செவ்வாய், டிசம்பர் 02, 2014

சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச நில வேம்பு குடிநீர் ..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற காய்ச்சலுக்கும் ,மர்ம காய்ச்சலுக்கும் அரு மருந்தாகும் நில வேம்பு குடிநீர் கிட்டத்தட்ட மூன்று வருட காலமாக காய்ச்சல் என்று கேட்பவர்களுக்கு நமது தலைமை மருத்துவ மனையில் வழங்கி வருகிறோம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே ..
                                 
தீராத காய்ச்சல் என்று நிலவேம்பு குடிநீர் வேண்டும் என்ற முகாம் தெரியாத பல வாசக நண்பர்களுக்கும் தபால் செலவை மட்டும் வாங்கி கொண்டு தமிழகம் முழுவதும் சில வருடங்களாக அனுப்பி வருகிறோம் ..


பொதுவாக இந்த சேவைக்கு நாம் எந்த இயக்கத்தையோ சார்ந்திருக்க வில்லை ,எந்த தனி நபரிடம் இருந்தோ இது வரை இந்த சேவைக்கு உதவி கேட்டதில்லை . இந்த சேவையை பல இயக்க மக்கள் மக்களுக்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள் 

சென்னை மக்களுக்கும் நமது உதவி கிடைக்க நாம் இப்போது இலவச நிலவேம்பு குடிநீரை நமது புதிய கிளை மருத்துவமனை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில்         ( தொடர்புக்கு  தொலை பேசி எண்  90 4333 6444) கடந்த மாத இறுதி முதல் துவங்கி உள்ளோம் .தினமும் இலவசமாக நமது சென்னை மருத்துவ மனையில் நில வேம்பு குடிநீர் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக