சனி, ஜூன் 10, 2017

மூத்ர பிந்து எனும் எளிமையான நோய் கணிப்பு பரிசோதனை

மூத்ர பிந்து எனும்  எளிமையான நோய் கணிப்பு  பரிசோதனை

டாக்டர் .அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். ஜீவா .,BAMS.,ஆயுர்வேத மருத்துவத்தில் வரப்பிரசாதமாக மூத்ர பிந்து பரீட்சை கருதப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வங்கசேன சம்ஹிதை, யோகரத்னாகர (ம) யோகதரங்கினி ஆகிய புத்தகத்தில் மூத்ர பிந்து பரீட்சை பற்றிய குறிப்பேடுகள் காணப்படுகின்றன. அஷ்ட வகை நோய் கணிப்பு வகையில் இது ஒரு சிறந்த எளிமையான நோய் கணிப்பு முறைஇரத்த பரிசோதனை, X-Ray, Scan என தேவையில்லாத பணம் பிடுங்கும் நோக்கத்தோடு இருக்கும் இன்றைய மருத்துவ உலகில் வெறும் எண்ணெய்யினை வைத்து நோயாளியின் சர்வத்தையும் அறியும் மூத்ர பிந்து பரீட்சை எனும் ஆயுர்வேத பரிசோதனை முறை மறைந்து போய்விட்டது.சித்த மருத்துவத்தில் நெய் குறி என்னும் இந்த பரிசோதனை எண் வகை நோய் கணிப்பு முறையில் ஒன்றாக உள்ளதுமூத்ர பிந்து பரிசோதனைக்கு தேவையான பொருட்கள் :-


 •   சிறுநீர் சேகரிக்க மூடிக்கொண்ட பாட்டில்.
 •    4 - 5 அங்குல விட்டம் (ம) 1.5 அங்குல ஆழமுடைய கண்ணாடி கிண்ணம்.
 •   துளிசொட்டி (ட்ராப்பர்).
 •   நோயாளியின் சிறுநீர்.
 •    நல்லெண்ணெய்.பரிசோதிக்கும் முறை :-

 •       காலையில் நோயாளி கழிக்கும் முதல் சிறுநீரினை சேகரிக்க வேண்டும் .

 •  மேற்கண்ட கண்ணாடி கிண்ணத்தில் அல்லது டிஸ்போசபில் டீ கப்பில்  சிறுநீரினை நிரப்பி சமதள தரையில் அதிக காற்றோட்டம் இல்லாத சூழலில் வைக்க வேண்டும்.

 •   நல்ல தூய்மையான் நல்லெண்ணெய்யினை துளிசொட்டி (ட்ராப்பர்)- ல் எடுத்து ஒரே ஒரு சொட்டினை மட்டும் 1 மி.மீ உயரத்தில் இருந்து கண்ணாடி கிண்ணத்தில் இருக்கும் சிறுநீரில் விட வேண்டும்.எண்ணெய் பரவும் தன்மையை வைத்து நோயினை கண்டறிதல் :-
1.            எண்ணெய்யானது பாம்பு அல்லது வட்ட வடிவத்தில் பரவினால் - நோயாளி வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்.


2.            குடை வடிவத்தில் அல்லது குமிழியாக பரவினால் - பித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்.

3.            முத்து போன்ற வடிவத்தில் அல்லது சொட்டு சொட்டாக பரவினால் - கப நோயினால் பாதிக்கப்பட்டவர்.


4.            சல்லடை வடிவில் எண்ணெய் பரவினால் - மரபணு சார்ந்த ,ஆம வாத ,முடக்கு வாத  நோயினால் பாதிக்கப்பட்டவர்.

5.            மனித உருவில் (அ) மனிதனின்  மண்டையோட்டு வடிவில்  எண்ணெய்  பரவினால் -பூத தோஷத்தால்  பாதிக்கப்பட்டவர்.

6.            எண்ணெய்யானது விரைவாக பரவினால் -நோயாளியின் நோயினை சீக்கிரம் குணப்படுத்த முடியும் (சாத்ய ரோகம்).

7.            எண்ணெய் பரவவில்லை என்றால் -நோயினை குணப்படுத்துவது கொஞ்சம் கடினம் (கஷ்டசாத்ய  நோய்).

8.            எண்ணெய்யானது பரவாமால் சீறுநீரில் மூழ்கினால் - அசாத்ய நோய் நோயினை குணப்படுத்த இயலாது.எண்ணெய் பரவும் திசையினை வைத்து நோயின் தன்மையை கண்டறிதல் :-

 •              கிழக்கு திசையில் எண்ணெய் பரவினால் - நோயாளி சீக்கிரத்தில் நிவாரணம் பெறுவார்.

 •              எண்ணை தெற்கு திசையில் பரவினால் அந்நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்.

 •              எண்ணெய்  வடக்கு திசையில் பரவினால் - அந்நபரின் நோயினை கண்டிப்பாக குணப்படுத்தமுடியும்.

 •              எண்ணெய்  மேற்கு திசையில் பரவினால் அந்நபர் சுகத்துடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வார்.

 •              எண்ணெய் வடகிழக்கு நோக்கி பரவினால் -       அந்நபரானவர் ஒரு மாத காலத்திற்குள் இறக்க நேரிடும்.

 •              எண்ணெய் தென்கிழக்கு (அ) தென்மேற்கு திசையில் பரவினால் - நோயாளி இறக்க நேரிடும்.

 •              எண்ணெய் வடமேற்கு திசையில் பரவினால் நோயாளியானவர் எந்த விதத்திலும் இறந்து போவார்.எண்ணெய் பரவும் வடிவத்தை வைத்து நோயின் தன்மையை கண்டறிதல் :-


 •              வாத்து, தாமரை, மலை, யானை, ஒட்டகம், மரம், குடை (ம) வீட்டின் வடிவத்தில் எண்ணெய்யானது பரவினால் அந்நபரின் நோயினை எளிதில் குணப்படுத்த முடியும்.

 •              மீன் வடிவத்தில் எண்ணெய் பரவினால் நோயினை குணப்படுத்துவது மிகவும் எளிது.

 •              கொடிகள், மனித உருவம், பானை, சக்கரம் (ம) மான் உருவத்தில் எண்ணெய் பரவினால் நோயினை குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்.

 •              ஆமை, எருமை, தேன், பறவை, தலையில்லாத மனித உடலின் வடிவங்கள் (ம) கத்தி போன்ற வடிவத்தில் எண்ணெய் பரவினால் அந்நபரின் நோயினை மருத்துவரால் குணப்படுத்த முடியாது.

 •              இரண்டு, மூன்று (ம) நான்கு கால்களின் வடிவத்தில் எண்ணெய் பரவினால் நோயாளி விரைவில் இறந்து விடுவார்.

 •              கூர்மையான ஆயுதம், வில், திரிசூலம், பாம்பு, தேள், எலி, பூனை, அம்பு, புலி, குரங்கு (ம) சிங்கத்தில் வடிவத்தில் எண்ணெய் பரவினால் நோயாளி மிக விரைவில் இறந்து விடுவார்.


மேலே குறிப்பிட்டுள்ளவாறு மூத்ர பிந்து (அ) தைல பிந்து பரிசோதனையின் மூலம் நோயினை மட்டுமில்லாமல் நோயின் தன்மையையும் அறிந்து தகுந்த சிகிச்சைகளை வழங்க முடியும்.


மிக குறிப்பு –எச்சரிக்கை 

 • இந்த மேற்கூறிய பரிசோதனைகள் நோய் கணிப்புக்கு பயன்பட்டாலும் நோயின் சாத்திய அசாத்திய தன்மைகள் அறிய பயன்பட்டாலும் முக்கியமாக எந்த தோஷ குற்றம் பாதிப்பு என்று தெரிந்து தோஷத்தின் அடிப்படையில் மருந்தை தேர்வு செய்ய பயன்படுகிறது • சரியான முறையான மருத்துவ அறிவும் ,மருத்துவ கல்வி தகுதியும் உள்ள மருத்துவர்களிடம் மட்டுமே இந்த மூத்திர பிந்து –நெய் குறி பரிசோதனையின் தெளிவான விளக்கம் பெற முடியும் என்பது உண்மை • நோயாளிகள் தாங்களாகவே பரிசோதித்து பார்ப்பது தேவையற்ற குழப்பத்தை மட்டுமே தரும் ..எனவே தக்க மருத்துவர் துணையுடன இந்த பரிசோதனைகள் செய்வது தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும்
  • விரைவில் இறந்து விடுவார் ,அசாத்தியம் போன்றவை இந்திரிய லக்ஷணம் போன்றவை தக்க மருத்துவர் மட்டுமே உறுதி செய்ய கூடியது எனவே மருத்துவமனையில் மட்டுமே –மூத்திர பிந்து –நெய் குறி பரிசோதனை –மருத்துவர் மேர்பார்வையில் மேற்கொள்வது நல்லது


  • சில மருந்துகள் எடுத்து கொள்ளும்போது ,ஆங்கில மருந்தின் தாக்கம் போன்றவை மூத்திர பிந்து பரிசோதனைகளை மாற்றிடும் என்பதை தெரிந்து வைத்தல் நலம்


  தேவையற்ற பரிசோதனைக்காக பணத்தை செலவழிக்காமல் சிறந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுத்து நோயினை எளிமையாக குணப்படுத்தி ஆரோக்கியத்தை பேணிக்காக –மூத்திர பிந்து , நெய் குறி பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆயுர்வேத சித்த மருத்துவமனையை நாடி செல்வது நல்லது ..இந்த பரிசோதனையை செய்து நோய் கணிக்கும் ஆயுஷ் மருத்துவமனை ஆலோசனை பெற –
  அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
  கடையநல்லூர் 90 4222 5333
  திருநெல்வேலி 90 4222 5999
  ராஜபாளையம் 90 4333 6888
  சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


  Post Comment

  0 comments:

  கருத்துரையிடுக