ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

கொரோனாவால் ...கற்றதும்...கற்கவேண்டியதும்...

கொரோனாவால் .... கற்றதும்... கற்கவேண்டியதும்....




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்




*கற்றது...*

ஒரு நாட்டை அழிக்க ஆயுதமோ, போர்கருவிகளோ தேவையில்லை.


கெளரவம், மரியாதை என நினைத்த ஆடம்பரங்ககளுக்கு  (ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள் ) மதிப்பில்லை.


சுயநலத்திற்காய் ஓடியவர்களும் பொதுநலனிற்காக செயல்பட வைத்தது.


நாம் வாழ அடுத்தவர் வாழவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. \


மதுவிலக்கு எவர் அனுமதியுமின்றி அமல்படுத்தியாயிற்று.


வெளிநாட்டு மோகம் வேதனையாய் முடிவுற்றது.


நோயெதிர்ப்பு சக்திக்கு Junior Horlicks, complan, Boost, Mailo உதவாதென தெளிவாயிற்று.


பாரம்பரிய மருத்துவம் / பாட்டி வைத்தியம் அனைவரின் வீட்டிலும் காஷாயம் காய்ச்ச வைத்துவிட்டது.


மற்ற உயிர்களை மதிக்காவிட்டால் மரணம் நிச்சயம் என உறுதியாயிற்று.


உடலால் வலுவுற்றவர்களும் உழைப்பை நிறுத்தி, ஊதியம் இல்லாமல் இருக்கின்றனர்.


தெய்வீக காதல்களும் பார்த்துக்கொள்ளக்கூட முடியாமல் முடங்கிவிட்டன.


மனிதன் தன் மனித தன்மைக்கும் விளம்பரம் செய்தே தீருவான் எனவாயிற்று(ஒரு சிலர் மட்டும் )


சீரியல் இல்லாமல் வாழும் ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை நன்றாகவே நகர்ந்தது.


சாதியும், மதமும் உணவளிக்காது...

எப்போதும் யாரிடமும் தோற்கக்காத வல்லரசு என்ற நாடுகள் சாவு பயத்தில் மண்டியிட வைத்திருக்கிறது .


அதிகாரம், ஆணவம் எல்லாம் பயத்தில் ஓடி ஒளிய வைத்திருக்கிறது.

குடும்பத்தினருடன் ஓர் பிணைப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லோரும் வருவோருக்கு ஒருவர் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது

மருத்துவமனைகளில் தேவை இல்லா எல்லா சிகிச்சைகளையும் குறைக்க வைத்திருக்கிறது.


புண்ணியம் என்று சென்ற அனைத்து புண்ணிய ஸ்தலங்களும் வெறிச்சோடியும் பூட்டப்பட்டும் கிடக்கின்றன.. ஆனால் இறை  நம்பிக்கையை அதிகபடுத்தி விட்டது. இறைவன்  எங்கும் இருக்கிறார் என்று உணர வைத்து ஆழ வைத்திருக்கிறது. இறைவன் ஒருவன்  ஆக்கவும் செய்வான், அழிக்கவும் செய்வான் என்று உணர்த்தி இருக்கிறது.

சுவர்க்கம் செல்ல நமது செயல்கள் போதுமானதா  என்று உணர வைத்திருக்கிறது.


மனிதம் ஒன்றே தீர்வு...



*கற்கவேண்டியது...*

விவசாயம், மருத்துவம் இரண்டையும் ராணுவத்திற்கு நிகராய் வலுப்படுத்தல் வேண்டும்.

ஆயுர்வேதம் என்றால் ஓர் மருத்துவம் அல்ல வாழ்க்கை அறிவியல் என்று  உணர்ந்து,எல்லோரும் -நோய் இல்லா வாழும் இயற்கை வாழ்க்கையை கற்று கொள்ள வேண்டும்.

ஒரு கஷாயத்தில் உடல் எதிர்ப்பு சக்தி அதிகமாகாது. ஓஜஸ் என்னும் உயிர் சக்தியை அதிமாக்கும் கலையை கற்க வேண்டும். நோய் இல்லா பெரு வாழ்வு வாழ ஆயுர்வேதத்தின எட்டாவது பிரிவை நாட வேண்டும்



தினமும் ஒரு கற்ப மூலிகையை பயன்படுத்திடல் வேண்டும்


எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்


பொழுதை போக்க அனைவரின் வீட்டிலும் (மாடித்தோட்டம், பால்கனியில் கூட ) தோட்டம் அமைக்கலாம்.


கலையும், கலைஞர்களும் ஆபத்து காலங்களில் இருக்குமிடம் தெரியாமல் போகும்... எனவே பள்ளிகளில்  குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்கவேண்டியது பாரம்பரிய வாழ்க்கைமுறை அறிவியல் விளக்கத்தோடு...


ஜெர்ஸி பசு, பணிபிரதேச நாய்களையும் தவிர்த்து நாட்டு நாய், நாட்டு கால்நடைகளை செல்ல பிராணிகளாய் வளர்ப்போம்.


நலமாய், வளமாய் வாழ பஞ்சமஹாபூதங்களிடம்  இயற்கையிடம் சரணடைவோம்.

அனைவரும் ஓய்வெடுக்கும் ஊரடங்கில் உழைக்கும் தாய்மையை போற்றவேண்டும் (தந்தையும், தாயுமாய் உழைக்கும் தாயுமானவர்களையும் போற்றுவோம் ).


பிறந்த மண்ணில் விளையும் உணவுகளே நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை, வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் விளையும் பழங்களும், காய்கறிகளும் பயனற்றவை.


விளம்பர உணவுகள், குப்பை உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்

மனித வளம்  மேம்படுத்தபடல்  வேண்டும்.

நமது கலாச்சாரம், வரலாறு, விவசாயம் மேம்படுத்த வேண்டும்



அனைவருக்கும் சொந்தமாய் இருக்கவேண்டிய சொத்து.. வேப்பமரம் ஒன்று, முருங்கைமரம் ஒன்று, வாழை மரம், தென்னை மரம், எலுமிச்சை, கருவேப்பிலை, நெல்லி மரம், பப்பாளி மரம், சீதா மரம், பலாமரம், மாமரம்.

இயற்கை ஒன்றே நம் சொத்து சேதப்படுத்தாதீர் ....

கரோனவும் கடந்து போகும்.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்தியா மருத்துவத்தாலே  நலம் பெறுவோம்.


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக