ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

கொரோனா ஓர் எச்சரிக்கை விடுப்பு (அழிவிற்கான ஆபாய ஒலி)..

கொரோனா ஓர் எச்சரிக்கை விடுப்பு (அழிவிற்கான  ஆபாய ஒலி)...ஆயுர்வேத அணுகுமுறையும் 




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.




ஒரு பெரிய போர் நிகழவிருக்கிறது என்றால் நம்புவீர்களா....


ஆம் இயற்கைகும் மனித தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மிக பெரிய போர் மூலத்தான் போகிறது அதற்கான எச்சரிப்பு ஓலை தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ...


அதில் இயற்கையை வெல்ல எவராலும் முடியாது...


இன்னும் சில காலங்களில் மனிதனுக்கு வரும் நோயால் மனிதகுலமே மருந்தின்றி மருத்துவமின்றி கதி கலங்கி நிற்கும்... இப்படியான மரணத்தை தான் வரவேற்கபோகிறோமா...?  அப்பொழுதாவது இயற்கை வென்றதாய் ஒப்புகொள்வோமா...?


இயற்கை நினைத்தால் மனிதனுள் சீனர்கள், இத்தாலியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் என பாகுபாடு காட்டாது கூண்டோடு கைலாசம் அனுப்பிவிடும்... அதற்கு COVID 19 யே உதாரணம்...



ஒவ்வொரு குடும்பத்திலும் நிற்கதியாக நம் வாரிசுகள் நிற்கும் அவலநிலையை நினைத்து பார்த்தால் நெஞ்சம் பதறும்...


விளை நிலங்களை கார்பொரேட் கட்டிடங்களாக மாற்றினான் மழை பொய்தது..

எஞ்சியுள்ள நிலத்திலும் மண் புளுகளை கொள்ள  ரசாயனங்களை வாரி இறைத்தான் நிலம் மாசடைந்தது....

தொழிற்சாலை கழிவுகளை ஆற்றிலும், கடலிலும் கலந்தான் நீர் மாசடைந்தது...

வாகன மிகுந்தியாலும், மரத்தை வெட்டியும்  காற்றையும் மாசடைய செய்தான்...

வனத்தை அழித்தான் வனவிளங்குகளும் அழிந்தன... உணவுகள் கலப்படமயமாயின, கால்நடைகளும் அழிந்தன...


இயற்கையை அழித்ததோடு நில்லாமல் டெக்னாலஜி என்ற பெயரில் மொபைல், கம்ப்யூட்டர், ஏசி, பிரிட்ஜ் என கண்டுபிடித்து மனிதனை அழித்தான், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி என்ற கண்டுபிடிப்பால் பெண்கள் உடல் வழுவிழந்தனர்... இன்டர்நெட் மோகத்தால் குழந்தைகள் பம்பரம், சிலம்பம், பல்லாங்குழி, பாண்டி, தாயம் போன்ற விளையாட்டுகளை தொலைத்தனர்...


மனிதன் முக்கால்வாசி தன்னை தானே அழித்துக்கொண்டான்...

இயற்கையும் மழை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, புயல், காட்டு தீ என கோரதாண்டவம் ஆடியது மனிதன் திருந்திய பாடில்லை...எனவே பாடம் புகட்ட உருவெடுதுள்ளது நோய் பரப்பும் எண்ணம் கொண்டு....


10 வயது ஆண் குழந்தையின் சராசரி உடல் எடை 25கிலோ... ஆனால் 80கிலோ உடலை சுமக்கிறான்...


8 வயது பெண் குழந்தை பூப்படைகிறாள்...


இதற்கு யார் காரணம்...?
மனிதனின் நவநாகரீகமே காரணம் ...



இதோ ஆயுர்வேதம்...

பள்ளிகளில்  கட்டாயப்பாடமாக வேண்டிய அறிவியல்... இன்றும் பலருக்கு அதில்  என்ன உள்ளதென்றே தெரியாமலிருப்பது வேதனையே...

எந்த  மருத்துவத்திற்கும் ஈடு  இணை இல்லாமல் இருப்பது ஆயுர்வேதம் ...


General medicine  ற்கு *காய சிகிட்சா*
Paediatrics ற்கு *பால சிகிட்சா*
Psychiatry  க்கு *கிரஹ சிகிட்சா*
ENT  க்கு *ஷாலாக்யம்* Surgery க்கு *ஷல்யம்*
Toxicology க்கு *தம்ஷ்ட்ரா*
Rejivunation க்கு *ஜரா /ரசாயன சிகிட்சா*
Sexology க்கு *வ்ருஷ சிகிட்சா*...


பிறந்த குழந்தைக்கு சிசுபரிச்சர்யா, ஸம்ஸ்காரா என அழகாய் எடுத்து  சொல்லும் கௌமாரப்ருத்யம்... பின்பற்றாததால் குழந்தைகள் நோய்வாய் படுகின்றனர்...


முதலாம் மாத தொடக்கத்தில் ஆரம்பித்து பத்து மாதங்கள் தாய் சேய் நலன் காக்கும் மாசானு மாசிக மருத்துவம் சொல்லும் ப்ரசூதி...
குழந்தை பெற்ற உடம்பை பேண சூதிகா பரிச்சர்யா...
பின்பற்றாததால் பல பிரசவ மரணங்கள் நிகழ்கிறது...


கார்டியாலஜிஸ்ட்களும், பல்மோனாலஜிஸ்ட்களும், நியூராலஜிஸ்ட்களும் அறிந்திராத மருந்தும், மருத்துவமும் ஏன் நோய்களும் கூட ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது..


இனியாவது விழித்துக்கொள்வோம் நண்பர்களே...


ஆங்கில மருத்துவம் அவசர காலத்திற்கு மட்டுமே உதவடும் அன்றாட வாழ்க்கைக்கு வேண்டாம்...


இயற்கையோடு ஒன்றி வாழ ஒத்துளையுங்கள் அன்பர்களே...


மாற்றம் தனி ஒரு மனிதனிடம் இருந்துதான் உருவாகிறது...


கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்க பட்டதென்றும் பயோவார் என்றும் சர்ச்சை எழுகிறது...
எதுவாய் இருந்தால் என்ன... பாதிக்கப்படபோவதும், எதிர்கொள்ளபோவதும் நாம்தானே..


ஆயுர்வேதம் எனும் பிரம்மாஸ்திரம் ஏந்தி தமிழன் என்றும் இந்தியன் என்றும் உலகிற்கு உதாரணமாய் நிற்போம்...

சமூக நலன் கருதி வெளியிடுவோர்

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000


Post Comment

1 comments:

Yarlpavanan சொன்னது…

சிறந்த கண்ணோட்டம்

http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

கருத்துரையிடுக