வியாழன், ஜூன் 22, 2017

யோகாவும் ஹோமியோபதி மருத்துவமும்

யோகாவும் ஹோமியோபதி மருத்துவமும்

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure ) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .வர்தினி .,BHMS.,



அடிப்படை தத்துவங்கள் ஒன்றே

ஹோமியோபதி மற்றும் யோகாவில் பல அடிப்படை கோட்பாடுகள் ஒன்று சேர அமைந்திருக்கின்றன. இரண்டுமே அதிக அளவிலான சுகாதாரம், நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு வளர்ப்பதற்கு பயனுள்ள பல நுட்பங்கள் உள்ளன.






உயிர் ஆற்றலை வலுபடுத்துகிறது –யோகாவும் ஹோமியோவும்


ஆற்றல் மற்றும் சக்தியை பயன்படுத்துவதன் மூலம் ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கவும் தடுக்கவும். இவை இரண்டுமே செய்கின்றது. ஹோமியோபதி சிகிச்சையில் இந்த சக்தியை உயிர் ஆற்றல் எனவும், யோகாவில் பிராண (Prana) என்று அழைக்கிறோம் ஆனால் அடிப்படையில் அதன் தத்துவங்கள் ஒன்றே.! பெயர்கள் மட்டும் வேறு.




பிராணன் என்பது ஹோமியோவின் LIFE –VITAL FORCE ஒன்று தான்



யோகாவில் Asana, Pranyama, Bandas ஆகியவை மூலம் உடல் ஆற்றல் சமன் செய்யவும், அதிகப்படுத்தவும் குறைக்கவும் முடியும். அதேபோல் ஹோமியோபதியில் மனிதனின் இயல்பு மற்றும் உடலின் தன்மை மூலம் உயிர் ஆற்றலை அதிகப்படுத்தவும் குறைக்கவும் முடியும். இது அந்த நபரின் இயல்பு, மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் மருந்துகளை தேர்வு செய்கிறோம்.



ஆக நமது உயிர் ஆற்றல் குறைந்தால், நம்மை நோய் பற்றிக்கொள்கிறது. அது அவனை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் பாதிக்கும். அதனை சமநிலை செய்ய யோகாவும் ஹோமியோபதியும் முதன்மை நிலையில் இருக்கிறது. மேலும் நோய் தடுப்பு சக்தியாகவும் மாறுகின்றது.




மனம் உடல் ஆத்மா ஒருங்கிணைத்தலில் –யோகாவும் ஹோமியோவும் ஒன்று

ஹோமியோபதி மற்றும் யோகாவினால் உடல், மனம் மற்றும் ஆத்மா ஆகியவை ஒன்று சேர அல்லது ஒருங்கிணைப்பு அடைய நடைமுறையில் வழிகள் உள்ளன. இதன் இரண்டுமே ஒன்று சேர எடுப்பதனால் உங்கள் நோயை மட்டும் குணப்படுத்தாமல் நோயில்லா வாழ்க்கையை வாழவும் வழிவகுக்கும்.



யோகாவும் –ஹோமியோவும் -பலன் விரைவானது –எளிமையானது -

ஹோமியோபதியில் மருந்தின் அளவு :-
ஹோமியோபதியில் மிக குறைவான அளவு மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இது நாக்கில் வைத்தவுடன் வளர்சிதை மாற்றமடையாமல்  நரம்புகள் வழியே மற்ற உறுப்புகளுக்கு சென்று நோயை தடுக்கிறது. இதனால் இதனுள் எந்த மருத்துவம் எடுத்தாலும் அது தடை செய்வதில்லை. அனைத்து  மருத்துவத்தில் கூடவும் ஹோமியோபதியில் பயன் பெறலாம்.



அதேபோல், யோகாவில் மற்ற மருத்துவத்துடன் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். இந்த வழிமுறைகளால் உடலுக்கு சமாதானத்தை ஏற்படுத்துகிறது. மேலும், யோகாவும், ஹோமியோபதியும் ஒன்றுடன் ஒன்று இணையும் போது அதன் ஆற்றல் பல மடங்கு பெருகுகின்றது.




யோகாவும் –ஹோமியோவும் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவங்கள்

ஹோமியோபதியில் எந்த பக்கவிளைவுகளும் கிடையாது. ஆனால் மற்ற மருத்துவத்தை எடுப்பதன் மூலம் மருந்து உட்கொள்ளும் போது எந்த வித பிரச்சனைகளும் இல்லை, ஆனால் மருந்தை நிறுத்தி விட்டால் அனைத்து பிரச்சனைகளும் திரும்ப வந்துவிடும். ஆனால், ஹோமியோபதியில் முதலில் மனது அமைதியாகிவிடும் பின்னர் உடல் நிலையும் குணமாகி நோய் தடுப்பாகவும் மாறுகிறது.



அளப்பரிய நோய் குணமாக்கும் ஆற்றல்

இங்கே குணமடைவது என்பது மேலே இருந்து கீழே, வெளிப்புறத்தில் இருந்து உட்புறம், மிக முக்கிய உறுப்பு முதல் குறைந்த முக்கிய உறுப்பு, அறிகுறிகளின் தலைகீழ் வரிசையில் குணமாகிவிடும்.

யோகாவில் இதுவே நடக்கிறது.

யோகாவும் நமது அறிவாற்றலை அதிகப்படுத்தவும் தொற்று நோய்களுக்கு எதிராக போராடுவது, வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப நம் உடலை தயார்படுத்துவது, மனதினை அமைதியடைய செய்வதிலும் மற்றும் சமநிலை படுத்தவும் யோகா உதவுகிறது.



யோகாவும் –ஹோமியோவும் இணைந்தால் பலன் மிக மிக அதிகம்

இதன் மூலம் யோகாவும், ஹோமியோபதியும் ஒரே வேலையை வெவ்வேறு பெயர் கொண்டு செய்கிறது என்று தெரிய வருகிறது.
யோகாவும் சுய சிகிச்சைக்குள் உள்ளடக்கியது யோகாவின் அனைத்து வழிகளும் வாழ்க்கையில் வரும் வலிகளின் விளைவுகளை தணிக்கும் திறனை குணப்படுத்துகின்றன.



யோகா –ஹோமியோ மருத்துவங்கள் –புரிதல்

யோகா எல்லா மனிதருக்கும் பொதுவானது .

ஹோமியோ மருத்துவமும் எல்லா மனிதருக்கும் அவசியமானது ..

யோகா ஆயுர்வேத சித்த மருத்துவத்தின் கூறாக முழுமையாக அறியபட்டாலும் –யோகா வாழ்க்கை தத்துவங்கள் எந்த மருத்துவத்தோடும் பொருந்தி கொள்ள கூடிய அற்புத ஆற்றலை உடையது ..


ஆங்கில மருந்தோடு கை கோர்க்கும் யோகா –ஹோமியோவோடு இணைவதில் என்ன தவறு

மற்ற பாரம்பரிய ,இந்திய மருத்துவ முறைகளை ஏற்க மறுக்கும் பல ஆங்கில மருத்துவர்களும் யோகாவை தங்களோடு இணைத்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் .ஆங்கில மருத்துவம் தன்னால் இந்த நோயை குணப்படுத்த இயலாத எல்லை கோட்டை தாண்டிய பல நோய்களுக்கும் யோகாவை தன்னோடு சேர்ந்து பயணிக்க சொல்கிறது .யோகாவின்  எந்த ஒரு கோட்பாடுகளோடு ஒரு சிறிதும் பொருந்தாத ஆங்கில மருத்துவம் யோகாவை தன் வயப்படுத்த முயல்வதில் பெரிய மகிழ்ச்சி புதைந்துள்ளது என்றால் –ஹோமியோவின் எல்லா கோட்பாடுகளோடும் பொருந்த கூடிய யோகாவை –ஹோமியோ யோகாவை வரவேற்பதில் எந்த ஒரு நெருடலும் யாருக்கும் இருக்கவே முடியாது .


ஹோமியோகா என்ற முறை

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ..
பாரம்பரிய மருத்துவத்தால் நலம் பெறுவோம் ..
ஆயுஷ் என்பது ஒருங்கிணைந்த மருத்துவமே –நோய் இல்லாமல் வாழ வைக்கும் வாழ்க்கை அறிவியல்.
மருத்துவத்தின் பலன் முழுமையாக கிடைக்க யோகாவோடு இணைவோம் ..ஏனென்றால் யோகா என்றாலே ஒன்று இணைதல் ,
தன் வயமாதல் என்றே பொருள் .

ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

0 comments:

கருத்துரையிடுக