தாய்ப்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்ப்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 06, 2021

உள்ளி லேகியம் என்கிற வெங்காய லேகியம் செய்வது எப்படி | Post Natal Ayurved...



பிரசவத்திற்க்கு  பின் ஏற்படும் அனைத்து விளைவுகளையும் தவிர்க்க அற்புத உள்ளி லேகியம் 

உள்ளி லேகியத்தில் உள்ள மூலிகைகள் என்ன என்ன 



#பிரசவலேகியம் #உள்ளிலேகியம் #வெங்காயலேகியம் #postdeliveryfood #ayurvedaprasava #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

தாய்ப்பாலின் மகத்துவம் | இஸ்லாமிய மருத்துவம் | Breast Milk -Islamic Medi...


தாய்ப்பாலின் மகத்துவம் இஸ்லாமிய மருத்துவம்

 குர்ஆனில் தாய்ப்பால் புகட்டுவது எந்த அளவுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது ??

மேலும் எத்தனை காலங்கள் அதை கொடுக்க குறிப்பிடப்பட்டுள்ளது ??

மேலும் அல்லாஹ் அவற்றை எதற்காக இப்படி செய்ய சொல்கிறான் ??

#தாய்ப்பால் #இஸ்லாமியமருத்துவம் #brestmilkislam #milkfeedingislam #tamilisalam #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

தாய்ப்பாலில் ஏற்படும் 8 விதமான மாற்றங்களும் அதன் விளைவுகளும் | அல் ஷிபா ...


தாய்ப்பாலில் ஏற்படும் 8 விதமான மாற்றங்களும் அதன் விளைவுகளும்

தாய்ப்பால் பற்றி ஆயுர்வேத அணுகுமுறை 

Ayurveda and Breast milk in tamil

Eight type of Stanyadusti described in Charaksamhita.

Breast milk is the prime source of nourishment to a newborn baby. Breast milk improves the physical as well as mental strength and immunity of the baby. In Ayurveda unique concept of Stanya dusti or milk vitiation has been described in which mother food and activities affect the quality and quantity of milk. If mother indulges in unwholesome diet and lifestyle habits, then the milk gets vitiated and leads to various diseases in her baby. It shows that only treating the symptoms of baby is not enough. So, the treatment of vitiated breast milk is equally important. In Ayurveda certain herbs and formulations are specifically indicated for detoxifying the breast milk and improve the quality of milk and growth of the baby along with liberation of vitiated symptoms.



#breastmilkayurveda #stanyadusti #தாய்ப்பால்மாற்றம் #தாய்ப்பால் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்


பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீரஸ (அ) கஷாய         3.200 கி.கிராம்
2.            நெருஞ்சில் கஷாயம் – கோக்ஷுர ஸ்வரஸ (அ) கஷாய         3.200       “
3.            பசுவின் நெய் – க்ருத                                  1.600       “
4.            பசுவின் பால் – கோக்ஷீர                               3.200        “
இவைகளை ஒன்று கலந்து அதில்
1.            பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ                        12.500 கிராம்
2.            சந்தனம் – சந்தன                                12.500       “
3.            மூங்கிலுப்பு – வம்சலோசன                            12.500       “
4.            திராக்ஷை – த்ராக்ஷா                                   12.500       “
5.            அதிமதுரம் – யஷ்டீ                                    12.500       “
6.            கோரைக்கிழங்கு – முஸ்தா                             12.500       “
7.            வெள்ளரி விதை – த்ரபுஸ பீஜ                               12.500       “
8.            ஏலக்காய் – ஏலா                                 12.500       “
9.            சுத்திசெய்த கோமூத்திர சிலாஜது – ஷோதித கோமூத்ர ஷிலாஜித்           12.500       “
10.          திப்பிலி – பிப்பலீ                                 12.500       “
11.          ஆம்பல் கிழங்கு – உத்பலகந்த                       12.500       “
12.          ஓரிலைத் தாமரை – பத்மசாரிணி                       12.500       “
13.          மீனாங்கண்ணி – மீனாக்ஷி                              12.500       “
14.          கோரைக்கிழங்கு – முஸ்தா                             12.500       “
15.          காகோலீ – காகோலீ                                   12.500       “
16.          க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ                         12.500       “
17.          ஜீவகம் – ஜீவக                                      12.500       “
18.          ருஷபகம் – ருஷபக                                    12.500       “
19.          காட்டுளுந்துவேர் – மாஷபர்ணீ                          12.500       “
20.          காட்டுப்பயிறு வேர் – முட்க பர்ணீ                       12.500       “
21.          மேதா – மேதா                                        12.500       “
22.          மஹா மேதா – மஹா மேதா                           12.500       “
23.          சீந்தில்கொடி – குடூசி                                   12.500       “
24.          கர்க்கடக சிருங்கி – கர்க்கட ச்ருங்கி                           12.500       “
25.          கூகை நீறு – துகக்ஷீர                                  12.500       “
26.          பதிமுகம் – பத்மக                                     12.500       “
27.          நாமக்கரும்பு – காண இக்க்ஷூ                          12.500       “
28.          ருத்தி – ருத்தி                                         12.500       “
29.          விருத்தி – விருத்தி                                    12.500       “
30.          திராக்ஷை – த்ராக்ஷா                                   12.500       “
31.          கீரைப்பாலை – ஜீவந்தி                               12.500       “
32.          அதிமதுரம் – யஷ்டீ                                    12.500       “
                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் அதில் பொடித்துச் சலித்த சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம், தேன் (மது) 800 கிராம் இவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: 




