வியாழன், ஏப்ரல் 21, 2011

குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam


குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam

(ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

வெள்ளைவெங்காரம் ஸ்வேதடங்கண (போதிய அளவு)

செய்முறை:     

வெள்ளை வெங்காரத்தைப் பொரித்துப் பொடித்துச் சலித்துப் பத்திரப்படுத்தவும்.

எளிய முறை 


சட்டியில் இட்டு பொரித்தாலே வெங்காரம் -பொரியும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் ..பொரித்த வெங்காரத்தை எளிதாக பயன்படுத்தலாம்

அளவும் அனுபானமும்:     

200 முதல் 500 மில்லி கிராம் வரை தேனுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

தீரும் நோய்கள்:  

வாய்ப்புண் (அஸ்யபாக), இருமல் (காச) மற்றும் தொண்டையைப் பற்றிய கோளாறுகள் (காந்தரோக). வாய்ப்புண் நீங்க இதை வாயிலிட்டுக் கொப்பளிக்கவும். தேங்காய் எண்ணெயில் குழைத்து இரணங்களுக்கும் போடலாம் அல்லது மேலே தூவலாம். இருமல், ஜலதோஷத்தில் தேனுடன் சேர்ந்து இதனை உள்ளுக்குக் கொடுப்பதுண்டு.


குறிப்பு:    

இதனை டங்கண பஸ்ம என்றும் அழைப்பதுண்டு


வெங்கார பற்பம் -
சித்த ரெபரன்ஸ் -சித்த வைத்திய திரட்டு ,பிரம்மமுனி கருக்கடை -முன்னூறு

செய்முறை -

இதில் வெங்காரத்துடன் கோழி முட்டையின் வெண் கருவை சேர்த்தரைத்து பற்பம் ஆக்கும் முறையில் பற்பம் ஆக்குதல் ...

பயன்


வெங்கார பற்பத்னால் -வெள்ளை என்னும் வெள்ளை படுதல் ,மூத்திர கடுப்பு ,மூத்திர சம்பத்தமான நோய்களான எரிச்சல் ,தடை ,சதை அடைப்பும் போகும்

 குளுமை என்பதற்கு ஒரு பாடல்

ஸ்ரீ குமர குரு பாடலில் வெங்காரம் குளிர்ச்சி என்பதை சொல்கிறது எனபதை பாருங்களேன்
இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளர்ந்துங் கொலும்குறிப்பு -முடிந்தால் தமிழ் பாட்டுடன் அடுத்து சித்த மருத்துவ மருந்துகளை எழுதுவேன்

கவனம் தேவை -

ருது உண்டாக்கும் அதாவது மாத விலக்கை வரவழைக்கும் தன்மை கொண்டதால் -மிக்க கவனம் தேவை ..கர்ப்பிணிகளுக்கு பயன் படுத்த கூடாது ..
எனக்கு தெரிந்த வைத்தியர்கள் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை உண்டாக்க பயன் படுத்தியுள்ளார்கள் என்பதும் உண்மை (தக்க துணை மருந்துகளுடன் )


தெரிந்து கொள்ள வேண்டியது  1. நீர் சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் நல்ல மருந்து
  2. மாத விலக்கு வரவைக்கும் ,மாத விலக்கினால் உண்டாகும் வலிக்கும் நல்ல மருந்து
  3. வாய்புண்ணுக்கு வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல பலன் உண்டாகும்
  4. சிறந்த கிருமி நாசினி -புண்களின் மேல் தூவ எளிதில் ஆறாப் புண்ணும் ஆறும்
  5. இருமல் சளிக்கும்,வயிற்றுப் புண்ணுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்

 


 

Post Comment

5 comments:

கருத்துரையிடுக