வெள்ளி, ஏப்ரல் 29, 2011

வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து-வைஷ்வனார சூரணம்-Vaisvanara choornam


வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து -வைச்வானர சூர்ணம் - Vaisvanara choornam
(ஸஹஸ்ரயோகம் - சூர்ணப்ரகரணம்)

தேவையான மருந்துகள்:
1.            இந்துப்பு ஸைந்தவலவண                  - 10 கிராம்
2.            ஓமம் அஜமோதா                         - 20       “
3.            சீரகம் ஜீரக                               - 30       “
4.            திப்பிலி பிப்பலீ                            - 40       “
5.            சுக்கு சுந்தீ                                - 50       “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  - 150    “  

செய்முறை:     

இவற்றை முறைப்படி பொடித்துச் சலித்து பத்திரப் படுத்தவும்.


அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


அனுபானம்:     

 தண்ணீர், மோர், நெய், புளித்தகஞ்சி.

தீரும் நோய்கள்: 


 வயிற்று உப்புசம் எனும் வயிற்றுப் பொருமல் (ஆத்மான), மலச்சிக்கல் (மலபந்த (அ) வர்கோவிபந்த), செரியாமை (அக்னி மாந்த்யம்), சூலை (சூல), குன்மம் (குல்ம), குடற்புண்கள் (பரிணாமசூல), நெஞ்சுவலி (ஹ்ருத் ரோக), ஆமவாதம் (ஆமவாத).


தெரிந்து கொள்ளவேண்டியவை -


 1. வைஷ்வனாரம் என்றால் சுக்கு -நண்பர் வானவன் யோகி கோடிட்டு காட்டியது போல் சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை என்பதே உண்மை
 2. ஆமவாதம்  என்ற முடக்கு வாத நோய்க்கு இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
 3. செரிமானம் இல்லாததே பல நோய்க்கு காரணம் -செரிமானம் ஆக வேண்டும் அதே  சமயத்தில் மலம் இளக வேண்டும் என்ற நோக்கம் உள்ள அனைத்து நோய்க்கும் இந்த மருந்து கண் கண்ட மருந்து
 4. சில சமயங்களில் -சித்த மருந்துகளான சண்ட மாருத செந்தூரம்,காளமேக நாராயண செந்தூரம் போன்ற மருந்துகளை கொடுக்க இந்த மருந்தை அனுபானமாக அடி மருந்தாக கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்
 5. அஞ்சால் அலுப்பு மருந்து ,சம்ஹணன் போன்ற சில  மருந்துகளின் ரகசிய பார்முலா இந்த மருந்து என்று சொல்லலாம் ..
 6. கை மருந்தாக தினமும் இதை பயன் படுத்துபவர்களும் நோயில்லாமல் வாழ உதவும்

Post Comment

வியாழன், ஏப்ரல் 28, 2011

மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்- Trivruth Choornam


மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம் - Trivruth Choornam
(ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:


 கருஞ்சிவதைவேர் க்ருஷ்ணத்ருவிருத் (போதிய அளவு)

செய்முறை:     

 கருஞ்சிவதையை நன்கு பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

அளவு:          

 3  முதல் 6 கிராம் வரை இரவு படுக்கைக்குச் செல்லும்போது கொள்ளவும்.

அனுபானம்:           

 சர்க்கரை, பால், தண்ணீர் (வெந்நீர்).


தீரும் நோய்கள்: 

நாட்பட்ட மலச்சிக்கல் (புராணமலபந்த).


                                இது ஒரு நல்ல மலமிளக்கி. மூல நோய் (அர்ஷ) உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட, சிரம்மின்றி மலங்கழிய உதவுகிறது.

மலச்சிக்கல் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது -கடுக்காய்,நிலவாகை ..இப்படித்தான் ..பொதுவாக எல்லாருக்கும் தெரியாத மலம் இலக்கு ஒன்று உண்டு என்றால் அது சிவத்தை வேர் சூர்ணம் ..

தெரிந்து கொள்ளவேண்டியவை
 1. மலச்சிக்கலும் ,அஜீரணமும் -மரண தேருக்கான இரட்டை சர்க்கரங்கள்..
 2. எந்த மலமிளக்கி எடுத்துகொண்டாலும் -வேலை செய்யாதவர்களுக்கு -இது ஒரு வர பிரசாதம்
 3. பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும் ,சர்க்கரை நோயாளிகளின் மலச்சிக்கலை போக்க இது ஒரு சிறந்த மருந்து


Post Comment

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

மூன்று மூலிகையில் -உலக அதிசயம் -த்ரிகடு சூர்ணம்- Trikatu choornam


மூன்று மூலிகையில் -உலக அதிசயம் -த்ரிகடு சூர்ணம்-Trikatu choornam
( ref-பாவப்ரகாச நிகண்டு மத்யம கண்டம்)

 இந்த மருந்து பல அதிசயங்களை செய்யும் 

தேவையான மருந்துகள்:


1.            சுக்கு சுந்டீ               - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச             - 10       “
3.            திப்பிலி பிப்பலீ           - 10       “


குறிப்பு -சுக்குக்கு புற நஞ்சு எனவே -சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

செய்முறை:     

 இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:        

   ½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:     

தேன், நெய், தண்ணீர்.


தீரும் நோய்கள்:  

விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.


             
தெரிந்து கொள்ள வேண்டியவை -
 1. திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக -அனுபானமாக உபயோகப்பதுண்டு
 2. திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி ,ஜலதொதோஷத்தை நீக்கும் ..நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும்
 3. திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி ,ஜலதொதோஷத்தை நீக்கும் ..நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும்
 4. நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும்
 5. இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும் ,பெண்களின் கரு முட்டை வெடித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்து சரிசெய்த பல நோயாளிகள் என்னிடம் உள்ளனர் ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி கண்டதுண்டு
 6. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள் ,அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள் ,த்ராய்ட் குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்
 7. செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும் ..
 8. வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்
 9. பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்

இப்போது மாத்திரை வடிவில் எளிதாக கிடைக்கிறது ..ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்

திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்
  

Post Comment

திங்கள், ஏப்ரல் 25, 2011

இன்றும் நேரம் ஒதுக்க முடியவில்லை..

காலை எழுந்தது முதல் இரவு பத்து  மணி வரையும் கூட இன்று என்னால் நேரம் -எழுத நேரம் வாய்க்கவில்லை ..


நாளை எழுதுகிறேன் ..நண்பர்களே ..

நிறைய நண்பர்களுக்கு -மெயில் அனுப்ப முடியவில்லை ..பதிலும் கிட்டத்தட்ட பத்து நாளைக்கு மேலாக எழுத முடிவில்லை ..

விரைவில் பதில் எழுத முயல்கிறேன் ..மன்னிக்கவும்
 Post Comment

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சளிக்கு முதல் சாய்ஸ் -நம்பர் ஒன்-இருமல் ,சளி மருந்து- தாளீஸாதி சூர்ணம்-Taleesadhi Choornam


சளிக்கு முதல் சாய்ஸ் - தாளீஸாதி சூர்ணம்- Taleesadhi Choornam
(சாரங்கதரஸம்ஹிதா மத்யம கண்டம்)

சளி,இருமலுக்கு -என்னை போன்ற வைத்திய நண்பர்களுக்கு மிகவும் பிடித்த மருந்து 

தேவையான மருந்துகள்:

1.            தாளீசபத்திரி தாளீசபத்ர         - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச                   - 20       “
3.            சுக்கு சுந்தீ                     - 30       “
4.            திப்பிலி பிப்பலீ               - 40       “
5.            குகைநீர் துகாக்ஷீரி              - 50       “

குறிப்பு:     

மூங்கிலுப்பு (வம்ஸலோசன) உபயோகிப்பதும் உண்டு.
6.            ஏலக்காய் ஏலா            - 5         “
7.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  - 5         “
8.            சர்க்கரை ஸர்க்கர               - 320    “

செய்முறை:   

  முறைப்படி சரக்குகளைப் பொடித்துச் சலித்த பின்னர் அவற்றுடன் சர்க்கரையைப் பொடித்துச் சலித்துச் சேர்க்கவும்.

அளவு:        

  1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம்:     

 தேன், நெய், தண்ணீர்.

தீரும் நோய்கள்:  இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாச), உணவில் விருப்பமின்மை (அரோசக), ஜலதோஷம், காய்ச்சல் (ஜ்வர), செரியாமை (அச்னி மாந்தய), வாந்தி (சர்தி), வயிற்று உப்புசம் எனும் பொருமன் (ஆத்மான).

தெரிந்து கொள்ள வேண்டியது
 1. சித்தாவில் பயன்படுத்தப்படும் தாளீசாதி சூர்ணதிர்க்கும்(சற்று பசுமை சார்ந்த கருப்பு நிறம் ) ,ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் இந்த தாளீசாதி சூர்ணதிர்க்கும் (வெளிறிய வெள்ளை நிறம் )நிறைய வித்தியாசம் உண்டு
 2. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தபடும் தாளீசாதி சூர்ணம் -இனிப்பும் ,திப்பிலி காரமும் தூக்கலாக இருக்கும்
 3. தாளீசாதி சூர்ணம் -வெற்றிலை சாறில் (வெற்றிலையில் வைத்து மென்று ) சாப்பிட்டால் எப்படியாப்பட்ட இருமலும் உடனே நிற்கும் ,சளியை நெஞ்சிலிருந்து வெளியே தள்ளி விடும்
 4. தாளீசாதி சூர்ணம் -எல்லா ஆயுர்வேத ,சித்த மருந்து கடைகளிலும்,,நாட்டு மருந்து கடைகளிலும்  கிடைக்கும் ,அரசு சித்த ,ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எப்போதும் கிடைக்கும்
 5. வீட்டிலே முதலுதவி பெட்டியாக இருக்க வேண்டிய மருந்தில் மிக முக்கியமானது
 6. சித்தாவில் பயன்படுத்த படும் தாளீசாதி சூர்ணம் பற்றி பின்னர் எழுதுவேன்
 7. குழந்தைகளுக்கு -ஆறு மாத குழந்தைக்கும் கொடுக்கலாம்(மிக மிக குறைவாக -இரு மிளகு எடை அளவுக்கு -தாய்பாலில் அல்லது தேனில் கொடுக்கலாம் )
 8. இந்த மருந்து உபயோகப்டுத்தியவர்கள் -ஜென்மத்திற்கும் இருமல் சிரப் என்னும் மாயைக்கு சிக்க மாட்டார்கள் என்பது உறுதி

Post Comment

வியாழன், ஏப்ரல் 21, 2011

குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam


குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam

(ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

வெள்ளைவெங்காரம் ஸ்வேதடங்கண (போதிய அளவு)

செய்முறை:     

வெள்ளை வெங்காரத்தைப் பொரித்துப் பொடித்துச் சலித்துப் பத்திரப்படுத்தவும்.

எளிய முறை 


சட்டியில் இட்டு பொரித்தாலே வெங்காரம் -பொரியும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் ..பொரித்த வெங்காரத்தை எளிதாக பயன்படுத்தலாம்

அளவும் அனுபானமும்:     

200 முதல் 500 மில்லி கிராம் வரை தேனுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

தீரும் நோய்கள்:  

வாய்ப்புண் (அஸ்யபாக), இருமல் (காச) மற்றும் தொண்டையைப் பற்றிய கோளாறுகள் (காந்தரோக). வாய்ப்புண் நீங்க இதை வாயிலிட்டுக் கொப்பளிக்கவும். தேங்காய் எண்ணெயில் குழைத்து இரணங்களுக்கும் போடலாம் அல்லது மேலே தூவலாம். இருமல், ஜலதோஷத்தில் தேனுடன் சேர்ந்து இதனை உள்ளுக்குக் கொடுப்பதுண்டு.


குறிப்பு:    

இதனை டங்கண பஸ்ம என்றும் அழைப்பதுண்டு


வெங்கார பற்பம் -
சித்த ரெபரன்ஸ் -சித்த வைத்திய திரட்டு ,பிரம்மமுனி கருக்கடை -முன்னூறு

செய்முறை -

இதில் வெங்காரத்துடன் கோழி முட்டையின் வெண் கருவை சேர்த்தரைத்து பற்பம் ஆக்கும் முறையில் பற்பம் ஆக்குதல் ...

பயன்


வெங்கார பற்பத்னால் -வெள்ளை என்னும் வெள்ளை படுதல் ,மூத்திர கடுப்பு ,மூத்திர சம்பத்தமான நோய்களான எரிச்சல் ,தடை ,சதை அடைப்பும் போகும்

 குளுமை என்பதற்கு ஒரு பாடல்

ஸ்ரீ குமர குரு பாடலில் வெங்காரம் குளிர்ச்சி என்பதை சொல்கிறது எனபதை பாருங்களேன்
இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளர்ந்துங் கொலும்குறிப்பு -முடிந்தால் தமிழ் பாட்டுடன் அடுத்து சித்த மருத்துவ மருந்துகளை எழுதுவேன்

கவனம் தேவை -

ருது உண்டாக்கும் அதாவது மாத விலக்கை வரவழைக்கும் தன்மை கொண்டதால் -மிக்க கவனம் தேவை ..கர்ப்பிணிகளுக்கு பயன் படுத்த கூடாது ..
எனக்கு தெரிந்த வைத்தியர்கள் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை உண்டாக்க பயன் படுத்தியுள்ளார்கள் என்பதும் உண்மை (தக்க துணை மருந்துகளுடன் )


தெரிந்து கொள்ள வேண்டியது 1. நீர் சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் நல்ல மருந்து
 2. மாத விலக்கு வரவைக்கும் ,மாத விலக்கினால் உண்டாகும் வலிக்கும் நல்ல மருந்து
 3. வாய்புண்ணுக்கு வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல பலன் உண்டாகும்
 4. சிறந்த கிருமி நாசினி -புண்களின் மேல் தூவ எளிதில் ஆறாப் புண்ணும் ஆறும்
 5. இருமல் சளிக்கும்,வயிற்றுப் புண்ணுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்

 


 

Post Comment

புதன், ஏப்ரல் 20, 2011

மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornam


மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்- Sudarshana choornam
(ref-சாரங்கதர சம்ஹித - மத்யமகண்டம்)

யார் சொன்னார்கள் -ஆயுர்வேத சித்த மருந்துகள் வேலை செய்ய தாமதம் ஆகும் என்று ?
சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத சித்த மருந்துகளை நாடி வருகிறார்கள் ?-விரல் விட்டு எண்ணக்கூடிய நோயாளிகளை தவிர ..
(ஆனால் என்னிடம் காய்ச்சலுக்கும் பெரியவர்களும் ,பச்சிளம் குழந்தைகளும் ஆயுர்வேத வைத்தியம் பெற என்னிடம் வருவதுண்டு )

ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ?
அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது ..
 

