சனி, ஏப்ரல் 04, 2020

நிமோனியா.... ஸ்வாசானக ஜ்வரம் (COVID 19).

நிமோனியா.... ஸ்வாசானக ஜ்வரம் ( COVID  19)... 
ஆயுர்வேதம் சொல்வது என்ன ?




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA



கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலரும் நிமோனியா ஏற்பட்டு மூச்சு திணறலால் இறந்ததை அறிந்திருப்பீர்கள்...



நிமோனியா பற்றி தெரிந்துகொள்வோம்....

ஒரு வைரஸ் காற்றின் மூலம் சுவாசம் வழியாக நூரையீரலை அடைந்து alveoli எனப்படும் காற்று பைகளை சேதமடைய செய்கிறது. சேதமடைந்த காற்றுப்பைகளினால் carbon dioxide மற்றும் oxygen  ஐ பரிமாற்றம் செய்யமுடியாமல் போவதால் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது. சேதமடைந்த காற்று பைகளில் சீல் போன்ற சளி அல்லது நீர் சேர்த்து நிலைமையை மோசமடைய செய்து மூச்சு திணறலினால் உயிரிழப்பு ஏற்படுகிறது.



*நிமோனியா நோய்கான  காரணங்கள்*

Influenza, corona போன்ற வைரஸ்களால்  ஏற்படும் பாதிப்புகளின் விளைவு,  புகை பிடித்தல், மது, காற்று மாசுபாடு, chemical அல்லது ரசாயனம்  மிகுதியாக பயன்படுத்தப்படும் இடங்களில் வசித்தல், அதிக தூசி, துகள்கள் உண்டாகும் தொழிற்சாலைகளில் பணிபுரிதல்... மேலும் பல...

*அதிக அபாயம் யாருக்கு?*

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளர்வர்களுக்கு, உடல் பயிர்ச்சி மற்றும் மூச்சு பயிற்சியின்மை, சுகாதாரமின்மை, வயது முதிர்வு, ஆஸ்துமா நோயாளிகள், இருதயம், கல்லீரல் பாதிப்புடையவர்கள், நாள்பட்ட சர்கரை மற்றும் இரத்தஅழுத்த  நோயாளிகள், தைராய்டு நோயாளிகள், tonsilitis போன்ற பாதிப்புடையவர்கள்.... மற்றும் பலர்....

*ஆயுர்வேதம் தரும் தீர்வு..*

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எந்த ஒரு இயந்திர பரிசோதனை கருவிகளும் இல்லாமல் நோய்க்கான காரணங்களை கூறி அதன் அறிகுறிகளை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளனர் (சளி, காய்ச்சல், பசியின்மை, நாவறட்சி, இருமல், மார்பு வலி, சுவாச கோளாறு, சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், முடிவில் மரணம் ).



*தீர்வாக.... விஷாபிசங்கஜ ஜ்வர எனும் தலைப்பின் கீழ்...*

பிருஹத் கஸ்தூரி பைரவ ரஸ், நாராதிய லக்ஷ்மி விலாஸ் ரஸ், த்ரிபுவன கீர்த்தி ரஸ், த்ரிலோக்ய சிந்தாமணி ரஸ்... எனும் மாத்திரைகள் அறிவுறுத்தியுள்ளனர்... ( மருத்துவர்களின் ஆலோனைகளோடு  மட்டும்  இந்த மருந்துகளை எடுக்க வேண்டும் -சுய மருத்துவம், மருந்தை பற்றி முழுவதும் தெரியாமல் எடுக்க கூடாது )

நோயாளிக்கு உடல் மற்றும் மன நலத்தை பேணும் விதமாக உணவும் அறிவுறுத்தியுள்ளனர்..

வெது வெதுப்பான இதமான சூட்டுடன் நீர் பானம் அல்லது  ஆகாரங்கள், இலஞ்சூட்டுடன் கஞ்சி வகைகள், ஆப்பிள், உலர் திராச்சை, ஆட்டு பால் மற்றும் புடலை, ஜீரகம், இந்துப்பு, கொள்ளு உணவு வகைகளின் மூலம் உடல் பலத்தை மேம்படுத்த வலிகளை கூறியுள்ளனர்.

இவ்வாறு நூற்றாண்டுகளில் வரும்  பல நோய்களை தொலைநோக்கு பார்வையுடன் நம் அறிவிற்கு எட்டும் வகையில் குறிப்புகளை அளித்துள்ள ஆயுர்வேத ஆச்சார்யாகளின் மருத்துவ ஞானத்தை எண்ணும்பொழுது மெய்சிலிர்க்கத்தான் செய்கிறது...

இத்தகைய மகத்துவம் வாய்ந்த மருத்துவத்தை அயல்நாட்டிற்கு தாரைவார்க்காமல் நமது சமுதாயம் முன்னேற பின்பற்றுவோம்.

சந்தேகங்களுக்கு அணுகவும்
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

பகிரலாமே 

Post Comment

1 comments:

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு
பாராட்டுகள்

கருத்துரையிடுக