பன்றி காய்ச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்றி காய்ச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 08, 2017

பன்றி காய்ச்சலை விரட்டும் -கப ஜ்வர குடிநீரில் உள்ள மூலிகைகள் -படங்களுடன்

ஸ்வைன் ஃப்ளு என்கிற பன்றி காய்ச்சலை தடுக்கிற மருந்தாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள குடிநீர் இந்த கப ஜ்வர குடிநீர் ..


சாதாரண காய்ச்சலுக்கு நில வேம்பு  குடிநீர் பயன் பட்டுவருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம் ..ஆனால் சளி .அதிக இருமல் ,தொண்டை வலி ,காய்ச்சல் என்று கபம் சார்ந்த்சஅறிகுறிகள் உள்ள  பன்றி காய்ச்சலுக்கு சந்தனம் ,வெட்டிவேர் ,விலாமிச்சம் வேர் போன்ற அதிக குளிர்ச்சி உள்ள நிலவேம்பு குடிநீர் பலன் அளிக்காது ..


கப சுர குடிநீர் கீழ் கண்ட மூலிகைகளை உள்ளடக்கியது ..
சுக்கு
திப்பிலி
இலவங்கம்
சிறுகாஞ்சொறி வேர்
அக்கிரகார வேர்
முள்ளி வேர்
கடுக்காய் தோல்
ஆடாதொடை இலை
கோஷ்டம்
சீந்தில் தண்டு
சிறு தேக்கு
நிலவேம்பு சமூலம்
வட்ட திருப்பி வேர்
கோரை கிழங்கு ,

சுக்கு 

\\\
திப்பிலி 


இலவங்கம் 




சிறுகாஞ்சொறி வேர் 



அக்கிரகார வேர் 



முள்ளி வேர் 

கடுக்காய் தோல் 


ஆடாதொடை இலை


கோஷ்டம் 



சிறு தேக்கு 



நிலவேம்பு சமூலம்




வட்ட திருப்பி வேர் 



கோரை கிழங்கு


மேலே கூறிய அனைத்து மூலிகைகளையும் சம அளவில் சேர்த்து -கஷாயமாக -குடிநீராக அரைத்து வைத்து கொள்ள வேண்டும் .

பத்து கிராம் கஷாயத்தை இருநூறு மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி ஐம்பது மிலியாக்கி வடிகட்டி காலை மாலை ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து பத்து நாட்கள் பருகி வர பன்றி காய்ச்சல் -குணமாகும் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர  பன்றி காய்ச்சல் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட முடியும் ,.

இப்போது இந்த கப சுர குடிநீர் -ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கிடைக்கிறது .மக்கள் பயன்பெற அரசு மருத்துவமனையை நாடலாம் ..வசதி வாய்ப்புள்ளவர்கள் அருகில் உள்ள படித்த சித்த மருத்துவரை அல்லது படித்த ஆயுர்வேத மருத்துவரை அணுகி எளிதாக பெறலாம் ..

நோய் எதிர்ப்பு சக்தி பெருக  -இந்த மருந்து பெரிதும் உதவும் .
ஆலோசனை மற்றும் தேவைக்கு வேண்டிய முகவரி 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000

Post Comment

செவ்வாய், மார்ச் 07, 2017

பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து டேமிஃப்ளு -ஆயுர்வேத சித்த மூலிகை மருந்தில் இருந்து தயாரிக்க ப்படுகிறது

பன்றி காய்ச்சலை தடுக்க உதவும் டேமிஃப்ளு மாத்திரை –அண்ணாச்சி பூ என்ற ஆயுர்வேத –சித்த மருத்துவ மூலிகையில் இருந்தே தயாரிக்கபடுகிறது ..


Tamiflu (oseltamivir phosphate)  என்கிற உலகளவில் ஃப்ளு வைரசை தடுக்க பயன்படுகிற மருந்து ஓர் இயற்கை மூலப்பொருளில் இருந்தே தயாரிக்கபடுகிறது .சிக்சிமிக் ஆசிட் என்ற மூல பொருளில் இருந்து தயாரிக்கபடுகிற இந்த மருந்தின் மூலம் ஒரு சித்த /ஆயுர்வேத மருந்து என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..



மஞ்சளில் ,வேம்புவில் வைரசை அழிக்க பயன்படுகிறது என்பதை அறிந்தே நமது தமிழ் /இந்திய மக்கள் அம்மை போன்ற நோய்களை கட்டுபடுத்த /வராமல் தடுக்க வேப்ப இலைகளை பயன்படுத்தினர்..அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை .


இந்த வரிசையில் –நமது மசாலா உணவுகளில் /பிரியாணிகளில் பயன்படுத்தபடுகிற இந்த அண்ணாச்சிபூ ஒரு மிக சிறந்த வைரஸ் கொல்லி என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம் –

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்.

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை  90 4333 6000

Post Comment

திங்கள், மார்ச் 02, 2015

பக்க விளைவுகள் உள்ளதா பன்றிகாய்ச்சல் தடுப்பூசி ?

பக்க விளைவுகள் உள்ளதா பன்றி காய்ச்சல் தடுப்பூசி ..
இந்த படங்கள் விளக்கம் தருகிறது ..


