ஞாயிறு, டிசம்பர் 11, 2011

எலும்பை -சதையை வலுப்படுத்தும் -தைலம்-மாஷ தைலம் -Masha thailam


எலும்பை -சதையை வலுப்படுத்தும் -தைலம்-மாஷ தைலம்   Masha thailam                                                                 
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதரோகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            உளுத்து மாஷ            1.600 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல             6.400 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            வில்வமூலம் பில்வமூல        250 கிராம்
2.            முன்னைவேர் அக்னிமாந்த      250         “
3.            பெருவாகைவேர் ஸ்யோனாக    250         “
4.            குமிழ்வேர் காஷ்மரீ            250         “
5.            பாதிரிவேர் பாடாலா           250         “
6.            ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ         250         “
7.            மூவிலை சாலிபர்ணீ          250         “
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ     250         “
9.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ    250         “
10.          நெருஞ்சில் கோக்ஷூர         250         “
11.          தண்ணீர்                   20.000 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 5.000 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்

1.            வெள்ளாட்டு இறைச்சி அஜமாம்ஸ    1.500 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                   6.000 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 1.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

இனி மேலே கூறியுள்ளபடி தயாரித்த

1.            உளுந்துக் கஷாயம் மாஷகஷாயம்          1.500 லிட்டர்
2.            தசமூலகஷாயம் தசமூல கஷாயம்         5.000        “
3.            வெள்ளாட்டு இறைச்சிச்சாறு அஜமாம்ஸரஸம்    1.500      “
4.            பசுவின் பால் கோக்ஷீர                  3.200 கிலோ கிராம்
5.            நல்லெண்ணெய் திலதைல            0.800                     “

                இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            பூனைக்காலி வேர் ஆத்மகுப்தமூல          12.500 கிராம்
2.            ஆமணக்குவேர் எரண்ட மூல               12.500        “
3.            சதகுப்பை ஸதபுஷ்ப                 12.500        “
4.            இந்துப்பு ஸைந்தவலவண            12.500        “
5.            கல்லுப்பு ஸ்வர்ச்சலவண             12.500        “
6.            கருப்பு உப்பு பிடலவண                    12.500        “
7.            கீரைப்பாலை ஜீவந்தி                 12.500        “
8.            காகோலீ காகோலீ                   12.500        “
9.            க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ           12.500        “
10.          மேதா மேதா                        12.500        “
11.          மஹாமேதா மஹாமேதா                  12.500        “
12.          காட்டுளுந்து வேர் மாஷபர்ணீ              12.500        “
13.          காட்டுப்பயறு வேர் முட்கபர்ணீ             12.500        “
14.          ரிஷபகம் ரிஷபக                          12.500        “
15.          ஜீவகம் ஜீவக                        12.500        “
16.          அதிமதுரம் யஷ்டீ                    12.500        “
17.          மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                12.500        “
18.          செவ்வியம் சவ்ய                          12.500        “
19.          கொடிவேலி வேர் சித்ரக                   12.500        “
20.          குமிழ்வேர் காஷ்மரீ                  12.500        “
21.          சுக்கு சுந்தீ                           12.500        “
22.          மிளகு மரீச்ச                        12.500        “
23.          திப்பிலி பிப்பலீ                      12.500        “
24.          மோடி பிப்பலீ மூல                  12.500        “
25.          சித்தரத்தை ராஸ்னா                 12.500        “
26.          அதிமதுரம் யஷ்டீ                    12.500        “
27.          இந்துப்பு ஸைந்தலவலண            12.500        “
28.          தேவதாரு தேவதாரு                 12.500        “
29.          சீந்தில்கொடி குடூசி                   12.500        “
30.          கோஷ்டம் கோஷ்ட                  12.500        “
31.          அமுக்கராக்கிழங்கு அஸ்வகந்தா       12.500        “
32.          வசம்பு வச்சா                        12.500        “
33.          கிச்சலிக்கிழங்கு ஸட்டீ                    12.500        “
                இவைகளை உப்புகள் நீங்கலாக அரைத்துக் கல்கமாக்கிக் கலந்து உப்புகளைப் பொடித்துப் போட்டுக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    

 செய்முறையில் குறிப்பிட்டுள்ள அளவில் சரக்குகளை எடுத்து ஒன்றாக்கி சுமார் 2 பங்கு தண்ணீரில் கஷாயம் வைத்து ¼ பங்கு வற்றியவுடன் வடிகட்டி உபயோகிக்கும்படி நூலில் குறிப்பிடப் பட்டிருப்பினும், சரக்குகளின் தன்மையை உத்தேசித்துத் தனித் தனியே கஷாயமாக்கிச் சேர்ப்பது தான் வழக்கம்.


பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். சிலர் 6 கிராம் அளவில் இதனை வெந்நீர் அல்லது சூடான பாலுடன் உள்ளுக்குத் தருவதுண்டு

தீரும் நோய்கள்:  

முகவாதம் (அர்திதம்), தலை நடுக்கம் (சிரகம்ப), கைநடுக்கம் (ஹஸ்தகம்ப), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), தோள் பகுதி சூம்பிப் போதல் (பாஹூஸோஷ), தோள்பட்டை வாதம் (அவபாஹுக), குள்ளத்தன்மை (குப்ஜரோக), உடம்புவலி (அங்கமர்க) போன்ற பலவித வாத ரோகங்கள், செவிட்டுத்தன்மை (பாதிர்ய), காதிரைச்சல் (கர்ணநாத), நோய் முதலியவற்றால் வற்றிப்போகும் உடலுறுப்புகளை (Mascular atrophy) புஷ்டியாக்குகிறது. நஸ்யம், பஸ்தி போன்ற உபயோகங்களுக்கும் பயனாகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை -

  1. எங்கெல்லாம் சதை ,எலும்புகள் வலு இழந்து உள்ளதோ அங்கெல்லாம் இந்த தைலம் சிறந்த பலன் தரும்
  2. உடலுக்கு வலு தரும் -ஆற்றலை பெருக்கும்
  3. ஆமவாதம் போன்ற -நீர்வாத நோய்களில் -இந்த தைலம் பயபடுத்தினால் நோய் அதிகரிக்கும் -வலி மிகவும் அதிகமாகும் -எனவே தக்க கவனம் தேவை
  4. மாஷ தைலம்  நரம்புக்கு தெம்பூட்டும் 
  5. மயோபதி என்னும் சதை சிதைவு நோயில் இந்த மருந்து சதைகளை மேலும் சிதைய விடாமல் பாதுகாக்கும்
  6. எலும்பு உடைந்தால் -முறிவெண்ணையுடன் சேர்த்து போட சீக்கிரம் எலும்பு கூடும்
முடிந்தால் பக்கத்தில் உள்ள கேட்கட்டில் ஒட்டு போடுங்கள்






Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நன்றி நண்பரே ,
எலும்பை -சதையை வலுப்படுத்தும் பயன்படும் அற்புத மருந்து
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக