ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam


தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் - உத்தரஸ்தானம்)

தேவையான மருந்தும் செய்முறையும்:

                ஓடு நீக்கிய நீரடிமுத்துப் பருப்பை (துவரக பீஜ) சிறிது தேங்காய் எண்ணெய்யுடன் (நாரிகேள தைல) கலந்து நன்கு அறைத்துக் களிம்பு போல் ஆனவுடன் பத்திரப்படுத்தவும். இது நடைமுறையில் உள்ள முறை. ஆனால் மூல நூலில் நீரடிமுத்து பருப்பை மட்டும் அப்படியே அரைத்துக் களிம்பாக்கி பயன்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

அரிப்பு (கண்டூ), சொறி (கட்ச்சு), சிரங்கு (பாமா), தோல் வெடிப்பு (விபாடிகா), சிலர் இதனை கார்போக அரிசியை (பாகுசீ) அரைத்த விழுதுடன் கலந்து வெண்குட்டத்தில் (ஸ்வித்ர) பூசுவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. ஒரே மூலிகை விதை -இந்த மருந்தில்  எல்லா விதமானதோல் நோய்க்கும் சிறந்த தீர்வாக விளங்குகிறது
 2. அரிப்பு ,கரப்பான் -அலர்ஜி தோல் நோய்க்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
 3. வெண் புள்ளிகளுக்கு -கார்போகி அரிசி அல்லது அவல் குஜாதி லேப சூரணத்துடன் பற்றிட நல்ல பலன் தரும்Post Comment

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam


பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50          

இவைகளைப் பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்து மேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட (அ) வித்ரதி), வீக்கம் (ஸோத), வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
 2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
 3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்
   Post Comment

ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam


ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம்  -Rasakarpoora lepam
                                                                                           
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            ரஸகற்பூரம் (பூரம்) ரஸகற்பூர          10 கிராம்
2.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர           20          
3.            மிருதார் சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க     20          

இவைகளைத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்து ஒன்று சேர்த்தரைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல     400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட                100        

இவைகளைக் கொண்டு முறைப்படி தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:      

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். நல்லெண்ணெய்யுடன் கலந்து பூசலாம்.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண, பிரங்கஜவ்ரண), ஆறாத புண்கள் (துஷ்டவ்ரண), காயங்கள், படை (விஸர்ச்சிகா), நமைச்சல் (கண்டு), பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு சுத்தம் செய்துவிட்டு இதனைப் போடவும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. ஆறாத புண்ணை ஆற்றிடும்
 2. நாள்பட்ட காயங்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்

Post Comment

படை ,ஸ்கேபிஸ்,கரப்பான் -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam


படை ,ஸ்கேபிஸ்,கரப்பான்  -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam
 (ref-யோகரத்னாகரம் - பாமா சிகித்ஸா)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
I.             

 1.பாதரஸம் ரஸ                      50 கிராம்
2.     கந்தகம்  - கந்தக                 50           “
கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் ரஸத்தைச் சேர்த்து அறைத்து நன்கு கறுத்த கஜ்ஜளி ஆக்கவும்.

II.             

மனோசிலை (மனசில) 50 கிராம் எடுத்துத் தனியே கல்வத்திலிட்டுப் பொடிக்கவும்.


III.         

  1.            சீரகம் ஜீரக                     50 கிராம்
2.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக       50           “
3.            மிளகு மரீச்ச                   50           “
4.            மஞ்சள் ஹரித்ரா               50           “
5.            மரமஞ்சள் தாருஹரித்ரா        50           “

இவைகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். பின்னர்

1.            ரஸகந்தக கஜ்ஜளி                         100 கிராம்
2.            பொடித்த மனோசிலை                    50           “
3.            பொடித்துச் சலித்த சரக்குகளின் சூரணம் 250         “
4.            வங்கச்சிந்தூரம்                          50           “
இவைகளை ஒன்று சேர்த்துக் கல்வத்திலிட்டு அக்கலவை நன்கு கருத்துவரும் வரை அரைத்து பத்திரப்படுத்தவும்.

இம்மருந்து வெளி உபயோகத்திற்கானதால் ரஸம், கந்தகம், மனோசிலை இவைகளைச் சுத்தி செய்ய வேண்டியதில்லை.

இம்மருந்தைத் தேங்காய் எண்ணெய், நெய், எலுமிச்சம் பழச்சாறு, இவற்றுடன் கலந்தும் பூசலாம்.

                 
மேற்கூறிய மருந்தைக் களிம்பாகச் செய்து பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக உபயோகிக்க வேண்டிய சரக்குகளின் விகிதம் பின் வருமாறு அமையும்:
1.            ரஸோத்தமாதிலேப சூர்ணம் 10 கிராம்
2.            தேங்காய் எண்ணெய்        300         “
3.            தேன் மெழுகு              75           “
இவைகளை முறைப்படி சேர்த்துக் களிம்பாக்கவும்.

தீரும் நோய்கள்:  சொரி (அ) நமைச்சல் (அ) அரிப்பு (கண்டு), சிரங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) முதலிய நோய்கள் (சரும ரோகங்கள்).


 பயன்படுத்தும் முறை:           

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். லேப சூர்ணமாக இருக்கும் சமயங்களில் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து மேலே பூசலாம். களிம்பாக இருக்கும் சமயங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அப்படியே பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. கரப்பானுக்கு -இந்த லேபதை -கரப்பான் தைலத்துடன் கலந்து பூச -நன்கு பலன் தரும்
 2. தோல் நோய்களில் -எவ்விதமாக இருந்தாலும் -நல்ல பலன் தரும்
 3. இந்த லேபம் -களிம்பாக இல்லாமல் -சூரணமாக கிடைக்கிறது

Post Comment

வியாழன், ஏப்ரல் 12, 2012

ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்-14-இ புத்தங்களின் தொகுப்பு ..இலவச தகவிறக்கம்

ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்-14-இ புத்தங்களின்  தொகுப்பு ..இலவச தகவிறக்கம்


நன்றி -தமிழ் க்யூப் .காம் 
ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்
No. புத்தகத்தின் பெயர்
புத்தகத்தை தொகுத்தவர் -எழுத்தர்
இலவச தகவிறக்கம் செய்ய
1 மூலிகை  மர்மம்  முனிசாமி  Free Tamil eBooks
2 எளிதாக சித்த மருத்துவத்தை உபயோகிப்பது எப்படி
எஸ் .முத்து  Free Tamil eBooks
3 போகர்  7000 சப்தகாண்டம்  சித்தர்  போகர்
Free Tamil eBooks
4 தேரையர்  காப்பியம்  பொருளுடன்  தேரையர்
Free Tamil eBooks
34MB
5 தேரையர்  கரிசாலை  தேரையர்
Free Tamil eBooks
6 சித்தர்  வைத்தியம்  துடிசை கிழார்  Free Tamil eBooks
7 வைதியனுகுல  ஜிவரட்சனி  அங்கமுத்து  Free Tamil eBooks
8 அன்றாட வாழ்வில் சித்த மருத்துவம்
மருத்துவர் காசி பிச்சை
Free Tamil eBooks
9 மறந்து விட்ட சித்த மருந்துகள்
மருத்துவர் காசி பிச்சை Free Tamil eBooks
10 விவரிக்கப்பட்ட சித்த மருத்துவம் -படங்களுடன்

Free Tamil eBooks
11 வர்மக்கலை
கே .காளிதாசன்
Free Tamil eBooks
12 சித்த மருத்தவ மூலிகைகள்

Free Tamil eBooks
13 சரக சம்ஹிதை

Free Tamil eBooks
14 ஆயுர்வேத வரலாறு

Free Tamil eBooks

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தகளை சோதனை செய்வது எப்படி -இ புத்தகம்

ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தகளை சோதனை செய்வது எப்படி -இ புத்தகம்
Protocol for testing ayurvedic,siddh unani drugs- e book


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்யPost Comment