வியாழன், மார்ச் 23, 2017

நாமெல்லாம் மருத்துவர்களே !!!

பீர் பால் கதையோடு ஆரம்பிக்கிறேன் ..


ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், “நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?” என்று கேட்டார்.
வைத்தியத் தொழில்தான்,” என்றார் பீர்பால்.
என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் என்று கூறுகிறாயே, இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்றார் அக்பர்.

நிச்சயம் நிரூபிக்கிறேன்,” என்ற பீர்பால் மறுநாள் கையில் ஒரு பெரிய கட்டு போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒருவர் பீர்பாலிடம், “கையில் என்ன கட்டு?” என்று கேட்டார்.வழுக்கி விழுந்து விட்டேன். பலமான காயம் ஏற்பட்டு கை வீங்கி விட்டது,” என்றார் பீர்பால்.உடனே அந்த மனிதர் அதற்கு ஒரு வைத்தியம் சொல்லி, உடனடியாக அந்த வைத்தியத்தைச் செய்து கொள்ள வேண்டுமென்றும், தாமதப்படுத்தினால் கையையே இழக்க நேரிடும்,” என்றார்.

இவ்வாறு போகிற வழியெல்லாம் பார்க் கிறவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக வைத்தியம் சொன்னனர். ஒருவாறு அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் முப்பத்து ஆறு விதமான வைத்தியங்கள் சொல்லி விட்டனர்.

அக்பர் பீர்பாலின் கட்டைப் பார்த்து, என்னவென்று கேட்க, பீர்பால் அவரிடமும் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கை வீங்கி விட்டது என்றும் கூறி வழியில் பார்த்தவர்கள் சொல்லிய வைத்திய முறைகளையெல்லாம் சொன்னார்.
அவர்கள் கிடக்கிறார்கள் முட்டாள்கள். அவர்கள் பேச்சைக் கேட்காதே! நான் ஓர் அற்புதமான வைத்தியம் சொல்லுகிறேன். அதை செய்து பார். பட்டென்று வீக்கம் ஒரு நொடியில் போய்விடும்,” என்றார்.அதைக் கேட்ட பீர்பால் சிரித்தார்.பீர்பால் நான் என்ன சொல்லி விட்டேன். நீ எதற்காக சிரிக்கிறாய்?” என்று சற்று கோபமாக கேட்டார் அக்பர்.
அரசே மன்னிக்க வேண்டும். எல்லாருக்கும் பிடித்தமான தொழில் எது என்று நேற்று என்னிடம் கேட்டீர்களேஅதற்கு பதில் இதுதான்,” என்றார் பீர்பால். அதைக் கேட்ட அக்பர், பீர்பாலை பாராட்டினார்.
இந்த கதை சொல்வது தான் உண்மை ..இங்கே நாமெல்லாம் மருத்துவர்கள் தான் .

நேற்று ஒரு கட்டுரை அக்குபஞ்சர் அனஸ்தீசியா என்று மயக்கவியல் துறையில் அக்குபஞ்சர் எவ்வாறு உதவுகிறது –மேலும் இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலையிலும் –முழு மயக்கம் கொடுக்காமலே –நோயாளி கண் திறந்து பேசி கொண்டே இருக்கிறார் ..அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெறுவதை வெளிப்படுத்தும் ஒரு BBC டாக்குமெண்டரி வீடியோவையும் இணைத்திருந்தேன்.அதில் மேலும் தமிழ் நாட்டில் BSS அக்குபஞ்சர் கோர்ஸ் படித்து திடீர் டாக்டர்களை பற்றியும் எழுதி இருந்தேன் . அதில் பல சிறந்த அக்குபஞ்சர் மட்டுமே செய்யக்கூடிய அக்குபஞ்சரிஸ்ட் பற்றியும் சேர்த்தே எழுதி இருந்தேன் 

அந்த கட்டுரையை பல சமூக வலைத்தளத்திலும் ,பல வாட்ஸ் ஆப் குருப்பிலும் ,பல டெலிக்ராம் குரூப்பிலும்  பதிவேற்றி இருந்தேன்.. நான் சொல்ல வந்தது –ஒருங்கிணைந்த அக்குபஞ்சர் சிகிச்சை என்பது மட்டுமல்ல –சீனாவில் நவீன மருத்துவமும் –பாரம்பரிய மருத்துவமும் இணைந்து செய்கிற சாதனைகள் என்பது மட்டும் தான்.

