புதன், மார்ச் 08, 2017

பன்றி காய்ச்சலை விரட்டும் -கப ஜ்வர குடிநீரில் உள்ள மூலிகைகள் -படங்களுடன்

ஸ்வைன் ஃப்ளு என்கிற பன்றி காய்ச்சலை தடுக்கிற மருந்தாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள குடிநீர் இந்த கப ஜ்வர குடிநீர் ..


சாதாரண காய்ச்சலுக்கு நில வேம்பு  குடிநீர் பயன் பட்டுவருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம் ..ஆனால் சளி .அதிக இருமல் ,தொண்டை வலி ,காய்ச்சல் என்று கபம் சார்ந்த்சஅறிகுறிகள் உள்ள  பன்றி காய்ச்சலுக்கு சந்தனம் ,வெட்டிவேர் ,விலாமிச்சம் வேர் போன்ற அதிக குளிர்ச்சி உள்ள நிலவேம்பு குடிநீர் பலன் அளிக்காது ..


கப சுர குடிநீர் கீழ் கண்ட மூலிகைகளை உள்ளடக்கியது ..
சுக்கு
திப்பிலி
இலவங்கம்
சிறுகாஞ்சொறி வேர்
அக்கிரகார வேர்
முள்ளி வேர்
கடுக்காய் தோல்
ஆடாதொடை இலை
கோஷ்டம்
சீந்தில் தண்டு
சிறு தேக்கு
நிலவேம்பு சமூலம்
வட்ட திருப்பி வேர்
கோரை கிழங்கு ,

சுக்கு 

\\\
திப்பிலி 


இலவங்கம் 




சிறுகாஞ்சொறி வேர் 



அக்கிரகார வேர் 



முள்ளி வேர் 

கடுக்காய் தோல் 


ஆடாதொடை இலை


கோஷ்டம் 



சிறு தேக்கு 



நிலவேம்பு சமூலம்




வட்ட திருப்பி வேர் 



கோரை கிழங்கு


மேலே கூறிய அனைத்து மூலிகைகளையும் சம அளவில் சேர்த்து -கஷாயமாக -குடிநீராக அரைத்து வைத்து கொள்ள வேண்டும் .

பத்து கிராம் கஷாயத்தை இருநூறு மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி ஐம்பது மிலியாக்கி வடிகட்டி காலை மாலை ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து பத்து நாட்கள் பருகி வர பன்றி காய்ச்சல் -குணமாகும் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர  பன்றி காய்ச்சல் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட முடியும் ,.

இப்போது இந்த கப சுர குடிநீர் -ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கிடைக்கிறது .மக்கள் பயன்பெற அரசு மருத்துவமனையை நாடலாம் ..வசதி வாய்ப்புள்ளவர்கள் அருகில் உள்ள படித்த சித்த மருத்துவரை அல்லது படித்த ஆயுர்வேத மருத்துவரை அணுகி எளிதாக பெறலாம் ..

நோய் எதிர்ப்பு சக்தி பெருக  -இந்த மருந்து பெரிதும் உதவும் .
ஆலோசனை மற்றும் தேவைக்கு வேண்டிய முகவரி 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக