செவ்வாய், ஏப்ரல் 16, 2013

குழந்தை ஈன்ற தாய்க்கு வரும் எல்லா நோய்க்கும் -லக்ஷ்மீ நாராயண ரஸ -லக்ஷ்மி நாராயண ரச-Lakshmi Narayana Rasa


குழந்தை ஈன்ற தாய்க்கு வரும் எல்லா நோய்க்கும் -லக்ஷ்மீ நாராயண ரஸ -லக்ஷ்மி நாராயண ரச-Lakshmi Narayana Rasa 
                                                                                                
(ஆதாரம் -பைஷஜ்யரத்னாவளி - ஸூதிகாரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள    10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       10           “

இவற்றைத் தனித்தனியே நன்கு பொடித்துப் பின்னர் சேர்த்தரைத்து அத்துடன்

3.            கடுகரோஹிணீ – கடுகீ                10 கிராம்  
4.            அதிவிடயம் – அதிவிஷா               10           “
5.            திப்பிலி – பிப்பலீ                      10           “
6.            வெட்பாலை அரிசி – இந்த்ரயவ         10           “

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

7.            இந்துப்பு (பொடித்தது) – ஸைந்தவலவண      10           “
8.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம                10           “
9.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது)
                                                                                  – டங்கண பஸ்ம 10           “
10.          சுத்தி செய்த நாபி (திரிபலா கஷாயம்
                   சேர்த்தரைத்தது) – ஷோதிதவத்ஸநாபி  10           “

இவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு

1.            திரிபலைக் கியாழம் – திரிபலா கஷாயம்
2.            நேர்வாள வேர்க்கியாழம் – தந்தீமூல கஷாயம்

இவற்றைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் அரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகள் ஆக்கவும்.

அளவும் அனுபானமும்:    

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகள் இளநீர் வெற்றிலைச்சாறுதேன் அல்லது இஞ்சிச்சாறுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

பொதுவாக பிரஸவத்திற்கு பின்னேற்படும் நோய்கள் (சூதிகாரோக)காய்ச்சல் (ஜ்வர)பேதி (அதிஸார)பெருங்கழிச்சல் (க்ரஹணீ)செரிமானக் கோளாறுகள் (ஜீர்ண தோஷ)வாத நோய்கள் (வாத ரோக).
                குழந்தையீன்ற பின்னேற்படும் நோய்களுக்கு இது மிளகுசீரகக் கியாழத்துடன் தரப்படுகிறது. இருமல் மற்றும் மூச்சுக் கோளாறுகளில் இது மிளகுசித்தரத்தை கஷாயத்துடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை .
குழந்தை ஈன்ற தாய்க்கு வரும் சன்னி போன்ற பெரிய நோய் முதல் ,காய்ச்சல் போன்ற நோய்கள் வரையும் சர்வ நோய்க்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..
பொதுவாக ஜீர்காத்யாரிஷ்டம் ,தஷமூலாரிஷ்டம் ,தான்வன்தரம் குளிகை ,சௌபாக்ய சுண்டி போன்ற மருந்துகளை குழந்தை ஈன்ற தாய்க்கு தருவது வழக்கம் ..இந்த மருந்தோடு தேவை ஏற்படின் இந்த மாத்திரையை தரலாம் ..
குழந்தை ஈன்ற தாய்க்கு ஏற்படும் அதிக உதிரபோக்கை -இந்த மருந்தை ஆடாதோடை ஸ்வரசத்துடன்  தர நல்ல பலன் தரும் ..
உயிரை காப்பாற்றும் அற்புத மருந்தாக அந்த காலத்தில் ( இந்த காலத்திலும் ) பிரசவத்தினால் வரும்  காம்ப்ளிகேஷன் என்னும் சிக்கல்களை தீர்க்க உதவும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ..


Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...

sakthi சொன்னது…

குழந்தையை பெற்றெடுப்பது தாய்க்கு மறுபிறவி என்கிறார்கள் .அப்படிப்பட்ட மகத்தாத தாய்க்கு அருமருந்து. மிக்க நன்றி சார் !

கருத்துரையிடுக