குழந்தை நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 09, 2021

நமது குழந்தைகள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் பெற ஒரு துளி ஆயுர்வேத மருந்து...



குழந்தைகளுக்கு மருத்துவ செலவே இல்லாமல் இருக்க வேண்டுமா ? பயன்பெற்றவர்களின் மகிழ்ச்சியான Feedback .. உங்கள் குழந்தைகளும் பயன் பெற வேண்டுமா ? 2000 வருட ரகசியம் .. ஆயுர்வேத குழந்தை மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான PhD, MD Thesis பெற்றதும் மற்றும் இந்திய ஆயுஷ் துறை பரிந்துரைக்கும் அற்புத மாதம் ஒரு துளி மருத்துவம் .. பக்க விளைவுகள் இல்லை .. கடந்த மாதம் பயன் பெற்றவர்களில் மகிழ்ச்சியாக ஷேர் செய்த வீடியோக்களுடன் .. ஆங்கில மருந்துகள் பயன்படுத்தினாலும் இந்த மருந்தையும் சேர்ந்து கொடுக்கலாம் .. ஸ்வர்ணபிரசனம் ஒரு ராசாயன சிகிச்சை , ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு அம்சங்களிலும் ,நோயுற்ற குழந்தைகளுக்கு குணப்படுத்தும் அம்சத்திலும் ஸ்வர்ண பிராஷணா நன்மை அளிக்கிறது. ஆயுர்வேதத்தில் நோய் தடுப்புக்கான பழமையான நடைமுறை வாய்வழியாக தங்கத்தை உட்கொள்வது. இது கிமு 1000 க்கு முந்தையது மற்றும் ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய சம்ஸ்காரங்களில் ஒன்றாக ஜாதகர்மா சம்ஸ்காரத்தின் (பிறந்த குழந்தை பராமரிப்பு) கீழ் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ணபிரசனம் ஆயுர்வேதத்தின் முதல் நோக்கத்தை நிறைவேற்றுகிறது, அதாவது தடுப்பு நடவடிக்கைகள் (ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய ரக்ஷணம்). நோய்களை பரப்பும் நுண்ணுயிரிகளைச் சோதிக்கும் நமது உடலின் போக்கு அதன் செயலிழக்கச் செய்கிறது அல்லது குறைக்கிறது. இது வியாதிக்ஷம்த்வா (நோய் எதிர்ப்பு சக்தி) என்று அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோயைத் தடுப்பது எப்போதும் குழந்தையின் வளர்ச்சியின் மிக முக்கியமான அம்சங்களாகும். ஸ்வர்ணபிரசனம் வாய்வழி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது வேத காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள ஒரு தனித்துவமான நோய்த்தடுப்பு முறையாகும், இது இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது. நினைவாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் போன்ற சிறந்த சிகிச்சை விளைவுகளை அடைய ஸ்வர்ணபிரசனம் பிறப்பு முதல் பதினாறு வயது வரை நிர்வகிக்கப்படுகிறது. எனவே‌‌ நீங்கள் ‌ நோய்த்தடுப்பு ‌மருந்தை கொடுக்க‌ தவறி இருந்தால்,வருந்த‌வேண்டாம் , இந்த மருந்து மாதந்தோறும் ‌புஷ்ய நட்சத்திரத்தில் கொடுக்கப்பட்டு‌ வருகிறது. நீங்களும்‌ இதனை பெற்று உங்கள் ‌நோய்‌ எதிர்ப்பு ‌சக்தியை‌‌ வளர்த்துக்கொள்ளுங்கள்




---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577
#swarnaprasha #ஸ்வர்ணப்ராஷம் #ayurvedafeedback #feedbackvideo #குழந்தைகளின்ஆரோக்கியம் #குழந்தைகளின்நோய் எதிர்ப்பு #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

சனி, செப்டம்பர் 04, 2021

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆயுர்வேத ரகசியங்கள்|Children...


குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆயுர்வேத  மொத்த ரகசியங்கள்

Children Immune Boost Ayurvedic  Secrets


Immuno modulatory drugs
Guduchi
Amalaki
Yastimadhu
Jyothismathi
Satavari
Brahmi
Aswagandha
Pippali
Tulsi
Nimba
Bhumiamalaki
Katuki
Bringaraja
Punarnava
Rasona
Vidari
Kiratatikta

Ghee itself increases ojas and enhance immunity

In jatakarma sanskara ,giving ghee and honey is mentioned other than swarnaprashanam


ghee is best to increase intellect voice strength , ojas vishara and rakshoghna(Ch,Sus)

Immunization in child


Ghee , musta,vidanga - 1 month child

Vyosha , sariva siddha ghrtam - three month child

Musali khanda and vyosha powder with honey - 6 month child

Dhatri and musta with sugar and warm water -1.3 yrs

Dhatri and musta with jeeraka and pippali -1.6 yrs

Dhatri and musta with vidanga and pippali - 1.9 yrs

Dhatri and musta with sugar and jeeraka along with cow's milk - 2 yrs

Vidanga , vacha,ela,shunti ,pippali, musta -3.3 yrs

Punarnava , vacha,tvacha,bhunimba -3.6 yrs

Brahmi , vacha, kutaja , musta, pippali - 3.9 yrs

Musta,vidanga,chitraka,ajagandha,trikatu,vacha,abhaya - 4 yrs

Vacha with pushkaramoola - 5 yrs

Balachaturbhadra curna (B .R.chi 40) naimittika rasayana ( curative )
Musta ,ativisa ,pippali, karkataka srngi

Kasantaka churna( B . R.kasaroga chikitsa ) - amalaki,Haritaki,vibhitaki,sunti ,marica ,pippali with honey

Kaphanasaka avaleha ( a h.chi.3/45)pippali,p.moola,sunti,bibitaki with honey

Management of fever 

Sadanga paniyam (B.R.jwara chikitsa)

Guduchiyadi kwatha(B.R.jwara chikitsa)Guduchi,neem,amalaki, honey

Sephali swarasa (parijatakam) (B.R.jwara chikitsa)

Pippali fruit powder,madhu,Guduchi fresh stem swarasa 1:2:3 (B.R.jwara chikitsa)

Ativisa,karkatakasrngi,pippali,honey(A.H.U.2/57)

Kasyapa : avaleha by combination of old,husk free and well washed sashtika sali, mixed with oleagnious substance and salt.the powders of wheat and barley should be given.

Laakshadi Tailam : (A.H.U.2/54-56)
Abhyangam for child bestows strength, cures fever, vatahara.
Sringraadi ghrtam and yashtyaahwa ghritam - brhmana property.
Sthiradi ghrtam and brahmyaadi ghritam - brhmana and srotosodhana(A.H)

Yashtyaadi ghrtam - cures Emaciation.

Broad spectrum ousadha yoga for kasa (ARKD)- vyoshadi Kashayam (vyosha,amalaki,yasti,bharangi)

Aatarooshaka patraprayoga


Compound preparation
Agastya Rasayanam
Chyavanaprasam
Kushmanda Rasayanam
Vyaghri Haritaki rasayana
Vardhaman pippali
Agastya hareetaki Rasayanam
Chitaraka hareetaki
Narrasimha rasayana


Rajanyadi churnam - sarvaroga hara, jvara ,swasa etc...A.H.U.2/38-40

Pushkaradi Choornam - panchakasanut (B.R.Bala.71/75)

Khanadi Choornam - swasa,kasa(Y.R.52)

Lodhradi churnam - jvaraharam (Y.R.chi.60)

Pippali Choornam - kasa ,swasaharam (Sa.Sam.Mad 6/8)

Srngi Choornam - kasa,jwara(sha .sa.ma.6/43)

Haridradi Kashayam - jwarahara (B.R.33)

Kumarakalyanaka ghrtam - sarvbalaamayaharam (B.R.Bala.138-142)

Pippalyadi ghrtam - jeevaniya ghrtam siddham ( B.R.Bala 143-144

Rasnadi ghrtam - sarvarogaharam (A.H.U.3/51-52)

Aswagandha ghrtam - Bala vardhanam (YR B.Chi.84)

Vyaghrikusumadi avaleham -Y.R.B.Chi.65

Sivamodakam -B.R.Bala.71/105-111

Ardraka swarasa - swasa,kasa(Sha.sa.Ma1)




Dr Mohamad Saleem MD Ayurveda  is working as  Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). 

Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @

Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577



#AyurvedicimmmuneBoost #குழந்தைகளின்நோய்எதிர்ப்புசக்தி #நோய்எதிர்ப்புசக்தி #Ayurvedicsectets #immune #increseimmune #immune #ayurvedaimmune #koumarabruthya #ayurvedicpediatrics #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம்  
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush 

Post Comment

வெள்ளி, மே 28, 2021

குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்ப...


குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள்- ஆயுர்வேதம் . பொதுவான குழந்தைகளை எப்படி பாதுகாப்பது ? குழந்தைகளுக்கான ஆயுர்வேத மருந்துகள் எவை? #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #குழந்தைமருத்துவம் #குழந்ளுக்கு கொரோனா அறிகுறிகள் #எதிர்ப்புசக்திஅதிகரிக்க குழந்தைகளுக்குகொரோனாவராமல்தடுக்க #ஆயூர்வேதம் மருத்துவம் #Corona in children's #How to improve immunity in children #Ayurvedha for children's immunity #Ayurvedha medicine fight against children's corona

Post Comment

சனி, ஏப்ரல் 11, 2020

உங்கள் குழந்தைக்கான ஈராயிரப் பழமை இக்காலதிற்க்குமான எளிமையான ஆயுர்வேத இரகசியம் ஒன்று

உங்கள் குழந்தைக்கான ஈராயிரப் பழமை  மற்றும் இக்காலதிற்க்குமான எளிமையான ஆயுர்வேத இரகசியம் ஒன்று 



குழந்தை மருத்துவ இரகசியம் வேண்டுமா ?


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்.



எளிமையாக ஓர் ரகசியம் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் ..


குழந்தைகளை கருவில் சுமக்கும் காலத்திலிருந்தே பெற்றோர்களின் கனவு நீள்கிறது...




குழந்தையின் உடல், மனம், குணம், அறிவு, ஆற்றல், கல்வி, திறமை, என அனைத்திலும் சிறப்பாளர்களாக திகழ பெற்றோர்களின்  சிந்தனைகள் வளர தொடங்கிவிடும்....


குழந்தை பிறந்த அக்கனம் முதல் ஆரம்பிக்கிறது ஆயுர்வேதத்தின் வழிகாட்டல் பாலசிகிட்ஸா எனும் பிரிவில் கௌமாரப்ருத்யம் எனும் நூல் வழியாக...


குழந்தை பேணல் மற்றும் வளர்ப்புக்கான அறிவுரைகளை (counselling ) வழங்குவதில் முன்னோடிகளாய் திகழ்ந்த ஆச்சார்யாகளை பின்பற்றினால் குழந்தைகளின்  பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களை பற்றி காணும் கனவு ஈடேறும்...


பச்சிளம் குழந்தை முதல் பதின்வயது  (Teenage ) குழந்தைகள் வரை தேவையான அனைத்து  தகவல்களும் ஆயுர்வேதத்தில் இடம்பெற்றிருக்கின்றன...

அவர்களின் உணவு முறை, விளையாட்டு முறை, ஞாபக சக்தி என அனைத்தையும் கூறுவதோடு மட்டுமல்லாமல் நோய் காலத்தில் அவர்களுக்கு ஏற்ற மருந்தையும் மருத்துவத்தையும் விவரித்துள்ளனர்...


குழந்தைகள் வளரும் பருவத்தில்  நோய்வாய்படுவது இயல்பு.... அதற்கான மருத்துவம் ஏராளம்...


ஆனால் அவர்களின் பதின் வயது காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் தவறான நண்பர்கள் சேர்க்கையாலும் தடம் மாறி செல்ல இருக்கும் வாய்ப்புகள் (குறிப்பாக ஆண் குழந்தைகள்) அவர்கள் எதிர்காலத்தை அழித்து பெற்றோர்கள் கனவை சுக்குநூறாய் உடைத்தெறிந்துவிடும்.


மற்றோரு புறமோ கல்வியில் தேர்ச்சி பெறமுடியவில்லை, நினைத்த இலக்கை அடையவில்லை என்பதினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பகுத்தறிவு திறனின்றி மனோபலம் குன்றி குறிப்பாக பெண் குழந்தைகள் குடும்பத்தார் அனைவரையும் மீளாத நரகத்தில் தள்ளிவிடுகின்றனர்...
இந்த அறிவின்மைக்கு காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்கள் தான்...



"வரும்முன் காப்பதே சிறந்தது"...இந்த பழமொழி முக்காலத்திற்கும் பொருந்தும்...




இப்படியான பிரச்சனைகளுக்கு உங்களுடன் கைகோர்த்து உதவிட எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத இரகசியம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது...


அந்த எளிமையான, ஈராயிர பழமை ஆயுர்வேத குழந்தை மருத்துவ வல்லுனரான காஷ்யபர்  சொல்கிற இரகசிய மருந்து அது ..

அது உங்கள் குழந்தைகளை கொரானா போன்ற கொடிய கொள்ளை நோய்களில் வராமல் தடுக்கவும், ஆரோக்யமாய் வாழ உதவிடும்.

ஒரே வேளை  மருந்து, ஒரே ஒரு சொட்டு மருந்து அது..


எனவே முதல்கட்டமாக அறிவுறுத்தப்படுவது *ஸ்வர்ணப்ரஷணம்* என்னும் பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சொட்டு மருந்து...


ஸ்வர்ணப்ரஷணம் கொடுப்பதினால் வெற்றியாளனுக்கு தேவையான அனைத்தும்  குழந்தைகள் பெறுவர்...


கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்ல துணை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்.


இதனை தான் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவேண்டும் என்று கீழ்காணும் பாடலின் வழி  ஆசீர்வதிப்பர்...


கலையாத கல்வி குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

குன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி யிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

ஆகிய அனைத்தும் பெற்று பெருமையோடு வாழவேண்டும்.




ஒருவயதில் குழந்தைகள் நடைபயில ஊக்கப்படுத்துவது மட்டும் பெற்றோரின் கடமையல்ல, அவர்கள் வாழ்க்கையை  தளராது நடத்துவதற்கு உதவுவதும் பெற்றோரின் கடமையாகும்...




உங்கள் குழந்தைக்கான அந்த மருந்தை மேலும் அறிந்து கொள்ள சந்தேகங்களுக்கு அணுகவும்


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

வியாழன், ஜூன் 08, 2017

முதல் மருந்து –சேனை –சேய் நெய்

சேணை  தொட்டு வைத்தலில் பயன்படுத்துகிற  
சேய் நெய் என்கிற மிக சிறந்த சித்த மருந்து 


முதல் மருந்து –சேனை –சேய் நெய்

டாக்டர்.A. ராஜேஸ்வரன் .,MD(S) ,  உதவி மருத்துவ அலுவலர் சித்தா ,
அரசு மருத்துவமனை ,புளியங்குடி ,திருநெல்வேலி மாவட்டம்


அழகான ஓர் நாள் இரவு ...அவளது தாங்க முடியாத வேதனை கூக்குரல் முடிவில் ஒரு குழந்தையின் அழுகுரல் ...அனைவர் முகத்திலும் புன்முறுவல்..


இப்படியாகத்தான் ஒவ்வொரு குழந்தையின் பூவுலக பிரவேசம் இனிதாய் தொடங்குகிறது ..குழந்தை பிறந்தவுடன் வீட்டிலுள்ள பெரியோர் குழந்தைக்கு ,சேனை தொட்டு வைக்க தாய்மாமன் அல்லது குடும்பத்தில் சிறப்பாக விளங்கும் ஒருவரை அழைப்பர். அவரும் வந்து சேனை தொட்டு வைப்பார் .இது பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் தமிழர் மரபு .இன்றும் கூட சேனை தொட்டு வைத்தாயிற்றா ? என்று நம்மிடம் ஆவலோடு கேட்கின்றனர்.


சீனி (சர்க்கரை ) ஐ தண்ணீரில் கரைத்த தண்ணீரை தொட்டு வைப்பதுதான் “சேனை தொட்டு வைப்பது “ என எல்லோரும் நினைத்து கொண்டிருந்தால் அது மிக மிக தவறு .



பிறந்தவுடன் தாய்பால் புகட்டும் முன்னரே சேனை தொட்டு வைக்கும் வழக்கம் என்ற ஒன்று இருந்திருக்கிறது என்றால் அந்த சேனை எவ்வளவு இன்னமுதலாக இருந்திருக்க வேண்டும் ..


சேனை என்பது சிறப்பானதொரு சித்த மருந்து சேய் + நெய் = சேய் நெய் . சேய்க்கு வழங்ககூடிய நெய் –சேய்நெய். சேய்நெய் என்ற சொல் காலப்போக்கில் மருவி சேனை என்றானது . சேய்நெய் என்ற சித்த மருந்து மறதியின் காரணமாக வழக்கொழிந்து சீனித் தண்ணீரை ( விஷ நீரை ) சேனையாக பாவித்து வழங்கும் மோசமான வழக்கு இப்போது நடைபெற்று வருகின்றது .


வழக்கொழிந்த சேனையை ( சேய் நெய் ) மீட்பதே இக்கட்டுரையின் நோக்கம்  
  • பிறந்ததும் கொடுக்கும் முதல் மருந்து –சேய் நெய்.  சித்த மருத்துவம் குழந்தை வளர்ப்பில் சிறப்பான மருந்தை பிறந்த நாள் முதலே கொடுத்து குழந்தைகள் மிகுந்த ஆரோக்யத்துடன் ,நோய்களின்றி வளர வழியை நல்கியுள்ளது .

  • நோய்களை வராது தடுக்க –சேய் நெய்.

  • தோடம்  , கணை  ,மாந்தம் வராது காப்பது சேய் நெய்.  

  • கக்குவான் ,தட்டம்மை ,மணல்வாரி அம்மை வராது காப்பது - சேய் நெய்



சேய் நெய் –செய்முறை :
 
சேய் நெய் செய்வதற்கு முன் அதற்கு தேவைப்படும் சிற்றாமணக்கு நெய்-ஐ சித்த மருத்துவ முறைப்படி செய்து சேகரிக்க வேண்டும்


சிற்றாமணக்கு நெய் – செய்முறை

நன்கு முற்றிய சிற்றாமணக்கு விதைகளை தண்ணீரில் இட்டு அவித்து வெயிலில் உலர்த்த வேண்டும் . உலர்ந்த பின் அவற்றை உரலில் இட்டு இடித்து ஒன்றுக்கு நான்கு பாகம் இளநீரில் விட்டு கலந்து அடுப்பேற்றி காய்ச்சி மிதந்து வரும் நெய்யை சேகரித்து எடுக்க வேண்டும் .  நெய்யில் மீண்டும் மீண்டுமாக இளநீர் விட்டு 6 முறை காய்ச்சி எடுக்க வேண்டும் .இவ்வாறு எடுக்கும் நெய் ,சிற்றாமணக்கை கசக்கி பிழிந்து எடுக்கும் செக்கெண்ணையை காட்டிலும் மிகச் சிறப்பானது . செக்கெண்ணையில் ஆமணக்கின் நச்சுப்பொருட்களையும் சேர்த்தே பிழிந்து எண்ணெய் கிடைப்பதால் அதனை இம்மருந்திற்கு பயன்படுத்தக்கூடாது .


சேய் நெய் சேரும் சாறுகள் –வகைகள் 100 மி .லி 
1.       துளசி
2.       வில்வம்
3.       வேப்பிலை
4.       அருகம்புல்
5.       ஆடாதோடை
6.       முசுமுசுக்கை
7.       கண்டங்கத்தரி
8.       தூதுவளை
9.       கோவையிலை
10.   நொச்சி
11.   வெளிப்பருத்தி
12.   தும்பை
13.   ஈகரமூலி
14.   இண்டு
15.   கம்மாறு வெற்றிலை
16.   நஞ்சறுப்பான்
17.   முடக்கற்றான்
18.   கற்பூரவள்ளி
19.   கீழாநெல்லி
20.   மூக்கிரட்டை
21.   தகரை
22.   கரிசாலை
23.   குப்பைமேனி
24.   பொடுதலை
25.   கொட்டை கிரந்தை
26.   வல்லாரை
27.   முருங்கை
28.   சீந்தில்
29.   இம்பூறல்
30.   விளா கொழுந்து
31.   நிலவேம்பு
32.   ஆடுதீண்டாப்பாளை
33.   நுணா
34.   விஷ்ணு கிரந்தி
35.   இலந்தை கொழுந்து


கற்க திரவியங்கள் வகைக்கு 10 கிராம் 
1.       ஓமம்
2.       உத்திராட்சம்
3.       பூண்டு
4.       சுக்கு
5.       மிளகு
6.       திப்பிலி
7.       சந்தனம்
8.       ஏலம்
9.       கிராம்பு
10.   சிற்றரத்தை
11.   ஜாதிக்காய்
12.   மாசிக்காய்
13.   வசம்பு


பதம் : கடுகு பதம்

அளவு :
1 துளி தினமும்  - 1 வயது வரை
2 துளி தினமும்  - 2 வயது வரை
2 -5 துளி தினமும்  - 3 -5 வயது வரை

முக்கிய குறிப்பு
இந்த கட்டுரையை டாக்டர் .A .ராஜேஸ்வரன் .,MD (S) அவர்கள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில்  6 th ஜீன் மாதம் 2017 அன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ,மேபெல் அருள் ராணி MD ( S ) அவர்கள் முன்னிலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆயுஷ் உதவி மருத்துவ அலுவலர்களிடம் சமர்பித்தார் ..அதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் பொருந்தி இருந்தது
1.       அவர் தனது குழந்தைகளுக்கு இந்த சேய் நெய் பிறந்த நாள் முதலாய் கொடுத்து வருகிறார் . அவரே தயாரித்த இந்த அருமருந்தான சேய் நெய்யை  தினமும் கொடுத்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு
2.       குழந்தைகளின் ஆரோக்கியம் மிக மிக அருமையாக உள்ளதாக உளமார தெரிவித்தார் .
3.       தனது பத்து மாத இரண்டாவது குழந்தைக்கும் கொடுத்து வருவது மட்டுமல்லாது அவரது உறவினர் பலருக்கும் இந்த சேய் நெய் மருந்தை தயாரிக்க சொல்லி கொடுக்க உதவி செய்து வருகிறார் என்பது பாராட்ட தக்க விஷயம்
4.       தனது குழந்தைக்கு  தினமும் குழந்தையை எண்ணெய் தேய்த்து சாம்பிராணி புகை காட்டி கண்ணில் சிற்றாமணக்கு நெய் கண்ணில் ஊற்றி ,இது வரை எந்த டின் உணவுகளும் ,ஆங்கில மருந்துகளும் கொடுக்காமல் ,எந்த பேம்பர்ஸ் போன்றவற்றை பயன்படுத்தாமல் வளர்த்து வழி காட்டி வருகிறார் என்பது சொல்வதோடு மட்டுமல்லாது சித்த மருத்துவத்தை வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வருகிறார் என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது .
5.       நாளைய ஆரோக்ய சமுதாய சந்ததிகளை உருவாக்க சித்த மருத்துவம் ,ஆயுஷ் மருத்துவம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது உறுதியான உண்மை

இந்த கட்டுரையை அவரது ஒப்புதலோடு அவரது அனுமதியுடன் இங்கே பகிர்ந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
மதுரை ,ராமநாதபுரம் மற்றும் தென் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழர் பாரம்பரிய இந்த அரிய சித்த மருந்து சேய் நெய் எல்லா மக்களையும் சென்றடைய எல்லோருக்கும் பகிர்வோம் .
இந்திய மருத்துவத்தின் பெருமை – வெறும் பார்வேர்ட் செய்வதில் மட்டுமல்லாது அதனை கடைபிடித்து வாழ்வதில் தான் உள்ளது என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் .இங்ஙனம் டாக்டர். அ .முகமது சலீம் (cure sure)., BAMS.,M.Sc.,MBA
 சேய் நெய் கொடுப்போம்...சேய் நலம் காப்போம் .
சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

செவ்வாய், மே 09, 2017

உங்கள் குழந்தைகள் விஷம் சாப்பிட நீங்கள் அனுமதிப்பீர்களா?

உங்கள் குழந்தைகள் விஷம் சாப்பிட நீங்கள் அனுமதிப்பீர்களா?

டாக்டர்.அ.முகமது சலீம்( cure sure).,BAMS.,M.Sc.,MBA


நமது குழந்தைகள் நமது வரங்கள். அவர்கள் நமது எதிர்கால கனவுகள் . அவர்கள் ஆரோக்கியம் நமது கடமை . ஆனால் அவர்கள் ஆசைபடுகிறார்கள் என்று கண்டதை வாங்கி கொடுத்து நாம் அவர்களது உடல் நலத்தை நாம் சிதைத்து விடுகிறோம் என்று நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும் ?


சுவைக்கு ,நிறத்திற்கு அடிமையாக்கும் அழகான பேக்கிங்கில் வரும் உணவுகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மை என நம்பி விஷம் தருகிறோம் என்று எத்தனை பெற்றோருக்கு தெரியும் ?


ஆசை பட்டதையெல்லாம் தின்ன கொடுப்பவர் நல்ல வேலைக்காரன் ..நல்ல பெற்றோர் எது உண்மையில் உடம்புக்கு நல்லது கெட்டது என்று தெளிந்து வாங்கி கொடுப்பார்கள். அப்படி எனில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பெற்றோரா அல்லது வேலை காரரா ?


ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதத்தில் குழந்தைகளின் மருத்துவத்தில் - ஆஹார அன்ன விதிகளை என்னென்ன கோணத்தில் அணுகியிருக்கிறது என்பதை அறியும் போது பெரும் மலைப்பு வந்து நம்மை மெய்மறக்க வைக்கிறது.



இன்றோ காலத்தின் கட்டாயத்தால் மாறிப்போன உணவு முறைகளுக்கும், விளைவுகளுக்கு என்ன தீர்வு?
விளம்பரங்களை நம்பும் தாய்மார்கள் எப்படி வழி கெடுக்கப் படுகிறார்கள்?

·         குழந்தைகளின் வாயில் அகப்படும் விளையாட்டு சாதனங்களுக்கு ஆர்சனிக் காரீய பூச்சு  புற்று நோயை விளைவிக்கலாம்.

·         சைனா உணவுகளை ஆராய்ச்சியில் விளைவில் பல நோங்களை விளைவித்தாக நிரூபித்த பின்பும், அவசரகதியல் அதனை தடை விதித்தும் தொடரும் அவலங்கள்

·         அஜினோ மோட்டோ எனம் மூளையை மழுங்கடிக்கும் செரிமானத்தில்  கோளாறுகளை ஏற்படுத்தும் கடும் வேதிப்பொருள் அடங்கிய நூடுல்ஸ் எனும் மாயை.

·         மொற மொறப்புக்காக குர்குரே, லேஸ் எனும் சிப்ஸ் உணவுகளில் 2 லிருந்து 10 சதவீதம்  பிளாஸ்டிக்கும், பிளாஸ்ட்டிக்கின் மூலப் பொருள் கலந்துள்ளது யாருக்குத் தெரியும்?

·         பல சாக்லேட்டுகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் மிருக கொழுப்புகளும், சாக்கரின் எனும் செயற்கை சர்க்கரையும் Free Radicles எனும் கசடுகளும் கலந்து, குழந்தைகளுக்கு சர்க்கரை நோயையும், செரிமானத்தில் கோளாறுகளையும், ஹார்மோன்களின் அதிக சுரப்பையும் உண்டாக்கி Addictionsஎனும் பழக்கத்தை ஏற்படுத்துவது எத்தனை பெற்றோருக்குத் தெரியும்?

·         Soft Drinksஎனும் அரக்கனின் கையில் அகப்பட்ட குழந்தைகளின் நிலை அறிய கண்ணீர் வருகிறது. பெப்ஸி, கோகோகோலா போன்ற Soft Drinksஐ உங்கள் வீட்டு பாத்ரூம் கழுவிப் பாருங்கள் வெள்ளை வெளேராகிவிடும். வயிற்றில் நொதிப் பொருளில் பல வேதியியல் மாற்றங்களை உண்டு பண்ணும். உதாரணத்திற்கு வாயில் உள்ள டயலின் என்ஸைம், காரத்தன்மையிலிருந்து அமிலத் தன்மையாக மாறிவிடும் (Acidic)இ பெப்ஸின், ட்ரிப்ஸின் நீர்த்து விடும், ஹைட்ரோ குளோரிக் அமிலம் தனது PH அளவை குறைத்து காரத்தன்மையோடு மாறிவிடும். வயிற்றின் மேல், கீழ் மூடி (cardiac spincter, pyloric Antram)) இளகி, Acid Peptic Disorder, Reflux Gastritis எனும் பல வயிறுகள் பிரச்சனைகளை உண்டு செய்துவிடும். கிரெப்ஸ் Cycleஎனும் நிகழ்ச்சியில் மாறும் கொழுப்பை மாற்றி உடலை பெருக்கச் செய்கிறது. ஒன்பது ,பத்து வயது பெண்குழந்தைகள் 18 வயது பெண் போல் முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

·         சத்து மாவு என்ற பெயரா ல் பல சரக்குகள் தரமில்லாமல் பல சரக்கு கடைகளிலும், மெடிக்கலிலும் உலா வருகிறது. அதிலே பலர் சுவைக்காக கேசரி  தால் எனும் சிவப்பு நிற பருப்பு வகைகளையும் சேர்க்கின்றனர். அதன் மூலம் லித்தியம் விஷம் உண்டாகி கை, கால்களை முடமாக்கி விடும் அதிர்ச்சியும் உண்டு. முளைவிட்ட தானிங்கள் என்று சொல்லி பாதியில் முளைவிட வைத்தும் அரைகுறைய காய வைத்து பூஞ்சை  சேர்ந்துள்ளது தெரியாமலே  சேர்த்து விடுகிறார்கள். சோடியம் பென்சோவேட், பென்சாயிக் அமிலம் எனும் Preservatives. பல இயற்கை புரதங்களோடு சேரும் போது பல வியாதிகளை உண்டு பண்ணி விடும் என்பது ஆராய்ச்சியின் வரவு.

·         காய்கறிகள், கீரைகள் திராட்சை போன்ற பழவகைகளில் சுருட்டை பொடி போன்ற பலதரப்பட்ட பூச்சிக் கொல்லி மருத்துகளை கலந்து விடுகிறார்கள். அந்த பூச்சிக்  கொல்லி மருத்துகளை உப்புக்கலந்த வெந்நீரில்  கழுவது மூலமே சுத்தமாக்க முடியும் என்பது எத்தனை பெற்றோர்களுக்குத் தெரியும் ?

·         மெடிக்கலில் கிடைக்கும் பல சத்து மாவுகள், ப்ரோட்டின் பவுடர்களை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலம், இயற்கையாக உணவுகளில் உள்ள புரதத்தினையும் Micro Element எனும் சத்துக்களையும் உறிஞ்சும் திறன் குறைந்து அதை கிரகிக்க உதவும் Receptors செயலிழந்து சத்துக்களே கழிவாகி நாசமாகும் என்பது எத்தனை பெற்றோh;களுக்கு தெரியும்?

·         ஹா..க்ஸ், பூ...ட், ,  போ...டா ,காம்...ளான்..போன்ற பல Health Drinkகம்பெனி நிறுவனங்கள், விளம்பர போட்டிகளில் கவனம் செலுத்துகிறதே, தவிர அதன் தரத்தை உயர்த்துவதாக தெரிய வில்லை. Retrospective Study  எனும் பின்னோக்கிய ஆராய்ச்சி முடிவுகளை வெளிவிட்டு மக்களை முட்டாளாக்கி  இதை விட்டால் சத்துக்கு வேறுவழியே இல்லை என்று விளம்பரப்படுத்தும் கம்பெனிகளின் ஒன்றின் தயாரிப்பின் விலை 500 கிராமுக்கு சராசாரியாக அதிகபட்ச விலை ரூ. 16 என்பது அதிர்ச்சி தகவல் இந்த ரூ. 16-க்கு என்ன சத்து இந்த காலத்தில் கொடுத்து விட முடியும். ஆனால் விற்கும் விலையோ ரூ. 250 க்கு மேலே .

·         செரிலேக் , நெஸ்டம் போன்ற உணவுகளில் பல நன்மைகள் இருந்தாலும் பவுடர் பாலில் உள்ள லேக்டிக் அமிலம் திரிந்து அசிடிக் அமிலமாக, லேக்டேடாக மாறி விடும். மேலும் கேசின் என்ஸைம் செயல்பட முடியாத நிலையாக மாறி பாலே அலர்ஜியாக மாறி விடும் என்ற நிலை இருக்கத்தானே செய்கிறது.
·

·         குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளையும் பலதடவை மாற்றாமல் பயன்படுத்திய பாமாயில் சுட்ட பலகாரங்களை கொடுத்துவிட்டு என் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது என்ற சொல்லக்கூடிய பெற்றோர்களை என்ன சொல்ல?

·         மொத்தத்தில் நாம் அறிந்து வைத்திருப்பதில் பல தவறுகள் உள்ளது.

·         அறியாமல் செய்யும் தவறுகளும் மிக அதிகம்.

·         திருத்திக் கொள்ளாத உணரப்படாத தவறுகள் எண்ணற்றவை. இவைகளுக்கு தான் மேலே சொன்ன சில உதாரணம்.

ஆயுர்வேதம் சொல்லும் ஆஹார விதிகளை கடைபிடித்தால் நம்மையும் நம் செல்ல குழந்தைகளையும் நூறு ஆண்டுகள் வாழலாம், வாழ வைக்கலாம்

குழந்தைளின் ஆரோக்கியம் பேண ,மருந்தாய் உணவை கொடுக்காமல் –உணவாய் மருந்தை கொடுக்க ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை      9043336000


Post Comment