வெள்ளி, டிசம்பர் 26, 2014

சென்னையில் இலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம் ( வருகிற ஞாயிறு 28/12/2014 அன்று )

திருத்தவே முடியாதா ?


குடி / புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தவே முடியாதா ?

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது சுவை ,புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது . போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி  போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து ,செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு வாழ்க்கையாக - சம்பாதிப்பது ,சந்தோஷத்திற்க்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது .குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம் . குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கு .குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன ?. சுழலும் இந்த புயலில் சிக்கியவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று  பேதை பெண்களுக்கும்  /குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான் .

என்ன செய்தால் இந்த  நிலை மாறும் ?

குடியை நிறுத்த ஏன் எனது குடும்ப மருத்துவர் மருந்து தராமல் போதை ஒழிப்பு மையத்திற்கு  அனுப்புகிறார் ?

போதை ஒழிப்பு மையத்திற்கு எத்தனை நாள் சிகிச்சை பெற தங்கி இருக்க வேண்டும் ? வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா ? அவர் தங்கி சிகிச்சை பெற வருவாரா ?முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே ? ஆனாலும் திருந்தவில்லையே ?.

தாயத்து கட்டினால் சரியாகுமோ ? ஜோசியர் சொன்ன பரிகாரங்கள் பலன் தருமோ ?

என்ன படித்தார் என்றே தெரியாத போலி மருத்துவரிடம் மருந்தை வாங்குவதா ?

டிவியில் வரும்  விளம்பரங்களால் கவரப்பட்டு டாக்டர் இல்லாமல் வீட்டிற்க்கே வந்து பெறப்படும் போலி  மருந்துகளால் பலன் இருக்குமா ? இந்த மருந்துக்கு யார் பொறுப்பு ? அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன் இல்லையே ? யாரிடம்  சந்தேகம் கேட்பது ? விளம்பரத்தில் நடித்த நடிகரிடமா ?முறையாக மருத்துவம் படித்த மருத்துவரிடம் குடி போதைக்கு மருந்து இல்லையா ? பக்க விளைவுகள் உண்டா ? பத்தியம் உண்டா ? மருந்து வேலை செய்யுமா ? ஆங்கில மருந்து disulfiram என்ற மருந்து இதில் இல்லை என்று சான்றிதழ் உண்டா ? உடனடியாக வேலை செய்யுமா ?ஆங்கில மருந்தோடு இந்த மருந்தை சேர்த்து தரலாமா ?சாப்பாட்டில் கலந்து மருந்தை தர முடியாதா? செலவு அதிகம் ஆகுமா ? நிறைய நாட்கள் கொடுக்க வேண்டி வருமா ?


இந்த கேள்விகளுக்கு  பதிலை நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் உள்ள MD (Siddha)., BAMS., BSMS., BHMS., M.Sc(Psychology).,PG Dip Guidance & Counsling  படித்த மருத்துவ குழுவிடம் நாம் கேட்டு பெறலாம்.

 
எங்களால் திருத்த முடியுமே எளிதாக !!!!

உணவை போன்று ,நிறம் மணம் சுவை இல்லாத, எந்த உணவிலும் கலந்து தரக்கூடிய எளிமையான மருந்து. இதை குழந்தைகள்/ கர்ப்பிணிகள் சாப்பிட்டாலும் எந்த பக்க விளைவுகளை அவர்களுக்கும் ஏற்படுத்தாது .இந்த இயற்கையான இந்த  மருந்துகள்  டானிக் வடிவில், பொடி மாதிரி , உப்பு மாதிரி , சர்க்கரை மாதிரி, கோதுமை மாவு மாதிரி ,சொட்டு மருந்து மாதிரி பல வகைகளில் ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் கிடைக்கும். குடிப்பவர்க்கு வெறுப்பை மட்டும் உண்டாக்கிடும் இந்த மருந்து  எந்த பக்க விளைவுளையும்  ஏற்படுத்தாது . புகை பழக்கம் மாற சிகரெட் பிடிப்பவர்க்க்கு டீயில் கலந்து தரக்கூடிய சொட்டு மருந்தாக  அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தரலாம். நிக்கோடின் இல்லாத மூலிகை சிகரெட்டும் உள்ளது .  பல வகைகளில் கிடைக்கும் இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் படி பெறலாம். எந்த நோய்க்கு ஆங்கில மருந்தை சாப்பிட்டாலும் அதனுடன் இந்த மருந்தை சேர்த்து தர முடியும் .மிக குறைந்த நாட்களில் வெகு வேகமாக வேலை செய்யகூடிய ,விலை குறைவான தரமான சிகிச்சைக்கும் ,மருந்துகளை பெறவும் ,ஆலோசனை பெறவும்  


தொடர்பு கொள்ள cell 90 4333 6444 .
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம்
4,துரை சாமிநகர் முதல் தெரு ,கீழ் கட்டளை ,சென்னை 117.

 cell 90 4333 6444.


வருகிற ஞாயிறு  (28/12/2014 )  இலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம் நடை பெற உள்ளது ..உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த விஷயத்தை தெரிய படுத்துங்கள்  

மது பழக்கத்தை ஒழிப்போம் ! புகை பழக்கம் மறக்க உதவுவோம் !!! உயிர்களை காப்பாற்றுவோம் !!!


Post Comment

வெள்ளி, டிசம்பர் 19, 2014

ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை

ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை

எல்லா மருத்துவ முறைகளையும் முயற்சி செய்து தோற்று போய் மருந்துகளோடு வாழ்கையை கஷ்டப்பட்டு வாழ்த்துகொண்டு இருப்பவர்களுக்கு தீர்வு உள்ளதா ? அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்ற நோய்களுக்கு மருந்து இல்லாமல் நோயை குணமாக்க முடியுமா ? ,வாழ்க்கை முறை மாறி போனதால் வந்த  நோய்களுக்கு தீர்வு தேடி மனது அலைகிறதா ? இந்த கேள்விக்கு ஒரே பதில் ஹிஜாமா தெரபி .


ஹிஜாமா ( حجامة  ) என்றால் என்ன?
ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

நபி ( ஸல்அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார், நபி(ஸல்) அவர்கள் மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளதுஎன வந்துள்ளது (புஹாரி – 5680).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)


ஆயுர்வேத ரக்த மோக்ஷனம் என்றால் என்ன ?
ஆயுர்வேதத்தில் சோதன சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் நவீன அறுவை சிகிச்சையின் தந்தையுமான ஆயுர்வேத ஆச்சார்யார் சுசுருதர் அவர்கள் பரிந்துரைக்கும் ரக்த மோக்ஷனம் என்னும் இரத்தம் வெளியேற்றும் சிகிச்சையும் இதுவும் ஒன்று தான்.  

இரத்தம் சீர் கேடு அடையுமா ?
எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இரத்தத்தை பாதிக்கிறது.  ஆயுர்வேதத்தில் பித்தத்தின் மறு உருவாக இரத்தம் கருதப்படுகிறது. அதிகமான நோய்களுக்கான காரணம் இரத்தத்தில் உள்ள கோளாறுகள். உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகள் ,அமில காரதன்மையில் ஒரு சம நிலை இல்லாதது ,அதிகமான வேதி பொருட்கள் அடங்கிய மருந்துகள் ,எண்ணை தேய்த்து குளிக்காதது ,இரவு கண் விழிப்பு என்று பல்வேறு காரணத்தால் இரத்தம் மென் மேலும் கேடு அடைகிறது .அதை தான் கரும் பித்தம் தான் அநேக நோய்க்கு காரணம் என்று யுனானி மருத்துவம் சொல்கிறது ,பித்தம் மிகுந்த நோய்களே இரத்தம் கேடு அடைய செய்யும் காரணம் என்று ஆயுர்வேத மருத்துவமும் ,சித்த மருத்துவமும் வழி மொழிகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளே பெரிய நோய்க்கு காரணம். நிண நீர் ஓட்ட பாதிப்பே பல கட்டிகளையும் ,கேன்சர் போன்ற நோய்களையும் உறுவாக்குகிறது ,வளர்சிதை மாற்றமே (மேட்டபாலிக் நோய்கள் ) பெரிய நோய்களை உருவாக்குகிறது .உயிர் சக்தி இல்லாத-எதிர்ப்பு சக்தியில்லாத இரத்தமே ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாசிஸ் ,முடக்கு வாதம் ,தைராய்ட் ,மேலும் பெயர் தெரியாத நோய்களை உருவாக்குகிறது.


ஏன் இரத்தம் வெளியேற்ற வேண்டும் ?

மனிதனுக்கு சராசரியாக ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது .120  நாட்களுக்கு ஒரு முறை புதிதாக இரத்தம் உருவாகி கொண்டே இருக்கிறது. கெட்டுபோன இரத்தத்தை சுத்தம் செய்ய நமது கழிவு உறுப்புகள் சிறுநீரகம் ,ஜீரண உறுப்புகள்  முக்கியமாக கல்லீரல் ,நுரையீரல் ,தோல்  போன்ற உறுப்புகள் பிறந்தது இடைவிடாது வேலை செய்து கொண்டே இருக்கிறது. இந்த முக்கிய உறுப்புகளே கழிவு நீக்கம் செய்யாமல் பாதிப்படையும் போது ,வேலை செய்ய சிரமப்படும் போது கெட்டுபோன இரத்தம் கழிவு நீக்கம் எப்படி நடக்கும்?. இயற்கையான முறைபடி கழிவு நீக்கம் நடை பெறாத போது அதற்கென்று முறையாக இரத்தம் வெளியேற்றுவதால் –ஹிஜாமா தெரபி செய்வதால் பெரிய நோய்களையும் நாள்பட்ட நோய்களையும் குணமாக்க முடியும்

ஹிஜாமா (   حجامة     )    செய்தால் எற்ப்படும் பயன்கள்:
.
 • இந்த ஹிஜாமா ( குருதி (அ) இரத்த உறுஞ்சுதல் மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து  Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
 • இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.
 • ஹிஜாமா (حجامة ) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் ( Prevention better than cure).
 • ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, மன நோய்கள் போன்ற  நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
 • ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 85 % நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும்.
 • நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிக நச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் ( Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் ( Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.
 • ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய  ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை ( Natural Biological Balance)  மேம்படுத்துவதன் மூலம் பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
 • நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை என்று பத்து மாதம் முதல் ஒரு வருடம் செய்வது நோயை முற்றிலும் விரட்டும்
 • இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது.
 • இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells – RBC, WBC ), இரத்தப்புரதங்கள் ( Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.எந்த நோய்களுக்கு ஹிஜாமா தெரபி நல்ல பலன் தரும் ?

தாங்க முடியாத வலிகள் ,வீக்கம் , மூட்டு வலிகள் ,கழுத்து, முதுகு  எலும்பு தேய்மானம் ,தண்டுவட நோய்கள் , டிஸ்க் பிரச்னைகள் கௌட்,முடக்கு வாதம் ,தலை வலி ,மைக்ரைன் , மார்பக கட்டிகள் ,கருப்பை கட்டிகள் ,கேன்சர் ,பெயர் தெரியாத கட்டிகள் ,அலோபீசியா என்னும் வழுக்கை ,தைராய்ட், ஹார்மோன் கோளாறுகள் ,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம் ,பக்க வாதம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டு ,ஆண்மை குறைவு ,தூக்கமின்மை ,மன அழுத்தம் ,நரம்பு தளர்ச்சி, ஆறாத புண் , ,புகை பழக்கம் ,குடிநோய், தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு இந்த ஹிஜாமா , கப்பிங் தெரபி ,கெட்ட இரத்தம் வெளியேற்றும் பஞ்ச கர்ம சிகிச்சை  நல்ல பலன் தரும் .


நம்முடைய மருத்துவ நிலையத்தில் ஹிஜாமா தெரபியின் சிறப்பம்சம் என்ன ?

மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் , எந்த சிகிச்சை முறையோடும் இணைந்து செய்யப்படும் வலிகள் இல்லாத ,பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை தக்க மருத்துவர்களை கொண்டு செய்யபடுகிறது .இங்கே மட்டும் தான் ஹிஜாமா சிகிச்சை  + ரக்த மோக்ஷன சிகிச்சை + அக்குபஞ்சர் 12 சக்தி ஓட்டம் அறிந்து , Filve Elements தத்துவங்களையும்+ வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து முறையாக சரியான இடங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பான முறையில் செய்யபடுகிறது. 

ஹிஜாமா மருத்துவ சிகிச்சை பெற 
சென்னையில்   90 4333 6444
நமது தலைமை இடத்தில + திருநெல்வேலியில்  96 88 77 8640

குறிப்பு -பெண்களுக்கு பெண் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கபடுகிறது 

.


Post Comment

செவ்வாய், டிசம்பர் 16, 2014

சங்கரன்கோயில் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் ( 14/12/2014 ஞாயிறு )

தொடர்ச்சியாக நாம் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து இலவச நிலவேம்பு  குடிநீர் வழங்கும் முகாம் நடத்தி வருகிறோம் .

காய்ச்சலை தடுக்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற மர்ம காய்ச்சலை விரட்டவும் இலவச நிலவேம்பு குடிநீர் முகாமை   தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் சங்கரன்கோயில் கிளையுடன் இணைந்து நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கிய இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கடந்த ஞாயிறு 14/12/2014  அன்று நடத்தினோம் ..

ஆயிரம் பயனாளிகள் சங்கரன் கோயில் பகுதியிலும் அதனை சுற்றயுள்ள பகுதியுளும் இந்த முகாமில் ஆர்வத்துடன் நிலவேம்பு குடிநீரை பருகி பயன் பெற்றனர் ..

Post Comment

வியாழன், டிசம்பர் 11, 2014

சென்னையில் என்னை சந்திக்க ..

ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைக்கு சென்னையில் என்னை சந்திக்க ..

மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் கடைசி ஞாயிறு எனது மருத்துவ ஆலோசனை சென்னையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்

வருகிற ஞாயிற்று கிழமை ( 14/12/2014)  காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை என்னை சென்னையில் சந்தித்து ஆலோசனை பெறலாம் ..

முன் பதிவுக்கு  90 4333 6444  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் ..

முதுகு தண்டுவட நோய்கள் (தாங்க முடியாத முதுகு வலி ,கழுத்து வலி ,டிஸ்க் பிரச்சனைகள் ,அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ள முதுகு தண்டுவட நோய்கள் ) எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் நமது சிகிச்சை முறையால் ஏக இறைவன் நாடினால் முற்றிலும் குணமாக்க முடியும் ..

மேலும் கீழ் கண்ட நோய்களுக்கு சிறப்பு ஆலோசனை நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

 •  மூட்டு வலி ,
 •  முதுகு தண்டு வட  நோய்கள் 
 • ஆஸ்த்மா அலர்ஜி நோய்கள் 
 • வயிற்று புண் 
 • குழந்தை இன்மை 
 • கிட்னி பெயிலியர் 
 • சிறுநீரக கற்கள் ..

தொடர்புக்கு   90 4333 6444

Post Comment

செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஓராயிரம் பயனுற்ற நமது அடுத்த இலவச நில வேம்பு குடிநீர் முகாம்

 7/12/2014- ஞாயிற்றுகிழமை  அன்று திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் பண்பொழி கிராமத்தில் தாருஸ்லாம் பள்ளி வளாகம் மற்றும் பண்பொழி கிராமத்தில் ஆறு இடங்களில் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும்  SDPI இயக்கத்துடன் இணைந்து காய்ச்சலை தடுக்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது .இந்த முகாமில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகள் இலவசமாக நில வேம்பு  குடிநீரை பருகி பயன் பெற்றனர் .இந்த முகாமில் இலவசமாக நாம் நில வேம்பு குடிநீரை வழங்கினோம் .

Post Comment

செவ்வாய், டிசம்பர் 02, 2014

சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச நில வேம்பு குடிநீர் ..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற காய்ச்சலுக்கும் ,மர்ம காய்ச்சலுக்கும் அரு மருந்தாகும் நில வேம்பு குடிநீர் கிட்டத்தட்ட மூன்று வருட காலமாக காய்ச்சல் என்று கேட்பவர்களுக்கு நமது தலைமை மருத்துவ மனையில் வழங்கி வருகிறோம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே ..
                                 
தீராத காய்ச்சல் என்று நிலவேம்பு குடிநீர் வேண்டும் என்ற முகாம் தெரியாத பல வாசக நண்பர்களுக்கும் தபால் செலவை மட்டும் வாங்கி கொண்டு தமிழகம் முழுவதும் சில வருடங்களாக அனுப்பி வருகிறோம் ..


பொதுவாக இந்த சேவைக்கு நாம் எந்த இயக்கத்தையோ சார்ந்திருக்க வில்லை ,எந்த தனி நபரிடம் இருந்தோ இது வரை இந்த சேவைக்கு உதவி கேட்டதில்லை . இந்த சேவையை பல இயக்க மக்கள் மக்களுக்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள் 

சென்னை மக்களுக்கும் நமது உதவி கிடைக்க நாம் இப்போது இலவச நிலவேம்பு குடிநீரை நமது புதிய கிளை மருத்துவமனை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில்         ( தொடர்புக்கு  தொலை பேசி எண்  90 4333 6444) கடந்த மாத இறுதி முதல் துவங்கி உள்ளோம் .தினமும் இலவசமாக நமது சென்னை மருத்துவ மனையில் நில வேம்பு குடிநீர் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் ..

Post Comment