சனி, ஜூன் 24, 2017

உடல் எடை குறைக்க ஆரோக்கியமற்ற வழிமுறைகள்

மரணத்தை கூட வரவைக்கும் தவறான உடல் எடை குறைப்பு வழி முறைகள்



டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.G.வர்தினி .,BHMS.


Danger  of Wrong W ay to Reduce Weight-




இந்த  தலைமுறையில்  இருக்கும் நம் அனைவரும் உடலின் எடை மீது மிக அதிக கவனம் செலுத்துகிறோம். இப்போதைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைக்க தீவிர சிந்தனை செய்கின்றனர். அதற்காக அவர்கள் அபாயகரமான காரியங்கள் பல செய்கின்றனர்.


எடை இழக்க பல வழிகள்  உண்டு.  ஆனால்  அது அனைத்தும் நல்லது அல்ல. இதனால் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ஆற்றலும் உள்ளது. உடல்  எடையை குறைப்பதற்காக நம் மேற்கொள்ளும் வழிகளில்  உள்ள பயங்கரத்தை நாம் பார்ப்போம் .


எடை இழக்க ஆரோக்கியமற்ற வழிகள் :-


உணவை  தவிர்த்தல்  (Skipping  Meals , Fasting)

உடல் எடையை தவிர்க்க நம் அனைவரும் கையாளும்  ஒரே  வழி  உணவுகளை  தவிர்ப்பதாகும்.  ஆனால் இது  உடலுக்கு  மிக  மோசமான  விளைவுகளை  தரவள்ளது. மேலும்  உணவுகளை   தவிர்த்துக்கொண்டே வந்தால் காலப்போக்கில் வளர் சிதை மாற்றம்  அடைந்து உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது . கடுமையாக   விரதம் இருந்தால் உடல் எடை   குறையலாம் . ஆனால்   நினைவில்  கொள்ளுங்கள்  நீங்கள்   இழக்கும்  எடை , விலைமதிப்பற்ற  தசைகளையும்  , வளர்ச்சிதை   மாற்றத்தையும்  குறைக்கிறது . இதனால்  வளர்ச்சிதை மாற்ற  நோய்கள்  மற்றும்  நீரழிவு   ஆபத்துகள்  வர  வல்லது .



குறைந்த   கலோரி  உணவுகள் :-

நம்  உடலுக்கு  கொழுப்புகள்  மிக  முக்கியம் . ஆரோக்கியமான   கொழுப்புகள்  , கொழுப்பை   எரிக்க   உதவுகிறது . குறைந்த  கலோரி  உணவுகளை  எடுப்பதால்  உடலுக்கு   தேவையான  வைட்டமின்கள்  மற்றும்  தாதுக்கள்   நமக்கு  சரிவர  கிடைப்பதில்லை .இதனால்  உடல்  எடையை   மட்டும்   குறைக்காமல்   நாம்  பல்வேறு  நோய்களையும்  வரம்  பெற்று  வாங்கிக்கொள்கிறோம்.

மருத்துவ  மேற்பார்வைப்படி  ஒரு  நாளைக்கு  1,200 கலோரிகள்   எடுக்க வேண்டும் . அவ்வாறு  எடுப்பதனால்  ஆரோக்கியமான  எடையோடு   நோயற்று  வாழலாம் .



மருந்துகள்   மற்றும்  மாத்திரைகள்  :-



எடை  இழப்புக்கான  மாயமான    மாத்திரைகள்  எதுவும்  இல்லை . ஆனால்  துரதிருஷ்டவசமான , கோகைன்  போன்ற   மருந்துகள்  விரைவான  ஆற்றல்  தருகின்றது . மேலும்  அது   இதயத்தையும் , மூளையையும்  கடுமையாக  பாதிக்கின்றது . மேலும்  மலச்சிக்கலையும்  உண்டுபடுத்தும் .இதை  தவிர்த்து  மேலும் , பல்வேறு   பாதிப்புகளையும்  வழங்கவள்ளது .


நீங்கள்   மருந்துகளை   எடுத்துக்கொள்ளும் .  நபராக  இருந்தால்  உங்கள்   மருத்துவரிடம்  அதன்  பக்கவிளைவுகளையும்  கேட்டுக்கொள்வது  நல்லது .



Fad Diet :-

ஆரோக்கியமற்ற   மற்றும்  சமநிலையற்ற  உணவு   மூலம்  விரைவான  எடை  இழப்பாகும் .எந்தவித  உடற்பயிற்சியும்  இல்லாமல்  இது  எடையை  குறைக்க  வல்லது . ஆனால் , இது  நமது   உடலில்  இருக்கும்  நீரினை  குறைக்கிறது .



அதிக    உடற்பயிற்சி  :-


ஊட்டச்சத்து  குறைவாக  உள்ளவர்கள்  , உடல்  எடையை  குறைக்க  தீவிரமாக  உடற்பற்சி  மேற்கொண்டால்  அது  பல  மோசமான  விளைவுகளை   தரவல்லது . இதனால்  நீர்ப்போக்கு  மற்றும்  *Electrolyte Imbalance*  போன்றவை  ஏற்படும் . உடல்  எடையை  இழக்க  வேண்டியது   அவசியம் . ஆனால்  அது  ஆரோக்கியமான  உணவு  மற்றும்  உடற்பயிற்சி   மூலம்  மேற்கொள்ள  வேண்டும்.




கடுமையாக   வாந்தி  எடுத்தல் :-



இப்போதைய   இளையர்கள்  பலர்  , தங்கள்  உண்டபின்  , அது  உடல்  எடையை  அதிகரிக்கும்  என்று எண்ணி ,சுயமாக  கட்டாயமாக  வாந்தி  எடுக்கின்றனால்  இதனால்  உடல்  எடை  குறையும்  என்கிறார்கள் . இது  மிகவும்  தவறு . மீண்டும்  மீண்டும்  வாந்தியெடுத்தால்  உமிழ் நீர்ச்சுரப்பிகளில்   நீர்போக்கு  மற்றும் வீக்கத்தை  ஏற்படுத்தும்   அதே  போல் , வயிற்று  அமிலம்  உங்கள்   உணவுக்குழாய்  மற்றும்  பல்  சிதைவை  ஏற்படுத்தும்   மேலும்  Bullumia  என்ற  வழிவகுக்கும் . 




நீர் சத்தை  இழக்கும் கழிவு நீக்க  மற்றும்  Detox   Plans :-

உடலில்  இருக்கும்  நீரையும்  , மலத்தையும்  வெளிக்கொண்டு  வருவது  ஆபத்தானது .  இதனால்  நீர்போக்கு  மற்றும்  Electrolyte  Imbalance போன்றவை  ஏற்படுத்தும் . மருத்துவமேற்பார்வை இல்லாமல்    திரவம்  நிறைய  இழப்பு  ஆபத்தானது .மேலும்  உண்ணாவிரதத்தை  கடைபிடித்தால்  அது  அபாயகரமான   பல  பாதிப்புகளை  தரவல்லது .அதற்கு  பதிலாக , நீங்கள்  சாப்பிட  வேண்டிவற்றை  கவனத்தில்  கொள்ளுங்கள்   உங்கள்  உடலை  சுத்தப்படுத்தவோ  அல்லது  குறைக்கவோ  விரும்பினால் , நிறைய  தண்ணீர்  குடிக்கவும் ,உயர்  ஃபைபர்  உணவுகளை  நிறைய  சாப்பிடவும் . 




அறுவை  சிகிச்சை :-




இது , கடைசியான  வழி , உடல்  எடை  குறைக்க  பல்வேறு வழிகள்   தோற்றுபோனாலும்  அறுவை  சிகிச்சை   எடையை  குறைக்கலாம் .



ஆனால்  இது  பல்வேறு   பக்கவிளைவுகளை   தரவல்லது .
உடல்  இழப்பு   என்பது  ஆரோக்கியமான  எடையை  தக்கவைப்பதே  ஆகும் . நாம்  வாழும்  வாழ்க்கைக்கு  ஏற்ப  நமது  உணவு  முறைகளை   தேர்ந்தெடுக்கவேண்டும் . மேலும்  ஆரோக்கியமான  உணவு, மற்றும்  ஆரோக்கியமான  உடற்பயிற்சியை  நோயில்லாத  வாழக்கைக்கு  வழிசெய்யும்.



இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக