திங்கள், ஜூன் 12, 2017

Varicose vein நோய்க்கு அறுவை சிகிச்சையின்றி ஆயுஷ் மருத்துவத்தில் தீர்வு

கால் நரம்பு சுருட்டு என்னும்  வெரிகோஸ் வெயின் நோய்க்கு  அறுவை சிகிச்சையின்றி ஆயுஷ் மருத்துவத்தில் தீர்வு


டாக்டர். அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .வர்தினி .,BHMS.,

 
Varicose vein - என்பது இரத்த நரம்பு சுருண்டு - இந்த நரம்புகள் விரிவடைந்து, வீக்கம் பெற்று மற்றும் முறுக்கப்பட்ட நிலையில் இருக்கும். பெரும்பாலும் இது கால்களிலே காணப்படுகின்றன.




எதனால் கால்கள்  பாதிப்படைகிறது :

இந்த வேரிகோஸ் வெய்ன் கால்களில் வரக்காரணம் எதனால் என்றால். இதயத்திலிருந்து புறப்படும் ரத்தம் ரத்த நாளங்கள் வழியே அனைத்து உறுப்புகளுக்கும் சென்று திரும்பவும் இதயத்திற்கே செல்கின்றது. அவ்வாறு கால்களிருந்து இதயத்திற்கு போகும் நரம்புகள் எதிர்மறை சக்தியால் மேல்நோக்கி செல்லாமல் கால்களில் முடிச்சு போல் முருக்கப்பட்டு கால்களிலே தங்குவிடுகின்றன இதுவே varicose vein.



அனைத்து நரம்புகளும் ஒரே வழி வால்வுகள்  கொண்டிருக்கும். அந்த வால்வுகள் தோல்வி அடையும் போது ரத்த அழுத்தம் ஒரு சுமை அழுத்தத்தில் நரம்புகள் மற்றும் முடிவுகளை பின்னோக்கி ஓட்டம் அனுமதிக்கிறது.



இது ஒரு பரம்பரை வியாதி கிடையாது. ஆனால், பெரும் குடும்பகளில் இது பரம்பரையாக காணப்படுகின்றது. இது குறிப்பாக ஆண்களைவிட பெண்களையே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.


குறிப்பாக பெண்களுக்கு பருவமடைதல், கர்ப்பம் தரித்தல், மாதவிடாய், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் மற்றும் HRT உள்ளிட்ட ஹார்மோன் காரணிகள் இந்த நோயை பாதிக்கின்றன.


இதை தவிர்த்து வயதானவர்கள், நீண்ட நேரம் நின்றுக் கொண்டு இருப்பவர்கள், உடல் பருமன் மற்றும் கால்களில்  காயம் ஏற்படுபவர்கள் Varicose  Vein  ஆனது  விரைவில் வரும்




இதன் அறிகுறிகள் என்ன ?


பல மக்களுக்கு Varicose  Vein   ஆனது எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருப்பர்கள். ஆனால் தோற்றத்தில் மட்டும் சங்கடமாக இருக்கும்.


நோயாளிகளில் சிலருக்கு  இது மருத்துவ பிரச்சனைகளை சிறிது வலியை தவிர பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. இது சில மக்களுக்கு அழகு சம்பந்தப்பட்டு பிரச்சனையாகவே காணப்படுகின்றது.


அழகு தொந்தரவுகள் தவிர பொதுவான அறிகுறிகளான வலி மற்றும் கால்களில் பாரம் போன்றவை  இருக்கும். இந்த வலிகள் வேலை செய்யும்போது அதிகமாக இல்லாமல் நாளில் முடிவில் அதிகமான வலி காணப்படும்.மேலும் கணுக்கால் வீக்கம் ஏற்படலாம்.


நடக்க நடக்க வலி அதிகமாகும் –சிறிது ஓய்வுக்கு பின் நடப்பது எளிதாக இருக்கலாம்

சில சந்தர்ப்பங்களில் இதன் விளைவானது வீக்கம் மற்றும் நிறமாற்றம் ஆகலாம். மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில் இரத்தமும் கசியலாம் மற்றும் புண்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.



வெரிகோஸ் வெயின் கவனம் தேவை

கால் கறுப்பு ஆகும் நிலை அளவுக்கு இரத்த ஓட்டம் குறைய வாய்ப்புள்ளது , ஆறா புண் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் மிக்க கவனம் தேவை

டீப் வெயின் திராம்போசிஸ் என்ற இரத்த கட்டுதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்த –இதுவே இதய நாளத்தை அடைத்தால் இதய செயல் இழப்பும் ,மூளை நாளத்தில் அடைத்தல் பக்க வாதம் கூட வாய்ப்புள்ளது

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நரம்பு சுருட்டு நோய் வந்தால் மிக்க கவனத்துடன் இருத்தல் அவசியம்


இதில் இருந்து தப்பிக்க நமது வாழ்க்கை முறையை மாற்றினாலே போதும்.


பின்வரும் மாற்றங்களால் Varicose Vein - ல் இருந்து மோசமடையாமல் செய்வதற்கான வழிமுறைகள் :-

  • நீண்ட நேரம் நின்றுக்கொண்டு இருப்பதை தவிரத்தல்.
  • உடல் பருமனை குறைத்து, ஆரோக்கியமான எடையை பராமரித்தல்.
  • வயிற்று தொப்பை கால் தொடையை அழுத்தும் அளவுக்கு போக விட கூடாது .வயிற்று சதையை குறைப்பது நல்லது
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்தல்.
  • நீச்சல் பயிற்சி இந்த நோய்க்கு சிறந்தது
  • சுருக்க காலுறை அல்லது ஸ்டாக்கிங் பயன்படுத்தலாம்.
  •  ஓய்வு எடுக்கும் போது அல்லது உறங்கும் போது கால்களை உயர்த்தி வைத்தல் நல்லது.


இந்த மாற்றங்கள் வேலை செய்யவில்லை எனில் நீங்கள் சிகிச்சை எடுப்பது நன்மை சேர்க்கும். பக்கவிளைவுகளின்றி முற்றிலும் குணமடைய செய்யும் AYUSH மருத்துவத்தை பயன்படுத்தி நோயின்றி வாழலாம்.



Vericose Vein - க்காக சில Homeopathy மருந்துகள் :-

Arnica Montana : - வலி, சிராய்ப்பு மற்றும் வீக்கத்தை தடுக்கிறது மேலும் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் பாதிப்புக்கு இது சிறந்தது.

Hamamelis :- இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் கால்களில் பாரம் மற்றும் நிறமாற்றம் ஆகியவற்றிற்கு சிறந்தது.

Calcarea Carbonica :- அதிக நேரம் நின்றுக்கொண்டு இருத்தல், உடல் பருமன் ஆகிய காரணங்களால் Varicose Vein வருபவர்களுக்கு.

* Carbo Vegetalies, * Pulsatilla

 ஜின்கோ பைலோபா கலந்த வெரிகோஸ் வெயின் சொட்டு மருந்துகள் 



Varicose  Vein - க்காக சில ஆயுர்வேத ஆலோசனைகள்  :-

லசுன க்ஷீர பாகம் என்ற பூண்டு பால் நரம்பு சுருட்டு மட்டுமல்லாது உடல் கொழுப்பை குறைக்கும் – இதை ஆயுர்வேத  மருத்துவர் ஆலோசனை படி இரவில் தொடர்ந்து எடுத்தல் நல்லது

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் பல ஆயுர்வேத மருந்துகள் –சிர வில்வாதி கஷாயம் ,வாரனாதி கஷாயம் ,புனர்ணவாதி கஷாயம் ,அர்ஜுனா அரிஷ்டம் ,புனர்ணவாசவம் ,சந்திர பிரபா வடி, த்ரிபலா குக்குலு இன்னும் பல பல ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலனை தர வல்லது






ஆயுர்வேத சிகிச்சையில் அப்யங்கம் , காடி கிழி ,லேப ,நவர தேய்ப்பு உபனாக சிகிச்சைகள் நல்ல பலனை தரவல்லது .


ஆயுர்வேத பஞ்ச கர்ம சிகிச்சையில் ஜலவ்கா என்னும் அட்டை விடல் சிகிச்சை –ரக்த மோஷன சிரா வய்த சிகிச்சைகள் அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டிய வேரிகோஸ் வெயின் நிலையிலும் நல்ல பலனை தரவல்லது .




ஹிஜாமா சிகிச்சையும் நல்ல தீர்வை தரவல்லது .


வேரிகோஸ் வெயின் என்ற கால் நரம்பு சுருட்டு நோய்க்கு ஆயுஷ் மருத்துவமே பக்க விளைவுகள் இல்லாத தீர்வை தர வல்லது .வெரிகோஸ்  வெயின் பிரச்சனைக்கு மேலே சொன்ன எல்லா சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் எடுக்க ,சிறந்த சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )




Post Comment

0 comments:

கருத்துரையிடுக