செவ்வாய், டிசம்பர் 13, 2011

அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam


அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அவுரிச்சாறு நீலிஸ்வரஸ                  800 கிராம்
2.            கரிசாலைச்சாறு ப்ருங்கராஜஸ்வரஸ        800         “
3.            முடக்கத்தான் சாறு இந்த்ரவல்லீரஸ        800         “
4.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீரஸ            800         “
5.            வெள்ளாட்டின் பால் அஜக்ஷீர               800         “
6.            தேங்காய்ப்பால் நாரிகேளக்ஷீர              800         “
7.            எருமைப்பால் மகிஷக்ஷீர                  800         “
8.            பசுவின் பால் கோக்ஷீர                     800         “
9.            நல்லெண்ணெய் திலதைல                 800         “

இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன்

1.            அதிமதுரம் யஷ்டீ              35 கிராம்
2.            குன்றிமணி (குண்டுமணி) குஞ்ஜா     35           “

இவைகளை மேலே கூறிய பால் வகைகளில் சிறிதுவிட்டு அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டாவும். பின்னத் இறுதியாக அஞ்சனக்கல் (அஞ்ஜன) 35 கிராம் பொடித்துப் பாத்திர பாகமாக போட்டுக் கலக்கி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    சம்பிரதாயத்தில் அஞ்சனக்கல் ¼ பங்கு உபயோகிக்கப்படுகிறது.


பயன்படுத்தும் முறை:       

தலைக்குத் தேய்க்கும் படியான (சிரோப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்: நரை (காலித்ய), வழுக்கை (பாலித), முடியுதிரல் (கேஸபாத), முடிவளர்ச்சி குன்றல், முடியுடர்த்தியின்மை, கண்ணெரிச்சல் (நேத்ரதாஹ), சூடு, தொடர்ந்து உபயோகிக்க உடல், முக்கியமாகக் கண் குளிரும். ஓரளவுக்கு முடியும் கருமையடையும், தலைமுடித் தைலமாக உபயோகிக்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. வழுக்கை வராமல் தடுக்கும்
 2. இளநரை போக்கும்
 3. முடியின் வேருக்கு ஆற்றல் தரும்
 4. முடிக்கு போஷாக்கு தரும்
 5. பல கம்பெனிகள் தங்களது பிரான்ட் நேமுடன் இந்த தைலம் தயாரிக்கிறார்கள் -ஆனால் அதில் உள்ள பார்முலாவே வேறு ..பல பொய்யான கம்பெனிகள் நீலி பிருங்காதி தைலம் என்று -ஆயுர்வேத சித்த புத்தகம் சொல்லாத பார்முலாவை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..
 6. டிவிக்களில் விளம்பரத்தில் வரும் அந்த தைலம் ,இந்த தைலம் -அமேசான் காட்டு மூலிகை என்று அண்ட பொய் ஆகாச பொய் மூட்டைகளை சொல்லி விற்கப்படும் மூலிகை தைலத்தை விட இந்த தைலம் ஆயிரம் மடங்கு  அற்புதமானது
 7. பல கம்பெனிகள் நல்லெண்ணையில் இந்த தைலம் செய்யாமல் -தேங்காய் எண்ணையில் செய்கிறார்கள் -தேங்காய் எண்ணையில் செய்யப்படும் நீலி பிருங்காதி தைலத்தை விட நல்லெண்ணையில் செய்த தைலமே ஆற்றல் மிக்கது ..பலன் தரக்கூடியது .
 8. முடி கொட்டுவதை நிறுத்தும் ,முடி நன்றாக வளர செய்யும்
 9. ஆட்டுப்பால் ,மாட்டுப்பால் ,எருமைப்பால் -சேருவதால் -தைலம் நல்ல வாசனை இருக்காது என்றாலும் துர்நாற்றம் அடிக்காது
 10. கண்ணெரிச்சல் ,உடல் சூடு தணிக்க செய்யும்
 11. குளிப்பதற்கு முன்னும் ,குளித்த பின்னும் இந்த தைலம் ஆறு மாத காலம் உபயோகித்து வர நிச்சயம் நல்ல பலன் தரும்
 12. ஆண் ,பெண் ,குழந்தைகள் என்று எல்லோரும் உபயோக்கலாம்.
 13. நிறைய குளிர்ச்சி என்றாலும் சளி பிடிக்காது -பயம் வேண்டாம் ..
 14. எனது அனுபவத்தில் ஆயுர்வேத சாஸ்திர புத்தகம் சொல்லும் பல நூறு முடி வளர வைக்கும் மூலிகை தைலங்களில் எல்லோருக்கும் பயன்படக்கூடியது இந்த தைலம்..
 15. நண்பர்களே -பக்கத்தில் உள்ள கேட்கட்டில் எனது மருத்துவமனை விலாசம் ,எனது உண்மை பெயர் வெளிவிட வேண்டுமா ? என்று வாக்கு எடுக்கிறேன் ..உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள் ...
குறிப்பு
உள்ளுக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
வழுக்கையில் முடி முளைக்கும் என்று யார் விளம்பரம் பண்ணினாலும் நம்பவே நம்பாதீர்கள் -அது பொய் (ஆனால் இந்த தைலம் நல்ல வழுக்கை ஏற்பாடாமல் தடுக்கும் ,முடி வளர வைக்கும் )


Post Comment

23 comments:

கருத்துரையிடுக