தேவையான மருந்துகள்:

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீபலத்வக்        10 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீபலத்வக் 10           “
3.            நெல்லிமுள்ளி ஆமலகீபலத்வக்                  10           “
4.            மஞ்சள் ஹரீத்ரா                               10           “
5.            மரமஞ்சள் தாருஹரீத்ரா                        10           “
6.            கண்டங்கத்திரி சண்டகாரீ                       10           “
7.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                       10           “
8.            கிச்சலிக் கிழங்கு ஸட்டீ                         10           “
9.            சுக்கு சுந்தீ                                     10           “
10.          மிளகு மரீச்ச                                   10           “
11.          திப்பிலி பிப்பலீ                                10           “
12.          மோடி பிப்பலீமூல                              10           “
13.          பெருங்குரும்பை மூர்வா                         10           “
14.          சீந்தில் கொடி குடூசீ                             10           “
15.          சிறுகாஞ்சூரி துராலபா                           10           “
16.          கடுகரோஹிணீ கடுகரோஹிணீ                  10           “
17.          பர்பாடகம் பர்பாடக                             10           “
18.          கோரைக்கிழங்கு முஸ்தா                        10           “
19.          நீர் பிரம்மி (காய்ந்தது) நீர்ப்ரஹ்மி                10           “
20.          குருவேர் ஹ்ரீவேர                             10           “
21.          வேப்பம் பட்டை நிம்பத்வக்                      10           “
22.          புஷ்கரமூலம் கோஷ்ட                          10           “
23.          அதிமதுரம் யஷ்டீமது                          10           “
24.          வெட்பாலைப்பட்டை குடஜத்வக்                  10           “
25.          ஓமம் அஜமோதா                               10           “
26.          வெட்பாலை அரிசி இந்த்ரயவ                    10           “
27.          கண்டுபாரங்கி பார்ங்கீ                           10           “
28.          முருங்கை விதை சிக்ருபீஜ                      10           “
29.          படிகாரம் ஸ்படிக                               10           “
30.          வசம்பு வச்சா                                  10           “
31.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  10           “
32.          பதிமுகம் பத்மக                                10           “
33.          விளாமிச்சம் வேர் உஸீர                        10           “
34.          சந்தனம் சந்தன                               10           “
35.          அதிவிடயம் அதிவிஷா                          10           “
36.          சித்தாமுட்டிவேர் பலாமூல                      10           “
37.          மூவிலை ப்ரிஸ்னீபார்ணீ                        10           “
38.          ஓரிலை சாலிபர்ணீ                             10           “
39.          வாயுவிடங்கம் விடங்க                         10           “
40.          கிரந்திதகரம் தகர                               10           “
41.          கொடிவேலிவேர் சித்ரக                          10           “
42.          தேவதாரு தேவதாரு                            10           “
43.          செவ்வியம் சவ்ய                               10           “
44.          பேய்ப்புடல் இலை பட்டோல                    10           “
45.          ஜீவகம் ஜீவக                             10           “
46.          ரிஷபகம் ரிஷபக                               10           “
47.          இலவங்கம் லவங்க                             10           “
48.          மூங்கிலுப்பு வம்ஸலோசன                      10           “
49.          தாமரைக்கிழங்கு பத்மமூல                      10           “
50.          காகோலீ காகோலீ                              10           “
51.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி                   10           “
52.          ஜாதிபத்திரி ஜாதீபத்ரி                          10           “
53.          தாளீசபத்திரி தாளீசபத்ர                         10           “
54.          நிலவேம்பு பூநிம்ப                              10           “ 


குறிப்பு:  

  ஜீவகம், ரிஷபகம் இவைகளின் மாற்றுச் சரக்காக பால் முதுக்கன் கிழங்கு மற்றும் சீந்தில் கொடி மொத்தம் இரண்டு பங்கும், காகோலியின் மாற்றுச் சரக்காக (பிரதிநிதி திரவ்யம் alias substitute drug) அமுக்கரா கிழங்கு ஒரு பங்கும் சேர்க்கவும்.


செய்முறை:     

படிகாரத்தைத் தவிர்த்து மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். படிக்காரத்தைப் பொரித்துப் பொடித்து சலித்து சூர்ணத்துடன் ஒன்று சேர்த்து நன்கு கலக்கவும்.


