வியாழன், ஏப்ரல் 14, 2011

விந்து முந்துதல் ,அதிக இரத்த போக்கை குணப்படுத்தும்-சால்மலி சூர்ணம்-Shalmalee choornam


எந்தவித உதிரபோக்கையும் குணப்படுத்தும் -காமம் பெருக்கும் மருந்து
சால்மலி சூர்ணம்- Shalmalee choornam
(ref-பாவப்ரகாச நிகண்டு)


தேவையான மருந்துகள்:

  இலவம்பிசின் சால்மலி நிர்யாஸ (போதிய அளவு)


செய்முறை:    

சுத்தமான இலவம் பிசினை நன்கு பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:          

1 முதல் 3 கிராம் வரை நோய்க்கு ஏற்றவாறு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:    

தேன், வெண்ணெய், நெய், பால்.


தீரும் நோய்கள்: 


 பெரும்பாடு (அஸ்ரிக்தர), இரத்த சீதபேதி (ரக்தாதிசார), இரத்த மூலம் (ரக்தார்ஷ), மூச்சு மண்டலம், உணவு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த), ரத்தம் பீறிடும் மற்ற நிலைகள் (ரக்தஸ்ராவ) மற்றும் ரத்த இருமல், ரத்தம்துப்புதல் போன்ற நிலைகள் மேற் கூறிய நிலைகளில் லாக்ஷா சூர்ணத்துடன் இதனை சேர்த்து வழங்குவது வழக்கமாகும்.


எல்லாவிதமான இரத்தபோக்கையும் குணப்படுத்த ,அடோதொடை சேர்ந்த மருந்துகள் அல்லது இம்பூரல் சேர்ந்த மருந்துகளோடு நான் கொடுப்பதுண்டு -வாரபோக்கில் ,பல நாட்களாகியும்   நிற்காத மாத உதிரபோக்கை இந்த நல்ல மருந்து ஆங்கில மருந்தை விட வேகமாக நிறுத்தும் என்பது உண்மை ..

ஆண்களின் சீக்கிரம் விந்து வெளிபடுதலில் இந்த சால்மலி சூரணத்தை ,ஜாதிக்காய் சூர்ணம் ,ஓரிதழ் தாமரை சூரணத்துடன் ,மற்றும் பல துவர்ப்பு சுவை உடைய மருந்துகள் உடன் ,மேலும் பயிற்சிகள் (மூல பந்தம் போன்ற -யோக பயிற்சிகள் )-சரி செய்ய முடிகிறது ..

சால்மலி என்ற இந்த இலவம் பிசின் -குளிர்ச்சி தன்மை உடையது ,மேலும் இனிப்பு ,துவர்ப்பு சுவை உடையது ..

Post Comment

6 comments:

வானவன் யோகி சொன்னது…

ரத்த இருமல், ரத்தம் கக்குதல் போன்றவற்றிற்கு தக்க அனுபானத்துடன் தர தீரும் என்பது ஒரு அருமையான தகவல்.

நன்றிகள் பல..பல...

sakthi சொன்னது…

""பல நாட்களாகியும் நிற்காத மாத உதிரபோக்கை இந்த நல்ல மருந்து ஆங்கில மருந்தை விட வேகமாக நிறுத்தும் என்பது உண்மை ..""
ஆங்கில மருத்துவத்தையே தேடி அலைந்து பக்க விளைவால் வேறு ஒரு நோய் பற்றி கொள்வதை விட பக்கவிளைவற்ற நம் முன்னோர்கள் வகுத்த மருந்துகள் மூலம் நோய் தீர்க்கலாம்.
நட்புடன் ,
கோவை சக்தி

jagadeesh சொன்னது…

நீங்களே மருந்து தயாரித்து விற்க்கரீர்களா?

curesure Mohamad சொன்னது…

@jagadeeshஎல்லா விதமான மருந்துகளையும் தயாரிப்பதில்லை நண்பரே ..ஆனால் எல்லா வகையான மருந்துகளையும் தயாரித்த அனுபவம் ,மருந்தின் தன்மை ,குணம் எல்லாம் ஓரளவுக்கு தெரியும் ..
எனது கிளினிக் ப்ராக்டீசுக்கு தேவையான அரிய மருந்துகளை தயாரிப்பதுண்டு ..
தயாரித்து விற்பதில்லை ..

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிஊக்க மருந்து அளிக்கும் எனது ஆருயிர் நண்பரே நன்றிகள் பல

curesure Mohamad சொன்னது…

@sakthiஊக்க மருந்து அளிக்கும் எனது ஆருயிர் நண்பரே நன்றிகள் பல

கருத்துரையிடுக