ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

மனித வளமும் - மனித நலமும்

மனித வளமும் - மனித நலமும்

நான் மாறிட்டேன் .. அப்ப நீங்க ..?


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் இந்தியாவை நான் மாற்றி  காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகாகானந்தர்..

நம்மை புதுப்பிக்கும் கட்டாய ஓய்வு கிடைத்தும் , நம்மை துரு பிடிக்கும் வேலையை மட்டுமே செய்வேன் என்கிறார்களா இந்த கட்டாய ஓய்வு மனிதர்கள் ..


அடுத்தவனை எப்படி குறை சொல்வது,
அடுத்தவனை எப்படி அசிங்கபடுத்துவது,
டிக் டாக்  ஹீரோ ஹீரோயின் கனவுகள்..
டிவியில் பொழுதை நாசமாக்கும் பொழுதுபோக்குகள்..
செல்போனில் கண்ணை புதைத்த நவீன கண்ணப்பர்கள் நாங்கள் ..


ஒற்றுமையை விதையுங்கள்
நம்பிக்கையை ஊட்டுங்கள்..
பயத்தை போக்குங்கள்..
அவதூரை, பொய்களை - போலிகளை பரப்பாதீர்கள்



மேலும் என்ன செய்யலாம் - கட்டாய வீட்டு காவலில் - நாட்டை பாதுக்காக்க செய்யலாம் இந்தியர்களே ...


இந்தியா தோற்று நிற்க நாம் ஆசை படலாமா ?

எது எப்படி இருந்தாலும் நம் கடமை தவறாமல் உழைப்போம் ..

வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்குவோம் ..

என்  தாய்நாடு எங்களது மனித வளம் -உலகில் யாரும் இல்லை என்று மார்தட்டி கொள்ள நாம் மாறுவது நல்லது ..




ஒரு மனிதன் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு சராசரியாக 2000kcal. ஆகும்.. சரியான திட்டமிடல் உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு வாழ்வில் வெற்றிக்கான சிலவழிகளையும் காட்டும்..

அதற்கான சரியான தருணம் இந்த ஊரடங்கு நாட்கள்..

செயல் ஆற்றல், சிந்தனை ஆற்றல் இவை இரண்டுமே முக்கியபங்காற்றுகிறது...

*உடற்பயிற்சி...* 

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஆசையில்லாதார் எவரும் இருக்க முடியாது...

ஆனால் இயந்திர வாழ்க்கையில் அதற்கான திட்டமிடுதலும், நடைமுறைப்படுத்தலும் நாளை நாளை என்று ஒத்திவைத்தபடியே செல்கிறது...

ஆசனங்களையும், பிற உடற்பயிற்சிகளையும் வழக்கமாக்குவதற்கு வாய்ப்பாக எடுத்து செயலாற்றலாம்..

உடற்பயிற்சி, யோகா செய்பவர்களும் இயல்பாக செய்பவற்றை செய்வதோடு நிறுத்தாமல் சில கடினமான poses ஆசனங்களையும் நேரம் எடுத்து நிதானமாக முயற்சித்து பயிற்சிபெற்றுக்கொள்ளலாம்.

ஊரடங்கிற்கு பின்னும் பின்பற்றுதல் அவசியம்..

*சமையல்கலை..*

உணவின் சுவைக்கு அடிமையாகாதோர் உலகில் யாரும் இல்லை..

ரோட்டுகடை உணவிலிருந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வரை அனைத்தும் நம் வீட்டில் ஆரோக்கியமான முறையில்  தயார்செய்யலாம்..

 அனைத்தையும் அறிந்துகொள்ள
ஸ்மார்ட்போன் உள்ளது..

அனைத்து சைவ, அசைவ உணவுகள், சாட்ஸ் உணவுகளான பானிபூரி, கேக், ஐஸ்கிரீம் என அனைத்தையும் நம் கைகளால் செய்து குடுபத்தினார்க்கு பரிமாறி மனநிறைவை அடைவதோடு சபாஷ் என்ற பாராட்டையும் பெறலாம்..

*தோட்டக்கலை..*

மிக குறுகிய இடத்திலும் தோட்டகலையை வளர்க்கலாம்..

எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தோட்டகலையை வளர்க்கலாம்..

கொத்தமல்லி விதைகளை தூவி கொத்தமல்லி கீரை..

வெந்தயத்தை தூவி வெந்தய கீரை..

மணத்தக்காளி விதைகளை தூவி மணத்தக்காளி கீரை, சோத்துகற்றாழை, துளசி,  டேபிள்ரோஸ்,  போன்று சிறு முயற்சிகள் பெரிய பலன்களை தருவதோடு மனமகிழ்ச்சியும்  தரும்..

*வீட்டுபராமரிப்பு..* 

வீட்டில் சேர்ந்திருக்கும் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தலாம்...

அலமாரிகளை சுத்தம் செய்து சரியாக அடுக்கி வைக்கலாம்..

பெரியவர்கள், குழந்தைகளின் பயப்படாத ஆடைகளை பிரித்து வேஸ்ட் கிலோத் பயன்பாடு, நிவாரணதிற்கு அளிக்க பயன்பாடு என தனி தனி அட்டை பெட்டிகளில் நிரப்பலாம்..

மின் விசிறி, வாகனம் முதற்கொண்டு, ஜன்னல், குளிர்சாதன பெட்டி, ஏசி என அனைத்தையும் ஒவ்வொன்றாக சுத்தம் செய்யலாம்..

வேண்டாதவற்றை முறையாக அப்புறப்படுத்தவேண்டும்..

*திறன்மேம்பாடு..*

தையற்கலை, Embroding, sweater பின்னுதல், வயர்கூடை பின்னல் போன்றவற்றில் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்..

பெண்கள் அழகுசாதன பொருட்களான காதணி, வளையல், மோதிரம், காலனி போன்றவற்றை தயாரிக்கலாம்..

Arts from waste ல் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு செய்தித்தாள், பயப்படாத பொருட்கள், ஆடைகளை கொண்டு புதியவற்றை செய்து திறமைகளை வளர்க்கலாம்..

*தியானம்..*

தியானம் பயில்வதற்கு மிக சிறந்த வாய்ப்பு..

தியானத்திற்கு முக்கியமாக இருக்கவேண்டியது அமைதியான சுற்றுப்புறமும், அமைதியான மனநிலையும்..

ஒலிபெருக்கி, வாகன இரைச்சல் எதுவுமின்றி மனதை ஒருமைபடுத்தி தியானத்தி முதல் அடியை சுவைத்து மேலும் தொடர வாய்ப்பாக பயன்படுத்தலாம்..

*முதியவர்களுக்கு..*

வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் அவர்கள் தம் வாழ்வில் சந்தித்த சவால்கள், அணுகுமுறைகள், அவர்கள் அடைந்த வெற்றிகள், தோல்விகள், அனுபவங்களை கேட்டறியலாம்..

குழந்தைகளுக்கு கதைகள், விடுகதைகளை கூறி உற்சாகப்படுத்தலாம்..

வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகளை பராமரித்து சில நல்ல பயிற்சிகளை அளிக்கலாம்..

அக்கம்பக்கம் வீட்டாரிடம் சமூக இடைவெளியுடன் நலம் விசாரித்து நட்பு பாராட்டலாம்..

*குழந்தைகளுக்கு..*

மூளைதிறன் வளர்க்கும் விளையாட்டுகளை தந்து ஊக்கப்படுத்தலாம்..

சதுரங்கம், suduko, puzzles, தாயம், பல்லாங்குழி, பட்டம், புதிர் விளையாட்டுகள் போன்றவற்றை கற்றுக்கொடுத்து அவர்களின் சிந்தனை ஆற்றலை வார்க்கலாம்..

நம்மிடம் இருக்கும் புராணம், கணிதம், அறிவியல் சம்மந்தமான புத்தகங்களை விவரித்து அவர்களே படிக்க ஊக்கப்படுத்தலாம்..

மனித ஆற்றல் அளப்பரியது.. அந்த ஆற்றலை நாம் மிக சரியான விதத்தில் பயன்படுத்துவதற்கு கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் போதும்  உலகமே கைக்குள் அடங்கிவிடுகிறது.. இதன் மூலம் ஏராளமான பலன்களை அடையலாம்...

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 
இந்திய மருத்துவ முறைகளால் நலம் பெறவோம் 



ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு .. 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக