வெள்ளி, டிசம்பர் 19, 2014

ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை

ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை

எல்லா மருத்துவ முறைகளையும் முயற்சி செய்து தோற்று போய் மருந்துகளோடு வாழ்கையை கஷ்டப்பட்டு வாழ்த்துகொண்டு இருப்பவர்களுக்கு தீர்வு உள்ளதா ? அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்ற நோய்களுக்கு மருந்து இல்லாமல் நோயை குணமாக்க முடியுமா ? ,வாழ்க்கை முறை மாறி போனதால் வந்த  நோய்களுக்கு தீர்வு தேடி மனது அலைகிறதா ? இந்த கேள்விக்கு ஒரே பதில் ஹிஜாமா தெரபி .


ஹிஜாமா ( حجامة  ) என்றால் என்ன?
ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

நபி ( ஸல்அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார், நபி(ஸல்) அவர்கள் மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளதுஎன வந்துள்ளது (புஹாரி – 5680).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)


ஆயுர்வேத ரக்த மோக்ஷனம் என்றால் என்ன ?
ஆயுர்வேதத்தில் சோதன சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் நவீன அறுவை சிகிச்சையின் தந்தையுமான ஆயுர்வேத ஆச்சார்யார் சுசுருதர் அவர்கள் பரிந்துரைக்கும் ரக்த மோக்ஷனம் என்னும் இரத்தம் வெளியேற்றும் சிகிச்சையும் இதுவும் ஒன்று தான்.  

இரத்தம் சீர் கேடு அடையுமா ?
எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இரத்தத்தை பாதிக்கிறது.  ஆயுர்வேதத்தில் பித்தத்தின் மறு உருவாக இரத்தம் கருதப்படுகிறது. அதிகமான நோய்களுக்கான காரணம் இரத்தத்தில் உள்ள கோளாறுகள். உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகள் ,அமில காரதன்மையில் ஒரு சம நிலை இல்லாதது ,அதிகமான வேதி பொருட்கள் அடங்கிய மருந்துகள் ,எண்ணை தேய்த்து குளிக்காதது ,இரவு கண் விழிப்பு என்று பல்வேறு காரணத்தால் இரத்தம் மென் மேலும் கேடு அடைகிறது .அதை தான் கரும் பித்தம் தான் அநேக நோய்க்கு காரணம் என்று யுனானி மருத்துவம் சொல்கிறது ,பித்தம் மிகுந்த நோய்களே இரத்தம் கேடு அடைய செய்யும் காரணம் என்று ஆயுர்வேத மருத்துவமும் ,சித்த மருத்துவமும் வழி மொழிகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளே பெரிய நோய்க்கு காரணம். நிண நீர் ஓட்ட பாதிப்பே பல கட்டிகளையும் ,கேன்சர் போன்ற நோய்களையும் உறுவாக்குகிறது ,வளர்சிதை மாற்றமே (மேட்டபாலிக் நோய்கள் ) பெரிய நோய்களை உருவாக்குகிறது .உயிர் சக்தி இல்லாத-எதிர்ப்பு சக்தியில்லாத இரத்தமே ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாசிஸ் ,முடக்கு வாதம் ,தைராய்ட் ,மேலும் பெயர் தெரியாத நோய்களை உருவாக்குகிறது.


ஏன் இரத்தம் வெளியேற்ற வேண்டும் ?

மனிதனுக்கு சராசரியாக ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது .120  நாட்களுக்கு ஒரு முறை புதிதாக இரத்தம் உருவாகி கொண்டே இருக்கிறது. கெட்டுபோன இரத்தத்தை சுத்தம் செய்ய நமது கழிவு உறுப்புகள் சிறுநீரகம் ,ஜீரண உறுப்புகள்  முக்கியமாக கல்லீரல் ,நுரையீரல் ,தோல்  போன்ற உறுப்புகள் பிறந்தது இடைவிடாது வேலை செய்து கொண்டே இருக்கிறது. இந்த முக்கிய உறுப்புகளே கழிவு நீக்கம் செய்யாமல் பாதிப்படையும் போது ,வேலை செய்ய சிரமப்படும் போது கெட்டுபோன இரத்தம் கழிவு நீக்கம் எப்படி நடக்கும்?. இயற்கையான முறைபடி கழிவு நீக்கம் நடை பெறாத போது அதற்கென்று முறையாக இரத்தம் வெளியேற்றுவதால் –ஹிஜாமா தெரபி செய்வதால் பெரிய நோய்களையும் நாள்பட்ட நோய்களையும் குணமாக்க முடியும்

ஹிஜாமா (   حجامة     )    செய்தால் எற்ப்படும் பயன்கள்:
.
  • இந்த ஹிஜாமா ( குருதி (அ) இரத்த உறுஞ்சுதல் மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து  Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
  • இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.
  • ஹிஜாமா (حجامة ) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் ( Prevention better than cure).
  • ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, மன நோய்கள் போன்ற  நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
  • ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 85 % நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும்.
  • நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிக நச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் ( Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் ( Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.
  • ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய  ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை ( Natural Biological Balance)  மேம்படுத்துவதன் மூலம் பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
  • நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை என்று பத்து மாதம் முதல் ஒரு வருடம் செய்வது நோயை முற்றிலும் விரட்டும்
  • இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது.
  • இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells – RBC, WBC ), இரத்தப்புரதங்கள் ( Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.







எந்த நோய்களுக்கு ஹிஜாமா தெரபி நல்ல பலன் தரும் ?

தாங்க முடியாத வலிகள் ,வீக்கம் , மூட்டு வலிகள் ,கழுத்து, முதுகு  எலும்பு தேய்மானம் ,தண்டுவட நோய்கள் , டிஸ்க் பிரச்னைகள் கௌட்,முடக்கு வாதம் ,தலை வலி ,மைக்ரைன் , மார்பக கட்டிகள் ,கருப்பை கட்டிகள் ,கேன்சர் ,பெயர் தெரியாத கட்டிகள் ,அலோபீசியா என்னும் வழுக்கை ,தைராய்ட், ஹார்மோன் கோளாறுகள் ,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம் ,பக்க வாதம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டு ,ஆண்மை குறைவு ,தூக்கமின்மை ,மன அழுத்தம் ,நரம்பு தளர்ச்சி, ஆறாத புண் , ,புகை பழக்கம் ,குடிநோய், தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு இந்த ஹிஜாமா , கப்பிங் தெரபி ,கெட்ட இரத்தம் வெளியேற்றும் பஞ்ச கர்ம சிகிச்சை  நல்ல பலன் தரும் .


நம்முடைய மருத்துவ நிலையத்தில் ஹிஜாமா தெரபியின் சிறப்பம்சம் என்ன ?

மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் , எந்த சிகிச்சை முறையோடும் இணைந்து செய்யப்படும் வலிகள் இல்லாத ,பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை தக்க மருத்துவர்களை கொண்டு செய்யபடுகிறது .இங்கே மட்டும் தான் ஹிஜாமா சிகிச்சை  + ரக்த மோக்ஷன சிகிச்சை + அக்குபஞ்சர் 12 சக்தி ஓட்டம் அறிந்து , Filve Elements தத்துவங்களையும்+ வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து முறையாக சரியான இடங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பான முறையில் செய்யபடுகிறது. 

ஹிஜாமா மருத்துவ சிகிச்சை பெற 
சென்னையில்   90 4333 6444
நமது தலைமை இடத்தில + திருநெல்வேலியில்  96 88 77 8640

குறிப்பு -பெண்களுக்கு பெண் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கபடுகிறது 

.


Post Comment

0 comments:

கருத்துரையிடுக