எடை கூட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எடை கூட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உயிர் ஆற்றலை அதிகபடுத்தும் அற்புத மருந்து -விதார்யாதி க்ருதம்


உயிர் ஆற்றலை அதிகபடுத்தும் அற்புத மருந்து -விதார்யாதி க்ருதம்
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல             4.000 லிட்டர்
2.            பசுவின் நெய் – க்ருத        2.000 கிலோ கிராம்
3.            பசுவின் பால் – கோக்ஷீர     1.000           “


இவைகளை ஒன்று கலந்து அதில்


1.            பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ        12.500 கிராம்
2.            ஆமணக்கு வேர் – எரண்டமூல          12.500       “
3.            தேள் கொடுக்குப் பூண்டு – வ்ருக்ஷிகாலி 12.500       “
4.            மூக்கிரட்டை வேர் – புனர்னவ          12.500       “
5.            தேவதாரு – தேவதாரு                 12.500       “
6.            காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ         12.500       “
7.            காட்டுப்பயிறுவேர் – முட்கபர்ணீ         12.500       “
8.            பூனைக்காலிவேர் – ஆத்மகுப்தமூல       12.500       “
9.            தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ   12.500       “
10.          கோவைக்கிழங்கு – பிம்பிமூல               12.500       “
11.          கீரைப்பாலை – ஜீவந்தி                  12.500       “
12.          ஜீவகம் – ஜீவக                        12.500       “
13.          ரிஷபகம் – ரிஷபக                     12.500       “
14.          ஓரிலை – ப்ரிஸ்னீபர்ணீ                12.500       “
15.          மூவிலை – சாலிபர்ணீ                 12.500       “
16.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ            12.500       “
17.          கண்டங்கத்திரி – கண்டகாரீ             12.500       “
18.          நெருஞ்சில் – கோக்ஷுர                12.500       “
19.          நன்னாரி – ஸாரிவா                    12.500       “
20.          சிறுசெருப்படை – ஹம்ஸபாடி          12.500       “


                இவைகளை கல்கமாக அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.


                 
அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 
தீரும் நோய்கள்: 



இருமல் (காஸ), பலவீனம் (க்ஷய (அ) தாதுக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), நெஞ்சினுள் அடிபட்டதன் விளைவாக ஏற்படும் ரத்த இருமல் (உரக்ஷத), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), மேல்மூச்சு வாங்குதல் (சின்ன ஸ்வாஸ (அ) தமகஸ்வாஸ), குன்மம் (குல்ம), உடம்புவலி (அங்கமர்த), வாயுத்தொல்லைகள்.

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. ஆண்மை பெருகவும் ,வீர்யம் அதிகமாகவும் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
  2. இனிப்பு சுவை ,உடலை பெருக்கும் குணம் உள்ளமையால் -பல வாத வியாதிகளுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்
  3. இளைப்பு ,மூச்சு வாங்குதலில் இந்த மருந்து நல்ல பலன் தரும்
  4. உடல் களைப்பு ,சோர்வுக்கும் -பசியின் தன்மை தெரிந்து உபயோகப்படுத்தினால் -மிக சிறந்த பலன்
  5. ஆண் பெண் -இருபாலரும் -தங்களது தாது நட்டத்திற்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  6. தினமும் சாபிடக்கூடிய -காய கல்ப மருந்தாக -பலஹீனமானவர்கள் ,வாத தேக வாக்குடையவர்கள் பயன்படுத்தலாம்
  7. ஓஜஸ் என்னும் உயிர் ஆற்றலை வலுப்படுத்தும் -
  8. நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்தும்
  9. நோயில்லாத ஆரோக்கிய மனிதனும் -ஆர்க்கியத்தை நிலை நாட்ட இந்த மருந்தை பயன்படுத்துவது நல்லது

               

Post Comment

புதன், ஜூலை 20, 2011

முடி உதிர்வை நிறுத்தி -முடியை கருப்பாக்கி -ஆண்மை கூட்டும் -காயகல்ப மருந்து - -நாரஸிம்ஹ க்ருதம்


முடி உதிர்வை நிறுத்தி -முடியை கருப்பாக்கி -ஆண்மை கூட்டும் -காயகல்ப மருந்து - -நாரஸிம்ஹ க்ருதம்
( ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ரஸாயன விதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கருங்காலி – கதீர                                 50 கிராம்
2.            கொடிவேலி வேர் – சித்ரக                         50           “
3.            இரு பூள் கட்டை – ஸிம்ஸுபா                    50           “
4.            வேங்கை – அசன                                   50           “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       50           “
6.            வாயுவிடங்கம் – விடங்க                            50           “
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     50           “
8.            சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதித பல்லாதக      50           “

9.            சுத்தி செய்த இரும்புத்தூள் – ஷோதிதலோஹ            50           “

                இவைகளைத் தரித்துப் பொடித்து அரைத்துக் கல்கமாக்கி 8.100 லிட்டர் நீரில் கலந்து இரும்புப் பாத்திரத்தில் ஊற்றி மூன்று நாள் வெய்யிலில் வைத்துக் கலக்கிக் கலக்கி வற்றவைக்கவும். பின்னர் அக்கலவையைச் சுறு தீயிட்டெரித்து 2.025 லிட்டர் ஆகக் கொதிக்க வைத்துக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            அவ்விதம் குறுக்கி வடிகட்டிய கஷாயம் 2.025 லிட்டர்
2.            பசுவின் பால் – க்ஷீர                   2.025 கிலோகிராம்
3.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜரஸ       4.050          “
4.            திரிபலாகஷாயம்                        6.075          “
5.            புத்துருக்கு நெய் – க்ருத                8.100        “

               இவைகளை ஒன்று கலந்து இரும்புப் பாத்திரத்தில் இட்டுக் கொதிக்கவைத்து மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். ஆரியபின் போதுமான அளவு கல்கண்டு, சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.

                சம்பிரதாயத்தில் 1.620 கிலோ கிராம் சர்க்கரை (ஸர்க்கர) பொடித்துச் சலித்துச் சேர்க்கப்படுகிறது. லோஹ சூர்ணமும் மற்ற சரக்குகளின் மொத்த எடையின் நான்கில் ஒரு பங்கு சேர்க்கப்படுகிறது.

அளவும் அனுபானமும்:      

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள். தேன், சர்க்கரை, குளிர்ந்த நீருடனும் கொடுக்கலாம்.

                 
தீரும் நோய்கள்:  





பசியின்மை (அக்னிமாந்த்ய), ஆண்மைக்குறைவு (மஹாக்ளீட), புணர்ச்சியில் வலுவின்மை (துவஜபங்க), பலவீனம் (தௌர்பல்ய (அ) பலக்ஷய), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), தலைமுடியின் நிறமாற்றம் (காலித்ய). இது ஒரு ரஸாயனம். எனவே இதனைத் தொடர்ந்து உபயோகிக்கப் பொன்னிற மேனியையும், அறிவுக் கூர்மை, சொல்வன்மை, ஆக்கத்திறன் போன்றவற்றையும் அளிக்க வல்லது

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இளமையில் வருகிற இள நரைக்கு இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு -வெளி பிரயோகமாக நல்ல தைலங்களை (அப்புறம் பெயர் சொல்கிறேன் ) உபயோகித்து வர நல்ல பலன் மூன்று மாதத்தில் தெரியும்
  2. முடி உதிருதல் பிரச்சனைக்கு -இந்த மருந்தோடு அய ப்ருங்கராஜா கற்பம் என்ற பற்பத்தோடு சாப்பிட விரைவில் பலன் தெரியும்
  3. நோயே இல்லை -என்றாலும் நோய்  வராமல் தடுக்க -காய கலபமாக இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட -சிலருக்கு உடல் எடை கூடுவதாக உணர முடிகிறது -அதிக உடல் எடை உள்ளவர்கள் தக்க துணை மருந்தோடு சாபிட்டால் நல்லது
  5. ஒரே மருந்து பல நல்ல விளைவை  ஏற்படுத்தும் -
  6. உடலுறவில் பலஹீனம் ,ஆர்வமின்மை ,சோர்வு ,ஞாபக மறதிக்கும் உபயோகிக்கலாம் ..
சேராங்கொட்டை என்ற அற்புத மருந்து சேர்வதால் -பத்தியம் இருப்பது (புளி,காரம் குறைத்து ,கோழி கறி தவிர்த்தல் நல்லது )
 

Post Comment

வெள்ளி, ஜூலை 08, 2011

வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்


வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆவில் பட்டை – கரஞ்ஜத்வக்                100 கிராம்
2.            தேவதாரு – தேவதாரு                 100         “
3.            வில்வவேர் – பில்வமூல               100         “
4.            முன்னைவேர் – அக்னிமாந்த           100         “
5.            பெருவாகை வேர் – ஸ்யோனாக        100         “
6.            குமிழ் வேர் – காஷ்மரீ                 100         “
7.            பாதிரி வேர் – பாட்டால               100         “
8.            மூவிலை – சாலிபர்ணீ                 100         “
9.            ஓரிலை – ப்ரிஸ்னிபர்ணீ               100         “
10.          கண்டங்கத்திரி – கண்டகாரீ             100         “
11.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ            100         “
12.          நெருஞ்சில் – கோக்ஷூர                100         “
13.          தண்ணீர் – ஜல                   19.200 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 4.800 லிட்டராக்க் குறுக்கி வடிகட்டி நெய் 1.200 கிலோ கிராம், பசுவின் பால் 1.200 கிலோ கிராம் சேர்த்து


1.            திப்பிலி – பிப்பலீ                 25 கிராம்
2.            மோடி – பிப்பலீ மூல             25           “
3.            செவ்வியம் – சவ்ய               25           “
4.            கொடிவேலி வேர் – சித்ரக         25           “
5.            சுக்கு – சுந்தீ                     25           “
6.            இந்துப்பு – ஸைந்தவலவண       25           “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.

சிலர் இந்துப்புக்கு பதில் யவக்ஷாரம் சேர்ப்பதுண்டு.

               
அளவும் அனுபானமும்:     
 5 முதல் 10 கிராம் வரை வடித்த கஞ்சியுடன் இரு வேளைகள். வெந்நீர், சூடான பால், சீந்தில் சாற்றுடனும் கொடுப்பதுண்டு.

               
 தீரும் நோய்கள்: 

சூலை (சூல), குன்மம்  (குல்ம), பெருவயிறு (மஹோதரம்), நாட்பட்ட முறைக்காய்ச்சல் (விஷம ஜ்வர), இளைப்பு (க்ஷ்ய (அ) கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), நரம்பு சம்பந்தமான நோய்களும் வாத நோய்களும் மற்றும் இரைப்பைப் புண்கள் (அன்னதிராவ சூல).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேத மருந்துகளில் -இந்துகாந்தம் கஷாயம் ,கிருதம் போன்றவை -மிக மிக அதிகமாக பயன்படக்கூடிய முக்கிய மருந்துகளில் ஒன்று
  2. ஸ்ரோதோ ரோத விஷோதனம் என்னும் -கண்ணுக்கு தெரியாத நாளங்களில் ,குழாய்களில் அடைப்பை நீக்க பயன்படுத்தபடும் முக்கிய மருந்து
  3. வயிறு எரிச்சல் ,காந்தல்,நெஞ்சு கரிப்பு ,அதிகமான வயிறு வலி ,அதிகமான அமிலத்தன்மை -இவை அனைத்திற்கும் தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
  4. எப்படி  நெய் மருந்து வயிறு புண் ஆற்றும் -அதிகமாக்கவே செய்யும் என்பவர்கள் பயப்படாமல் -இந்த மருந்தை சாபிடலாம் -விதி விலக்கான வரமான மருந்து இது
  5. வாத நோய்களுக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும்
  6. கை கால் வலி ,உளைச்சல் ,பலஹீனம் போக்கும்
  7. முக்கியமாக இந்த மருந்தை நான் அதிகம் நேசிக்கிறேன் ..(இந்த ஒரு மருந்தை வைத்து பல நோய்க்கும் -தக்க துணை மருந்தோடு தர -நோய் விலகி நோயாளி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிவதால் )

Post Comment