செவ்வாய், ஏப்ரல் 07, 2020

ஆயுர்வேதம் மருத்துவம் அறிவோம்...


*ஆயுர்வேதம் மருத்துவம் அறிவோம்....*



தினம் தினம் அவதிப்படுகிற  பொதுவான உடல் பிரச்சனைகளுக்கு  ஆயுர்வேத மருந்துகள்


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்



இன்றைய இயந்திர உலகில் ஆறு பேர் கொண்ட ஓர் குடும்பத்தில் ஒரு நாளைக்கு ஒருவருக்கேனும் ஓர் உடல் உபாதை ஏற்பட்டுவிடுகிறது... நமது குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ ஏற்படும்போது நமது உத்யோகத்தில் கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.. அன்றாடம் ஏற்படும் சில முக்கிய உடல் உபாதைகள் -வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுக்கு நமது பாரம்பரிய, பாட்டி வைத்தியம், ஆயுர்வேத மருந்துகள் யாரும் அறிந்திராத, பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள ரகசியம் இப்போது  அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் இப்பதிவு....





*அறிகுறி 1...* 

*ஜ்வரம்*

*காரணங்கள்* 

கிருமி தாக்கம், உணவு செரியாமை, விஷம், பளுப்புடனான கட்டிகள் , விபத்து, ஆறாத புண்கள், காலபருவ மாற்றம், பயம், கவலை, ஏக்கம்....ஆகியவை அடங்கும்

*வெளிப்பாடு* 
உடல் உஷ்ணம், குளிர், மலம் கட்டுதல், தொண்டை வறட்சி, தலைவலி, தலைபாரம், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய்க்கசப்பு, தலைசுற்றல்....போன்றவை



*காய்ச்சலுக்கான  சிகிட்சை* 
சுதர்சன சூரணம்
ப்ருஹத்யாதி கஷாயம்
அம்ருதோத்தர கஷாயம்
அம்ருதாரிஷ்டம்
குடுச்யாதி கஷாயம்
ஷடங்க கஷாயம்
திக்தக கஷாயம்
சம்ஷமணி வடி
ஜ்வர கேசரி ரஸ்
ம்ருத்யுஞ்சய ரஸ்




*அறிகுறி 2*

*பசியின்மை (அக்னிமாந்தியம்)*

*காரணங்கள்*

செரிமானத்திற்கு கடினமான உணவுகள், நேரம் தவறி உண்பது, அறைகுறையாக சமைத்த உணவு உண்பது , அதிக அளவு உண்பது, குளிரூட்டப்பட்ட உணவு, எண்ணெய் மிகுதியான உணவு, காய்ந்த உணவு உண்பது , மாசுபட்ட நீர் அருந்துதல், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், தூக்கமின்மை, மலஜலம் அடக்குவது, பகல் தூக்கம்,மனம் சார்ந்த பாதிப்புகள் (பயம், கவலை, மனஅழுத்தம்)...ஆகியவை அடங்கும்.

*வெளிப்பாடு* 

 வயிற்றுவலி, பொருமல், மலம் கட்டுதல், சோர்வு, முக வீக்கம், உடல்வலி, தலைசுற்றல், புளித்தஏப்பம், நெஞ்செரிச்சல், நாசுவையின்மை, வியர்வை, உடல்பாரம், மயக்கம்....போன்றவை 

*பசியின்மைக்கான சிகிச்சை*

பாஸ்கரலவன சூர்ணம்
ஹிங்குவஸ்டக சூர்ணம்
அக்னி துண்டி வடி
சித்ரகாதி வடி
மஹாசங்க வடி
லசுனாதி வடி
த்ராக்ஷாஅரிஷ்டம்
பிப்பலி ஆசவம்
பஞ்சகோலாசவம்
குமாரியாசவம்
பஞ்சகோல கிருதம்
அக்னிமுக சூர்ணம்
ஜீரகாதி சூர்ணம்
நகராதி சூரணம்
பூநிம்பாதி சூர்ணம்



*அறிகுறி 3*

*இருமல் (காசம் )*

*காரணங்கள்* 

கிருமி தாக்கம், நூரையீரல் பாதிப்பு, உடல் வறட்சி, தூசு மற்றும் புகையை சுவாசித்தல், தொண்டை புண், அதிக நேரம் பேசுதல், உரக்க பேசுதல்....ஆகியவை அடங்கும் 


*வெளிப்பாடு* 

தொண்டை வலி, குரல் மாறுபடுதல், மார்பில் வலி, குரல் ஒலி குன்றி போதல், தொண்டையில் சளி கட்டுதல், வாய் கசப்பு, தொண்டை எரிச்சல், அதிக தாகம், தொண்டை அரிப்பு, விழுங்குவதில் சிரமம்....போன்றவை 

*இருமலுக்கான சிகிச்சை*

தாளிசாதி சூர்ணம்
லக்ஷ்மிவிலாஸ் ரஸ்
பிப்பல்யாதி லேஹ்யம்
வாசா அவலேகம்
சீதோபலாதி சூர்ணம்
காச குடார ரஸ்
ஸ்வச்சந்த பைரவ ரஸ்



*அறிகுறி 4*

*மூச்சுதிணறல் (சுவாசம் )*

*காரணங்கள்* 

தூசு, புகையினால் காற்று மாசுபாடு, ரசாயனங்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றை அதிகம் சுவாசித்தல், விஷ வாயு, அதிக குளிர் பிரதேசங்களில் வசித்தல், மீன் மற்றும் பிற கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல், காற்றோட்டம் இல்லாத இடத்தில் வாசித்தல், அதிக குளிர் பானங்களை உட்கொள்ளுதல்.....போன்றவை அடங்கும்

*வெளிப்பாடு* 

 சுவாச கோளாறு, மார்பில் வலி / அழுத்தம், வாய்க்குளறுதல், நாவறட்சி....போன்றவை 

*மூச்சுதிணறலுக்கான சிகிட்சை*

சுவாச குடார ரஸ்
சுவாச சிந்தாமணி ரஸ்
பாரங்காதி கஷாயம்
தசமூல புஷ்கரமூல கஷாயம்
பாரங்கி ஹரிதகி லேஹ்யம்



*அறிகுறி 5*

*உடல்வலி (அங்கமர்தம் )*

*காரணங்கள்* 
ஆரோக்கிய உணவு உட்கொள்ளாமை, செரியாமை, அதிகடின உழைப்பு, பசியின்மை, தூக்கமின்மை, மனஅழுத்தம்....ஆகியவை அடங்கும்

*வெளிப்பாடு* 

உடல் வலி, உடல் பாரம், உற்சாகமின்மை, சோர்வு, சுவையின்மை....போன்றவை 

*உடல்வலிகக்கான சிகிட்சை*

சிம்ஹநாத குகுலு
ராஸ்னாதி குகுலு
ராஸ்னா  பஞ்சக கஷாயம்
திரிபலா குகுலு
த்ரிகடு சூர்ணம்
தசமூலாரிஷ்டம்
தசமூல கஷாயம்.

மேலே கூறப்பட்டவை அனைத்தும் கொரோனா காலத்தில் மட்டுமல்ல அணைத்து காலத்திற்கும் பொருந்தும்...


நகரங்களில் பசித்தால் swiggy, zomato களில் உணவுகளை ஆர்டர் செய்துகொள்வது போல நோய் வந்தால் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிக்கொள்ளும் செயல் பரவலாகிவிட்டது ....


மேலும் அனைவரின் வீடுகளிலும் Paracetamol, Dolo, critrizine, Ranitidine, Vicks, strepsils, Gelusil, silver x, Volini  போன்ற மருந்துகளை கொண்டு அவரவர் குடும்பத்திற்கென மினி மெடிக்கல் ஷாப் தயார்நிலையில் இருக்கின்றன...


போதாக்குறைக்கு Google எனும் தலைமை மருத்துவர் தான் இன்று படித்த அறிவீனர்களின்  நம்பிக்கை நாயகன்....


அறியாமை வேண்டாம் நண்பர்களே, ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்....


எந்த ஒரு தீங்கான விளைவுமின்றி நன்மை மட்டுமே செய்யக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் அன்றாட உடல் உபாதைகளுக்கு மட்டுமல்ல

 இனி சததெளத்த கிருதம், ஜாத்யாதி கிருதம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் முதலுதவி பெட்டியிலும் இடம்பெறட்டும்...

முக்கிய குறிப்பு : தக்க ஆயுவேத மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் அவசியம் கருதி தக்க ஆலோசனையுடன்  இம்மருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனை பெற மேலும் சந்தேகங்களுக்கு அணுகவும்

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000


பிடித்து இருந்தால் ஷேர் செய்யலாமே

Post Comment

0 comments:

கருத்துரையிடுக