பிடிப்பை சரி செய்ய ஏற்ற தைலம் -குப்ஜப்ரஸாரணீ
தைலம்
(பைஷஜ்யரத்னாவளி – வாதவ்யா த்யதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. முதியார் கூந்தல் கஷாயம் – ப்ரஸாரணீ கஷாயம் 12.800 கிலோ
2. நல்லெண்ணெய் – திலதைல 12.800 “
3. காடி – ஆம்லகாஞ்சிக 12.800 “
4. பசுவின் பால் – கோக்ஷீர 25.600 “
5. தயிர் – ததீ 12.800 லிட்டர்
இவைகளை ஒன்று கலந்து அத்துடன்
6. கொடிவேலி வேர் – சித்ரக 100
கிராம்
7. சேராங்கொட்டை (சுத்தி செய்தது) – ஷோதித பல்லாதக 100 “
8. திப்பிலி மூலம் – பிப்பலீ மூல 100 “
9. இலுப்பைக்கட்டை – மதுக 100 “
10. இந்துப்பு – ஸைந்தவலவண 100 “
11. சிற்றாமுட்டி – பலாமூல 100 “
12. சதகுப்பை – ஸதபுஷ்ப 100 “
13. தேவதாரு – தேவதாரு 100 “
14. அரத்தை – ராஸ்னா 100 “
15. யானைத் திப்பிலி – கஜபிப்பலீ 100 “
16. முதியார் கூந்தல்வேர் – ப்ரஸாரணீ மூலம் 100 “
17. சடாமாஞ்சில் – ஜடாமாம்ஸீ 100 “
இவைகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு
விழுதாக அரைத்துக் கலந்து கொதிக்க வைத்துப் பதத்தில் இறக்கி வடிகட்டி
பத்திரப்படுத்தவும்.
பயன்படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
தாடைப் பிடிப்பு (அ) செயலிழத்தல் (ஹனுஸ்தம்ப (அ)
ஹனுக்ரஹ), இடுப்புப்
பிடிப்பு (அ) செயலிழத்தல் (கடீக்ரஹ / கடீஸ்தம்ப), பேராசன நரம்பு வலி (க்ருத்ரஸி), நொண்டி நொண்டி நடத்தல் (காஞ்ஜா), குள்ளத்தன்மை (குப்ஜ), முடத்தனம் (பாங்குத்வ) போன்ற பலவித வாதநோய்கள்
(வாத ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பிடிப்புகளுக்கு ஏற்ற தைலம் இது
- மருந்து கம்பெனிகள் இந்த மருந்தை தயாரிப்பதாக தெரிய வில்லை ..வெகு சில கம்பெனிகளே இதனை தயாரிக்கின்றன
- சுளுக்கு ,உளுக்கு,வீக்கம் -போன்றவற்றிக்கும் பயன்படுத்தலாம்
0 comments:
கருத்துரையிடுக