வெள்ளி, ஏப்ரல் 29, 2011

வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து-வைஷ்வனார சூரணம்-Vaisvanara choornam


வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து -வைச்வானர சூர்ணம் - Vaisvanara choornam
(ஸஹஸ்ரயோகம் - சூர்ணப்ரகரணம்)

தேவையான மருந்துகள்:




1.            இந்துப்பு ஸைந்தவலவண                  - 10 கிராம்
2.            ஓமம் அஜமோதா                         - 20       “
3.            சீரகம் ஜீரக                               - 30       “
4.            திப்பிலி பிப்பலீ                            - 40       “
5.            சுக்கு சுந்தீ                                - 50       “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  - 150    “  

செய்முறை:     

இவற்றை முறைப்படி பொடித்துச் சலித்து பத்திரப் படுத்தவும்.


அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


அனுபானம்:     

 தண்ணீர், மோர், நெய், புளித்தகஞ்சி.

தீரும் நோய்கள்: 


 வயிற்று உப்புசம் எனும் வயிற்றுப் பொருமல் (ஆத்மான), மலச்சிக்கல் (மலபந்த (அ) வர்கோவிபந்த), செரியாமை (அக்னி மாந்த்யம்), சூலை (சூல), குன்மம் (குல்ம), குடற்புண்கள் (பரிணாமசூல), நெஞ்சுவலி (ஹ்ருத் ரோக), ஆமவாதம் (ஆமவாத).


தெரிந்து கொள்ளவேண்டியவை -


  1. வைஷ்வனாரம் என்றால் சுக்கு -நண்பர் வானவன் யோகி கோடிட்டு காட்டியது போல் சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை என்பதே உண்மை
  2. ஆமவாதம்  என்ற முடக்கு வாத நோய்க்கு இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. செரிமானம் இல்லாததே பல நோய்க்கு காரணம் -செரிமானம் ஆக வேண்டும் அதே  சமயத்தில் மலம் இளக வேண்டும் என்ற நோக்கம் உள்ள அனைத்து நோய்க்கும் இந்த மருந்து கண் கண்ட மருந்து
  4. சில சமயங்களில் -சித்த மருந்துகளான சண்ட மாருத செந்தூரம்,காளமேக நாராயண செந்தூரம் போன்ற மருந்துகளை கொடுக்க இந்த மருந்தை அனுபானமாக அடி மருந்தாக கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்
  5. அஞ்சால் அலுப்பு மருந்து ,சம்ஹணன் போன்ற சில  மருந்துகளின் ரகசிய பார்முலா இந்த மருந்து என்று சொல்லலாம் ..
  6. கை மருந்தாக தினமும் இதை பயன் படுத்துபவர்களும் நோயில்லாமல் வாழ உதவும்

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம்,
"கை மருந்தாக தினமும் இதை பயன் படுத்துபவர்களும் நோயில்லாமல் வாழ உதவும் "
அருமையான குறிப்புகள் நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி

வானவன் யோகி சொன்னது…

நானே இது போன்ற கேள்வியைக் கேட்கலாம் என்றிருந்தேன்.......காரணம்....

பொதுவாகவே வேனில் காலங்களில் வாத நோய்களை முற்றாகத் தீர்க்கமுடியும்....

மழை,குளிர்,பனி காலங்களில் நரம்புகள் விறைப்பாகி முறட்டுத் தனமாக மாறிவிடும்,,,,

அதை இளக்கிக் கொண்டு வருதல் சிரமம் என்பதால் இதைப் படிக்கும் வாசகர்கள் விரைந்து செயல்பட தங்கள் பதிவு ஊக்குவிக்கிறது என்றால் மிகையில்லை....

வாததில் விளையும் வலிகளைக் குணப்படுத்துவதுடன் அனுபவத்தர்கள் பல நோய்க்கும் பிரயோகிக்கிறார்கள்.

எல்லோருக்கும் விளக்கி ஒளிவிளக்காய் ஒளிர்கிறீகள்.

நன்றி..........

கருத்துரையிடுக