ஆஸ்த்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஸ்த்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 15, 2014

அமுக்ரா சூர்ணம் சாப்பிட்டால் பாலுணர்வு அதிகமாகுமா ?

அமுக்கராச் சூரணம்
சித்த வைத்திய திரட்டு


ஆதாரப் பாடல் :
                “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
                   குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
                   தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
                   தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
                  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
                 விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
                நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
                நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
               செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
                          -       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360

சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                 0.39 %                   சிறுநாகப்பூ                  0.79 %                  
ஏலம்                                 1.57 %                   மிளகு                              3.15 %
திப்பிலி                           6.30 %                   சுக்கு                                   12.60 %
அமுக்கரா வேர்       25.20 %                 சர்க்கரை                        50.00 %


அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்

குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

சித்த அமுக்ரா சூரணம் என்று கடைகளில் கிடைக்கும் சித்த மருந்தும் -அஸ்வகந்த  சூர்ணம் என்று கிடைக்கும் ஆயுர்வேத மருந்தும் ஒன்றில்லை ..

உடல் பலஹீனத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் வெட்டை சூட்டை தணிக்கும் .

உடலுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாது குன்ம நோய் -உடல் எரிச்ச்சலை போக்கும் 

ஒருதடவைக்கு  கிட்டதட்ட பத்து கிராம் எடுத்து உபயோகிப்பது நல்லது ..

கை கால் வலிகளுக்கும் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தரும் 

குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட்டால் மட்டுமே பலனை உணர முடியும் .

பல பற்ப சிந்தூரங்களுக்கு கலந்து கொடுக்கும் தாய் மருந்தாக -Base மருந்தாக இதனை பயன்படுத்தலாம் .

பாலியல் உணர்வை வளர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை 

இதில் கலந்திருக்கும் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மட்டுமே 




Post Comment

புதன், ஏப்ரல் 17, 2013

உடல் இளைத்த க்ஷய நோய்க்கும் -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa


உடல் இளைத்த க்ஷய நோய்க்கும்  -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa
                                                                                                
(ஆதாரம் -பஸவராஜீயம் - க்ஷயப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           20 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            பலகரை பற்பம் – வராட பஸ்ம         80 கிராம்
4.            மண்டூர பற்பம் – மண்டூர பஸ்ம        80           “
5.            அயபற்பம் – லோஹபஸ்ம             40           “

சேர்த்து பின்னர்

1.            மூக்கரட்டை வேர் கஷாயம் – புனர்னவ கஷாய
2.            பிரண்டைச்சாறு – அஸ்திஸம்ஹிர்த ரஸ
3.            ஆடாதோடைச்சாறு – வாஸாபத்ர ரஸ
4.            கொடிவேலி வேர் கஷாயம் – சித்ரமூல கஷாய
5.            நீர்பிரம்மிச்சாறு – நிர்ப்ரஹ்மீ ஸ்வரஸ
இவைகளைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து கோலி போன்ற உருண்டைகளாக்கி வெய்யிலில் உலர்த்தவும். உலர்ந்தபின் அவற்றை அகலிலிட்டுச் சீலை மண்பூசி குக்குடபுடத்தில் புடமிடவும். ஆறிய பின்னர் அவ்வுருண்டைகளை நன்கு பொடித்து நிறுத்து அதன் எடைக்குச் சமம் பொடித்துச் சலித்த மிளகுச் சூர்ணம் சேர்த்து அவைகளை

1.            வெற்றிலைச்சாறு – நாகவல்லி பத்ரஸ்வரஸ
2.            இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ
3.            கரிசாலைச்சாறு – ப்ருங்க ராஜ ஸ்வரஸ
4.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீஸ்வரஸ
5.            கொட்டைக் கரந்தைச்சாறு – ஹப்புஸ ஸ்வரஸ
6.            முருங்கைப்பட்டைக்கஷாயம் – சிக்ருத்வக் கஷாய
7.            திரிபலாகஷாயம் – த்ரிபலா கஷாய
இவற்றைக் கொண்டு தனித்தனியே ஒரு நாள் நன்கு ஊற வைத்து அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயம் (க்ஷய), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), ரத்தக் குறைவு (ரக்தால்பத), காங்கை (அதிக அளவில் உடல் கொதித்தல்), ஜீரணக் கோளாறுகள்.

நாட்பட்ட சுரத்தில் அமிர்தாரிஷ்டத்துடனும், இருமல், இழைப்பில் வாஸாரிஷ்டத்துடன் மட்டுமோ (அ) வாஸாரிஷ்டம், கற்பூராதி சூரணத்துடனும், க்ஷயத்தில் தாளீசாதி சூர்ணம் (அ) சீதோபலாதி சூர்ணத்துடனும், பாண்டு, காமாலை, வீக்கம் போன்ற நிலைகளில் முக்கியமாக புனர்னவாஸவத்துடனோ (அ) மூக்கிரட்டை கஷாயத்துடனோ தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 

காச  நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
இரத்த சோகையை அடியோடு அழிக்கும் ..
நாள்பட்ட சுரத்தினால் வரும் பலஹீனத்தை சரி செய்யும் -தெம்பு தரும் .


Post Comment

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

நடக்க இயலாத குழந்தைகளையும் நடக்க ஆற்றல் தரும் -குமார கலயாணக இரசம் -Kumara Kalyanaka Ras


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்டிடும் -குமார கல்யாண ரஸ -KUMARA KALYANA RAS

 (ref-பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.      இரசச் செந்தூரம் – ரஸ ஸிந்தூரம்     50 கிராம்
2.      முத்து பற்பம் – மௌக்திக பஸ்ம       50           “
3.       தங்க பற்பம் – ஸ்வர்ண பஸ்ம         50           “
4.      அப்பிகர பற்பம் அப்ரக – பஸ்ம          50           “
5.      அய பற்பம் – லோஹ பஸ்ம           50           “
6.        பொன்னிமிளை பற்பம் – ஸ்வர்ண 
                           மாக்ஷிக பஸ்ம  50           “


இவைகளைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச் சாறு (குமாரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் இரு வேளைகளுக்கு தேன் அல்லது பாலுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

குழந்தைகளின் நோய்கள் (பால ரோக), பேதி (அதிஸார), காமாலை (காமால), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), பக்கரோக, வாந்தி (சர்தி), ஜீரணக் கோளாறுகள், இளைப்பு.

                இது முக்கியமாக குழந்தைகளுக்கேற்படும் மேற் கூறிய நிலைகளில் சிறப்பான பலனளிக்க வல்லது.  

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..

எப்போது பார்த்தாலும் உடம்பு சுகம் இல்லை என்று குழந்தையை காட்டும் பெற்றோருக்கு இந்த மருந்து ஒரு நல்ல தீர்வு 

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி -இந்த மருந்தை -ரஜன்யாதி சூர்ணம் ,அரவிந்தாசவம்  போன்ற மருந்துடன் தர நல்ல பலன் கிடைக்கும் 

தங்கம் சேர்ந்திருப்பதால் சற்று விலை அதிகம் ..

பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது ..

ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு தருவது நல்லது ..

கோழி கறி ,சாக்கலேட்டுகள் தவிர்த்தல் வேணும் ..

ஒரு வயது ஆகியும் நடக்காத குழந்தைக்கு (இந்த நோயை ஆயுர்வேதம் பக்க ரோகம் என்கிறது ) இந்த மருந்தை பிரம்மி கிருதம் போன்ற மருந்தோடு தர வேண்டும் ..

கால் வலு இல்லாத குழந்தை ,எலும்பில் தெம்பு இல்லாத குழந்தை ,ஆட்டிசம் போன்ற நோய் உள்ள குழந்தைக்கும் தரலாம் ..


Post Comment

வியாழன், ஜனவரி 17, 2013

பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)


பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)
(ref-பஸவராஜீயம் - ஸன்னிபாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           30 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       50           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.           சுத்தி செய்த மனோசிலை (பொடித்தது) – ஷோதித மனசில   60 கிராம்
4.            தாமிர பற்பம் – தாம்ரபஸ்ம                              40           “
5.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம      70           “
6.            சுத்தி செய்த தாளகம் (பொடித்தது) – ஷோதித ஹரிதாளக  90           “
7.            பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) – ஹிங்கு           10           “
8.            சுத்தி செய்த நாபி (குறிப்பிட்டுள்ள சாறுகளில் ஒன்று சேர்த்து
அரைத்து விழுதாக்கியது) – ஷோதித வத்ஸநாபி         120         “

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

9.            கொடிவேலி வேர் – சித்ரக                                90           “
10.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்        100         “
11.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்       100         “
12.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                      100         “
13.          சுக்கு – சுந்தீ                                           120         “
14.          மிளகு – மரீச்ச                                        120         “
15.          திப்பிலி – பிப்பலீ                                      120         “
16.          வசம்பு – வச்சா                                        10           “

இவைகளின் சூரணமும் சேர்த்து நன்கு கலங்க அரைத்துப் பின்னர்,

1.            இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ
2.            கொடிவேலிவேர் கஷாயம் – சித்ரக கஷாய
3.            எலுமிச்சம் பழச்சாறு – ஜம்பீர ஸ்வரஸ
4.            பூண்டுச்சாறு – லசுன ஸ்வரஸ
5.            குந்துமணி வேர் கஷாயம் – குஞ்ஜாமூல கஷாய
6.            முருங்கப்பட்டை கஷாயம் – சிக்ருத்வக் கஷாய
7.            எருக்கன் வேர் கஷாயம் – அர்க்கமூல
8.            கலப்பைக் கிழங்குச் சாறு – லாங்லிஸ்வரஸ
9.            சிறு செருப்படைச் சாறு – ஹம்ஸபாடீஸ்வரஸ
10.          நொச்சியிலைச் சாறு – நிர்க்குண்டீஸ்வரஸ
11.          வெற்றிலைச் சாறு – நாகவல்லி பத்ர ஸ்வரஸ
12.          அழிஞ்சில் வேர்ச் சாறு – அங்கோலமூல ஸ்வரஸ
13.          முருங்கை வேர்க் கஷாயம் – சிக்ருமூல கஷாய
14.          பஞ்சகோல கஷாயம் – பஞ்சகோல கஷாய
15.          பெருபஞ்சமூல கஷாயம் – மஹாபஞ்சமூல கஷாய

இவைகளைத் தனித்தனியே உபயோகித்து ஒவ்வொன்றைக் கொண்டு மூன்று மணி நேரம் அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

இதை மிகுந்த கண்காணிப்புடன் உபயோகிக்க வேண்டும்

அளவும் அனுபானமும்:     

ஒரு மாத்திரை வீதம் இரு வேளைகளுக்கு இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 
டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் (ஜ்வர), ஜன்னி , இரைப்பிருமல் (தமகச்வாஸ), அமிர்தாரிஷ்ட, தசமூலாரிஷ்ட அல்லது கிராதாரிஷ்டத்துடன் இதனைச் சேர்த்துத் தருவது வழக்கம்.

தெரிந்த கொள்ள வேண்டிவை 
  1. பத்தே நிமிடத்தில் எந்த காய்ச்சலின் வெப்பத்தையும் வெகு வேகமாக குறைக்கும் அற்புத மருந்து 
  2. காய்ச்சல் எந்த நோயினால் வந்திருந்தாலும் இந்த மருந்து அறுபத மருந்து 
  3. சர்வ காய்ச்சல் நிவாராணி இது 

                

Post Comment