வியாழன், ஜூன் 08, 2017

முதல் மருந்து –சேனை –சேய் நெய்

சேணை  தொட்டு வைத்தலில் பயன்படுத்துகிற  
சேய் நெய் என்கிற மிக சிறந்த சித்த மருந்து 


முதல் மருந்து –சேனை –சேய் நெய்

டாக்டர்.A. ராஜேஸ்வரன் .,MD(S) உதவி மருத்துவ அலுவலர் சித்தா ,
அரசு மருத்துவமனை ,புளியங்குடி ,திருநெல்வேலி மாவட்டம்


அழகான ஓர் நாள் இரவு ...அவளது தாங்க முடியாத வேதனை கூக்குரல் முடிவில் ஒரு குழந்தையின் அழுகுரல் ...அனைவர் முகத்திலும் புன்முறுவல்..


இப்படியாகத்தான் ஒவ்வொரு குழந்தையின் பூவுலக பிரவேசம் இனிதாய் தொடங்குகிறது ..குழந்தை பிறந்தவுடன் வீட்டிலுள்ள பெரியோர் குழந்தைக்கு ,சேனை தொட்டு வைக்க தாய்மாமன் அல்லது குடும்பத்தில் சிறப்பாக விளங்கும் ஒருவரை அழைப்பர். அவரும் வந்து சேனை தொட்டு வைப்பார் .இது பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் தமிழர் மரபு .இன்றும் கூட சேனை தொட்டு வைத்தாயிற்றா ? என்று நம்மிடம் ஆவலோடு கேட்கின்றனர்.


சீனி (சர்க்கரை ) ஐ தண்ணீரில் கரைத்த தண்ணீரை தொட்டு வைப்பதுதான் “சேனை தொட்டு வைப்பது “ என எல்லோரும் நினைத்து கொண்டிருந்தால் அது மிக மிக தவறு .



பிறந்தவுடன் தாய்பால் புகட்டும் முன்னரே சேனை தொட்டு வைக்கும் வழக்கம் என்ற ஒன்று இருந்திருக்கிறது என்றால் அந்த சேனை எவ்வளவு இன்னமுதலாக இருந்திருக்க வேண்டும் ..


சேனை என்பது சிறப்பானதொரு சித்த மருந்து சேய் + நெய் = சேய் நெய் . சேய்க்கு வழங்ககூடிய நெய் –சேய்நெய். சேய்நெய் என்ற சொல் காலப்போக்கில் மருவி சேனை என்றானது . சேய்நெய் என்ற சித்த மருந்து மறதியின் காரணமாக வழக்கொழிந்து சீனித் தண்ணீரை ( விஷ நீரை ) சேனையாக பாவித்து வழங்கும் மோசமான வழக்கு இப்போது நடைபெற்று வருகின்றது .


வழக்கொழிந்த சேனையை ( சேய் நெய் ) மீட்பதே இக்கட்டுரையின் நோக்கம்  
  • பிறந்ததும் கொடுக்கும் முதல் மருந்து –சேய் நெய்.  சித்த மருத்துவம் குழந்தை வளர்ப்பில் சிறப்பான மருந்தை பிறந்த நாள் முதலே கொடுத்து குழந்தைகள் மிகுந்த ஆரோக்யத்துடன் ,நோய்களின்றி வளர வழியை நல்கியுள்ளது .

  • நோய்களை வராது தடுக்க –சேய் நெய்.

  • தோடம்  , கணை  ,மாந்தம் வராது காப்பது சேய் நெய்.  

  • கக்குவான் ,தட்டம்மை ,மணல்வாரி அம்மை வராது காப்பது - சேய் நெய்



சேய் நெய் –செய்முறை :
 
சேய் நெய் செய்வதற்கு முன் அதற்கு தேவைப்படும் சிற்றாமணக்கு நெய்-ஐ சித்த மருத்துவ முறைப்படி செய்து சேகரிக்க வேண்டும்


சிற்றாமணக்கு நெய் – செய்முறை

நன்கு முற்றிய சிற்றாமணக்கு விதைகளை தண்ணீரில் இட்டு அவித்து வெயிலில் உலர்த்த வேண்டும் . உலர்ந்த பின் அவற்றை உரலில் இட்டு இடித்து ஒன்றுக்கு நான்கு பாகம் இளநீரில் விட்டு கலந்து அடுப்பேற்றி காய்ச்சி மிதந்து வரும் நெய்யை சேகரித்து எடுக்க வேண்டும் .  நெய்யில் மீண்டும் மீண்டுமாக இளநீர் விட்டு 6 முறை காய்ச்சி எடுக்க வேண்டும் .இவ்வாறு எடுக்கும் நெய் ,சிற்றாமணக்கை கசக்கி பிழிந்து எடுக்கும் செக்கெண்ணையை காட்டிலும் மிகச் சிறப்பானது . செக்கெண்ணையில் ஆமணக்கின் நச்சுப்பொருட்களையும் சேர்த்தே பிழிந்து எண்ணெய் கிடைப்பதால் அதனை இம்மருந்திற்கு பயன்படுத்தக்கூடாது .


சேய் நெய் சேரும் சாறுகள் –வகைகள் 100 மி .லி 
1.       துளசி
2.       வில்வம்
3.       வேப்பிலை
4.       அருகம்புல்
5.       ஆடாதோடை
6.       முசுமுசுக்கை
7.       கண்டங்கத்தரி
8.       தூதுவளை
9.       கோவையிலை
10.   நொச்சி
11.   வெளிப்பருத்தி
12.   தும்பை
13.   ஈகரமூலி
14.   இண்டு
15.   கம்மாறு வெற்றிலை
16.   நஞ்சறுப்பான்
17.   முடக்கற்றான்
18.   கற்பூரவள்ளி
19.   கீழாநெல்லி
20.   மூக்கிரட்டை
21.   தகரை
22.   கரிசாலை
23.   குப்பைமேனி
24.   பொடுதலை
25.   கொட்டை கிரந்தை
26.   வல்லாரை
27.   முருங்கை
28.   சீந்தில்
29.   இம்பூறல்
30.   விளா கொழுந்து
31.   நிலவேம்பு
32.   ஆடுதீண்டாப்பாளை
33.   நுணா
34.   விஷ்ணு கிரந்தி
35.   இலந்தை கொழுந்து


கற்க திரவியங்கள் வகைக்கு 10 கிராம் 
1.       ஓமம்
2.       உத்திராட்சம்
3.       பூண்டு
4.       சுக்கு
5.       மிளகு
6.       திப்பிலி
7.       சந்தனம்
8.       ஏலம்
9.       கிராம்பு
10.   சிற்றரத்தை
11.   ஜாதிக்காய்
12.   மாசிக்காய்
13.   வசம்பு


பதம் : கடுகு பதம்

அளவு :
1 துளி தினமும்  - 1 வயது வரை
2 துளி தினமும்  - 2 வயது வரை
2 -5 துளி தினமும்  - 3 -5 வயது வரை

முக்கிய குறிப்பு
இந்த கட்டுரையை டாக்டர் .A .ராஜேஸ்வரன் .,MD (S) அவர்கள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில்  6 th ஜீன் மாதம் 2017 அன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ,மேபெல் அருள் ராணி MD ( S ) அவர்கள் முன்னிலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆயுஷ் உதவி மருத்துவ அலுவலர்களிடம் சமர்பித்தார் ..அதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் பொருந்தி இருந்தது
1.       அவர் தனது குழந்தைகளுக்கு இந்த சேய் நெய் பிறந்த நாள் முதலாய் கொடுத்து வருகிறார் . அவரே தயாரித்த இந்த அருமருந்தான சேய் நெய்யை  தினமும் கொடுத்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு
2.       குழந்தைகளின் ஆரோக்கியம் மிக மிக அருமையாக உள்ளதாக உளமார தெரிவித்தார் .
3.       தனது பத்து மாத இரண்டாவது குழந்தைக்கும் கொடுத்து வருவது மட்டுமல்லாது அவரது உறவினர் பலருக்கும் இந்த சேய் நெய் மருந்தை தயாரிக்க சொல்லி கொடுக்க உதவி செய்து வருகிறார் என்பது பாராட்ட தக்க விஷயம்
4.       தனது குழந்தைக்கு  தினமும் குழந்தையை எண்ணெய் தேய்த்து சாம்பிராணி புகை காட்டி கண்ணில் சிற்றாமணக்கு நெய் கண்ணில் ஊற்றி ,இது வரை எந்த டின் உணவுகளும் ,ஆங்கில மருந்துகளும் கொடுக்காமல் ,எந்த பேம்பர்ஸ் போன்றவற்றை பயன்படுத்தாமல் வளர்த்து வழி காட்டி வருகிறார் என்பது சொல்வதோடு மட்டுமல்லாது சித்த மருத்துவத்தை வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வருகிறார் என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது .
5.       நாளைய ஆரோக்ய சமுதாய சந்ததிகளை உருவாக்க சித்த மருத்துவம் ,ஆயுஷ் மருத்துவம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது உறுதியான உண்மை

இந்த கட்டுரையை அவரது ஒப்புதலோடு அவரது அனுமதியுடன் இங்கே பகிர்ந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
மதுரை ,ராமநாதபுரம் மற்றும் தென் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழர் பாரம்பரிய இந்த அரிய சித்த மருந்து சேய் நெய் எல்லா மக்களையும் சென்றடைய எல்லோருக்கும் பகிர்வோம் .
இந்திய மருத்துவத்தின் பெருமை – வெறும் பார்வேர்ட் செய்வதில் மட்டுமல்லாது அதனை கடைபிடித்து வாழ்வதில் தான் உள்ளது என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் .இங்ஙனம் டாக்டர். அ .முகமது சலீம் (cure sure)., BAMS.,M.Sc.,MBA
 சேய் நெய் கொடுப்போம்...சேய் நலம் காப்போம் .
சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

0 comments:

கருத்துரையிடுக