திங்கள், ஏப்ரல் 13, 2020

காய்ச்சலை ஓட விரட்டும் காய்ச்சிய வெந்நீர்

காய்ச்சலை ஓட  விரட்டும் காய்ச்சிய வெந்நீர்




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்.



உலகில் பல நோய்களுக்கும் கொடுக்கும் ஒரே மருந்து...

எந்த வயது கட்டுப்பாடும் இல்லாத மருந்து...

அளவு விதிமுறைகளும் இல்லாத மருந்து...

காலம் கணக்கில்லா மருந்து....

விலை மதிப்பில்லா மருந்து...

விலை இல்லா மருந்து..

அணைத்து உயிர்களுக்கும் ஒப்பற்ற மருந்து...

பிறப்பிலும் இறப்பிலும் கொடுக்கும் மருந்து...

எதிர் குணம் கொண்ட இரு பஞ்ச பூதம் ஒன்றாய் இணைந்து வழங்கிய பரிசு இம்மருந்து ...

இயற்கை அளித்த அமிர்தம் எனப்பட்டதும் இம்மருந்து...



*உஷ்ண ஜலம் ( காய்ச்சிய நீர் / வெந்நீர் / சுடு நீர்...)*


காய்ச்சல் என்பது அனைத்து உயிர்களுக்கும் வரும் ஓர் உடல் உபாதை...


மனிதனை தவிர எந்த உயிரும் காய்ச்சலுக்கு மருந்து உட்கொள்வதில்லை...


ஏனென்றால் உடலிற்கு தன்னை தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே உள்ளது என்பதினால்...


மனிதனுக்கு தான் ஆறறிவு ஆயிற்றே... அதனால் அவன் பொறுப்புகளையும், கடமைகளையும் எண்ணி பொறுமையற்று உடனடியாக சரி செய்ய மருந்தை உட்கொள்கிறான்...


உண்மையில் காய்ச்சலை உடனடியாக  சரி செய்ய வெண்ணீர் போதுமானது...


காய்ச்சலுக்கு மருந்து தரும் மருத்துவர் மருந்தை வெண்ணீரில் குடித்துவிட்டு 2 மணிநேரமாவது ஓய்வு எடுங்கள் என்பார்....


காரணம் காய்ச்சலை சரிசெய்ய வெந்நீரும், ஓய்வும் போதுமென்பதே...
மாத்திரை ஓர் முகத்துடைப்பே...


அறிவியல் ரீதியாக பார்ப்போம்...


காய்ச்சலுக்கு காரணம் என்னவென்று பார்த்தால் உடலில் சேரும் ஒரு வித கழிவு (ஆமம்) பொருளே...


(கழிவு பொருள் சேர பல காரணங்களை பட்டியலிடலாம்... செரியாமை, தூக்கமின்மை, கிருமி தாக்கம், நேரம் தவறிய உணவு...மேலும் பல )


பொதுவாக நமது உடலில் இரண்டு வகையான செரிமானம் நிகழ்கிறது


1) Digestion என்பது இரைப்பையில் நிகழும்  செரிமானம் அதற்கு தேவை ஜடராக்னி எனப்படும் digestive power.


2) Metabolism என்பது   தாதுக்களில் நிகழும் செரிமானம் அதற்கு தேவை தத்துவாக்னி எனப்படும் absorption power.



இவை இரண்டில் ஒன்றுக்கு கோளாறு ஏற்பட்டாலும் காய்ச்சல் உண்டாகும்.



சில பல காரணங்களினால் உடலில் சேர்த்த கழிவுகள் கடினமாகிறது. கழிவுகள் கடினமாகி இரண்டு வகை செரிமானத்தையும் பாதிக்கிறது... கழிவுகளை வெளியேற்ற அதனுடன் போராடும் அக்னி இரண்டும் வலுவிழந்து போகிறது.











*சுடுநீரின் குணங்கள்...* 

லகு (இலகுவான )
சீத (குளிர்ந்த )
சூக்ஷ்ம (நுண்ணியமான )
சலத்தவம் (தேங்கிடாத )
தீக்ஷ்ணம் (வீரியம் மிக்க )
சரம் (தொடர்ந்து செயலாற்றும் )
திரவம்(நீர்த்த )...தன்மை சுடுநீருக்கு உள்ளது.



*காய்ச்சலுக்கு எவ்வாறு வெந்நீர்  உதவுகிறது?* 

கடினமான அரிசி உலையில் போடுவதினால் மிருதுவான சோறாகிறது... அதே போல்  தேங்கிய கடினமான கழுவுகளை சென்றடையும் உஷ்ண ஜலத்தின் குணங்கள் கழிவுகளை இலகுவாக்கி செரிமானத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி உடலைவிட்டு வெளியேற்றுகிறது...


மேலும் கழிவுகளுடன் போராடி வலுவிழந்த ஜடராக்னி, தாதுவாக்னி ஐ வலுவடைய செய்கிறது...


ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் கழிவுகள் வெளியேறி, அக்னி தூண்டப்பெற்று உடல் மீண்டும் சுறுசுறுப்பான நிலையை அடைகிறது.


காய்ச்சலை குணப்படுத்த வெந்நீருக்கு  நிகர் வேறில்லை...


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000


ஆயுர்வேத முறைப்படி  அல்லது முறையான வெந்நீர் எப்படி  தயாரிக்க வேண்டும்  என்று தெரிந்தவர்கள் சரியான விடையை நான்கில் ஒன்றை தேர்ந்து எடுத்து ஒன்று அல்லது இரண்டு  அல்லது மூன்று அல்லது நான்கு என்று பின்னூட்டம் இடவும்

1. தண்ணீரை சுட வைத்தால் அதுவே வெந்நீர்

2.  தண்ணீர் நன்றாக கொதிக்கும் வரை வைத்தால் அதுவே வெந்நீர்

3. தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து குறைந்த பட்சம் கொஞ்சமாவது  வற்ற வைத்து  ( கொஞ்சம் வற்ற வைப்பதில் இதில் ஏதேனும் ஒன்று பொருந்தும் -நான்கில் இருபங்கு / நான்கில் ஒரு பங்கு / நான்கில் மூன்று பங்காக வற்ற வைத்து ) பொறுக்கும் சூட்டில்  சூடாக குடிப்பது  வெந்நீர்

4. தண்ணீரையும் ஏற்கனவே கொதிக்க வைத்த வெந்நீரையும் கலந்தால் அதுவே வெந்நீர்




Post Comment

0 comments:

கருத்துரையிடுக