அறிவு திறன் கூட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவு திறன் கூட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

நடக்க இயலாத குழந்தைகளையும் நடக்க ஆற்றல் தரும் -குமார கலயாணக இரசம் -Kumara Kalyanaka Ras


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்டிடும் -குமார கல்யாண ரஸ -KUMARA KALYANA RAS

 (ref-பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.      இரசச் செந்தூரம் – ரஸ ஸிந்தூரம்     50 கிராம்
2.      முத்து பற்பம் – மௌக்திக பஸ்ம       50           “
3.       தங்க பற்பம் – ஸ்வர்ண பஸ்ம         50           “
4.      அப்பிகர பற்பம் அப்ரக – பஸ்ம          50           “
5.      அய பற்பம் – லோஹ பஸ்ம           50           “
6.        பொன்னிமிளை பற்பம் – ஸ்வர்ண 
                           மாக்ஷிக பஸ்ம  50           “


இவைகளைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச் சாறு (குமாரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் இரு வேளைகளுக்கு தேன் அல்லது பாலுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

குழந்தைகளின் நோய்கள் (பால ரோக), பேதி (அதிஸார), காமாலை (காமால), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), பக்கரோக, வாந்தி (சர்தி), ஜீரணக் கோளாறுகள், இளைப்பு.

                இது முக்கியமாக குழந்தைகளுக்கேற்படும் மேற் கூறிய நிலைகளில் சிறப்பான பலனளிக்க வல்லது.  

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..

எப்போது பார்த்தாலும் உடம்பு சுகம் இல்லை என்று குழந்தையை காட்டும் பெற்றோருக்கு இந்த மருந்து ஒரு நல்ல தீர்வு 

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி -இந்த மருந்தை -ரஜன்யாதி சூர்ணம் ,அரவிந்தாசவம்  போன்ற மருந்துடன் தர நல்ல பலன் கிடைக்கும் 

தங்கம் சேர்ந்திருப்பதால் சற்று விலை அதிகம் ..

பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது ..

ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு தருவது நல்லது ..

கோழி கறி ,சாக்கலேட்டுகள் தவிர்த்தல் வேணும் ..

ஒரு வயது ஆகியும் நடக்காத குழந்தைக்கு (இந்த நோயை ஆயுர்வேதம் பக்க ரோகம் என்கிறது ) இந்த மருந்தை பிரம்மி கிருதம் போன்ற மருந்தோடு தர வேண்டும் ..

கால் வலு இல்லாத குழந்தை ,எலும்பில் தெம்பு இல்லாத குழந்தை ,ஆட்டிசம் போன்ற நோய் உள்ள குழந்தைக்கும் தரலாம் ..


Post Comment

சனி, நவம்பர் 12, 2011

பித்த மயக்கத்துக்கு -பிராம்மீ தைலம்


பித்த மயக்கத்துக்கு -பிராம்மீ தைலம்

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல                         3.200 லிட்டர்
2.            வல்லாரைச்சாறு – ப்ராஹ்மீஸ்வரஸ    400 கிராம்
3.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீரஸ       400         “
4.            நல்லெண்ணெய் – திலா தைல          800         “

இவைகளை ஒன்று கலந்து அத்துடன்

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  60 கிராம்
2.            இலவங்கப் பத்திரி – லவங்க பத்ரி            60           “
3.            ஜடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ                  60           “
4.            சந்தனம் – சந்தன                          25           “

இவைகளை அறைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.


                               
பயன்படுத்தும் முறை:    
  தலைக்கு தேய்த்துக் கொள்ளும் (சிரோப்யங்க) தைலமாக வெளிஉபயோகத்திற்கு மட்டும்.

                                 
தீரும் நோய்கள்:  

மயக்கம், ரத்தக்கொதிப்பு, சூடு, புத்திக்கோளாறுகள், தொடர்ந்து உபயோகிக்க சூடு தணிந்து ஞாபக சக்தி விருத்தியாகும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மிகவும் குளிர்ச்சி இல்லை -ஆனாலும் உடல் சூடு குறைக்கும்
  2. பித்த மயக்கத்துக்கு தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு உபயோகித்தால் நல்ல பலன் தெரியும்
  3. காரணம் தெரியா மயக்கத்து இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  4. தொடர்ந்து பயன்படுத்த அறிவு திறன் கூடும்

Post Comment

செவ்வாய், நவம்பர் 01, 2011

முடி வளர -முடி கருக்க - அணு தைலம்


முடி வளர -முடி கருக்க - அணு தைலம் 
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கீரைப்பாலை – ஜீவந்தி                         12.500 கிராம்
2.            குருவேர் – க்ருஷ்ண உசீர (அ) ஹ்ரிவேர           12.500        “
3.            தேவதாரு – தேவதாரு                            12.500        “
4.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        12.500        “
5.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்                  12.500        “
6.            விளாமிச்சம்வேர் – உசீர                          12.500        “
7.            நன்னாரி – ஸாரிவா                              12.500        “
8.            சந்தனம் – சந்தன                               12.500        “
9.            மரமஞ்சள்பட்டை – தாருஹரீத்ரா                  12.500        “
10.          அதிமதுரம் – யஷ்டீ                              12.500        “
11.          கோரைக்கிழங்கு – முஸ்தா                        12.500        “
12.          அகில்கட்டை – அகரு                             12.500        “
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரிதகீ பலத்வக்   12.500        “
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 12.500        “
15.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                  12.500        “
16.          நாமக்கரும்பு -                                      12.500        “
17.          வில்வவேர் – பில்வமூல                          12.500        “
18.          ஆம்பல் கிழங்கு – உத்பல கந்த                    12.500        “
19.          கண்டங்கத்திரி – கண்டகாரீ                       12.500        “
20.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                       12.500        “
21.          ஈச்சம்வேர் – பரூசக                              12.500        “
22.          ஓரிலை – ப்ரிஸ்னி பார்ணீ                        12.500        “
23.          மூவிலை – சாலிபர்ணீ                            12.500        “
24.          வாயுவிடங்கம் – விடங்க                         12.500        “
25.          இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரீ                   12.500        “
26.          ஏலக்காய் – ஏலா                                12.500        “
27.          அரேணுகம் – அரேணுக                           12.500        “
28.          தாமரைக்கேஸரம் – பத்மகேஸர                   12.500        “

                இவைகளை 35.000 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கஷாயமாகக் காய்ச்சி 3.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதைப் பத்து சமபாகங்களாக்கவும்.

1.            அவ்விதம் பங்கிடப்பட்ட கஷாயம்      350 மி.லி.
2.            சுத்தமான நல்லெண்ணெய் – திலதைல  350 கிராம்

                இவைகளைக் கலந்து காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டவும். இவ்விதம் ஒன்பது பங்கு கஷாயங்களைக் கொண்டு அதே அளவு எண்ணெயை ஒன்பது தடவை மடக்கிக் காய்ச்சிப் பத்தாவது பங்குடன் 350 கிராம் ஆட்டுப் பாலுடன் (அஜக்ஷீர) சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

தயாரிக்கும் முறையில் உள்ள நுணுக்கங்கள் 

வரீ” என்று தண்ணீர்விட்டான் கிழங்கையும், “குஷ்ட” என்று ஜாதிக்கோஷ்டத்தையும், “கிஞ்சல்கடி கமலாத் பலாம்” என்று தாமரைக் கேஸரம், சித்தாமுட்டி வேர் இவைகளையும் கிரகிப்பது உண்டு.
        
9  ஆவர்த்தங்களில் எண்ணெயை இறக்கி வடிகட்டாது வற்ற வற்றக் கஷாயத்தைச் சேர்த்துச் சேர்த்துக் காய்ச்சிப் பத்தாவது ஆவர்த்தத்தில் மட்டுமே இறக்கி வடிகட்டுவதும் உண்டு.
             
பத்தாவது ஆவர்த்தத்தில் எண்ணெய்யின் அளவில் நான்கில் ஒரு பங்கில் மேற்கூறிய கஷாயச் சரக்குகளையே கல்கமாக்கிச் சேர்த்துக் காய்ச்சுவதும் உண்டு.

               
சம்பிரதாயத்தில் கஷாயச் சரக்குகளை எண்ணெய்யின் எடைக்குச் சமபாகமாக அமைத்துப் பத்துப் பங்குகளாக்கி ஒவ்வொரு பங்கைக் கொண்டும் முறைப்படி அவ்வப்பொழுது கஷாயமும், கல்கமும் தயார் செய்து 10 ஆவர்த்திகள் செய்யப்படுகின்றன. முழுவதையும் கஷாயமாக்கி அதை 10 ஆவர்த்தம் முடியும்வரை கெடாமல் காப்பதில் உண்டாகும் பிரச்னைகளை உத்தேசித்து இந்த முறை அனுசரிக்கப்படுகிறது.

                

 பயன்படுத்தும் முறையும் அளவும்:    

 

5 முதல் 10 துளிகள் நசியமிட அதாவது மூக்கில் இடும் சொட்டு மருந்தாக (நஸ்ய) பயன்படுத்தப்படுகிறது.


                 
தீரும் நோய்கள்:  


தலை, மூக்கு, தொண்டை போன்ற கழுத்துக்கு மேற்பட்ட உறுப்புகளில் தோன்றும் நோய்கள் (ஊர்த்வஜத்ருகாத ரோக), தோல் வறட்சி (த்வக்ரூக்ஷய), நரை (பாலித). தொடர்ந்து உபயோகிக்க புலன்கள் கூர்மையாவதுடன் நரையும் நீங்குகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆயுர்வேதத்தில் உயிர் நாடியான பஞ்சகர்மா என்னும் உடலை சுத்தம் செய்யும் ஐந்து வகை விஷயங்களில் நஸ்யம் என்னும் மூக்குதுளி சிகிச்சை தலைக்கு மேல் உள்ள எல்லாவகையான நோய்களுக்கும் சிறந்த ஒன்று ..இந்த பஞ்சகர்ம சிகிச்சைகளை பற்றி அடுத்து விரைவில் பார்க்கலாம் ..
  2. இந்த அணு தைலம் என்ற மருந்து மருந்து அனுதினமும் நாம் பயன்படுத்தினால் -முடி கொட்டாமல் ,முடி நரைக்காமல் ,கண் பார்வையை தெளிவாக்கி கண்ணாடி அணியாமல் ,புலன் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் கொடுத்து ,தைராய்ட் வராமல் தடுத்து ,முக சுருக்கங்களை வர விடாமல் தடுத்து என்றும் இளமையாக வைக்க உதவும் ..
  3. காலை கடமைகளில் தினமும் பல் விளக்குவது மட்டும் தான் இப்போது செய்கிறோம் (சிலர் அதை கூட செய்வதில்லை -பெட் காபி குடிக்கிறார்கள் ),ஆனால் கண்ணுக்கு அஞ்சன மை ,மூக்குக்கு எண்ணை,தலைக்கு எண்ணை வைப்பது என்று ஆயுர்வேதம் தினமும் செய்ய சொல்கிறது ..
  4. இந்த அணு தைலம் -பல தலை சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து ..

முடி கருக்க,முடி வளர மட்டுமல்லாமல் பல நல்ல பலன்களை இந்த நஸ்ய சிகிச்சை செய்யும்

குறிப்பு -இந்த மருந்தை மூக்கில் எண்ணை விடும் -மூக்கு துளி சிகிச்சையாக -நஸ்ய சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் 
 
               

Post Comment