வெள்ளி, மார்ச் 24, 2017

புற்று நோயை வரவைக்கும் மஞ்ச பொடி..


மங்களகரமாய் எதை ஆரம்பித்தாலும் மஞ்சளில் ஆரம்பிப்பது தமிழர் மரபு.
மஞ்சள் சேர்ந்தால் தான் எந்த உணவும் முழுமை பெரும் .உணவில் நிறத்தை மட்டுமல்லாது உணவில் நமக்கு தெரியாமல் ஏற்பட போகிற ஏதாவது விஷ சேர்க்கை இருந்தாலும் மஞ்சள் அதை மாற்றி நம்மை காக்கும் என்பது உண்மை. அமெரிக்கர்கள் இந்திய மஞ்சளுக்கு பேடன்ட் வாங்கி விட்டார்கள் என்று ஆதங்க படுபவர்கள் நாம் –உண்மையான மஞ்சள் இப்போது கிடைக்கிறதா என்று கேட்டு உறுதிபடுத்தி கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.


பாக்கெட்டில் விற்கும் அத்தனை பொடிகளும் –லேபிளில் படத்தை போட்டு விட்டால் அதை உண்மை என்று நம்பி விடுகிறோம் . நமது அவசர தேவையை உணர்ந்த பல கம்பெனி மஞ்சள் தூள் பிராண்டுகளில் பல கலப்படங்கள் உள்ளது என்று பரிசோதனைகள் சத்தியம் செய்கின்றன.


மஞ்சள் புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தும் என்று நம்புகிற நாம் வாங்கும் மஞ்சள் பொடியில் மஞ்சள் நிறம் தான் அதிகம் உள்ளது .அதிலே உள்ள கலப்படங்கள் புற்றுநோயை வரவைக்கும் ஆற்றல் படித்தவை என்பதை அறிந்து கொள்வது நமது கடமை


மஞ்சள் பொடியில் என்ன என்ன கலப்படங்கள் உள்ளது .

சுண்ணாம்பு என்கிற ச்சாக் பொடி,மரத்தூள் ,அரிசி தவிடு அரைத்தது , அரிசி மாவு ,ஸ்டார்ச் ..இன்னும் பல பல எடையை கூட்டவும் ..


நிறத்திற்காக –மெட்டானில் யெல்லோ,புற்று நோயை வரவைக்க கூடிய லெட் க்ரோமேட் என்ற பொருளும் அதிக அளவு சேர்கிறார்கள் என்கிற ஒரு ஆராய்ச்சி நிறுவனம். முழு மஞ்சள் மற்றும் மஞ்சள் தூள் தயார் செய்யும் உற்பத்தியாளர்கள் லெட் குரோமேட் என்னும் வேதிபொருளை கலந்து மஞ்சளுக்கு செயற்கையாக நிறம் கொடுத்து, நல்ல மஞ்சள் நிறத்தை உண்டாக்கி, அதனை வாங்குவோரை ஏமாற செய்து விற்பனையில் நல்ல இலாபம் பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து வாங்கி உபயோகிப்பவர்களுக்கு ரத்த சோகை முடக்குவாதம் ,புற்று நோய் ,நரம்பு தளர்ச்சி ஆகிய கொடிய நோய்கள் ஏற்படும். மேலும் கருவுற்ற தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படும்.


எப்படி கண்டுபிடிப்பது ?

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி

ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.


லெட் க்ரோமேட் சேர்ந்ததை கண்டு பிடிக்க –மஞ்சள் பொடியை எரித்து சம்பலாக்கி ஒரு சோதனை குழாயில் எடுத்து அதில் அடர் கந்தக அமிலம் 1: 7 விகிதத்தில் கலந்து .அதில் 0.1% dipenylcarbazide ஒரு சொட்டு சேர்க்க இளஞ் சிவப்பாக (பிங்க் ) மாறினால் அதில் புற்று நோயை வரவைக்க கூடிய லெட் க்ரோமேட் சேர்த்திருக்கிறார்கள் என்று பொருள்.

அம்மோனியம் சேர்த்து இருந்தால் நிறம் மாற்றம்

மரத்தூள் கலந்தால் –கிளாசில் அடியில் படிவது

தண்ணீரில் கலந்தால் உடனடியாக மான்கள் நிறம் பெறுவது –போன்றவையும் கலப்படம் தான் ..

அறிவுரை –

பசு ( ஈர) மஞ்சளை வாங்கி –நிழலில் காய வைத்து அரைப்பது தான் நல்லது .

பாக்கெட்டில் விற்கும் எந்த கம்பெனி பிரான்டிற்கு உத்தரவாதம் இல்லவே இல்லை 


தரமான மஞ்சளை என்றுமே பயன்படுத்தி –கலப்படம் இல்லாத ஆயுர்வேத மருந்துகளை பெறவும் .தரமான ஆயுஷ் மருத்துவ ஆலோசனை பெறவும் அணுக வேண்டியது . ஒருங்கிணைந்த சிகிச்சை பெற –,ஆயுர்வேதம்,சித்தா ,ஹோமியோபதி , யுனானி ,அக்குபஞ்சர் ,யோகா & இயற்கை சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகளை பெற மருத்துவ ஆலோசனை பெற அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000..


Post Comment

0 comments:

கருத்துரையிடுக