 நீர்ச்சுருக்கு (மூத்திரக்கிரிச்சர), நீர்த்தாரை அழற்சி போன்ற சிறுநீர் தொடர்பான நோய்கள், உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப் போக்கு (ரத்த பித்தம்), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), கருப்பை எனப்படும் கருப்பாயஸக் கோளாறுகள் (யோனிதோஷம்).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பெண்களின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சம்பந்தமான பிரச்சனைகளை இந்த மருந்து எளிதாக தீர்க்கும்
  2. மோக உணர்வு ,லிபைடோ -செக்ஸ் ஆசை இல்லாத பெண்களுக்கு இந்த மருந்து நல்ல வரம்
  3. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு இயற்கையான ஹார்மோன் ரீ பிளேஸ் மென்ட் தெரபி ஆக இந்த மருந்தை உபயோக படுத்தலாம் ..
  4. பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும் ..தாய்பால் சுரக்க உதவும்
  5. மாத விலக்கு வந்து பதினான்கு நாட்கள் கழித்து (கருமுட்டை  வெடித்த பின் ) இந்த மருந்தை சாப்பிட்டு வர காரணம் தெரியாமல் கரு வளர்ச்சியினை ,கரு பிடிப்பதில் உள்ள கோளாறுகளுக்கும் ,குழந்தை இன்மைக்கும் உதவும் (ப்ர்ஜச்டீறான் வேலையை ஒழுங்கு படுத்தும் )
  6. ஆண்களின் பெண்களின் மேக வெட்டை நோய்க்கும் பயன் படுத்தலாம்
  7. ஆண்களும் தாரளமாக சாப்பிடலாம் 
  8. பார்த்தோலின் சுரப்பி சரிவர வேலை செய்யாமல் ,பெண் உறுப்பு வழ வழப்பின்மைக்கும் இந்த மருந்து வேலை செய்யும்

Post Comment

வியாழன், ஜூன் 23, 2011

பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?


பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )
 (ref-வைத்யசிந்தாமணி - அருசிப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

வெல்லம் – குட                         2.725 கிராம்
 
            
இதைப் பாகு செய்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகத்தில்

பசுவின் நெய் (க்ருத) 454 கிராம் சேர்த்து அத்துடன்

1.            தோல் நீக்கித் துண்டாக்கிய பின் பச்சையாக 2.520 கிலோ கிராம் அளவுக்கு எடை நின்றதும், பின்னர் வெய்யிலில் காயவைத்து நெய்யில் வறுக்கப்பட்டதுமான இஞ்சி

2.            மிளகு – மரீச்ச                  - 150 கிராம்
3.            திப்பிலி – பிப்பலீ                    - 106    “
4.            மோடி – பிப்பலிமூல              - 106    “
5.            சுக்கு – சுந்தீ                        - 66       “
6.            ஜாதிக்காய் – ஜாதீபல             - 66       “
7.            ஏலக்காய் – ஏலா                 - 66       “
8.            கொடிவேலி வேர் – சித்ரக         - 66       “
9.            மூங்கிலுப்பு – வம்ஸலோசன      - 66       “

                இவைகளைப் பொடித்துச் சலித்துச் சூரணத்தைக் கலந்து தேன் (மது) 360 கிராம் சேர்த்து பத்திரப் படுத்தவும்.

அளவு:         
 2 முதல் 5 கிராம் வரை இரண்டு வேளைகள்.

தீரும் நோய்கள்:           

செரியாமை (அக்னி மாந்த்ய) (அ) அஜீர்ண), ருசியின்மை (அருசி), உணவில் விருப்பமின்மை (அரோசக); அதிகரித்த பித்தக் கோளாறுகள் (அமலபித்த), மகவீன்ற பெண் மணிகள் (ப்ரஸித்த ஸ்திரீகள்) தொடர்ந்து உண்ணும் லேகியமாக இதனை உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிவை
  1. இது சித்த மருத்துவத்தில் தயாரிக்கபடும் இஞ்சி லேஹியத்திர்க்கு ஒப்பானதே தவிர -சித்த மருத்துவத்தில் செய்யப்படும் இஞ்சி லேஹியத்தின் பார்முலா வேறு (அதை சித்த மருத்துவ தயாரிப்பில் சொல்கிறேன் )
  2. தீபாவளி லேஹியம் என்று -இதற்க்கு வேறு பெயர் சூட்டி -மார்க்கெட்டில் கடை வைப்பவர்கள் ஏராளம் ..நீங்களும் செய்து விற்கலாம்
  3. இந்த மருந்தை தயாரிக்கும் கம்பெனிகள் குறைவு
  4. நாமே எளிதாக தயாரிக்கலாம்

Post Comment

திங்கள், ஜூன் 13, 2011

பெண்ணின் வீர்யத்தை அதிகபடுத்தும் -சதாவரீ லேஹ்யம்


பெண்ணின்  வீர்யத்தை அதிகபடுத்தும் -சதாவரீ லேஹ்யம்
  (ref-ஸ்ஹஸ்ர யோகம் – லேஹ்ய ப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.   தண்ணீர் விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீரஸ    2.560 கிலோ கிராம்
2.    வெல்லம் – குட                                    2.560     “\

                இவைகளைச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன், பசுவின் நெய் (க்ருத) 640 கிராம் சேர்த்து அத்துடன்

1.            சுக்கு – சுந்தீ                                10 கிராம்
2.            ஏலக்காய் – ஏலா                           10           “
3.            நிலப்பனைக்கிழங்கு – முசலி                 10           “
4.            பாடக்கிழங்கு – பாத்தா                       10           “
5.            நெருஞ்சில் – கோக்ஷூர                     10           “
6.            நன்னாரி – ஸாரிவா                         10           “
7.            நன்னாரி (கருப்பு) – க்ருஷ்ணஸாரிவா         10           “
8.            தார்தாவல்வேர்                              10           “
9.            பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ             10           “
10.          திப்பிலி – பிப்பலீ                            10           “
11.          அதிமதுரம் – யஷ்டீ                         10           “
12.          சுத்தி செய்த கோமூத்ரசிலாஜது –
                ஷோதித கோமூத்திர சிலாஜது              10           “
13.          மூங்கிலுப்பு – வம்ஸலோசன                10           “
14.          சர்க்கரை – ஸர்க்கர                         10           “

குறிப்பு:    சிலர் கீழாநெல்லிவேர் (பூதாத்ரிமூல (அ) பூ ஆமலகீமூல) 10 கிராம் கூடுதலாக சேர்த்து செய்வதுண்டு.

                இவைகளை கோமூத்ரசிலாஜது நீங்கலாகப் பொடித்துச் சலித்துச் சேர்க்கவும். கோமூத்ரசிலாஜதுவை பாகம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்துச் சேர்க்கவும்.

அளவு:          

 2 முதல் 5 கிராம் வரை ஒரு வேளை.

தீரும் நோய்கள்: 

 தடைபட்ட மூத்திரம், சிரமத்துடனும், எரிச்சலுடனும் சிறுநீர் கழித்தல் (மூத்ரக்ரிச்சர) போன்ற சிறுநீர் நோய்கள், பிரமேகம் (ப்ரமேஹ), உடலுள்ளுறுப்புகளிலேற்படும் ரத்தப்போக்கு (அ) குருதி அழல் (ரக்த பித்த), காமாலை (ஹாலீமாக), அடிபடுதலின் காரணமாக தசைகள் சீர்கேடடைதல் (க்ஷத), உடல் தேய்வு (க்ஷய), கைகால் எரிச்சல் (ஹஸ்த பாததாஹ), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனிதோஷ), வீட்டு விலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவதோஷ).


தெரிந்து கொள்ளவேண்டியவை ..

  1. ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுவாக வீர்யத்தை அதிகபடுத்த பயன்படுத்தலாம்
  2. தாம்பத்யதில் ஆசையில்லாத பெண்கள் ,உச்சம் அடையாத பெண்கள் ஆகியோருக்கு தரலாம் பொதுவாக பெண்களின் காமம் பெருக்கியாக தக்க துணை மருந்து கொண்டு சாப்பிட பயன்படும்
  3. உடல் சூட்டை தணிக்க பயன்படுத்தலாம் ,உடல் வலிவின்மைக்கும் பயன்படுத்தலாம் .
  4. பொதுவாக பெண்களின் பிரச்சனைகளில் மிகவும் பயன்படும் மூலிகை
  5. தொடர்ந்து சாப்பிட்டால் எடை கூடப்பயன்படும் ..
  6. தாய்பால் அதிகம் சுரக்க பயன்படுத்தலாம் 

Post Comment