புதன், ஏப்ரல் 17, 2013

உடல் இளைத்த க்ஷய நோய்க்கும் -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa


உடல் இளைத்த க்ஷய நோய்க்கும்  -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa
                                                                                                
(ஆதாரம் -பஸவராஜீயம் - க்ஷயப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           20 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            பலகரை பற்பம் – வராட பஸ்ம         80 கிராம்
4.            மண்டூர பற்பம் – மண்டூர பஸ்ம        80           “
5.            அயபற்பம் – லோஹபஸ்ம             40           “

சேர்த்து பின்னர்

1.            மூக்கரட்டை வேர் கஷாயம் – புனர்னவ கஷாய
2.            பிரண்டைச்சாறு – அஸ்திஸம்ஹிர்த ரஸ
3.            ஆடாதோடைச்சாறு – வாஸாபத்ர ரஸ
4.            கொடிவேலி வேர் கஷாயம் – சித்ரமூல கஷாய
5.            நீர்பிரம்மிச்சாறு – நிர்ப்ரஹ்மீ ஸ்வரஸ
இவைகளைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து கோலி போன்ற உருண்டைகளாக்கி வெய்யிலில் உலர்த்தவும். உலர்ந்தபின் அவற்றை அகலிலிட்டுச் சீலை மண்பூசி குக்குடபுடத்தில் புடமிடவும். ஆறிய பின்னர் அவ்வுருண்டைகளை நன்கு பொடித்து நிறுத்து அதன் எடைக்குச் சமம் பொடித்துச் சலித்த மிளகுச் சூர்ணம் சேர்த்து அவைகளை

1.            வெற்றிலைச்சாறு – நாகவல்லி பத்ரஸ்வரஸ
2.            இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ
3.            கரிசாலைச்சாறு – ப்ருங்க ராஜ ஸ்வரஸ
4.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீஸ்வரஸ
5.            கொட்டைக் கரந்தைச்சாறு – ஹப்புஸ ஸ்வரஸ
6.            முருங்கைப்பட்டைக்கஷாயம் – சிக்ருத்வக் கஷாய
7.            திரிபலாகஷாயம் – த்ரிபலா கஷாய
இவற்றைக் கொண்டு தனித்தனியே ஒரு நாள் நன்கு ஊற வைத்து அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர)இருமல் (காஸ)இழைப்பு (ஸ்வாஸ)க்ஷயம் (க்ஷய)இரத்த சோகை (பாண்டு)காமாலை (காமால)வீக்கம் (ஸோப)ரத்தக் குறைவு (ரக்தால்பத)காங்கை (அதிக அளவில் உடல் கொதித்தல்)ஜீரணக் கோளாறுகள்.

நாட்பட்ட சுரத்தில் அமிர்தாரிஷ்டத்துடனும்இருமல்இழைப்பில் வாஸாரிஷ்டத்துடன் மட்டுமோ (அ) வாஸாரிஷ்டம்கற்பூராதி சூரணத்துடனும்க்ஷயத்தில் தாளீசாதி சூர்ணம் (அ) சீதோபலாதி சூர்ணத்துடனும்பாண்டுகாமாலைவீக்கம் போன்ற நிலைகளில் முக்கியமாக புனர்னவாஸவத்துடனோ (அ) மூக்கிரட்டை கஷாயத்துடனோ தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 

காச  நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
இரத்த சோகையை அடியோடு அழிக்கும் ..
நாள்பட்ட சுரத்தினால் வரும் பலஹீனத்தை சரி செய்யும் -தெம்பு தரும் .


Post Comment

0 comments:

கருத்துரையிடுக