காசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்-Sithopladhi choornam
(ref-யோகரத்னாகரம் – ராஜயக்ஷ்மா ப்ரகரணம்)
தேவையான மருந்துகள்:
1. கற்கண்டு – ஸர்க்கர 160 கிராம்
2. குகைநீர் – துகாக்ஷீரீ 80 “
3. திப்பிலி – பிப்பலீ 40 “
4. ஏலக்காய் – ஏலா 20 “
5. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 10 “
செய்முறை:
சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலித்துப் பின்னர் கற்கண்டையும் பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கவும்.
குறிப்பு: மூங்கிலுப்பு (வம்ஸலோச்சன) உபயோகிப்பதும் உண்டு.
அளவு:
1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.
அனுபானம்: தேன், நெய், பால், தண்ணீர்.
தீரும் நோய்கள்:
பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அ) உணவில் விருப்பமின்மை (அரோசக), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயகாஸ, பித்தகாஸ, சின்னஸ்வாஸ (தங்குமூச்சு அல்லது தடங்குகின்ற மூச்சு), இரத்தபித்தம், காய்ச்சல் (ஜ்வர), கைகால் எரிச்சல் (ஹஸ்தபாத தாஹ), மார்பின் பக்க வாட்டிலேற்படும் வலி (பார்ஸ்வ சூல), நாக்கு மரத்து போதல்
இருமல் நாள்பட்டு இருக்கும் போது இருமலினால் விலா எலும்பு வலி ஏற்படும் அளவுள்ள இருமலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
உடல் சூட்டிற்கும் ,பசியின்மைக்கும் -இந்த மருந்து வேலை செய்யும்
2 comments:
\\இருமலினால் விலா எலும்பு வலி ஏற்படும் அளவுள்ள இருமலுக்கு\\
அதை அனுபவித்தவர்/நோயாளியின் நிலை கண்டவர்கள் இது போன்ற மருந்து குணமளிப்பதில் எவ்வளவு சிறந்தது என்பதை பாவித்த பின் அறிவர்.....
மென்மேலும் குணநலங்கள் வாசகர் பெற எழுதுங்கள் தொடர்ந்து........
தொடர்கிறோம்....தங்களை...நாங்கள்.....
நண்பரே வணக்கம் ,
தொடருங்கள் வாழ்த்திக்கொண்டே தொடர்கிறோம் .என் நண்பரின் சிறு சந்தேகம் ராஸ் னாதி சூர்ணம்,சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் மட்டும் தான் உபயோகிக்கலாமா அல்லது நோயற்றவரும் ,யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா ? ((உச்சிபொடியாக உபயோகிக்கும் முறை - -சராசரியாக ஒரு கிராம் அளவு அல்லது மூன்று உளுந்து எடை அளவுக்கு இந்த சூர்ணம் -பொடியை குளித்து முடித்த பின் சரியாக உச்சம் தலையில் -தலை ஈரமாக இருக்கும் போதே வைத்து விட வேண்டும்))
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக