வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சளிக்கு முதல் சாய்ஸ் -நம்பர் ஒன்-இருமல் ,சளி மருந்து- தாளீஸாதி சூர்ணம்-Taleesadhi Choornam


சளிக்கு முதல் சாய்ஸ் - தாளீஸாதி சூர்ணம்- Taleesadhi Choornam
(சாரங்கதரஸம்ஹிதா மத்யம கண்டம்)

சளி,இருமலுக்கு -என்னை போன்ற வைத்திய நண்பர்களுக்கு மிகவும் பிடித்த மருந்து 

தேவையான மருந்துகள்:

1.            தாளீசபத்திரி தாளீசபத்ர         - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச                   - 20       “
3.            சுக்கு சுந்தீ                     - 30       “
4.            திப்பிலி பிப்பலீ               - 40       “
5.            குகைநீர் துகாக்ஷீரி              - 50       “

குறிப்பு:     

மூங்கிலுப்பு (வம்ஸலோசன) உபயோகிப்பதும் உண்டு.
6.            ஏலக்காய் ஏலா            - 5         “
7.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  - 5         “
8.            சர்க்கரை ஸர்க்கர               - 320    “

செய்முறை:   

  முறைப்படி சரக்குகளைப் பொடித்துச் சலித்த பின்னர் அவற்றுடன் சர்க்கரையைப் பொடித்துச் சலித்துச் சேர்க்கவும்.

அளவு:        

  1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம்:     

 தேன், நெய், தண்ணீர்.

தீரும் நோய்கள்: 



 இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாச), உணவில் விருப்பமின்மை (அரோசக), ஜலதோஷம், காய்ச்சல் (ஜ்வர), செரியாமை (அச்னி மாந்தய), வாந்தி (சர்தி), வயிற்று உப்புசம் எனும் பொருமன் (ஆத்மான).

தெரிந்து கொள்ள வேண்டியது
  1. சித்தாவில் பயன்படுத்தப்படும் தாளீசாதி சூர்ணதிர்க்கும்(சற்று பசுமை சார்ந்த கருப்பு நிறம் ) ,ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் இந்த தாளீசாதி சூர்ணதிர்க்கும் (வெளிறிய வெள்ளை நிறம் )நிறைய வித்தியாசம் உண்டு
  2. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தபடும் தாளீசாதி சூர்ணம் -இனிப்பும் ,திப்பிலி காரமும் தூக்கலாக இருக்கும்
  3. தாளீசாதி சூர்ணம் -வெற்றிலை சாறில் (வெற்றிலையில் வைத்து மென்று ) சாப்பிட்டால் எப்படியாப்பட்ட இருமலும் உடனே நிற்கும் ,சளியை நெஞ்சிலிருந்து வெளியே தள்ளி விடும்
  4. தாளீசாதி சூர்ணம் -எல்லா ஆயுர்வேத ,சித்த மருந்து கடைகளிலும்,,நாட்டு மருந்து கடைகளிலும்  கிடைக்கும் ,அரசு சித்த ,ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எப்போதும் கிடைக்கும்
  5. வீட்டிலே முதலுதவி பெட்டியாக இருக்க வேண்டிய மருந்தில் மிக முக்கியமானது
  6. சித்தாவில் பயன்படுத்த படும் தாளீசாதி சூர்ணம் பற்றி பின்னர் எழுதுவேன்
  7. குழந்தைகளுக்கு -ஆறு மாத குழந்தைக்கும் கொடுக்கலாம்(மிக மிக குறைவாக -இரு மிளகு எடை அளவுக்கு -தாய்பாலில் அல்லது தேனில் கொடுக்கலாம் )
  8. இந்த மருந்து உபயோகப்டுத்தியவர்கள் -ஜென்மத்திற்கும் இருமல் சிரப் என்னும் மாயைக்கு சிக்க மாட்டார்கள் என்பது உறுதி

Post Comment

3 comments:

வானவன் யோகி சொன்னது…

இருமல் சிரப் என்னும் சாராயத்தை குடிப்பதை விட இது போன்ற பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது......

இது போன்ற தெளிவுகள் மக்கள் அறிய வேண்டி மிக அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள்.......

தங்கள் சேவையால் எந்நாளும் ந்ன்னாளாய் விளங்கட்டும்.....

குறிப்பு:-இருமல் சிரப்பை இரண்டு மூன்று பாட்டில்கள் வாங்கிக் குடித்து போதையை அனுபவிக்கப் பாவிப்பதாய் ஒரு பழம் பத்திரிக்கைச் செய்தி.....

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
மிக்க அருமையான பதிவு .இதோ இன்றே எங்கள் வீட்டில் தாளீஸாதி சூர்ணம் ரெடி .நீங்கள் ஒரு அமைப்பு அல்லது இயற்கை வைத்திய இன்ஸ்டியூட் ஆரம்பிக்கலாமே .பலர் இயற்கை வைத்திய கல்வியறிவு பயன்பெறுவார்கள் .
அன்புடன் ,
கோவை சக்தி

curesure Mohamad சொன்னது…

@sakthi

நண்பரே சக்தி கலக்கிட்டீங்க ..பாராட்டுக்கள் ..
இன்ஸ்டிட்யூட் நடத்தி கொண்டு தானே இருக்கிறோம் இந்த தளம் மூலமாக..

கருத்துரையிடுக