அளவு:           

1 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

தீரும் நோய்கள்:  

தாதுக்களில் தங்கிய காய்ச்சல் எனப்படும் தாதுசுரம் (தாதுகாத ஜ்வர), குளிர் சுரம் போன்ற நச்சுக்காய்ச்சல்கள் (விஷமஜ்வர) மற்றும் பல வித காய்ச்சல்கள் (ஜ்வர), யானைக்கால் (ஸ்லீபாத), வயிற்றுப் பூச்சி (க்ருமி), தோல்நோய்கள் (சர்மரோக).

தெரிந்து கொள்ளவேண்டியது 

 1. இப்போது சுதர்சன சூர்ணம் -மாத்திரை வடிவிலும் கிடக்கிறது 
 2. பொதுவாக காய்ச்சலுக்கு முதல் வைத்தியம் -வயிற்றுக்கு பட்டினி போடுவது 
 3. நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் படம் மற்றும் விளக்க  பெற -இங்கே சொடுக்கவும்
 4. மர்ம காய்ச்சலுக்கு ஆயுர்வேத தீர்வு கட்டுரை படிக்க -இங்கே சொடுக்கவும்
 5. விஷ காய்ச்சல் என வருகிறது -ஆயுர்வேத கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும் 
 6. சவால்
  உடனடி காய்ச்சல் விட -லிங்க செந்தூரம் -ஒரு மிளகு எடை அளவுக்கு எடுத்து -சுதர்சன சூர்ணம் ஐந்து கிராமில் கலந்து கொடுக்க -நீங்கள் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஊசி போட்டால் எவ்வளவு வேகமாக குறையும் என்று நம்புகிறீர்களோ -அந்த நேரத்தை விட சீக்கிரமாக காய்ச்சலை நீக்கும் என்பது எனது அனுபவம்Post Comment

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

இன்று என்னால் எழுத முடியவில்லை ..

இன்று என்னால் எழுத முடியவில்லை ..

Post Comment

திங்கள், ஏப்ரல் 18, 2011

குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்- Srungyaadhi choornam


குழந்தைகளின் நோய் போக்கும் -குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்- Srungyaadhi choornam
  (ref-சாரங்கதர சம்ஹிதா - மத்யமகண்ட)


தேவையான மருந்துகள்:
1.            கர்கடகசிருங்கி கற்கடச்ருங்கி         1 பாகம்

2.            அதிவிடயம் அதிவிஷா               பாகம்

3.            திப்பிலி பிப்பலீ                      1   பாகம்செய்முறை:     

 இவைகளை நன்கு பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

1-2 கிராம் வரை தேனுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 

  
முக்கியமாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் (காஸ),  


காய்ச்சல் (ஜ்வர),  

வாந்தி (சர்தி).


குழந்தைகளின் முக்கியமாக -ஒரு வயது அல்லது மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகளின் பொதுவாக அடிக்கடி ஏற்படும் ,இருமல் ,காய்ச்சல் ,செரியாமை ,செரியா வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இது அற்புத மருந்து ..

ஆயுர்வேதத்தில் சிறு குழந்தைளின் நோய்களை இந்த ஒரு மருந்தை கொண்டே நீக்கி விட முடியும்  என்பது திண்ணம் ..

குறிப்பு -

அதி விடயம் என்ற அற்புத மருந்து -மிக மிக விலை உயர்ந்து ..அதாவது ஒரு கிலோ குறைந்த பட்சம் நாலாயிரத்தை தாண்டும் ,கலப்பட வாதிகள் இதற்க்கு பதில் நாபி கிழங்கை தந்து ஏமாற்றிவிடவும் வாய்ப்பு அதிகம் எனவே -எச்சரிக்கை தேவை ..என்னிடம் உள்ள அதி விடய கிழங்கின் படங்களை வருகிற பதிவில் காலம் கருதி வெளிவிடுகிறேன் ..

விலை உச்சத்தின் காரணமாக -கிலோ வெறும் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் கோரை கிழங்கை -சேர்க்கும் பல கம்பெனிகளை எனக்கு தெரியும் (இப்படி சேர்த்தால் மருந்து எப்படி வேலை செய்யும்).

