என்ன செய்தோம் இந்த சமுதாயத்துக்கு ?
நோயற்ற வாழ்வை வாழ மனிதன் எத்தனை ப்ர்யத்தினங்கள் -முயற்சிகள் எடுக்கிறான் ?
சோம்பேறியாகி ,நோய் உண்டாவதற்கு காரணமான காரணங்களை விட மறுக்கும் சராசரி மனிதர்களுக்கு நடுவே ஓர் ஆச்சர்யமான மனிதர் ..
மனிதன் நோயற்று வாழ -போகர் சப்த காண்டம் -7000.,என்ற போகர் ஏழாயிரம் என்ற ஏழாயிரம் பாடல்களை எந்த வித பிரதிபலனும் பாராமல் அதனை மின்னூலாக தொகுத்தவர் M.K.சுகுமாரன் .,B.E(Hons),M.E.,Executive Engineer, P.W.D.,சென்னை -113 -சேர்ந்தவர் அவர் ..நோயற்ற வாழ்வை வாழ மனிதன் எத்தனை ப்ர்யத்தினங்கள் -முயற்சிகள் எடுக்கிறான் ?
சோம்பேறியாகி ,நோய் உண்டாவதற்கு காரணமான காரணங்களை விட மறுக்கும் சராசரி மனிதர்களுக்கு நடுவே ஓர் ஆச்சர்யமான மனிதர் ..
மருத்துவ உலகின் மேல் கொண்ட தீரா ஆர்வம் இந்த மின்னூலை தொகுக்க உதவியுள்ளது என்றால் அது மிகை ஆகாது ..
அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவியுங்கள் அவரது மெயில் முகவரி mksugumaran@gmail.com ,அவருடைய தள முகவரி இது தான் .. mksugumaran.in-
இந்த பாடல்களை மெல்ல உள் வாங்குங்கள் ,
4 comments:
என்னவோர் ஆச்சரியம்......
இதை நானே செய்யலாம் என நினைத்துக் கொண்டே வெகு காலம் செலவழிந்த்தது தான் மிச்சம்...
இணையத்தில் தேடி இரண்டு நாட்களுக்கு முன் தான் போகர் 7000த்தைத் தரவிரக்கம் செய்து பார்வையிட்டுக் கொண்டுள்ளேன்..
அவருடைய சேவையின் மதிப்பு அளப்பறியது....
பாராட்ட வார்த்தைகளே இல்லை...
ஆயினும் அதில் உள்ள எழுத்துபிழை..வாக்கியப் பிழைகளைத் தொகுத்து அவருக்கு அளித்தால் அவர் சரி செய்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்...
இது போன்ற படைப்புகளை வெளியிட்டு பல்லோருக்கும் உதவும் தங்கள் நெஞ்சமும் எங்களுக்குத் தெரியாததல்ல.....
பிறரையும் பாராட்டும் தங்களை .......
எப்போதும் பாராட்டும் அன்பு உள்ளங்கள்...
@வானவன் யோகி
மிக்க அருமை ..அப்படியா ?..
எனக்கு தெரியும் உங்களின் சேவைகள் ..உங்களிடமும் அப்படி புத்தகங்களை வரவேற்கிறேன் ..
அவரது நூலில் உள்ள நீங்கள் கூறிய பிழைகளை சுட்டிக்காட்டி ..இன்னும் விளக்கத்துடனும் அவரிடம் நூலை எதிர்பார்ப்போம் ..
நன்றிகளுடன் ..
Iraivan matrum sidhdhargalin arul thiru Sugumaran avargalukkum ungalukkum kitta prarthikkiraen. Mikka nandri.
Anbudan
Suresh
அனபுள்ள நண்பர்கள் அணைவருக்கும் நன்றி ,
நான் என்னிடம் ஒரு சித்தவைத்தியர் கொடுத்த புத்தகத்தைத் தமிழில் டைப் செய்து இணையத்தில் வெளியிட்டேன். டைப் செய்ய ஆரம்பித்தது 12-12-2008 அன்று இரவு முடித்தது 16-09-2010. முதன்முதலாக PDF ஆக வெளியிட்டது 25-12-2010 அன்று நூறு நூறு பாடல்களின் தொகுப்பாக ரிலையன்ஸ் பிக்ராக் வழங்கிய இலவச தளம் mksugumaran.in ஆகும். அதை திரு.நாடராஜன் கந்தசாமி என்பவர் என்னுடைய அனுமதிபெற்று எல்லாபாடல்களையும் சேரத்து ஒரே PDF ஆக மாற்றி அதற்கான அட்டைப்படம் என்னுடைய முகவரியுடன் வெளியிட்டு உலகின் பலமக்களுக்கும் சென்றடையும் வகையில் செய்துள்லார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். என்னுடை மின்னஞ்சல் முகவரிக்கு நிறைய கடிதங்கள் வந்தபிறகு தான் நிறைய நல்ல கருத்துக்கள் அந்த புத்தகத்தில் இருக்குமென தெரிந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் பலமுறை படித்து கொஞ்சம் பொருள் புரிநதுகொண்டேன். பல மக்களின் வேண்டுகோள்படி அப்புத்தகத்தை அப்படியே UniCode Tamil ஆக மாற்றி தற்போது http://bogar-siddhar.blogspot.in என்ற இணையத்தில் வெளியிட்டுள்ளேன். அவ்வாறு மாற்றம் செய்யும்போது சொற்பிழைகளை சரிசெய்யலாமே என்று 3500 பாடல்களுக்கு மேல் மட்டும் சொற்பிழைகளை என்னால் முடிந்த அளவு திருத்தி இருக்கிறேன். மீதமுள்ள 1 முதல் 3500 வரையிலான பாடல்களிலுள்ள சொற்பிழைகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சரிசெய்ய முயற்சி செய்கிறேன். தங்களுடை பாராட்டுதலுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
அன்புள்ள
எம்.கே.சுகுமாரன்
கருத்துரையிடுக