இந்த படங்கள் வலை தளத்தில் தேடும் போது கிடைத்தது ..எனக்கு நிச்சயமாக தெரியாது மேலே உள்ள படங்கள் உண்மை தானா என்று ?
தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் 

Post Comment

பன்றி காய்ச்சலை சாதாரண பேஸ் மாஸ்க் ( முக உறை) தடுக்க இயலாது !!!

பலனில்லா பேஸ் மாஸ்க்கை அணிவதால் என்ன பயன் ?

சாதாரண பேஸ் மாஸ்க்கால் பன்றி காய்ச்சல் வைரசை தடுக்க இயலாது என்பது கசப்பான உண்மை ..


N 95 வகை face mask மட்டுமே H1N1 பன்றி காய்ச்சல் வைரஸை தடுக்க  70   to 90 % ஆற்றல் வாய்ந்தது .

Post Comment

எட்டு மணி நேரம் வெளிக்காற்றில் எளிதாக வாழும் பன்றிகாய்ச்சல் வைரஸ் -H1 N1.

ஆபத்தை விளைவிக்கும் இந்த பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிக்கப்பட்டவர் தும்மும்  அல்லது இருமும் பொழுது வெளியே வந்தால் அது வெளிக்காற்றில் அல்லது பாதிக்கப்பட்டவர் தொட்ட இடத்தில் மிக எளிதாக எட்டு மணி நேரம் உயிர் வாழ்ந்து  பல உயிர்களை தாக்க காத்திருக்கிறது என்பது மிக பெரிய சோதனையானான/ வேதனையான  உண்மை .


Post Comment

செவ்வாய், மே 10, 2011

வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்



டெங்கு காய்ச்சல் –பன்றி காய்ச்சல் இரண்டையும் குணப்படுத்தும் –வராமல் தடுக்கும் மருந்து –பாரங்யாதி கஷாயம் 


வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            கண்டுபாரங்கி – பார்ங்கீ      - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா        - 10       “
3.            பர்பாடகம் – பர்பாடக             - 10       “
4.            கொத்தமல்லிவிதை – தான்யக    - 10       “
5.            சிறுகாஞ்சூரி – துராலபா           - 10       “
6.            சுக்கு – சுந்தீ                     - 10       “
7.            நிலவேம்பு – பூநிம்ப              - 10       “
8.            கோஷ்டம் – கோஷ்ட             - 10       “
9.            திப்பலி – பிப்பலீ            - 10       “
10.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ       - 10       “
11.          சீந்தில்கொடி – குடூசீ              - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
  தீரும் நோய்கள்:  

வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர), குளிர்சுரம் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள், இருமல் (காஸ), ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டை, தட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும், மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

  1. மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..
  2. காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது
  3. பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும்
  4. வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
  5. டெங்கு காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.
    உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
    அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
    கடையநல்லூர் 90 4222 5333
    திருநெல்வேலி 90 4222 5999
    ராஜபாளையம் 90 4333 6888
    சென்னை 90 4333 6000


Post Comment

வியாழன், மார்ச் 24, 2011

நூறு காப்F(இருமல்) சிரப்பை விட சிறந்த -இருமல் நிவாரணி -கற்பூராதி சூர்ணம்-Karpooradhi choornam


நூறு காப் (இருமல்) சிரப்பை விட சிறந்த -இருமல் நிவாரணி -கற்பூராதி சூர்ணம்-Karpooradhi choornam
(ref-ஸஹஸ்ரயோகம் - சூர்ணப்ரகரணம்)


தேவையான மருந்துகள்:



1.            கற்பூரம் – கற்பூர                    - 10 கிராம்
2.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       - 10       “             
3.            தக்கோலம் – தக்கோல               - 10       “             
4.            ஜாதிக்காய் – ஜாதீபல               - 10       “             
5.            ஜாதிபத்திரி – ஜாதீபத்ரீ              - 10       “             
6.            இலவங்கம் – லவங்க                - 10       “             
7.            சிறுநாகப்பூ – நாககேஸர             - 10       “             
8.            மிளகு – மரீச்ச                   - 10       “             
9.            திப்பிலி – பிப்பலீ                 - 10       “             
10.          சுக்கு – சுந்தீ                     - 10       “             
11.          சர்க்கரை – ஸர்க்கர               - 10       “              



செய்முறை:    

கற்பூரம், சர்க்கரை நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலித்துப் பின்னர் அவைகளையும் தனியே பொடித்துச்ச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து வைக்கவும்.


அளவு:      

1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:     

 தேன்


தீரும் நோய்கள்: 

 இருமல் (காஸ), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ), விக்கல் (ஹிக்க), உணவில் விருப்பமின்மை (அரோசக).

தெரிந்து கொள்ள வேண்டியவை –

அண்ணாச்சி பூ –இந்த மூலிகையில் இருந்தே பன்றி காய்ச்சல் மற்றும் ஃப்ளு நோய்க்கு தடுப்பு மருந்தாக உதவுகிற ஆங்கில மருந்தான டேமிஃப்ளு மாத்திரை தயாரிக்கபடுகிறது ..இந்த அண்ணாச்சிபூ சேர்ந்த இந்த மருந்து ஃப்ளு போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கவும் ..குணமாக்கவும் இந்த மருந்து உதவும் 

Post Comment