ஞாயிறு, மார்ச் 26, 2017

வலியில்லாத வாழ்க்கைக்கு இலவச மருத்துவ முகாம்

வலியில்லாத வாழ்க்கைக்கு இலவச மருத்துவ முகாம் –திருநெல்வேலியில்
இலவச ஒத்தட சிகிச்சை ,
இலவச கப சுர குடிநீர் (பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து ),
இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை ,
இலவச ஆயுர்வேத ,சித்த மருந்துகளையும் கொடுத்து
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது .


ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் ஏழை எளியோருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலே -26/3/2017 ஞாயிறு காலை பத்து மணி முதல் இரண்டு மணி வரை திருநெல்வேலி அருகன்குளம் அருகில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் வைத்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


நூற்றைம்பது நோயாளிகளுக்கும் இலவச பொடி கிழி ,இலை கிழி ,அண்ட கிழி ஒற்றடங்கள் ஆண் பெண் சிகிசையாளர்களை கொண்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது .அவர்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனையும் ,இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.


முன்னூறு பயனாளிகளுக்கும் மேல் கப சுர குடிநீர் அருந்தினார்கள் –இந்த கப சுர குடிநீர் சித்த மருத்துவத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் சளி சார்ந்த –ஃப்ளு வைரஸ் காய்ச்சலை தடுக்கும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது .மேலும் வாத வலிகளுக்கும் மஹா ராஸ்னாதி கஷயாமும் வழங்கப்பட்டது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக