களை சிறந்த முறையில் பராமரிக்கின்றனர்..



காரணம் இனி அவர்களால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற மனத்தோன்றலே...



அப்படி இல்லை நண்பர்களே... இன்றைய அவர்களின் நிலை நாளை உங்களுக்கும் தானே... உங்களை பார்த்து கற்றதை தானே உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பிரதிபலிப்பார்கள்...



மரணம் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான்... ஆனால் மரணபயம் என்பது எதிரிக்கும் வந்துவிட கூடாது... ஏனென்றால் மரணத்தை காட்டிலும் மரணபயம் பெரும் துன்பத்தை தந்து மனதில்  ஆறாத வடுவாகி இறப்பு வரை உறவுகளிடத்தில் பற்றற்று போய்விடும் நிலையை கொடுத்துவிடும்.



ஆகையால் நாம் பெற்ற குழந்தைகளை எவ்வாறு பராமரிக்கின்றோமோ, நாம் குழந்தைகளாய் இருந்தபோது நம்மை எவ்வாறு நம் பெற்றோர் பாதுகாத்தார்களோ.. அதே போல் நம் பெற்றோர்களின் முதுமையில் அவர்களை பேணி காப்பது நமது பொறுப்பே...

இளைய தலை முறையை தான் இந்த கொரனோ இந்தியாவில் அதிகம் பாதிக்கிறது என்பது ஒரு கவனிக்க தக்க விஷயம் ..



வெகு சில விஷயங்களில் அதாவது உணவு, உடற்பயிற்சி, உறைவிடம்(தங்கும் இடம் ), உள்ளம் ஆகியவற்றில்  கவனம் செலுத்தினாலே கொரோனா பிடியிலிருந்து நம் அன்புக்குரியவர்களை நாம் காப்பாற்றி மீட்டுவிடலாம்...


அவற்றை கீழே காண்போம்...


தனிமை படுத்தல் , தள்ளி இருத்தல், விலகி இருத்தல் -இதை தவிர - நாம் செய்ய வேண்டியவைகள் - பல உள்ளது ..


*உணவு* 

ஆரோக்கியமான உணவை பட்டியலிட்டு அட்டவணை போட்டு கொள்ளுங்கள்.

அனைத்து பருப்பு வகைகள், தானியங்கள், காய்கறிகள், கீரைகள் இடம்பெறும் வகையில் அமையட்டும்.

இவற்றை எளிதாக ஜீரணிக்கும் விதத்தில் சுலபமாக சமைப்பதை இணையதளங்களில் பெற்றிடலாம்.

பால், டீ, காபி தவிர்த்து மூலிகை தேநீர், மூலிகை ரசம் (சூப் )அருந்த கொடுங்கள்.

எண்ணெய் பலகாரங்கள், கிழங்கு வகைகள், இனிப்பு பண்டங்கள் அறவே தவிர்த்திடுங்கள்.

முளைவிட்ட பயரோ, அவித்த பயறையோ எப்போதும் அவர்களின் அறையில் இருக்குமாறு வைத்திடுங்கள்.

அவர்களின் அறையில் அல்லது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியின் மின்சார இணைப்பை துண்டித்துவிடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறார்களா என்பதை ஊர்ஜீத படுத்துங்கள்.

மேற்கத்திய உணவு / பாரம்பரியம் அல்லாத உணவுகளை தவிர்த்திடுங்கள்.

உணவில் நாள்தோறும் இஞ்சி, மிளகு, சுக்கு, கொத்துமல்லி, ஜீரகம், லவங்கம், மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி ஆகியவை சேர்வதை உறுதிப்படுத்துங்கள்.

*உடற்பயிற்சி* 

சர்க்கரை நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகளுள் நடைபயிற்சியையே பெரும்பான்மையானோர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நோய் தாக்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அவர்களை வீட்டில் முடக்கிப்போட்டிருப்பது ஒரு புறம் நன்மைதான்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இச்சமயத்தில் உதவுவது யோகா பயிற்சிகளே.

அன்றாடம் அவர்களுக்கு தகுந்த சில முக்கிய யோகா பயிற்சிகளை தேர்ந்தேடுத்து பயில்விக்க வேண்டும்.

பத்து ஆசனங்களிலிருந்து பதினைந்து ஆசனகள் வரை மிக நிதானமாக பொறுமையுடன் அவர்களுடன் நேரம் செலவழித்து பயிற்றுவித்தல் அவசியம்.

ஆசன்கள் முடியாவிடில் சூர்ய நமஸ்காரம் சுழற்சியை பயிற்றுவிப்பது மிக நன்று.

அதுவும் முடியாவிடில் loosening exercise எனப்படும் எளிய உடற்பயிற்சிகள் செய்விப்பது உத்தமம்.

பிராணாயாமம்  சுவாச பயிற்சி போன்றவற்றை அவர்களோடு சேர்த்து செய்வது அவர்களுக்கு சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மலசிக்கல் பிரச்சனை உள்ளதா என்று கேட்டறிந்துகொள்ளுங்கள்.

உணவிற்கு முன் கை கழுவும் முறையை தெளிவுபடுத்தி கட்டாயமாக்குங்கள்.



*உறைவிடம்* 

அவர்கள் இருக்கும் அறையையே அல்லது இடத்தையோ மிக தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.

தூசு அதிகம் அல்லது பொதுவாக நகர்ப்புற வீடுகளில் வசிப்பவர்கள் துடைப்பத்தால் வீட்டை பெருகுவதை விட vaccum cleaner கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது.

அவர்களின் அறையில் ஏ.சி இல்லாமல் மின்விசிறி மட்டும் பயன்படுத்த அறிவுறுத்துங்கள்.

அவர்களின் அறையில் அனாவசிய பொருட்கள் சேர்வதை தவிர்த்திடுங்கள்.

மரத்தால் ஆனா கட்டில் மெத்தை இல்லாமல்  பயன்படுத்துவது சிறந்தது.
அவர்கள் அறையை ஒரு நாளைக்கு ஒரு வேளைஎனும் தூபணமிடுங்கள்.

துப்பணமிடும் பொருட்கள் அரக்கு, மஞ்சள், அதிவிடயம், கடுக்காய், கோரைக்கிழங்கு, அரேணுகம், ஏலக்காய், லவங்க இலை, தகரம், கொட்டம், ஞானல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.



*உள்ளம்*

அவசியம் தியானத்தை கட்டாயமாக்குங்கள்.

இறை வழிபாட்டில் அவர்களை முன்னிறுத்துங்கள்.

விரும்பிய பாடல்கள்,நாடகங்கள்(டிவி சீரியல் அல்லாத ), படங்கள், நகைச்சுவை, செய்திகள் பார்க்க அவர்களோடு இணைந்திடுங்கள்.

அவ்வப்போது உறவினர்க்கோ, நண்பர்களுக்கோ அலைபேசியில் உரையாட ஊக்கப்படுத்துங்கள்.

உங்களை வழிநடத்தவும் / பராமரிக்கவும்  அவர்களின் முக்கிய பங்கை உணர்ந்திட செய்யுங்கள்.



*தடுப்பு மருந்து*


எந்த மருந்தும் ஆராச்சியில் நிரூபிக்க முடியாமல் போனாலும் -ஆயுர்வேத  மருந்துகள் பல வைரஸ்  கொல்லும்  சக்தி உள்ளது .. அதை பற்றி பல கட்டுரைகளில் எடுத்து சொல்லியாகி  விட்டது ..

குடும்ப மருத்துவரையோ / சிறந்த ஆயுர்வேத  சித்த மருத்துவரையோ ஆலோசித்து அவர்கள் தருகிற உடல் எதிர்பாற்றல் மிக்க மருந்துகளை எடுத்து கொள்ளலாம்

தடுப்பு மருந்தாக Arsanic Album எனும் ஹோமியோ மருந்தை கொடுங்கள்.கேரளாவில் உள்ள எல்லா மறுத்துவமனைகளிலும்  இந்த மருந்தை கொடுக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.


சுயநலம் மிகுந்த உலகில் மாசற்ற அன்பை தருவது பெற்றோர்கள் மட்டுமே.
இறந்தபின் வணங்குவதை விட இருக்கும் போதே அவர்களை மகிழ்வித்து மகிழ்வோம்.



சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும் 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

கொரோனா ஓர் எச்சரிக்கை விடுப்பு (அழிவிற்கான ஆபாய ஒலி)..

கொரோனா ஓர் எச்சரிக்கை விடுப்பு (அழிவிற்கான  ஆபாய ஒலி)...ஆயுர்வேத அணுகுமுறையும் 




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.




ஒரு பெரிய போர் நிகழவிருக்கிறது என்றால் நம்புவீர்களா....


ஆம் இயற்கைகும் மனித தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மிக பெரிய போர் மூலத்தான் போகிறது அதற்கான எச்சரிப்பு ஓலை தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ...


அதில் இயற்கையை வெல்ல எவராலும் முடியாது...


இன்னும் சில காலங்களில் மனிதனுக்கு வரும் நோயால் மனிதகுலமே மருந்தின்றி மருத்துவமின்றி கதி கலங்கி நிற்கும்... இப்படியான மரணத்தை தான் வரவேற்கபோகிறோமா...?  அப்பொழுதாவது இயற்கை வென்றதாய் ஒப்புகொள்வோமா...?


இயற்கை நினைத்தால் மனிதனுள் சீனர்கள், இத்தாலியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் என பாகுபாடு காட்டாது கூண்டோடு கைலாசம் அனுப்பிவிடும்... அதற்கு COVID 19 யே உதாரணம்...



ஒவ்வொரு குடும்பத்திலும் நிற்கதியாக நம் வாரிசுகள் நிற்கும் அவலநிலையை நினைத்து பார்த்தால் நெஞ்சம் பதறும்...


விளை நிலங்களை கார்பொரேட் கட்டிடங்களாக மாற்றினான் மழை பொய்தது..

எஞ்சியுள்ள நிலத்திலும் மண் புளுகளை கொள்ள  ரசாயனங்களை வாரி இறைத்தான் நிலம் மாசடைந்தது....

தொழிற்சாலை கழிவுகளை ஆற்றிலும், கடலிலும் கலந்தான் நீர் மாசடைந்தது...

வாகன மிகுந்தியாலும், மரத்தை வெட்டியும்  காற்றையும் மாசடைய செய்தான்...

வனத்தை அழித்தான் வனவிளங்குகளும் அழிந்தன... உணவுகள் கலப்படமயமாயின, கால்நடைகளும் அழிந்தன...


இயற்கையை அழித்ததோடு நில்லாமல் டெக்னாலஜி என்ற பெயரில் மொபைல், கம்ப்யூட்டர், ஏசி, பிரிட்ஜ் என கண்டுபிடித்து மனிதனை அழித்தான், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி என்ற கண்டுபிடிப்பால் பெண்கள் உடல் வழுவிழந்தனர்... இன்டர்நெட் மோகத்தால் குழந்தைகள் பம்பரம், சிலம்பம், பல்லாங்குழி, பாண்டி, தாயம் போன்ற விளையாட்டுகளை தொலைத்தனர்...


மனிதன் முக்கால்வாசி தன்னை தானே அழித்துக்கொண்டான்...

இயற்கையும் மழை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, புயல், காட்டு தீ என கோரதாண்டவம் ஆடியது மனிதன் திருந்திய பாடில்லை...எனவே பாடம் புகட்ட உருவெடுதுள்ளது நோய் பரப்பும் எண்ணம் கொண்டு....


10 வயது ஆண் குழந்தையின் சராசரி உடல் எடை 25கிலோ... ஆனால் 80கிலோ உடலை சுமக்கிறான்...


8 வயது பெண் குழந்தை பூப்படைகிறாள்...


இதற்கு யார் காரணம்...?
மனிதனின் நவநாகரீகமே காரணம் ...



இதோ ஆயுர்வேதம்...

பள்ளிகளில்  கட்டாயப்பாடமாக வேண்டிய அறிவியல்... இன்றும் பலருக்கு அதில்  என்ன உள்ளதென்றே தெரியாமலிருப்பது வேதனையே...

எந்த  மருத்துவத்திற்கும் ஈடு  இணை இல்லாமல் இருப்பது ஆயுர்வேதம் ...


General medicine  ற்கு *காய சிகிட்சா*
Paediatrics ற்கு *பால சிகிட்சா*
Psychiatry  க்கு *கிரஹ சிகிட்சா*
ENT  க்கு *ஷாலாக்யம்* Surgery க்கு *ஷல்யம்*
Toxicology க்கு *தம்ஷ்ட்ரா*
Rejivunation க்கு *ஜரா /ரசாயன சிகிட்சா*
Sexology க்கு *வ்ருஷ சிகிட்சா*...


பிறந்த குழந்தைக்கு சிசுபரிச்சர்யா, ஸம்ஸ்காரா என அழகாய் எடுத்து  சொல்லும் கௌமாரப்ருத்யம்... பின்பற்றாததால் குழந்தைகள் நோய்வாய் படுகின்றனர்...


முதலாம் மாத தொடக்கத்தில் ஆரம்பித்து பத்து மாதங்கள் தாய் சேய் நலன் காக்கும் மாசானு மாசிக மருத்துவம் சொல்லும் ப்ரசூதி...
குழந்தை பெற்ற உடம்பை பேண சூதிகா பரிச்சர்யா...
பின்பற்றாததால் பல பிரசவ மரணங்கள் நிகழ்கிறது...


கார்டியாலஜிஸ்ட்களும், பல்மோனாலஜிஸ்ட்களும், நியூராலஜிஸ்ட்களும் அறிந்திராத மருந்தும், மருத்துவமும் ஏன் நோய்களும் கூட ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது..


இனியாவது விழித்துக்கொள்வோம் நண்பர்களே...


ஆங்கில மருத்துவம் அவசர காலத்திற்கு மட்டுமே உதவடும் அன்றாட வாழ்க்கைக்கு வேண்டாம்...


இயற்கையோடு ஒன்றி வாழ ஒத்துளையுங்கள் அன்பர்களே...


மாற்றம் தனி ஒரு மனிதனிடம் இருந்துதான் உருவாகிறது...


கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்க பட்டதென்றும் பயோவார் என்றும் சர்ச்சை எழுகிறது...
எதுவாய் இருந்தால் என்ன... பாதிக்கப்படபோவதும், எதிர்கொள்ளபோவதும் நாம்தானே..


ஆயுர்வேதம் எனும் பிரம்மாஸ்திரம் ஏந்தி தமிழன் என்றும் இந்தியன் என்றும் உலகிற்கு உதாரணமாய் நிற்போம்...

சமூக நலன் கருதி வெளியிடுவோர்

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000


Post Comment

சனி, ஏப்ரல் 04, 2020

நிமோனியா.... ஸ்வாசானக ஜ்வரம் (COVID 19).

நிமோனியா.... ஸ்வாசானக ஜ்வரம் ( COVID  19)... 
ஆயுர்வேதம் சொல்வது என்ன ?




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA



கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலரும் நிமோனியா ஏற்பட்டு மூச்சு திணறலால் இறந்ததை அறிந்திருப்பீர்கள்...



நிமோனியா பற்றி தெரிந்துகொள்வோம்....

ஒரு வைரஸ் காற்றின் மூலம் சுவாசம் வழியாக நூரையீரலை அடைந்து alveoli எனப்படும் காற்று பைகளை சேதமடைய செய்கிறது. சேதமடைந்த காற்றுப்பைகளினால் carbon dioxide மற்றும் oxygen  ஐ பரிமாற்றம் செய்யமுடியாமல் போவதால் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது. சேதமடைந்த காற்று பைகளில் சீல் போன்ற சளி அல்லது நீர் சேர்த்து நிலைமையை மோசமடைய செய்து மூச்சு திணறலினால் உயிரிழப்பு ஏற்படுகிறது.



