மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்- Sudarshana choornam
(ref-சாரங்கதர சம்ஹித - மத்யமகண்டம்)
யார் சொன்னார்கள் -ஆயுர்வேத சித்த மருந்துகள் வேலை செய்ய தாமதம் ஆகும் என்று ?
சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத சித்த மருந்துகளை நாடி வருகிறார்கள் ?-விரல் விட்டு எண்ணக்கூடிய நோயாளிகளை தவிர ..
(ஆனால் என்னிடம் காய்ச்சலுக்கும் பெரியவர்களும் ,பச்சிளம் குழந்தைகளும் ஆயுர்வேத வைத்தியம் பெற என்னிடம் வருவதுண்டு )
ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ?
அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது ..
சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத சித்த மருந்துகளை நாடி வருகிறார்கள் ?-விரல் விட்டு எண்ணக்கூடிய நோயாளிகளை தவிர ..
(ஆனால் என்னிடம் காய்ச்சலுக்கும் பெரியவர்களும் ,பச்சிளம் குழந்தைகளும் ஆயுர்வேத வைத்தியம் பெற என்னிடம் வருவதுண்டு )
ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ?
அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது ..
தேவையான மருந்துகள்:
1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக் 10 கிராம்
2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீபலத்வக் 10 “
3. நெல்லிமுள்ளி – ஆமலகீபலத்வக் 10 “
4. மஞ்சள் – ஹரீத்ரா 10 “
5. மரமஞ்சள் – தாருஹரீத்ரா 10 “
6. கண்டங்கத்திரி – சண்டகாரீ 10 “
7. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 10 “
8. கிச்சலிக் கிழங்கு – ஸட்டீ 10 “
9. சுக்கு – சுந்தீ 10 “
10. மிளகு – மரீச்ச 10 “
11. திப்பிலி – பிப்பலீ 10 “
12. மோடி – பிப்பலீமூல 10 “
13. பெருங்குரும்பை – மூர்வா 10 “
14. சீந்தில் கொடி – குடூசீ 10 “
15. சிறுகாஞ்சூரி – துராலபா 10 “
16. கடுகரோஹிணீ – கடுகரோஹிணீ 10 “
17. பர்பாடகம் – பர்பாடக 10 “
18. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 “
19. நீர் பிரம்மி (காய்ந்தது) – நீர்ப்ரஹ்மி 10 “
20. குருவேர் – ஹ்ரீவேர 10 “
21. வேப்பம் பட்டை – நிம்பத்வக் 10 “
22. புஷ்கரமூலம் – கோஷ்ட 10 “
23. அதிமதுரம் – யஷ்டீமது 10 “
24. வெட்பாலைப்பட்டை – குடஜத்வக் 10 “
25. ஓமம் – அஜமோதா 10 “
26. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ 10 “
27. கண்டுபாரங்கி – பார்ங்கீ 10 “
28. முருங்கை விதை – சிக்ருபீஜ 10 “
29. படிகாரம் – ஸ்படிக 10 “
30. வசம்பு – வச்சா 10 “
31. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 10 “
32. பதிமுகம் – பத்மக 10 “
33. விளாமிச்சம் வேர் – உஸீர 10 “
34. சந்தனம் – சந்தன 10 “
35. அதிவிடயம் – அதிவிஷா 10 “
36. சித்தாமுட்டிவேர் – பலாமூல 10 “
37. மூவிலை – ப்ரிஸ்னீபார்ணீ 10 “
38. ஓரிலை – சாலிபர்ணீ 10 “
39. வாயுவிடங்கம் – விடங்க 10 “
40. கிரந்திதகரம் – தகர 10 “
41. கொடிவேலிவேர் – சித்ரக 10 “
42. தேவதாரு – தேவதாரு 10 “
43. செவ்வியம் – சவ்ய 10 “
44. பேய்ப்புடல் இலை – பட்டோல 10 “
45. ஜீவகம் – ஜீவக 10 “
46. ரிஷபகம் – ரிஷபக 10 “
47. இலவங்கம் – லவங்க 10 “
48. மூங்கிலுப்பு – வம்ஸலோசன 10 “
49. தாமரைக்கிழங்கு – பத்மமூல 10 “
50. காகோலீ – காகோலீ 10 “
51. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 10 “
52. ஜாதிபத்திரி – ஜாதீபத்ரி 10 “
53. தாளீசபத்திரி – தாளீசபத்ர 10 “
54. நிலவேம்பு – பூநிம்ப 10 “
குறிப்பு:
ஜீவகம், ரிஷபகம் இவைகளின் மாற்றுச் சரக்காக பால் முதுக்கன் கிழங்கு மற்றும் சீந்தில் கொடி மொத்தம் இரண்டு பங்கும், காகோலியின் மாற்றுச் சரக்காக (பிரதிநிதி திரவ்யம் alias substitute drug) அமுக்கரா கிழங்கு ஒரு பங்கும் சேர்க்கவும்.
செய்முறை:
படிகாரத்தைத் தவிர்த்து மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். படிக்காரத்தைப் பொரித்துப் பொடித்து சலித்து சூர்ணத்துடன் ஒன்று சேர்த்து நன்கு கலக்கவும்.
அளவு:
1 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
தாதுக்களில் தங்கிய காய்ச்சல் எனப்படும் தாதுசுரம் (தாதுகாத ஜ்வர), குளிர் சுரம் போன்ற நச்சுக்காய்ச்சல்கள் (விஷமஜ்வர) மற்றும் பல வித காய்ச்சல்கள் (ஜ்வர), யானைக்கால் (ஸ்லீபாத), வயிற்றுப் பூச்சி (க்ருமி), தோல்நோய்கள் (சர்மரோக).
தெரிந்து கொள்ளவேண்டியது
- இப்போது சுதர்சன சூர்ணம் -மாத்திரை வடிவிலும் கிடக்கிறது
- பொதுவாக காய்ச்சலுக்கு முதல் வைத்தியம் -வயிற்றுக்கு பட்டினி போடுவது
- நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் படம் மற்றும் விளக்க பெற -இங்கே சொடுக்கவும்
- மர்ம காய்ச்சலுக்கு ஆயுர்வேத தீர்வு கட்டுரை படிக்க -இங்கே சொடுக்கவும்
- விஷ காய்ச்சல் என வருகிறது -ஆயுர்வேத கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும்
- சவால்
உடனடி காய்ச்சல் விட -லிங்க செந்தூரம் -ஒரு மிளகு எடை அளவுக்கு எடுத்து -சுதர்சன சூர்ணம் ஐந்து கிராமில் கலந்து கொடுக்க -நீங்கள் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஊசி போட்டால் எவ்வளவு வேகமாக குறையும் என்று நம்புகிறீர்களோ -அந்த நேரத்தை விட சீக்கிரமாக காய்ச்சலை நீக்கும் என்பது எனது அனுபவம்
5 comments:
நண்பரே வணக்கம் ,
உங்களை புகழ முடியவில்லை .புகழ்ந்து புகழ்ந்து வார்த்தைகள் தீர்ந்து விட்டது .நீங்கள் செய்யும் இந்த பணி ,கொடுக்கும் தகவல்கள் ,எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று உங்களுக்கு தெரிய வில்லை.இறைவன் உங்களுக்கு 1000 வயது கொடுக்கட்டும்.உங்கள் குடும்பத்தினருக்கு இறைவன் எல்லா வளமும் கொடுக்கட்டும் .
எல்லா புகழும் இறைவனுக்கே
நட்புடன் ,
கோவை சக்தி
இது போல் அலோபதிக்குச் சவால் விடும் அளவுக்கு நமது வைத்தியர்களிடம் திராணியும்,பொது அறிவும் குறைவாக இருப்பதன் காரணமாகவே...
இயந்திரங்களையும் ஆயுதங்களையும் பயன் படுத்தும் முறையே உயர்ந்தது என நம்பும் படித்த அறிவாளிகள்...!!! பாமரர்கள்......
இது போன்ற இந்தியச் சமுதாயத்தில் தான் கற்ற கல்வியின் மேல் கொண்ட நம்பிக்கையும் மக்களுக்குச் சேவை செய்யும் உயர்ந்த உள்ளமும்
கொண்ட தாங்கள் ”விடிவெள்ளி”யாய் ஜொலிக்கிறீர்கள்....
தங்களின் தன்னம்பிக்கை மெய் சிலிர்க்கவைக்கிறது...
மேலும்....மேலும்,,மேலும்..உயர்வீர்களாக...!!!!!
@sakthiநண்பரே கோவை சக்தி ..உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ..
அனால் நீங்கள் இவ்வளவு வாழ்த்துக்களுக்கு உரியவர் நான் இல்லவே இல்லை ..படித்ததை ,தெரிந்ததை ,கற்ற அனுபவத்தை என்னால் முடிந்ததை உங்களை போல் நல்ல உங்களுக்கு பகிர்கிறேன் ..அவ்வளவே ..
ஆயுர்வேத ,சித்த ,இந்திய மருத்துவம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எனது இலட்சியம் உங்களை போன்றவர்களால் எளிதாகும் என்ற என் நம்பிக்கை வீண் போகவில்லை
@வானவன் யோகிநண்பரே ..மிக்க நன்றி ..உங்கள் பின்னூட்டம் என்னை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறது ..
அருமையான பதிவு. உங்களை நான் கடந்த செப்டம்பர் 2013 ல் சந்தித்து இருந்தால் என் தந்தை இன்று உயிருடன் இருந்து இருப்பார். என் தந்தையை இழந்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். உங்கள் அலை பேசி எண்ணை குறிபிடவும்.எனது என் 9841097231. thuraiyur.
கருத்துரையிடுக