அதிவிடயம் பல மருந்துகளில் ,மகா ராச்னாதி கசாயம் ,இன்னும் பல பல மருந்துகளில் முக்கியமான பொருளாக சேர்வதுண்டு
.

அதிவிடயத்தை -நீர்வாதத்திர்க்கு -ஆம வாதம் ,வாத ரக்தம் -போன்றவற்றிற்கு நாங்கள் விலை கருதாது பயன்படுத்துவததுண்டு .

 

Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-

என்ன செய்தோம் இந்த சமுதாயத்துக்கு ?

நோயற்ற வாழ்வை வாழ மனிதன் எத்தனை ப்ர்யத்தினங்கள் -முயற்சிகள் எடுக்கிறான் ?

சோம்பேறியாகி ,நோய் உண்டாவதற்கு காரணமான காரணங்களை விட மறுக்கும் சராசரி மனிதர்களுக்கு நடுவே  ஓர் ஆச்சர்யமான மனிதர் ..
மனிதன் நோயற்று வாழ -போகர் சப்த காண்டம் -7000.,என்ற போகர் ஏழாயிரம் என்ற ஏழாயிரம் பாடல்களை எந்த வித பிரதிபலனும் பாராமல் அதனை மின்னூலாக தொகுத்தவர் M.K.சுகுமாரன் .,B.E(Hons),M.E.,Executive Engineer, P.W.D.,சென்னை -113 -சேர்ந்தவர் அவர் ..
மருத்துவ உலகின் மேல் கொண்ட தீரா ஆர்வம் இந்த மின்னூலை தொகுக்க உதவியுள்ளது என்றால் அது மிகை ஆகாது ..
அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவியுங்கள் அவரது மெயில் முகவரி mksugumaran@gmail.com ,அவருடைய தள முகவரி இது தான் ..   mksugumaran.in
-
போகர் சப்த காண்டம் -7000 -என்ற மின்னூலை இலவச தகவிறக்கம் பெற இங்கே சொடுக்கவும்

இந்த பாடல்களை மெல்ல உள் வாங்குங்கள் ,


தகவிறக்கம் பெற முடியவில்லை என்றால் பின்னூட்டம் இடவும்

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

காசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்- Sithopladhi choornam


காசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்-Sithopladhi choornam
(ref-யோகரத்னாகரம் ராஜயக்ஷ்மா ப்ரகரணம்)

தேவையான மருந்துகள்:
1.            கற்கண்டு ஸர்க்கர                   160  கிராம்
2.            குகைநீர் துகாக்ஷீரீ                   80           “
3.            திப்பிலி பிப்பலீ                       40           “
4.            ஏலக்காய் ஏலா                        20           “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       10           “


செய்முறை:     

சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலித்துப் பின்னர் கற்கண்டையும் பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கவும்.

குறிப்பு:    மூங்கிலுப்பு (வம்ஸலோச்சன) உபயோகிப்பதும் உண்டு.

அளவு:          

1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.
அனுபானம்:     தேன், நெய், பால், தண்ணீர்.


தீரும் நோய்கள்: 


 பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அ) உணவில் விருப்பமின்மை (அரோசக), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயகாஸ, பித்தகாஸ, சின்னஸ்வாஸ (தங்குமூச்சு அல்லது தடங்குகின்ற மூச்சு), இரத்தபித்தம், காய்ச்சல் (ஜ்வர), கைகால் எரிச்சல் (ஹஸ்தபாத தாஹ), மார்பின் பக்க வாட்டிலேற்படும் வலி (பார்ஸ்வ சூல), நாக்கு மரத்து போதல்

இருமல் நாள்பட்டு இருக்கும் போது இருமலினால் விலா எலும்பு வலி ஏற்படும் அளவுள்ள இருமலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..

 
 உடல் சூட்டிற்கும் ,பசியின்மைக்கும் -இந்த மருந்து வேலை செய்யும்

               

Post Comment