வாய் தூர்நாற்றமா ? கவலையை விடுங்க சூப்பர் ஆயுர்வேத டிப்ஸ் இருக்கு
வாயில் வரும் நாற்றம் நீங்கள் செய்ய வேண்டிய எளிய வழி முறை இது ..
Halitosis Ayurvedic Remedy Tamil
#வாய்நாற்றம் #halitosisintamil #vaaynaatram #badodourmouth #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
வாய் புண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாய் புண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், ஜூலை 05, 2021
வாய் தூர்நாற்றமா ? கவலையை விடுங்க சூப்பர் ஆயுர்வேத டிப்ஸ் இருக்கு | Hali...
ஞாயிறு, ஜனவரி 12, 2014
நோய்க் குறிகளும் ஹோமியோ மருந்துகளும்
வாய்
நோய்க் குறிகளும் ஹோமியோ மருந்துகளும்
|
வாய்
கோணல்
|
அல்லியம்
ஸீபா 200, காஸ்டி
200
|
|
பேச்சு
வரவில்லையானால்
|
காஸ்டிகம்
200
|
|
வாய்
புண்
|
ஆரம்டிரை
|
|
வாய்ப்புண்
முற்றிய நிலைக்கு
|
ஆரம்டிரை,
மெர்க், சின்னாபரிஸ்
30, நைட் ஆசிட்
|
|
வாய்வேக்காடு நாற்றம்
|
பாப்டி,
போரக்ஸ், கல்கார்ப்
|
|
வாய்
உதடுக்கு
|
காண்டுரங்கா
Q
|
|
உதட்டில்
வீக்கம்
|
ஹீபர்
|
|
நாடிப்
புண்கள்
|
ரஸ்
30
|
|
நாடிப்
பருக்கள்
|
மெர்க்
ஐயோட் 2x, 3x (மாவு
ரூபம்
|
|
வாய்
நாக்கு முக
வாதம்
|
CURARE 200
|
|
உதட்டை
இரத்தம் வரும்
வரை
பிய்த்துக்
கொள்ளும்
|
ஆரம்டிரை
|
|
வாய்
நாற்றம்
|
பாரிடா
கார்ப் 30, மெர்க்கரோ
|
|
மேல்
உதடு வீக்கம்
|
அபிஸ்
|
Post Comment
புதன், நவம்பர் 02, 2011
வாய் ,நாக்கு ,பல் சார்ந்த நோய்களுக்கு அரிமேதாதி தைலம்
வாய் ,நாக்கு ,பல் சார்ந்த நோய்களுக்கு அரிமேதாதி தைலம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - முகரோகாதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. கருவேலம்பட்டை (பச்சையாக வெட்டி எடுத்தது) –
அரிமேதாத்வக் 5.600 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக்குறுக்கி வடிகட்டி அத்துடன் 1.600 கிலோ கிராம் நல்லெண்ணெய் (திலதைல) சேர்த்து
அதில்,
1. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்ட 12.500 கிராம்
2. பச்சோத்திப்பட்டை – லோத்ராத்வக் 12.500 “
3. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
4. கருவேலம்பட்டை – அரிமேதா 12.500 “
5. கருங்காலி – கதிர 12.500 “
6. குமிழ்வேர் – காஷ்மரீ 12.500 “
7. கொம்பரக்கு – லாக்ஷா 12.500 “
8. ஆலம்பட்டை – வாதத்வக் 12.500 “
9. கோரைக்கிழங்கு – முஸ்தா 12.500 “
10. சிற்றேலம் – ஏலா 12.500 “
11. கற்பூரம் – கற்பூர 12.500 “
12. அகில் கட்டை – அகரு 12.500 “
13. பதிமுகம் – பத்மக 12.500 “
14. இலவங்கம் – லவங்க 12.500 “
15. தக்கோலம் – தக்கோல 12.500 “
16. ஜாதிக்காய் – ஜாதீபல 12.500 “
17. செஞ்சந்தனம் – ரக்தசந்தன 12.500 “
18. காவிக்கல் – கைரிக 12.500 “
19. இலவங்கப்பட்டை – லவங்கபத்ரி 12.500 “
20. சிறுநாகப்பூ – நாககேஸர 12.500 “
21. காட்டாத்திப்பூ – தாதகீ 12.500 “
இவைகளைக் கற்பூரம் நீங்கலாக அரைத்துக்
கல்கமாகக் கலந்து காய்ச்சி மத்தியம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். கற்பூரத்தை
எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் பொடித்துப் போட்டு வடிகட்டும் எண்ணெய்ச்
சூட்டிலேயே கரைத்து விடவும்.
பயன்படுத்தும் முறை:
கண்டூஷம், கவளக்கிரகம் என்ற
முறைப்படி வாய்க் கொப்பளிக்க உபயோகிக்கவும். நஸ்ய, சிரோதாரண முறைப்படியும் உபயோகிக்கலாம்.
தீரும் நோய்கள்:
பல் கூசுதல் (தந்தஹர்ஷ), பல்லாட்டம்
(தந்தசலன), குழி விழுந்த
பற்கள் (க்ருமிதந்த), பற்களின்
மேற்பூச்சு (Enamel) சிதைவு, பல்லிலிருந்து சீழும் ரத்தமும் வடிதல்
(பூதிதந்த), வாய் துர்நாற்றம்
(முகதௌர்கந்த) போன்ற வாய் நோய்கள் (முகரோக), பல்நோய்கள் (தந்தரோக), ஈறு நோய்கள் (தந்தார்வேஷ்த ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
- இந்த அரிமேத தைலம் வைத்து வாய் கொப்பளிக்க ,வாயில் வெகு நேரம் வைத்திருந்து -ஆயில் புல்லிங் அதாவது ஆயுர்வேதத்தில் கவளம்,கண்டூஷம் என்பார்கள் (வாய் கொப்பளிக்க ,வாயில் வெகு நேரம் வைத்திருப்பது )செய்ய -வாய் துர்நாற்றம் ,வாய்ப்புண் ,நாக்கில் புண் ,பல்லில் உள்ள கூச்சம் ,பல் நடுக்கம் ,பல் வலி ஆகியவை போய் போய்விடும் ..
- வெறும் அந்த நல்லெண்ணெய் இந்த நல்லெண்ணை -ஆயில் புல்லிங் செய்வதை விட இந்த அரிமேத தைலம் வைத்து ஆயில் புல்லிங் செய்வது நல்லது
-
இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான். ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை. மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் உள்ளது என்பதை அறிந்தால் ஆச்யர்யமடையாமல் நம்மால் இருக்க முடியாதுஇந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம். இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது. ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது
Post Comment
வியாழன், ஏப்ரல் 21, 2011
குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam
குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam
(ref-பாவப்ரகாச நிகண்டு)
தேவையான மருந்துகள்:
வெள்ளைவெங்காரம் – ஸ்வேதடங்கண (போதிய அளவு)
செய்முறை:
வெள்ளை வெங்காரத்தைப் பொரித்துப் பொடித்துச் சலித்துப் பத்திரப்படுத்தவும்.
சட்டியில் இட்டு பொரித்தாலே வெங்காரம் -பொரியும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் ..பொரித்த வெங்காரத்தை எளிதாக பயன்படுத்தலாம்
அளவும் அனுபானமும்:
200 முதல் 500 மில்லி கிராம் வரை தேனுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
வாய்ப்புண் (அஸ்யபாக), இருமல் (காச) மற்றும் தொண்டையைப் பற்றிய கோளாறுகள் (காந்தரோக). வாய்ப்புண் நீங்க இதை வாயிலிட்டுக் கொப்பளிக்கவும். தேங்காய் எண்ணெயில் குழைத்து இரணங்களுக்கும் போடலாம் அல்லது மேலே தூவலாம். இருமல், ஜலதோஷத்தில் தேனுடன் சேர்ந்து இதனை உள்ளுக்குக் கொடுப்பதுண்டு.
இதனை டங்கண பஸ்ம என்றும் அழைப்பதுண்டு
வெங்கார பற்பம் -
சித்த ரெபரன்ஸ் -சித்த வைத்திய திரட்டு ,பிரம்மமுனி கருக்கடை -முன்னூறு
செய்முறை -
இதில் வெங்காரத்துடன் கோழி முட்டையின் வெண் கருவை சேர்த்தரைத்து பற்பம் ஆக்கும் முறையில் பற்பம் ஆக்குதல் ...
பயன்
வெங்கார பற்பத்னால் -வெள்ளை என்னும் வெள்ளை படுதல் ,மூத்திர கடுப்பு ,மூத்திர சம்பத்தமான நோய்களான எரிச்சல் ,தடை ,சதை அடைப்பும் போகும்
குளுமை என்பதற்கு ஒரு பாடல்
ஸ்ரீ குமர குரு பாடலில் வெங்காரம் குளிர்ச்சி என்பதை சொல்கிறது எனபதை பாருங்களேன்
இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளர்ந்துங் கொலும்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளர்ந்துங் கொலும்
குறிப்பு -முடிந்தால் தமிழ் பாட்டுடன் அடுத்து சித்த மருத்துவ மருந்துகளை எழுதுவேன்
கவனம் தேவை -
ருது உண்டாக்கும் அதாவது மாத விலக்கை வரவழைக்கும் தன்மை கொண்டதால் -மிக்க கவனம் தேவை ..கர்ப்பிணிகளுக்கு பயன் படுத்த கூடாது ..
எனக்கு தெரிந்த வைத்தியர்கள் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை உண்டாக்க பயன் படுத்தியுள்ளார்கள் என்பதும் உண்மை (தக்க துணை மருந்துகளுடன் )
தெரிந்து கொள்ள வேண்டியது
- நீர் சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் நல்ல மருந்து
- மாத விலக்கு வரவைக்கும் ,மாத விலக்கினால் உண்டாகும் வலிக்கும் நல்ல மருந்து
- வாய்புண்ணுக்கு வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல பலன் உண்டாகும்
- சிறந்த கிருமி நாசினி -புண்களின் மேல் தூவ எளிதில் ஆறாப் புண்ணும் ஆறும்
- இருமல் சளிக்கும்,வயிற்றுப் புண்ணுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









