வெள்ளி, ஏப்ரல் 08, 2011

கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை

பூனை மீசை -இந்த மூலிகையை எனக்கு மட்டுமில்லாது என்னை போல் உள்ள ஆயுர்வேத சித்த உலக்குக்கு அறிமுகப்படுத்திய பெருமை -எனது மானசீக குரு -வைத்ய உஸ்மான் அலியை சாரும் ..

எனக்கு தெரிந்த வகையில் எனது மானசீக குரு -வைத்ய உஸ்மான் அலி அவர்கள் -சொன்ன மாதிரி எந்த மூலிகையும் வேலை செய்யாது இருந்ததே இல்லை ..அவர் ஒரு மூலிகை புலி ,தாவரவியலில் எனக்கு தெரிந்த வகையில் விஷய ஞானம் பெற்ற மனிதரை எனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை ..அவர் இப்போது பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுனத்தின் தலைவராக பல மருத்துவர்களை வழி நடத்துகிறார் ..(அவரை பற்றிய -இந்த செய்தியை எழுத -நான் அவரிடம் அனுமதி பெற வில்லை )நல்ல சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம் பெற்ற மாணவனும் -மூலிகை அறிவை வளர்த்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர் அவர் ..


பூனை மீசை -என்ற இந்த -orthosiphon-என்ற தாவரவியல் பெயர் பெற்ற இந்த மூலிகையின் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த பெயர் வந்துள்ளது ..

இந்த பூனை மீசை என்ற மூலிகை பற்றி பழைய ஆயுர்வேத ,சித்த மூலிகை புத்தகங்களில் ஏதாவது குறிப்புகள் என்று தேடி கொண்டு இருக்கிறேன்

இந்த பூனை மீசை -செடியின் காய்ந்த சமூலம் என்னும் மொத்த செடியின் காய்ந்த மூலிகை -நிச்சயமாக கிட்னி பெயிலியர்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது ,இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது ..எல்லா கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்புக்கும் இந்த அற்புத மூலிகை பயன்பட்டாலும் -ஒவ்வொரு மனிதருக்கும் அது வேலை செய்யும் விதம் மாறுபடுகிறது ..

கேரளா மண்ணில் அதுவும் குற்றாலம்  முதல் புனலூர் செல்லும் பாதையில் உள்ள இந்த பூனை மீசை மூலிகையே நன்றாக கிட்னி பெயிலியர் நோய்க்கு வெளிய செய்கிறது ..

கிட்னி பெயிலியருக்கு இந்த மருந்து வேலை செய்யும் என்பதற்கான விக்கிபீடியா லிங்க் இங்கே .

குறிப்பு -இந்த மருந்தை வைத்து கிட்னி பெயிலியரை குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது -என்றாலும் இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது .

நன்றி -எனது சகோதர்  Dr.சித்தீக் அலி .,MD(Siddha)-


எனது  வீட்டில் வளர்ந்து வரும் பூனை மீசை செடியின் படங்கள் இவை


மற்ற பூனை மீசை படங்கள்Post Comment

9 comments:

கருத்துரையிடுக