வியாழன், ஜூன் 15, 2017

ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சை

ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சை

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.ஜீவா.,BAMS.,

நவீன அறுவை சகிச்சையின் தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்பது நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்

ஆயுர்வேத ஆச்சார்யர் சுஸ்ருதர் தான் அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுபவர். அறுவை சிகிச்சை என்றாலே அனைவரது பார்வைக்கும் ஆங்கில மருத்துவமே கண் முன் நிற்கும்.ஆயுர்வேதம் பயின்ற மருத்துவருக்கு BAMS என்ற டிகிரி வழங்கப்படும்.அதன் முழு பொருள் Bachelor of Ayurvedic Medicine & Surgery.

புகழ் பெற்ற பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஜெய்ப்பூர் இன்னும் பல அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் எல்லா வகையான அறுவை சிகிச்சைகளும்  ஆயுர்வேத முறைப்படி செய்யப்பட்டு பல லட்சகணக்கான  நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பதை உங்களால் நம்பாமல் இருக்க முடியாது.

ஆயுர்வேத மேல்படிப்பில்  MS அதாவது Master of Surgery படிப்பும் உள்ளது நம்மில் பலருக்கு அறிந்திருக்க வாய்பில்லை..

ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் அறுவை சிகிச்சையும் ஒன்று

ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு  அறுவை சிகிச்சை முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது.ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சையை சார்ந்த பிரிவு  சல்ய தந்திரம் என அழைக்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் அறுவைசிகிச்சை முறைகள்

சேத்ய அறுவை சிகிச்சை
     

எதாவது ஒரு பகுதியினை  வெட்டியெடுக்கும் சிகிச்சை சேத்யம் எனப்படும்.

சேத்ய சிகிச்சையின் மூலமாக கட்டிகள், பௌத்திரம், மரு,கண்ணில் வரக் கூடிய கட்டிகள்,மூல நோய்கள் ஆகியவை குணப்படுத்தப்படுகின்றன.

பேத்ய அறுவை சிகிச்சை

பேத்ய இயந்திரத்தின் உதவியைக் கொண்டு உடலில் ஏற்படுத்தும் கீறலுக்கு பேத்ய சிகிச்சை என்று பெயர்.

பேத்ய சிகிச்சையின் மூலம் நீர்க்கட்டிகள், குடலிறக்கம், நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய வெடிப்பு, புண்கள், கண், தொண்டை (ம) மார்பக வீக்கம் ஆகிய நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.

லேக்ய_அறுவை_சிகிக்சை

நோய்பட்ட இடத்தில் இருக்கும் தேவையற்ற தசையை இயந்திரத்தை கொண்டு சுரண்டி எடுத்து வெளியேற்றபடுவது லேக்ய சிகிச்சை எனப்படும்.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘வெண்குஷ்டம்
☘நாக்கில் ஏற்படும் வீக்கம்
☘கொழுப்பு கட்டிகள்
☘மூல நோய்
☘தொழு நோய்  

வேத்ய அறுவை சிகிச்சை

ஊசி போன்ற இயந்திரத்தை கொண்டு நோய்பட்ட இடத்தில் குத்துவதன் மூலம் கெட்ட நீர் ஆகியவை  வெளியேற்றப்படுவது வேத்ய  சிகிச்சை ஆகும்.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘நரம்பு சுத்தி
☘விரை வீக்க நோய்
☘வயிற்றில் அதிக கெட்ட நீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய வீக்கம்

எஷ்ய அறுவை சிகிச்சை

இயந்திரத்தினை நோய்பட்ட இடத்தினுள் செலுத்தி ஆய்வு செய்வது எஷ்ய அறுவை சிகிச்சையாகும்.இதன்மூலம்

☘ஆழ்துளை புண்கள்
☘அடிபடுவதால் ஏற்படும் புண்கள்

ஆகியவை குணப்படுத்தப்படுகின்றன.

அஹர்ய அறுவை சிகிச்சை

அஹர்ய இயந்திரத்தை பயன்படுத்தி உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவது அஹர்ய சிகிச்சை.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘பல்லில் படிந்திருக்கும் கழிவுகள்.
☘கால் ஆணி.
காதினுள் இருக்கும் மலம் .
☘அடிபடுவதால் உடலுக்குள் தங்கிவிடும் கண்ணாடி துண்டுகள் (மற்றும்)பிற.
☘மூத்திரக்கல்

விஸ்ராவிய அறுவை சிகிச்சை

☘வெட்டுக்காயங்க
ள்
☘நீர்கட்டிகள்
☘தொழுநோய்கள்
☘வீக்கம்
☘யானைக்கால்
☘புற்றுநோய்கள்
☘மார்பக நோய்கள்
☘சீழ்க்கட்டிகள்
☘சொத்தைப்பல் போன்ற நோய்கள் விஸ்ராவிய அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்படுகிறது.

சீவ்ய அறுவை சிகிச்சை

சீவ்ய இயந்திரத்தை பயன்படுத்தி தையல் போடுதல்.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘தசை பிளவு.
☘பிளவுப்பட்ட புண்கள்.
☘வெட்டு காயங்கள்
☘உராய்வு (மற்றும்) அடிபட்ட காயங்கள்.
☘ஆழ்துளை காயங்கள்.

க்ஷார கர்மா (மற்றும்)  க்ஷார சூத்திரம்

உஷ்ணத்தன்மை வாய்ந்த மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ்ட் (அல்லது)நூலினை உடலில் செலுத்துவது.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘உல்(மற்றும்)வெளிபுற மூல நோய்கள்
☘பௌத்திரம்
☘மலக்குடல் இரக்கம்(ம)ஆழ்துளை புண்கள்

அக்னி கர்ம சிகிச்சை

சலாக இயந்திரத்ததை பயன்படுத்தி உடலுனுள் சூடி செலுத்துவது அக்னி கர்ம சிகிச்சை.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘மூல நோய்கள்
☘புற்றுநோய்கள்
☘பௌத்திரம்
☘வீக்கம்
☘இடுப்பிலிருந்து கால்வரை பரவக்கூடிய வலி.

அட்டை விடும் சிகிச்சை

மருத்துவ குணமிக்க அட்டை பூச்சினை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவது.

குணப்படுத்தப்படும் நோய்கள்

☘சொரியாசிஸ்
☘கீல்வாதம்
☘முடக்குவாதம்
☘மூல நோய்
☘நரம்பு சுத்தி
☘உயர் ரத்த அழுத்தம்
☘இரத்த உறைவு

ஆங்கில மருத்துவத்தில் மட்டும் தான் அறுவை சிகிச்சைகள் உள்ளது என்ற தவறான கண்ணோட்டத்தை கைவிட்டு ஆயுர்வேத மருந்துகளோடு,

சிகிச்சைகளையும் சேர்த்து நோயினை எளிதில் குணப்படுத்தி நீண்ட ஆரோக்கிய வாழ்வினை பேணிக்காப்பீர்.

இயற்கை மருத்துவ  சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ்மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ்_ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை).

Post Comment

0 comments:

கருத்துரையிடுக