அல்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 17, 2017

ஆன்டாசிட் என்னும் அரக்கன் ..


எலும்பு தன்னாலே உடைதல் ,கிட்னி பெய்லியர் போன்ற பக்க  விளைவுகளை ஏற்படுத்துகிற ஆன்டாசிட் என்கிற அரக்கன் .


சாப்பிட்ட உணவை எளிதாக செரிக்க –வெற்றிலை பாக்கு உதவியது அந்த காலம் ..கொஞ்சம் வயிறு வலி ,வயிறு உப்புசம் வந்தாலோ தொலைக்காட்சி விளம்பரம் பார்த்துவிட்டு Pifizer கம்பெனியின் Gelusil MPS, Abbolt கம்பெனியின் Digene, GSK கம்பெனியின் Eno போன்ற மாத்திரைகளும் மருந்துகளும் தாராளமாக உணவோடு சாப்பிடும் விருந்தாக மாறிவிட்டது இந்த காலம் .

ஆண்டாசிட் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத்தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற காரத்தன்மையுடைய உலோகங்களே உள்ளன. இப்போது, ‘ஒரே வேளை’ மருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும் –பின்னும் அமிலத் தன்மையை குறைந்து வயிற்றில் உள்ள அமிலம் நீர்த்து போய் விடுகிறது .


பர்சில் பாக்கெட்டில் எப்போதுமே ஸ்டாக் வைத்துள்ளவர்கள் நம்மில் பலர் இந்த மிட்டாய் மாத்திரை,கேஸ் மாத்திரை ,சப்பி சாபிடற மாத்திரை ,  பால் மருந்து, ரோஸ் மருந்து என்று பல பெயர்களில் அழைக்கபடுகிற இந்த ஆன்டாசிட் மருந்துகள் –அலுமினியம் ஹைட்ராக்சைட்,மக்னேசியம் ஹைட்ராக்சைட்,கால்சியம் ஹைட்ராக்சைட் போன்ற வேதி பொருளை உள்ளடக்கியது . அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை


பக்க விளைவுகள்?








1.       வயிற்றில் உள்ள அமிலத்தன்மை குறைவதால் –வயிறு புரதத்தை செரிக்கும் தன்மையை இழந்து விடும்..எனவே பல அமினோ ஆசிட் என்னும் புரதத்தின் கடைசி பொருளின் கலவைகள் தன்னில் ஒன்று இணைந்து இல்லாமல் தனி தனியாக விட படுவதால் ..குடல் இந்த புரதத்தை உறிஞ்சாமல் விட்டு –ஆட்டோ இம்யூன் நோய்கள் வரவும் அதே சமயத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்த போகவும் நிறைய வாய்ப்புள்ளது..எனவே சாதாரண ஜெலுசில் ,டைஜின் போன்ற ஆண்டாடிசிட்கள் ஆட்டோ இம்யூன் நோய்களான –சொரியாசிஸ் ,ருமாடாய்ட் ஆர்த்ரைடீஸ் , ஆட்டோ இம்யூன் தைராய்ட் ,SLE போன்ற பெரிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் .
2.       குடல் உறிஞ்சிகள் –வைட்டமின்களை கிரகிக்கும் தன்மை இழந்து B 12 மாத்திரைகளை கிலோ கணக்கில் எடுத்தாலும் இரத்தத்தில் சேர விடாது ..ஆக நரம்பு சமந்தமான நோய்கள் உருவாகும்
3.       இருப்பு சத்து கிராக்கிம் தன்மையும் மொத்தத்தில் இழந்து போகவும் வாய்ப்புகள் இந்த ஆன்டாசிட் எடுத்தால் அதிகம்
4.       மிக மிக முக்கியமாக இந்த ஆன்டாசிட்களில் உள்ள வேதி பொருள்கள் ..உடலின் மக்னீசியம் சத்தை கிராக்கும் தன்மை இழந்து –சதைகள் வலு விழந்து போய் விடும் நிலையும்..மக்னீசியம் குறைபாட்டால் உடல் கடுமையான சோர்வை பெரும்
5.       ஆன்டாசிட்களின் மிக முக்கியமான அதி பயங்கர பக்க விளைவுகள் –உடலின் கால்சியம் சத்தை கிரகிக்கும் தன்மை இழந்து ,அமைன் (க்ளுகோஸ் அமைன்) என்கிற குருத்து எலும்பு வளர்க்கும் புரதம் இழந்து எலும்பு அடர்த்தி குறைந்து –ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு வலு விழக்கும் நோய் ஏற்பட்டு ,எலும்பு எளிதில் உடையும் தன்மையும் உண்டாகிறது ..அதனால் கால் மூட்டு தேய்மானம் ,இடுப்பு எலும்பு தேய்மானம் ,போன்ற தேய்மான நோய்கள் எளிதாக வந்துவிடும்.
6.       பசியின்மை ,மலச்சிக்கல் ,சதை பலஹீனம் போன்றவை அலுமினியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும் .
7.       மலச்சிக்கல் ,அதிக வாயிற்று பொருமல் ,அடிக்கடி சிறுநீரக கற்கள் ,பித்தப்பை கற்கள் உருவாக கால்சியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்
8.       சோடியம் பை கார்பனேட் கலந்த ஆன்டாசிட்களால் உடலில் உப்பு சத்தும் ,கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் ,வயிறு உப்புசம் போன்றவையும் உண்டாகும்
9.       அடிக்கடி மலம் கழித்தல் ,பசியின்மை போன்றவை மக்னீசியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்
10.   சிறுநீரக கோளாறு ,மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்கள் எந்த ஆண்டாசிட்கள் எடுத்தாலும் மிக மிக ஆபத்து .
11.   ஹார்ட் அட்டாக்கும் கூட வயிறு வலி ,மேல் ஏப்பம் போன்று தோன்றுவதால் ..எதையும் பரிசோதிக்காமல் ஆண்டாசிட்களில் அடிமையாய் இருப்பது உயிருக்கு உலை வைத்து விடும்
12.   மெட்டபாலிக் நோய்களுக்கு அடிப்படை இந்த ஆண்டாசிட்களும் ஒரு காரணம்.
13.   கல்லீரல் கொழுப்பு நோய்க்கும் இந்த ஆண்டாசிட்கள் பெரிய பங்கு வகிக்கிறது .அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை- கடையநல்லூர்


செரிமானத்தை தூண்டி ,வயிறு உப்புசம் ,நெஞ்சு எரிச்சல் ,வயிறு புண் ,வயிறு வலி போன்ற செரிமான கோளாறுகள் எதுவாக இருந்தாலும் இயற்கையான ஆயுர்வேத சித்த மருந்துகள் பல உள்ளது..சொந்த வைத்தியங்கள் தனக்கு தானே கொள்ளி வைப்பதற்கு சமம்..ஒருவருக்கு நன்கு வேலை செய்யக்கூடிய ஒரு மருந்து அதே தொந்தரவுகள் உள்ள இன்னொருவருக்கு வேலை செய்யாது ..இது தான் ஆயுர்வேத சித்த மருத்துவத்தின் தனித்தன்மை ..தகுதி வாய்ந்த ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெற  ,உண்மையான ஆயுர்வேத மருத்துவம் –சித்த மருத்துவ ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற -
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..


Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல - லீலாவிலாஸ ரஸ -LEELA VILASA RASA


எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல -
லீலாவிலாஸ ரஸ   -LEELA VILASA RASA                     
(Ref-பைஷஜ்யரத்னாவளி - அம்லபித்தாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
3.            தாமிரபற்பம் – தாம்ர பஸ்ம            10 கிராம்
4.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம         10           “
5.            அயபற்பம் – லோஹ பஸ்ம            10           “

இவைகளையும் சேர்த்தரைத்து,

6.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ஸ்வரஸ  போதுமான அளவு
7.            தான்றிக்காய் கஷாயம் – பிபீதகீ கஷாய போதுமான அளவு கொண்டு மூன்று
                                                                               
நாட்கள் அரைத்துப் பின்னர்     
                                                                                         
8.            கரிசலாங்கண்ணி சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ கொண்டு ஒரு முறை பாவனை செய்து உலர்த்திப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. மாத்திரைகள் ஆக்கவும்.

அளவு:           

1 முதல் 4 மாத்திரைகள்.

தீரும் நோய்கள்:
 
வயிற்றில் புளிப்பு நீர் (அமிலம் அதிகமாக சுரத்தல் (அம்ல பித்தம்), வாந்தி (சர்தி), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாக).




தெரிந்து கொள்ள வேண்டியவை ..

1. அதிகமான வாய் புளிப்பு -புளிப்பு சுவைக்கு இந்த மருந்தை -காமதுக  ரச மற்றும் பாஸ்கர லவன சூரணத்துடன் கலந்து தந்து நல்ல பலனை பெறலாம் ..

2.கரிசாலை சாறு உள்ளதால் நிச்சயமாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது ..

3.வயிற்று  புண்ணை  ஏற்படுத்துவதாக கருதப்படும் எச் .பைலோரை என்னும் பாக்டீரியாவை அழிக்க  இந்த மருந்துக்கு சக்தி உள்ளது என்பது நிச்சயம் ..

4.நெஞ்சு வலி போல் தோன்றும் வயிறு புண்ணுக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும்

Post Comment

சனி, மார்ச் 23, 2013

தோல் நோய்களில் நல்ல பலன் தரும் -ஏலாதி சூர்ணம்


ஏலாதிச் சூரணம்
ELADHI CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யேலாதிச் சூர ணங்கேள்
               குணமான லவங்கமொன்று மிளகி ரண்டு
   விள்ளவே நாகம்நாலு தாளிச மெட்டு
   விதமான குகைநீறு பதினா றாகும்
   நள்ளவே சுக்கதுதான் முப்பத் திரண்டு
   நலமான வேலமது வறுபத்து நாலு
   கள்ளவே சர்க்கரைதான் சமனாய்க் கூட்டிக்
   கலந்துபுதுக் கலசமதில் பதனம் பண்ணே. “
-       சித்த வைத்திய திரட்டு



சேரும் பொருட்களும், அளவும் :
கிராம்பு                      0.39 %            மிளகு                         0.79 %
சிறுநாகப்பூ                1.57 %            தாளிசபத்திரி             3.15 %
கூகைநீர்                    6.30 %            சுக்கு                           12.60 %
ஏலக்காய்                   25.20 %          சர்க்கரை                    50.00  %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது வெந்நீரில் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள் :
பித்தவாயு, வாயு, கிரந்தி, விரணம், அரிகிரந்தி, சில்விஷம், குட்டம், குறைநோய், பெரும்பாடு, எலும்புருக்கி, ஆரம்ப குஷ்டம், சொறி, சிரங்கு.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஏலாதி சூரணமும் ஆயுர்வேத மருந்தில் உள்ள ஏலாதி சூரணமும் ஒன்றல்ல ..

தோல் நோய்களில் இந்த ஏலாதி சூரணத்துடன் பலகறை பற்பம் கலந்து தர மிக நல்ல பலன் அளிக்கும் ..
பித்த வாயு ,எரி  வாயுக்கு இந்த மருந்தோடு சங்கு பற்பம் கலந்து தர நல்ல பலன் தரும் ..



Post Comment

பித்த மயக்கத்திற்கு -சளிக்கு மருந்தாகும் -அதிமதுரச் சூரணம்


அதிமதுரச் சூரணம் 
ADIMADURA CHOORNAM ( SIDDHA MEDICINE )
சிகிச்சா ரத்தின தீபம்
சேரும் பொருட்களும், அளவும் :

அதிமதுரம்                 3.125 %                      கோஷ்டம்                  3.125 %         
மஞ்சிட்டி                    3.125 %                      ஏலம்                           3.125 %
நெல்லிவற்றல்           3.125 %                      சடாமாஞ்சில்             3.125 %
சுக்கு                           3.125 %                      மிளகு                         3.125 %
திப்பிலி                      3.125 %                      திப்பிலிமூலம்                        3.125 %
பச்சைக் கற்பூரம்       3.125 %                      செஞ்சந்தனம்                        3.125 %
கிராம்பு                      3.125 %                      தாளிசபத்திரி             3.125 %
சீரகம்                         3.125 %                      சிறுநாகப்பூ                3.125 %
சர்க்கரை                    50.000 %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது தேனுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
சித்தப் பிரமை, பித்த கிருகிருப்பு, வாய் நீரூறல், அரோசகம், வாந்தி
பத்தியம் :
இச்சா பத்தியம்
 தெரிந்து கொள்ள வேண்டியவை ..
ஆயுர்வேத மருத்தவத்தில் கூறபடுகிற யஷ்டி  சூர்ணத்திற்க்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது ..
பித்த மயக்கத்திற்கு  முசுமுசுக்கை சூரணத்துடன் -திராக்ஷாதி கஷாயத்துடன் தர நல்ல பலன் தரும் ..
சளி ,குரல் கம்மல் ,தொண்டை புண் போன்ற நோய்க்கும் தரலாம் 

Post Comment

புதன், பிப்ரவரி 06, 2013

அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ (Kamaduga Rasa)


அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ     (Kamaduga Rasa)                                                                                        
(ref-ரஸயோகஸாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            முத்து பற்பம் – மௌக்திக பஸ்ம                300 கிராம்
2.            பவள பற்பம் – ப்ரவாள பஸ்ம                   300         “
3.            முத்துச்சிப்பி பற்பம் – மௌக்திகசுக்தி பஸ்ம     300         “
4.            பலகரை பற்பம் – வராடிக பஸ்ம                300         “
5.            சங்கு பற்பம் – சங்க பஸ்ம                     300         “
6.            காவிக்கல் – கைரிக                             300         “
7.            சீந்தில் சர்க்கரை – குடூசீஸத்வ                   300         “

இவைகளை ஒன்று கலந்து முறைப்படி ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் சீரகச் சூர்ணம், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்தம்), வெள்ளை படுதல் (ஸோமரோகம்), நாள்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை 

எவ்வளவு மோசமான வயிறு புண் ,உணவு குழாய் புண் ,சிறுகுடல் புண் -சீரண  மண்டலத்தில் இருக்கும் புண்களை இது வியக்கத்தக்க வகையில் குணமாக்கும் 

வயிற்று வலி ,தாங்க முடியாத மேல் வயிற்று எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் 

எந்த கம்பெனியும் முத்து பற்பத்தை  சேர்ப்பதில்லை ...சேர்த்தால் விலை அதிகமாகும் .,முத்து சேர்க்காத  காமதுகா ரச  பெரிய வேலையை செய்வதில்லை ..

எங்களிடம் முத்து சேர்த்தும் ..முத்து சேர்க்காத காமதுகா  ரச என்ற பற்பம்  எங்களிடம் கிடைக்கும் ..நோயாளிக்கு தக்கவாறு ,நோய்க்கு தக்கவாறு இதை முத்து சேர்ந்ததா  அல்லது முத்து சேராததா  நோயாளிக்கு சொல்லி கொடுப்போம் 

எனது அனுபவத்தில் இந்துகாந்தம் கஷாயம் அல்லது இந்துகாந்தம் கிருதம்  போன்ற மருந்தோடு தர எவ்வளவு நாள்பட்ட அல்சர் ஆனாலும் கடவுள் நாடினால் குணமாகும் 

இந்த மருந்தை நான்கு அரிசி எடை அளவுக்கு தேன் அல்லது  தண்ணீர்  விட்டு பிழியாத  தேங்காய்பால் சாற்றுடனும் தர அல்சர் பற்றி கவலை வேண்டாம் 

மருந்து சாப்பிடும் பொது நிச்சயம் எண்ணெய் எண்ணையில் பொறித்த உணவுகளை நூற்றுக்கு நூறு மூன்று மாதமாவது நிறுத்துதல் அவசியம் 

அதிகமான அமில சுரப்பை சரி  செய்யும் 

கடையில் விற்கும் பால் மருந்துகள் எனப்படும் ஜெலுசில் இதனிடம் வெட்கி மோசமாக தோற்கும் 

மேலும் வெள்ளை படுதல் ,எரிச்சல் ,சர்க்கரை நோயில் வரும் எரிச்சல் ,நாக்கில் புண் ,காரணம் தெரியா அரிப்பு வியர்க்கும் நல்ல பலன் தரும் 




Post Comment