எத்தனை தடவை முறை தலை குளித்தாலும் -தலையில் நீர் தங்க விடாத -உச்சிபொடி என்னும் -ராஸ்னாதி சூர்ணம்-Rasnadhi choornam
(ref-ஸஹஸ்ரயோகம் – சூர்ணப்ரகரணம்)
சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் ,தலையில் தண்ணீர் ஊற்றவே பயப்படும் நபர்களுக்கு வரபிரசாதம் இந்த மருந்து
தேவையான மருந்துகள்:
1. சித்தரத்தை – ராஸ்னா - 10 கிராம்
2. அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா - 10 “
3. தேவதாரு – தேவதாரு - 10 “
4. கடுகரோஹீணீ – கடுகீ - 10 “
5. மூசாம்பரம் – ஸன்னிநாயக (அ) கன்யாக்ஷார - 10 “
6. வெள்ளைக் குங்கிலியம் – ஸர்ஜரஸ - 20 “
7. கோஷ்டம் – கோஷ்ட - 10 “
8. வசம்பு – வச்சா - 10 “
9. காவிக்கல் – கைரிக - 10 “
10. மஞ்சள் – ஹரித்ரா - 10 “
11. அதிமதுரம் – யஷ்டீ - 10 “
12. சித்தாமுட்டி வேர் – பலாமூல - 10 “
13. கோரைக்கிழங்கு – முஸ்தா - 10 “
14. சுக்கு – சுந்தீ - 20 “
15. மிளகு – மரீச்ச - 10 “
16. திப்பிலி – பிப்பலீ - 10 “
17. ஆவில் பட்டை – பூதிக - 10 “
18. ஸஹஸ்ரவேதி – ஸஹஸ்ரவேதி - 10 “
19. குருவேர் – ஹ்ரீவேர - 10 “
20. விளாமிச்சவேர் – உஸீர - 10 “
21. கடல் நுரை – ஸமுத்ரபேன - 10 “
22. சந்தனக்கட்டை – சந்தன - 10 “
23. அகில் கட்டை – அகரு - 10 “
24. புளியயிலை நரம்பு (காய்ந்தது) – திந்திரிணி தளஸிர - 10 “
செய்முறை:
மூசாம்பரம், வெள்ளைக் குங்கிலியம், காவிக்கல், ஸஹஸ்ர வேதி, கடல் நுரை இவைகள் நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலிக்கவும். மூசாம்பரத்துடன் சிறிது சலித்த சூர்ணம் சேர்த்து இடித்துச் சலிக்கவும். வெள்ளைக் குங்கிலியம் முதலானதைத் தனித்தனியே இடித்துச் சலிக்கவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்று படக் கலந்து பத்திரப்படுத்தவும்.
துணைச் சரக்குகள்: விளக்கெண்ணெய், பச்சைக் கற்பூரம், தாய்ப்பால், பசுவின்பால்.
குறிப்பு:
சிலர் ஆவில்பட்டைக்குப் பதிலாக கழற்சிக்காயை (குபேராக்ஷி) உபயோகிப்பது வழக்கம்.
பயன்படுத்தும் முறை:
இது வெளி உபயோகத்திற்கானது
இந்த மருந்து எல்லா ஆயுர்வேத கடைகளிலும் பத்து கிராம் அளவுகளில் கிடைக்கிறது ..
உச்சிபொடியாக உபயோகிக்கும் முறை - -சராசரியாக ஒரு கிராம் அளவு அல்லது மூன்று உளுந்து எடை அளவுக்கு இந்த சூர்ணம் -பொடியை குளித்து முடித்த பின் சரியாக உச்சம் தலையில் -தலை ஈரமாக இருக்கும் போதே வைத்து விட வேண்டும் ,தலை காய்ந்த பின் பொடியை தட்டிவிட்டாலும் எளிதாக தலையில் இருந்து வெளியேறி விடும் .முடிக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை ..
தீரும் நோய்கள்:
மயக்கம் எனப்படும் (மூர்ச்சை), தூக்கமின்மை (அநித்ரா), டைபாய்டு (ஸன்னிபாதஜ்வர), ஜலதோஷம் (பிரதிஸ்யாய), தலைவலி (கபாலசூல), ஒற்றைத் தலைவலி, இருமல் (காஸ), சளிப்பு, மூக்கடைப்பு, தலைவலியில் விளக்கெண்ணெய்யுடன் கலந்து பூசப்படுகிறது. சிலர் நாசிகாபரணம் செய்ய இதனைப் பயன்படுத்துவர் (அதாவது மூக்குபொடி, Snuff போன்றது). சிலர் இதனை துணைச் சரக்குகளுடன் சேர்த்து நெற்றி, தலை உச்சி ஆகியவற்றில் மேற்பூச்சாக உபயோகிப்பர்.
சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் ,தலையில் தண்ணீர் ஊற்றவே பயப்படும் நபர்களுக்கு வரபிரசாதம் இந்த மருந்து ..
பொதுவாக இந்த ராஸ் னாதி சூர்ணம் என்ற மருந்து குழந்தைகளை குளுப்பாட்டிய பின் தலையில் தினமும் கேரளா மக்கள் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் ..அதனாலே கேரளாவில் பெண்கள் தினமும் தலை குளித்தாலும் அவர்களுக்கு எந்த பீனச நோயோ ,தலை பாரமோ வருவதே இல்லை என்பது எனது கருத்து
3 comments:
\\கேரளாவில் பெண்கள் தினமும் தலை குளித்தாலும் அவர்களுக்கு எந்த பீனிச நோயோ,தலை பாரமோ வருவதே இல்லை என்பது எனது கருத்து\\
ஒரு நோயைப் பாரம்பரியமாக மக்கள் எப்படி வென்று வருகிறார்கள் என அற்புதமாய்க் காட்டியுள்ளீரகள்.
தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்......
பாராட்டுக்களும்.....வாழ்த்துதல்களும்,,,,,,,
நண்பரே புதுவிதமான ஹெல்மெட் அறிமுகம் செய்தமைக்கு நன்றி,
தண்ணீரை கண்டாலே பயந்து ஓடுபவர்கள் இனி பயப்பட வேண்டாம்
நட்புடன் ,
கோவை சக்தி
உங்களின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளதுசார்.மிக்க நன்றி.
கருத்துரையிடுக