தமிழநாட்டில் உங்களுக்கு MBBS /BDS/BSMS/BAMS/BHMS/BUMS/BPT/BNYS போன்ற மருத்துவ படிப்பு படிக்கவில்லை என்றாலும் கூட நீங்கள் பல போலி மருத்துவ பலகலைகழகம் மூலம் தொலை தூர கல்வி மூலம் எந்த வயதிலும் திடீர் டாக்டர் ஆகலாம். டிவியில் கூட டாக்டர் என்றே பேசலாம்.விளம்பரம் கொடுக்கலாம் .யாரும் உங்களை கேட்க முடியாது..அப்படியே கேட்டாலும் –“உள்ளே” போய் உடனே வெளியே வந்து பிரபல்ய மருத்துவர் ஆகலாம் என்ற நிலை தான் இன்றும் உள்ளது .


இங்கே நமக்கு நாமே மருத்துவர் என்று உங்கள் நோய்களை நீங்கள் வராமல் தடுக்க கல்யாண மண்டபத்தில் வகுப்பு எடுத்தவர்கள் பலர் .அதற்க்கு அவர்கள் செய்த விளம்பரங்கள் –உங்கள் நோய்களை நீங்களே குணப்படுத்துங்கள்..அங்கே சென்றால் –வார விடுமுறை நாட்களில் நீங்கள் அக்குபஞ்சர் கற்று கொண்டு அக்குபஞ்சர் டாக்டர் ஆகுங்கள் என்று பலருக்கு ஆசை வலை விரிக்கப்பட்டது..மிக குறுகிய நாட்கள் பயிற்சியில் அவர்கள் திடீர் டாக்டர் ஆனார்கள் ..அவர்கள் அக்குபஞ்சரை கற்று தெளியவில்லை ..ஆனால் மூலிகை மருந்து / Food supplement என்று பல MLM கம்பெனி மருந்துகளையும் .பல மூலிகை  மருந்து கம்பெனியின் Sales Rep கள் சொல்கிற மருந்தையும் சேர்த்து கொடுத்து முழு நேர திடீர் மருத்துவர்கள் ஆகிறார்கள் .இதில் ஆர்கானிக் என்கிற போர்வையில் கடை திறந்து பல கலப்பட உணவுகளை –வெறும் லேபிளை மட்டுமே நம்பி வாங்கி தான் ஏமாந்தது போதாது என்று எல்லோரையும் முட்டாள்ஆக்குகிறார்கள் .

ஊருக்கு பல மஞ்சள் நோட்டிஸ் மூலம் பவுந்திர –பிஸ்வாஸ்கள்.
இங்கே வாட்ஸ்ஆப் குரூப்பில் மருத்துவ குறிப்புகள் பல ..அதிலே போலிகளே மிக மிக அதிகம்..ஆதாரம் இல்லாத மூலிகை கதைகள் ..அதை எழுதுகிற மருத்துவ பின்புலம் இல்லாதவருக்கு டாக்டர்  என்று அவர்களுக்கு அவர்களே கொடுத்து கொள்ளும் நிலை ..இதை யாரும் கேட்க போவதும் இல்லை ..ஆனால் பொய் எழுதும் –காப்பி அடித்து எழுதும் நபர்களின் பதிவுக்கு பல நூறு லைக்குகள் .பல ஆயிரம் ஷேர்கள் ..ஆஹா நாமெல்லாம் இங்கே மருத்துவர்கள் தான் ..நாம் சொல்வது தான் மருத்துவம் தான் ..யாரும் கேட்க முடியாது –கேட்கவும் வாய்ப்பே இல்லை ..இதை யாரும் ஷேர் செய்யாதீர்கள் (நீங்கள் மருத்துவர் என்றால் ஷேர் செய்திருக்க மாட்டீர்கள் )

ஒருங்கிணைந்த சிகிச்சை பெற அக்குபஞ்சர் ,ஆயுர்வேதம்,சித்தா ,ஹோமியோபதி ,ஹோமியோ பஞ்சர் போன்ற சிகிச்சைகளை பெற மருத்துவ ஆலோசனை பெற அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000..


Post Comment

0 comments:

கருத்துரையிடுக