செவ்வாய், ஏப்ரல் 16, 2013

நடக்க இயலாத குழந்தைகளையும் நடக்க ஆற்றல் தரும் -குமார கலயாணக இரசம் -Kumara Kalyanaka Ras


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்டிடும் -குமார கல்யாண ரஸ -KUMARA KALYANA RAS

 (ref-பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.      இரசச் செந்தூரம் ரஸ ஸிந்தூரம்     50 கிராம்
2.      முத்து பற்பம் மௌக்திக பஸ்ம       50           “
3.       தங்க பற்பம் ஸ்வர்ண பஸ்ம         50           “
4.      அப்பிகர பற்பம் அப்ரக பஸ்ம          50           “
5.      அய பற்பம் லோஹ பஸ்ம           50           “
6.        பொன்னிமிளை பற்பம் ஸ்வர்ண 
                           மாக்ஷிக பஸ்ம  50           “


இவைகளைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச் சாறு (குமாரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் இரு வேளைகளுக்கு தேன் அல்லது பாலுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

குழந்தைகளின் நோய்கள் (பால ரோக), பேதி (அதிஸார), காமாலை (காமால), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), பக்கரோக, வாந்தி (சர்தி), ஜீரணக் கோளாறுகள், இளைப்பு.

                இது முக்கியமாக குழந்தைகளுக்கேற்படும் மேற் கூறிய நிலைகளில் சிறப்பான பலனளிக்க வல்லது.  

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..

எப்போது பார்த்தாலும் உடம்பு சுகம் இல்லை என்று குழந்தையை காட்டும் பெற்றோருக்கு இந்த மருந்து ஒரு நல்ல தீர்வு 

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி -இந்த மருந்தை -ரஜன்யாதி சூர்ணம் ,அரவிந்தாசவம்  போன்ற மருந்துடன் தர நல்ல பலன் கிடைக்கும் 

தங்கம் சேர்ந்திருப்பதால் சற்று விலை அதிகம் ..

பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது ..

ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு தருவது நல்லது ..

கோழி கறி ,சாக்கலேட்டுகள் தவிர்த்தல் வேணும் ..

ஒரு வயது ஆகியும் நடக்காத குழந்தைக்கு (இந்த நோயை ஆயுர்வேதம் பக்க ரோகம் என்கிறது ) இந்த மருந்தை பிரம்மி கிருதம் போன்ற மருந்தோடு தர வேண்டும் ..

கால் வலு இல்லாத குழந்தை ,எலும்பில் தெம்பு இல்லாத குழந்தை ,ஆட்டிசம் போன்ற நோய் உள்ள குழந்தைக்கும் தரலாம் ..


Post Comment

1 comments:

sakthi சொன்னது…

மிக்க பயனுள்ள பதிவு .நன்றிங்க !

கருத்துரையிடுக