புதன், ஏப்ரல் 17, 2013

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி Lasunadhi Vati

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி   Lasunadhi Vati                                                           
  (ஆதாரம் -லோலம்பராஜீயம் - விக்ஷூசிகாசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தோல் நீக்கிக் கல்வத்திலிட்டு நன்கு
       அரைத்து விழுதாக்கிய பூண்டு / லசுன             10 கிராமுடன்
2.            சீரகம் – ஜீரக                                     10 கிராம்
3.            சுக்கு – சுந்தீ                                     10           “
4.            திப்பிலி – பிப்பலீ                                 10           “
5.            மிளகு – மரீச்ச                                   10           “

இவைகளை நன்கு பொடித்துச் சலித்த சூர்ணம்

6.            சுத்தி செய்த கந்தகம் (பொடித்தது) – ஷோதித கந்தக      10           “
7.            இந்துப்பு (பொடித்தது) – ஸைந்தவ லவண                10           “
8.            பால் பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) – ஹிங்கு     10           “

இவற்றைச் சேர்த்து நன்கு கலந்த அரைத்துப் பின்னர் அவற்றை எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) கொண்டு ஏழு நாட்கள் அரைத்துப் பதத்தில் 200 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
குறிப்பு:    எலுமிச்சம்பழச்சாறுக்கு பதில் வேப்பம் பட்டைக் கஷாயம் உபயோகிப்பதும் உண்டு.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகளுக்கு வெந்நீர் அல்லது மோருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்


பேதி (அதிஸார)பெருங்கழிச்சல் (க்ரஹணீ)வாந்திபேதி (விஷூஸிகா) எனும் காலராபசியின்மை (அக்னிமாந்த்ய)வயிற்றுப்புசம் (ஆனாக) மற்றும் பலவித ஜீரணக் கோளாறுகள்இந்நிலைகளில் இது அஜமோதார்க்க அல்லது கற்பூராத்யர்க்கத்துடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
1. சீத பேதி முதல் -புட் பாய்சன் வரை -கிராணி கழிச்சல் முதல் -காலரா வரை -பேதிக்கு நல்ல பலன்  தரும் மருந்து இது 



Post Comment

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயனுள்ள குறிப்பிற்கு நன்றி...

கருத்துரையிடுக