*நிமோனியா நோய்கான  காரணங்கள்*

Influenza, corona போன்ற வைரஸ்களால்  ஏற்படும் பாதிப்புகளின் விளைவு,  புகை பிடித்தல், மது, காற்று மாசுபாடு, chemical அல்லது ரசாயனம்  மிகுதியாக பயன்படுத்தப்படும் இடங்களில் வசித்தல், அதிக தூசி, துகள்கள் உண்டாகும் தொழிற்சாலைகளில் பணிபுரிதல்... மேலும் பல...

*அதிக அபாயம் யாருக்கு?*

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளர்வர்களுக்கு, உடல் பயிர்ச்சி மற்றும் மூச்சு பயிற்சியின்மை, சுகாதாரமின்மை, வயது முதிர்வு, ஆஸ்துமா நோயாளிகள், இருதயம், கல்லீரல் பாதிப்புடையவர்கள், நாள்பட்ட சர்கரை மற்றும் இரத்தஅழுத்த  நோயாளிகள், தைராய்டு நோயாளிகள், tonsilitis போன்ற பாதிப்புடையவர்கள்.... மற்றும் பலர்....

*ஆயுர்வேதம் தரும் தீர்வு..*

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எந்த ஒரு இயந்திர பரிசோதனை கருவிகளும் இல்லாமல் நோய்க்கான காரணங்களை கூறி அதன் அறிகுறிகளை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளனர் (சளி, காய்ச்சல், பசியின்மை, நாவறட்சி, இருமல், மார்பு வலி, சுவாச கோளாறு, சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், முடிவில் மரணம் ).



*தீர்வாக.... விஷாபிசங்கஜ ஜ்வர எனும் தலைப்பின் கீழ்...*

பிருஹத் கஸ்தூரி பைரவ ரஸ், நாராதிய லக்ஷ்மி விலாஸ் ரஸ், த்ரிபுவன கீர்த்தி ரஸ், த்ரிலோக்ய சிந்தாமணி ரஸ்... எனும் மாத்திரைகள் அறிவுறுத்தியுள்ளனர்... ( மருத்துவர்களின் ஆலோனைகளோடு  மட்டும்  இந்த மருந்துகளை எடுக்க வேண்டும் -சுய மருத்துவம், மருந்தை பற்றி முழுவதும் தெரியாமல் எடுக்க கூடாது )

நோயாளிக்கு உடல் மற்றும் மன நலத்தை பேணும் விதமாக உணவும் அறிவுறுத்தியுள்ளனர்..

வெது வெதுப்பான இதமான சூட்டுடன் நீர் பானம் அல்லது  ஆகாரங்கள், இலஞ்சூட்டுடன் கஞ்சி வகைகள், ஆப்பிள், உலர் திராச்சை, ஆட்டு பால் மற்றும் புடலை, ஜீரகம், இந்துப்பு, கொள்ளு உணவு வகைகளின் மூலம் உடல் பலத்தை மேம்படுத்த வலிகளை கூறியுள்ளனர்.

இவ்வாறு நூற்றாண்டுகளில் வரும்  பல நோய்களை தொலைநோக்கு பார்வையுடன் நம் அறிவிற்கு எட்டும் வகையில் குறிப்புகளை அளித்துள்ள ஆயுர்வேத ஆச்சார்யாகளின் மருத்துவ ஞானத்தை எண்ணும்பொழுது மெய்சிலிர்க்கத்தான் செய்கிறது...

இத்தகைய மகத்துவம் வாய்ந்த மருத்துவத்தை அயல்நாட்டிற்கு தாரைவார்க்காமல் நமது சமுதாயம் முன்னேற பின்பற்றுவோம்.

சந்தேகங்களுக்கு அணுகவும்
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

பகிரலாமே 

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 03, 2020

வைரஸ்....


*வைரஸ்....* 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA

பிரபஞ்சமானது  ஓர் அறிவு உயிரினம்  முதல் ஆறறிவு ஜீவன் வரை அனைத்திற்கும் பொதுவானது மட்டுமல்ல அதைத்தாண்டி கண்களுக்கு தென்பட்டிராத நுண்ணுயிர் கிருமிகளுக்கும் (பாக்டீரியா, வைரஸ் ) பொதுவானதே...


இவ்வுலகில் பலம் பெற்றிருக்கும் ஒருவன் பலம் குறைந்தவனை ஆக்கிரமிக்கின்றான்...


பலம் வாய்ந்த சிங்கம் பலம் குன்றிய விலங்கை வேட்டையாடி உணவாக்கும்...


பலம் பொருந்திய நாடு மற்ற குறுகிய நாட்டை தன் வசப்படுத்தும்...


பலம் மிகுதியானவன் பலஹீனமானவனை வெற்றிகொள்கிறான்....


இது மிக இயல்பான நிகழ்வுகள்...



இன்றும் நாம் கற்க வேண்டியது இதுவே... வைரஸ் எனும் பலம் கொண்ட உயிர் குடிக்கும் எதிரியை நோய் எதிர்ப்பு பலம் கொண்டு வெல்வதே ஆகும்....


ஆயுர்வேதம் நோய் எதிர்ப்பு சக்தியை மூன்று வழிகளில் பெறலாம் என சொல்கிறது

1) Constitutional (மரபுஅணு  வழி கிடைப்பது)
2) Temporal (அதாவது சிலருக்கு குளிர்காலத்தில் sinusitis தொல்லை ஏற்படும் அவர்கள் வெயில் காலத்தில் ஆரோக்கியம் மிகுந்து இருப்பர்... சிலருக்கு வெயில் காலத்தில் ஒற்றை தலைவலி உண்டாகும் அவர்களே குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பர்... )
3) Acquired (வாழ்க்கை முறையில் பெறுவது )


நோய் எதிர்ப்பு சக்தி அனைவரிடமும் உண்டு... அது பலம் வாய்ந்ததா அல்லது பலம் குன்றியதா என்பதை நமது *வாழ்க்கை முறையே* நிர்ணயிக்கும்...



எவ்வாறு/எதை அடிப்படையாக்கி  நிர்ணயிக்கிறது?


இரண்டு விஷயங்களை கொண்டு நிர்ணயிக்கின்றது... 1)அன்றாட உணவு
2)அன்றாட உடல் உழைப்பு


மிக எளிதானது போல் தோன்றலாம் ... ஆனால் எளிதல்ல...


 அன்றாட உணவின் கீழ் உணவு உற்பத்தியிலிருந்து(அதிக பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்படாமல் )  ஆரம்பித்து உணவு சமைக்கும் பாத்திரம்(மண் பாண்டம்(சிறந்தது ) /ஈயம் /எவர்சில்வர் ), பயன்படுத்தப்படும் நீர்(சுத்தீகரிக்கப்பட்ட நீர் /மழை நீர்(சிறந்தது ) /நிலத்தடி நீர் /கடல் நீர் ), சேர்க்கப்படும் பொருள்கள் (அஜினோமோட்டோ (வேண்டாம் )), உண்ணும் முறை (வ்ருத்த அகாரம் ), உண்ணும் நேரம் (அகால போஜனம் ), உண்ணவின் அளவு என இத்தனையும் அடங்கும்...


அன்றாட உடல் உழைப்பின் கீழ் காலையில் எழுந்திருக்கும் நேரம்(ப்ரம்மமுகூர்த்தம் ), நாற்பது நிமிடங்கள் உடற்பயிற்சி, மனமார்ந்த  பிராத்தனை, எட்டு மணி நேர மனஅழுத்தம் இல்லா  வேலை, பதற்றமில்லா சொந்த வேலைகள், சுகாதாரமான சுற்றம், கவலைகள் இல்லாத மகிச்சியான  வாழ்க்கை...இவை அனைத்தும் அடங்கும்.


இவை அனைத்தையும் முறையே பெற்றவன் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெற்றவன் ஆகிறான்....


நடைமுறைக்கு ஒத்துவருவதை பற்றி பேசுங்கள் எனும் உங்க மைண்டு வாய்ஸ் கேட்கிறது...


நடைமுறைக்கு ஒத்துவரும் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெற எளிய வழிமுறைகள்...


ஒரு பொருள் வாங்கினால் அதனுடன் அதனை பயன்படுத்துவதற்கான guidelines manual பெற்று அதன் படி பயன்படுத்துகிறோம்...


இந்த உடலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டல்களை (தினச்சரியா, ரிதுச்சரியா  ) கொண்டது ஆயுர்வேதம்... பயன்படுத்த தவறிவிடுகிறோம்...


நம்மில் பலரும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை முழு உடல் இரத்த பரிசோதனை செய்துகொள்கிறோம்....


ஆனால் பஞ்ச கர்மா மருத்துவ முறையோ (purification therapy ) அல்லது ரசாயன மருத்துவமோ (Rejivunation ) எடுத்துக்கொள்வதில்லை...

இவ்விரண்டின் மூலம் நாம் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெறுவதை புரிந்துகொள்ள  முடியும்...


பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இவ்விறண்டும் பொருந்தாது...


எனவே தான் ஆயுர்வேதம் அழகாய் அளிக்கிறது ஸ்வர்ணப்ரஷணம் எனும் அமிர்தத்தை...


இனியாவது விழித்துக்கொள்வோம்...


பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுப்போம்...


வரும் கால நம் சன்னதியினருக்கு வளமான ஆரோகியதுடன் இவ்வுலகை வழங்குவோம்...


மேல் கூறிய பஞ்சகர்ம மருத்துவம் மற்றும் ரசாயன மருத்துவத்தை தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆலோசித்து பெறவும்....


மேலும் தகவல் பெற
AL SHIFA AYUSH HOSPITAL


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000


பிடித்து இருந்தால் பகிரலாமே.

Post Comment

ஞாயிறு, மார்ச் 29, 2020

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து-பாரங்யாதி கஷாயம்

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து-பாரங்யாதி கஷாயம்

எந்த வித காய்ச்சலையும் சரி செய்யும் பீரங்கி இந்த பாரங்கயாதி கஷாயம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)



கப சுர குடிநீர்க்கு சமமான ஓர் ஆயுர்வேத மருந்தை நாம் தயாரித்து தர வேண்டும் என்றால் அது இந்த பாரங்கயாதி கஷாயம் ஒன்று ஆகும். சித்த மருந்துகள் பல்வேறு பலனை தந்தாலும் ஆயுர்வேத மருந்துகளும் நல்ல பலனை தர வல்லது .


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கண்டுபாரங்கி – பார்ங்கீ                   - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா              - 10       “
3.            பர்பாடகம் – பர்பாடக                      - 10       “
4.            கொத்தமல்லிவிதை – தான்யக       - 10       “
5.            சிறுகாஞ்சூரி – துராலபா                   - 10       “
6.            சுக்கு – சுந்தீ                                           - 10       “
7.            நிலவேம்பு – பூநிம்ப                         - 10       “
8.            கோஷ்டம் – கோஷ்ட                       - 10       “
9.            திப்பலி – பிப்பலீ                               - 10       “
10.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ            - 10       “
11.          சீந்தில்கொடி – குடூசீ                        - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கப சுர குடிநீரில் உள்ள  கண்டு பாரங்கி என்னும் சிறு தேக்கு , கோரைக்கிழங்கு , சிறுகாஞ்சூரி, கோஷ்டம், சீந்தில்கொடி, நிலவேம்பு, முள்ளுக்கத்திரி, சுக்கு இந்த பாரங்கயாதி கஷாயத்தில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு .








கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர், இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.



  தீரும் நோய்கள்:  
வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர), குளிர்சுரம் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள், இருமல் (காஸ), ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டை, தட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும், மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

1.       மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..

2.       காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது 


3.       பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும் 

4.       வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது 


5.       வைரஸ் காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
தேனி                   9047277577
சென்னை 90 4333 600

Post Comment

திப்பிலி எனும் மிக சிறந்த வைரஸை எதிர்க்கும் மருந்து.

திப்பிலி எனும் மிக சிறந்த வைரஸை எதிர்க்கும் மருந்து.

டாக்டர். அ.முகமது சலீம்.,BAMS.,M.Sc., MBA.,

எளிதாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டு இந்த கொடிய வைரஸை
எப்படி ஆதாரத்துடன் அழிக்க முடியும் என்கிற ஓர் போராட்டதில் ஓர் பகுதியாக
ஆயுர்வேதத்தை எட்டு துறைகளாக பிரிக்கிறார்கள் ஆயுர்வேத நூல்களை எழுதிய மருத்துவ வல்லுனர்கள் சரகர் ,சுஷ்ருதர், வாக்பட்டர். எந்த எட்டு பிரிவுகளில் ஒன்று தான் இந்த ரசாயனம் மற்றும் வாஜீகரணம் என்கிற ஒரு துறை. மக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு என்றும் இளமையாக ஆரோக்கியமாக வாழ வழி சொல்கிறது இந்த துறை.


இந்திய மருத்துவதின் தந்தை என்று போற்றப்படும் சரகர் எழுதிய மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சரக சம்ஹிதையில் -சிகிச்சைகளை பற்றி விளக்கும் முதல் அத்தியாயமே ரசாயனம் என்கிற மணரமில்லா பெரு வாழ்வு அல்லது என்றுமே இளமை அல்லது நோய்கள் இல்லாத வாழ்க்கை பற்றிய குறிப்புகள்.


திப்பிலி என்கிற ஒரு அற்புத மூலிகை வயதாகாமல் என்றும் இளமையாக இருக்க உதவ கூடிய மூலிகையாக பயன் படுத்த சொல்கிறது.
எப்படி பயன் படுத்தலாம்


எளிதாக நாம் செய்ய கூடிய முறை . திப்பிலி என்கிற இந்த பிப்பலியை சரியான முறையில் சுத்தம் செய்து .. பொடித்து வைத்து கொண்டு .. நெய்யில் வறுத்து வைத்து கொண்டு .. குறைந்தபட்சம் ஐநூறு மில்லி கிராம முதல் ஒன்றரை கிராம் அளவுக்கு நெய் அல்லது தேன் கலந்து காலை ஆகாரத்திக்கு முன் மற்றும் காலை ஆகாரதிர்க்கு பின்னும் தக்க மருத்துவரின் ஆலோசனை படி எதுத்து கொள்ள இந்த கொடிய வைரஸ் நோயில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் .
கால அளவு அதிக பட்சம் ஐந்து நாட்கள் இரண்டு நாட்கள் இடைவேளை என்று ஒரு மாதம் ( மிக மிக அதிக பட்சம்)



எச்சரிக்கை -திப்பிலி அதிகமான சூடு - வயிறு புண் மற்றும் பித்த தேகம் உள்ளவர்கள் மிக கவனத்துடன் மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது


அதில் முக்கியமானது வர்தமனா பிப்பலி என்கிற ஒரு முறை - இது மிக மிக கட்டாயமாக ஓர் முறையாக படித்த ஆயுர்வேத மருத்துவரின் கீழ் உள் நோயாளியக சில குறிப்பிட்ட நாட்களுக்கு தங்கி இருந்து எடுக்க கூடிய முறை - இது கொரோனா நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு தக்க பத்தியத்துடன் தரலாம்.


குறிப்பு - மிளகு பற்றி தனி ரசாயனம் என்கிற முறையில் பயன்படுத்துகிற முறை பற்றி ஆயுர்வேத கிரந்தங்களில் சிறப்பாக இல்லை எனவே மிளகை விட திப்பிலியே சிறந்தது.




 இந்த கட்டுரையுடன் ஆதாரங்களை இணைத்துள்ளேன்.

மேலும் ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயூஷ் மருத்துவனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 90422225999
தேனி 9047277577
ராஜபாளையம் 90433335888
சென்னை 9043336000
பிடித்து இருந்தால் பகிரலாமே

Post Comment